பிறிதொரு உலகம்.. பிறிதொரு உண்மை..

… ஒன்றும்  மாறவில்லை என்பதுபோல் இருக்கிறது. சில சமயங்களில் திடீரென உணர்கிறேன்.. இங்கேதான் எங்கோ இருக்கிறார், உடம்புரீதியாகத் தென்படாவிட்டாலும்…

மரணம்பற்றிய பயம் அவரில் போய்விட்டிருந்தது. வாழ விரும்பினார். குழந்தைகளோடு நேரம் செலவிட ஆரம்பித்திருந்தார். ஒரு சிறு வனத்தை உருவாக்க ஆசையிருந்தது. சமூகசேவையில் ஈடுபடவும் விருப்பம்..

மதம்சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்ட இஸ்லாமியர் அல்லர் அவர்.  Never a typically religious person. அதனால் கடவுள் நம்பிக்கையில்லாதவர் என்று அர்த்தமல்ல. மதம் என்பது அவருக்கு ஆன்மீகம். தெய்வம் ஒன்று என்பதில் நம்பிக்கை இருந்தது. தன்னைப்பற்றிய, இந்த உலக வாழ்வைப்பற்றிய ஆழ்ந்த பயணத்தில் இருந்தார். இந்த உலகம் தாண்டிய  வேறொரு உலகை, பிறிதொரு உண்மையை -a parallel world, a parallel reality- தேடிக்கொண்டிருந்தார்.  வாழ்வின் இத்தகைய கட்டத்தில் நிறையப் படித்துக்கொண்டும் இருந்தார். விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், உபநிஷதங்கள் என அவரது வாசிப்பு அலைந்தது …

கடந்த ஆண்டு நோய்வாய்ப்பட்டு மறைந்த இந்தியத் திரைஉலகின் உன்னதக் கலைஞனான இர்ஃபான் கான் பற்றி அவரது மனைவி ஸுதாபா சிக்தர் சமீபத்தில், அன்னாரது ஓராண்டு நினைவார்த்தமாக சொன்னதில் கொஞ்சம்தான் மேலிருப்பது.

**

8 thoughts on “பிறிதொரு உலகம்.. பிறிதொரு உண்மை..

 1. ஓராண்டா ஆகிவிட்டது?   பாவம்.  நாம் எல்லோருமே நெருப்பாற்றைக் கடந்து கொண்டிருக்கிறோம்.

  Like

 2. @ ஸ்ரீராம்:
  உண்மை. கரைசேருவோம் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை.

  Like

 3. பெயர் மட்டுமே கேட்டிருக்கிறேன். மற்றபடி அவரைப் பற்றித் தெரியாது ஏகாந்தன் அண்ணா. ஆனால் அவர் மனைவி சொல்லியிருப்பது மனதை நெகிழ்ச்சியடைய வைக்கிறது. நல்ல மனிதர் என்றும் தெரிகிறது.

  அந்தப் பிறிதொரு உண்மையை உலகை ஆராய்வது என்பது மனம் மயிரிழையில் சர்க்கஸ் கயிற்றில் நடப்பது போலத்தான் என்று தோன்றும். அப்படி ஆராய்ந்தவர்கள்/ஆராய்பவர்களின் நிலையை நேரில் கண்டவள் என்பதால்…ஒரு சிலர் பேலன்ஸ்டாக இருக்கிறார்கள் என்பதையும் அறிகிறேன்.

  கீதா

  Like

 4. @ கீதா:
  உங்களுக்கு அத்தகையோரின் பரிச்சயம், நெருக்கம் நிகழ்ந்திருக்கிறது எனச் சொல்கிறீர்கள் எனப் புரிந்துகொள்கிறேன். எல்லாவற்றையும் உதறிவிட்டு, மனம் ‘பிறந்த மேனி’யிலிருக்க, ’அதனை’ மட்டும் உத்வேகமாகத் தொடர்வது எல்லோருக்கும் வாய்க்காது. இருந்தாலும் உண்மையை நாடுபவன்/ள், உண்மையில் செய்யவேண்டியது என்னவோ அதுதான்!

  மே 2020-ல் இர்ஃபான்பற்றி, ஜூன் 2017-ல் அவர் நடித்த ஹிந்தி மீடியம் -ஹிந்தி திரைப்படம் பற்றி எழுதியிருக்கிறேன். சைட்-பாரில் க்ளிக் செய்து படித்துப்பாருங்கள். ஹிந்தி மீடியம், இங்கிலீஷ் மீடியம் (அவரது கடைசி) படங்கள் கிடைக்க வாய்ப்பிருந்தால் அமைதியாக உட்கார்ந்து பாருங்கள்.

  Like

 5. என் பிள்ளை நிறைய சொல்வான் அவரைப்பற்றி. ஹிந்தி மீடியம் இங்கிலீஷ் மீடியம் இரண்டு படங்களா? ஒரு படமா? ஆங்கில சப் டைட்டில்களுடன் கிடைத்தால் பார்க்கலாம்

  Liked by 1 person

  1. @ ranjani135 :

   ’ஹிந்தி மீடியம்’ முன்பு வந்த அவரது படம். Critically acclaimed.
   இங்கிலீஷ் மீடியம் அல்லது ’Angrezi Medium’ என்பது இன்னொரு படம்! அவரது கடைசிப் படங்களில் ஒன்று. ஹோமி அதஜானியா (Homi Adajania) இயக்கம். இர்ஃபானோடு ராதிகா மதான், தீபக் தோப்ரியால் Deepak Dobriyal), கரீனா கபூர் ஆகியோர் நடித்தது. 2020-ல் வெளியானது. அவசியம் பாருங்கள். ரசிப்பீர்கள்.

   Like

 6. மிகவும் பிடித்த நடிகர்.என்னவோ நடக்கிறது. புரியாத உலகம்.ஒவ்வொரு நாளும் புதுப் புது பயத்தை விதைத்துப் போகிறது. இந்த வருடமும் பயமுறுத்துகிறது .சினிமா தரப்பில் மட்டுமா!

  Liked by 1 person

  1. @ revathi narasimhan: இந்த வருடம் கொஞ்சம் சரியாகும் என எதிர்பார்த்தால், நேர்எதிராகவே செல்கிறது. வயதில் குறைவானவர்களும் புறப்படுகிறார்கள்.
   Macabre media reporting all over.. some journalists are obviously relishing …

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s