மரத்தின் கீழே அவள்

காலையில் ஒரு கப் காஃபியோடு வழக்கம்போல் நெட்டில் மேய்ந்தேன். நல்ல வேளையாக செய்திகள் எனும் மக்காத குப்பைக்குள் மண்டிவிடாமல், இலக்கியத்தின் பக்கம் இறங்கியிருந்தேன். முதல் நாள் விட்ட விக்ரமாதித்யனின், நகுலனின் நினைவில் அலைகையில். பார்க்க நேர்ந்தது ஒரு கவிதையை. சிங்களம் தந்த கவிதை. ’சிங்களத்துச் சின்னக் குயிலே..’ என்றொரு பாடல்வேறு, ஏடாகூடமாக நினைவில் தட்டுகிறது.

நான் வாசித்த முதல் சிங்களக் கவிஞர். மஹிந்த ப்ரஸாத் மஸ்இம்புல. காலைக் கவிதையின் தாக்கம், உடனே பகிர்ந்தால்தான் சுமை இறங்குமெனக் காதில் கிசுகிசுத்தது :

மரத்தின் கீழ் கைவிடப்பட்ட அம்மாவிடமிருந்து

என்னிடம் கூறப்பட்டதைப்போலவே – அதிகாலையில்
மகனின் வாகனத்திலேறி அதிக தொலைவு பயணித்து
நகரமொன்றின் தெருவோர மரநிழலில்

வாகனத்தை நிறுத்திய வேளை
மூச்சுத் திணறியபோதும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை நான்

நன்றாக நினைவுள்ளது இதே மரம்தான் மகனே
உன்னைத் தூக்கிக்கொண்டு பிரயாணக் களைப்பைப் போக்கவென
நின்றேனிங்கு முன்பொரு இரவில் – அதிசயம்தான்
மீண்டும் அந்த இடத்துக்கே எனை அழைத்து வந்திருப்பது

உனைப் பெற்றெடுத்த நாள்முதலாய்
இணையற்ற அன்பைப் பொழிந்தவளிடம்
போய்வருகிறேன் என்றேனும் பகராமல் நீ செல்கையில்
உள்ளம் பொங்கி வழிகிறது விழிகளினூடாக

கைக்குள் திணித்துச் சென்ற ஆயிரம் ரூபாய் நோட்டு

பெரும் சுமையாகிட
உள்ளத்தின் உறுதியைக் கண்களில் திரட்டுகிறேன்
பதற்றமேதுமின்றி வாகனத்தை ஓட்டிக்கொண்டு
பத்திரமாக வீடுபோய்ச் சேர்ந்திடுவாய் என் மகனே

290 Art - When I'm an Old Woman in Art ideas | art, old women, artist

**

நன்றி: ’கூடு’ இதழ். தமிழில்: கவிஞர் எம்.ரிஷான் ஷெரீஃப் (இலங்கை)

6 thoughts on “மரத்தின் கீழே அவள்

 1. கவிதைக்கான படம் அட்டகாசம். சுருக்கங்கள் சொல்லும் அவள் கடந்த காலத்தின் பாதைகளை…. கவிதை நன்று. ரசித்தேன்.

  Like

 2. இப்படியும் மகன்! எப்படி தன் தாயை விட மனது வந்தது ஒரு மகனுக்கு! உலகில் நடப்பதுதான் இருந்தாலும் கவிதையாகப் பார்க்கும் போது அல்லதுகதையாகப் படிக்கும் போது மனது வெந்துவிடுகிறது. இப்படியானதை வாசிக்கும் போது மனது நிலைகொள்ளாமல் தவிக்கிறது.

  இப்படியானதை வாசிக்கும் போது நாம் எல்லாம் ப்ளெஸ்ட் என்று நினைத்துக் கொள்வதுண்டு

  கீதா

  Like

 3. கவிதை –
  இதைப் போல , பலவானவை ஏற்கனவே இங்கு கதையாக அலைந்து கொண்டிருக்கின்றன..

  வயோதிகத் தாயின் படம் நெஞ்சை அழுத்துகின்றது.. இந்தப் படத்துக்கும் அந்தக் கவிதைக்கும் என்ன சம்பந்தம்?..

  Like

 4. @ Venkat , @ Sriram, @ Thulasidharan, @ Geetha, @ Durai Selvaraju :

  அம்மாவைப்பற்றிய கதைகள் உலவத்தான் செய்யும், பிள்ளைகள் இருக்கும்வரை. நானும் முன்னர் ஒன்றிரண்டு எழுதியிருக்கிறேன்.

  சோகமே முகமாக அம்மாக்கள் எப்போதும். அப்படி ஒரு அம்மாவை நெட்டில் தேடினேன், கவிதைக்கு நெருக்கமாய். கிடைத்தார் ஒருத்தி.

  எந்தநாட்டுக்காரிகளாக இருந்தாலும், அம்மாக்கள் பொதுவானவர்கள். எல்லோருக்கும் அம்மாக்கள்தான் அவர்கள். தெய்வத்தைப்போல.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s