வருடம் மேல் வருடமாக..

இந்தக் கொடும் பிசாசு வந்திறங்கி, தலைவிரிகோலமாய் ஆடிக்கொண்டிருந்த நிலையில், போன மே-யில் எழுதிவைத்திருந்த ஒன்று  கண்ணில் பட்டது இப்போது. புரிகிறது. வேண்டுதலை, வழக்கம்போல் அவன் ஏற்கவில்லை. வேண்டுதல், வேண்டாமை இலாது இருக்கக் கற்றுக்கொள் என்கிறானா? சொல்வான். அவனுக்கென்ன,  அழகிய முகம் ..

நம் முகத்தைத்தான் கண்ணாடியில் பார்க்கச் சகிக்கவில்லை. சரி. கிறுகிறுக்க வைத்த போன ஆண்டு, கிறுக்கவைத்த கவிதை:

அடுத்த ஆண்டாவது ?

கொரோனாப் பிசாசின்

சொல்லொணாக் கொடுமை

வீட்டிற்குள்ளேயே நடக்கிறேன்

மூலைக்கு மூலை  அமர்கிறேன்

மூச்சை இழுத்து விடுகிறேன்

பகலில்கூட அசட்டுத்தனமாய்

படுக்கையிலே விழுந்து புரள்கிறேன்

சாமி கும்பிடவும் ஒரு நேரம் என்றில்லை

வீட்டுக்குள்ளேதானே அவனும் மூலையில்

கோவிலுக்குப் போகும்

பாதையெல்லாம் மறந்து நாளாயிற்று

பரமனுக்கும் புரியாமலா இருக்கும்

பண்டைய சாத்திரங்களும் இதுபற்றி

பகர்ந்திருக்குமோ  ஏதாவது

பதறும் மனது எதை அலசும்? எதை அறியும்?

அற்ப வைரசின் அலட்டல்களுக்கே உலகம்

உருப்படியாக ஒரு பதில் சொன்னபாடில்லை

உலகநாதா, ஒரே தாதா

மூஞ்சியை மூடி உடம்பை மூடி

முழுமூச்சில் கதவையெலாம் மூடி

மூடி மூடியே முடிந்துவிடும் வருடம்

அடுத்து வரவிருக்கும் ஆண்டாவது

அலுங்காமல் குலுங்காமல் செல்ல

அனுமதிப்பாயா ஆபத்பாந்தவா

அண்ட பேரண்டங்களின் அதிபதியே

மண்டியிடுகிறேன் வீட்டிலிருந்தே..

**

10 thoughts on “வருடம் மேல் வருடமாக..

 1. கவிதை அருமை அண்ணா…மூக்கையும் வாயையும் மூடிக் கொண்டிருக்கிறோமே…பாருங்க அந்தக் காலத்துல அடிமை நா கை பொத்தி வாய் பொத்தி, மூக்கு பொத்தின்னு நிஜமாவே இது நம்மை அடிமையாக்கி வைத்திருக்கிறது சுதந்திரத்தைப் பறித்து…பேசினா தப்பு தும்மினா தப்பு இருமினா தப்பு…ஹூம்..

  ஏகாந்தன் அண்ணா இது பிசாசா!!! ம்ம்ம்ம் ஆனால் அதைக் கூட மந்திரவாதி வைத்து ஓட்டிவிடலாமோ? ஆனால் இது மாயாவி ராட்சசன்….புராணங்களில் வருவது போல் மறைந்து மறைந்து வேறு வேறு ரூபங்களில் தாக்குகிறது. புராண அரக்கர்களைக் கொல்ல
  இறைவன் பல அவதாரங்கள் எடுத்தானே…..இப்போ என்ன அவதாரம் எடுக்க உத்தேசித்துள்ளானோ? யாமறியோம் பராபரமே!

  சிசுபாலன் அவலையில் கிருஷ்ணர் என்ட்ரி. சுசுபாலன் ஆணவத்தில் பேசுகிறான். அவன் ஒவ்வொன்றாகப் பேச பேச கிருஷ்ணர் எண்ணிக் கொண்டே வருகிறான் 100 தவறுகள் அலவ்ட்…100 டச் பண்ணியதும் சக்கரம் பறக்கிறது தலையைக் கொய்கிறது…

  அப்படி ஒரு வேளை இறைவன் இந்த மாயாவிக்கு கவுண்டிங்க் கொடுத்துக் கொண்டிருக்கிறாரோ?

  என்னவோ இப்படிப் புராணங்களிலிருந்து எனக்கு அப்பப்ப தோன்றிக் கொண்டே இருக்கிறது. ஒப்பீடு.

  இல்லை இந்த மாயாவியை அழிக்க அவதாரம் எடுக்கும் நேரம் வரவில்லையோ…எப்பவுமே க்ளைமேக்ஸ்லதானே என்ட்ரி. இதுக்கு மேல என்ன க்ளைமேக்ஸ் வேணுமோ?

  எப்படியோ சைனாக்காரன் ஏவிவிட்ட பயோவார் – சமீபமாக நிறைய கட்டுரைகள் வருகிறதே இதைக் குறித்து – துவம்சம் செய்து கொண்டிருக்கிறது கண்ணுக்கே தெரியாத தம்மாத்துண்டு மாயாவி..
  //அண்ணா கமென்ட் வந்ததா?// இந்த கமென்ட் மட்டும் வந்ததாகக் காட்டுது

  ஆனா பதிவிற்கான கருத்து வந்ததாகக் காட்ட மாட்டேங்குது

  கீதா

  Liked by 1 person

  1. @ கீதா: ஏனிந்த சந்தேகம்? வந்தாச்சே ஒன் -பை-ஒன்னா ரெண்டு கமெண்ட்டும்!

   பிசாசோ, பேயோ, மாயாவியோ இன்னும் என்ன சொல்லியெல்லாம் அழைக்கலாமோ! எதைப்போட்டாலும் அதையால்லாம் தாண்டி விபரீத ஆட்டம் போடும் ஒன்றுதான் இது.

   காலன் தான் வந்து காலி செய்ய வேண்டும்.

   Like

 2. கண்ணுக்குத் தெரியாத ராட்சசன். எல்லோரையும் பிடித்து ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறான். இதை எழுதவே கவலையும்/பயமுமாய் இருக்கு! எங்கிருந்தாவது வந்துடுவானோ என! 😦 நிலைமை கை மீறி விட்டதே!

  Liked by 1 person

  1. @ கீதா சாம்பசிவம்:

   உண்மை. இருந்தாலும் நம்பிக்கை கொள்வோம். நாடு என்பதே பெரிது. உலகம் என்பது பிரும்மாண்டமானது. பூமியும் தன் வாழ்நாளில் இந்த மாதிரி எத்தனையோ வகை நாசகாரக் கிருமிகளை சாப்பிட்டு ஏப்பம் விட்டிருக்கும். இன்னுமொன்று என்று பார்த்துக்கொண்டிருக்கிறதோ என்னவோ….

   Liked by 1 person

 3. கடவுளும் கதவை மூடி உள்ளேயே இருக்கிறார்.  அவருக்கும் வந்து விடும் என்று பயமா?  இலை, அவரைப் பார்க்க வரும் மக்களால் மற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிற அக்கறையா?

  பார்க்க வருபவர்களை ஐவரும் பார்த்துக் கொண்டிருந்தால் போதுமா?  பாதுகாக்க வேண்டாமா?  எல்லோருமா பாவம் செய்து விட்டார்கள்?  எவ்வளவு பாவம் செய்தார்கள்?

  Liked by 1 person

  1. @ Sriram: .. எல்லோருமா பாவம் செய்து விட்டார்கள்? எவ்வளவு பாவம் செய்தார்கள்?//

   இது ஒரு சிக்கலான கேள்வி! நல்ல பிள்ளைகளாய் இந்த ஜென்மத்தில் திரியும் அசடுகளின் ப்ராரப்த கர்மாக்களின் கணக்கு வழக்கு, அவனிடமல்லவா இருக்கிறது? அவனும் எவ்வளவுதான் க்ரேஸ் மார்க் போடுவான்?

   Like

   1. கடவுளும் கதவை மூடி உள்ளேயே இருக்கிறார். அவருக்கும் வந்து விடும் என்று பயமா? //

    ஸ்ரீராம் ஹைஃபைவ்!!!! ஹையோ நானும் இப்படி நினைத்தேனே…ஹா ஹா ஹா

    அடுத்து வந்த உங்கள் கருத்தை ரசித்தேன் ஸ்ரீராம்

    ஏகாந்தன் அண்ணா உங்கள் பதிலையும் ரசித்தேன்

    ஹப்பா கருத்து வந்துவிட்டது… முதலில் காட்டவே இல்லை அண்ணா அதான் சந்தேகம் கருத்தை ஏற்றுக் கொள்ளவும் இல்லை ப்ளாகர். அப்புறம் கூட ஒரு எழுத்தை சேர்ச்சு வ்ரியைச் சேர்த்து என்று ஹாஹாஹா

    கீதா

    Like

 4. உங்களின் வரிகள் எல்லோரது மனதையும் பிரதிபலிக்கிறது. சிறப்பு.

  கட்டுக்கடங்காமல் விரித்தாடுகிறது. பல உயிர்களைப் பலிவாங்கி கோரத்தாண்டவம் ஆடுகிறது. விரைவில் அழிய வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

  துளசிதரன்

  Liked by 1 person

  1. @ துளசிதரன்:

   பிரார்த்தனைகள் நடந்துகொண்டிருக்கின்றன. செவிசாய்ப்பதில் தாமதம்.. பாராமுகம் பரமனுக்கு ஏனோ!

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s