ஆண், பெண்ணுக்கு நடத்தும் .. !

“ஆண், பெண்ணுக்கு நடத்தும் அநியாயம்.. சொல்லுக்கடங்காது. அதை ஏட்டில் எழுதியவர் இல்லை. அதை மன்றிலே பேசியவர் யாருமில்லை…

எவனும் தனது சொந்த ஸ்த்ரீயை அலக்ஷ்யம் பண்ணுகிறான். தெருவிலே வண்டி தள்ளி நாலணா கொண்டுவருவது மேல் தொழில் என்றும், அந்த நாலணாவைக் கொண்டு நாலு வயிற்றை நிரப்பி, வீடு காப்பது தாழ்ந்த தொழிலென்றும் நினைக்கிறான். பெண்கள் உண்மையாக உழைத்து ஜீவிக்கிறார்கள். ஆண்மக்கள் பிழைப்புக்காகச் செய்யும் தொழில்களில் பெரும்பாலும் பொய், சூது, களவு, ஏமாற்று, வெளிமயக்கு, வீண்சத்தம், படாடோபம், துரோகம், கொலை, யுத்தம்…!

இந்தத் தொழில்கள் உயர்வென்றும், சோறாக்கி, துணிதோய்த்து, கோயில்செய்து கும்பிட்டு, வீடு பெருக்கி, குழந்தைகளைக் காப்பாற்றும் தொழில் தாழ்வென்றும் ஆண்மக்கள் நினைக்கிறார்கள்.

வியபிசாரிக்குத் தண்டனை இஹலோக நரகம். ஆண்மக்கள் வியபிசாரம் பண்ணுவதற்குச் சரியான தண்டனையைக் காணோம்.. பரஸ்த்ரீகளை இச்சிக்கும் புருஷர்களுக்கு எல்லையில்லை என்று, நான் சற்றே மறைவிடமாகச் சொல்லுகிறேன். அதனால், அவர்கள் பத்தினிகளை நேரே விழித்து நோக்க யோக்யதையில்லாமல் இருக்கிறார்கள். பூமண்டலத்தின் துக்கம் இதிலேதான் ஆரம்பமாகிறது. வீட்டிலே துரோகம் இருந்தால் வெளியே எப்படி நேராகும்? வீடுகள் சேர்ந்துதானே ஊர் உண்டாகிறது? …”

1917-லேயே, ஆண்களின் யோக்யதைபற்றி  இப்படிப் பகர்ந்திருக்கிறார் சுப்ரமணிய பாரதி -‘மிளகாய்ப்பழச் சாமியார்’ வாயிலாக ! சுதேசமித்திரன் இதழில் வெளியான அவரது சிறுகதையின் பிரதான பாத்திரம், அந்தக்கால புருஷ சிந்தனை, செயல்பாடுகள்பற்றி இப்படி விசனப்படுவதாக வருகிறது.

இப்போது ஆண்கள்? பலர், ஒருத்தருக்கும் ஒன்றும் தெரியாதென்று, ஹைடெக் துரோகம் செய்து ’த்ரில்லாக’ வாழ்கிறார்கள். பெண்மக்களின் நெஞ்செரிச்சல், நேர்கோட்டில் நீண்டு… நகர்கிறது.

**

Advertisement

9 thoughts on “ஆண், பெண்ணுக்கு நடத்தும் .. !

 1. இதனால்தானே பெண் விடுதலை பற்றியும், பெண்ணுக்கு சம உரிமை பற்றியும் பாரதி பாடி இருக்கிறார்?

  Liked by 2 people

 2. இது அந்தக் கால கட்டத்தில் பெண்களை மறைத்து வைக்கவென ஏற்படுத்தப் பட்டவை என்றே பலரும் சொல்லி இருக்கின்றனர். ஆனால் அது ஆண்களுக்குப் பெண்களை அடக்கி வைக்கும் ஆயுதமாகப் பயன்பட்டிருக்கிறது. 😦

  Liked by 2 people

 3. @ ஸ்ரீராம், @ கீதா சாம்பசிவம்:
  பாரதி பேசிய பெண் விடுதலை, சம உரிமை என்பது, அவர்கள் மீது அவர் கொண்ட அன்பு, மரியாதையோடு, இறைவனின் படைப்பில் மனித வாழ்வில் பெண்டிரின் உன்னதம்பற்றி அறிந்திருந்ததால் வந்தது. அது வேறு, அதற்குப் பின் வந்த ‘பேரி’யார்கள் பலர், அந்த வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, இஷ்டத்துக்குத் திரித்துக் கெடுத்து, பெண்ணைத் தெருவில் கண்ணியமில்லா, போகக் காட்சிகளாக அலையவிடுவது என்பது வேறு! இப்போதிருக்கும் ’பெண்விடுதலை’யாளர்கள் (அதில் ‘மெத்தப்படித்த’ பெண்’மணி’களும், அறிவுசீவிகளும்) – சமூகத்தின் அப்பாவிப் பெண்களை ‘விடுவித்த’ லட்சணம் இது. விளைவுகள் மேலும் அபத்தமாகும்.

  அந்தக்கால வாழ்வில் பெண்களை வெளியே போகவேண்டாம் என்றும், ஆண் துணை இல்லாது ‘அங்கே’யெல்லாம் போகக்கூடாது என்றும் வீட்டிலுள்ள ஆண்கள்/பெரியவர்கள் சொன்னதற்குக் காரணம், ‘பாம்பின் கால் பாம்பறியும்’ என்பதினால்தான்! மற்ற ஆண்களின் லட்சணம் வீட்டு ஆண்களுக்குத் தெரியுமே. மேலும், உண்மையில் இயற்கையாகவே பெண்கள் கள்ளம் கபடு தெரியாதவர்களாகவே இருப்பார்கள். எளிதாக யாரையும் நம்பி வாய் கொடுத்து மாட்டிக்கொள்ளக்கூடாது, ஒழுக்க சிக்கல்கள் வந்துவிடக்கூடாதே என்கிற பாதுகாப்பு உணர்வில், பயத்தினால்தான், ’கோவிலுக்குப் போனாலும் கூட யாரையாவது அழைச்சிண்டு போ, தனியாப் போகக்கூடாது. ஒன்னு செய், சாயந்திரம் நானும் வர்றேன். சேர்ந்து போவோம்’ என்று சொன்னது. பெண்ணின் பாதுகாப்பு கருதி, அடிமைப்படுத்திக் குட்டிச்சுவராக்க அல்ல!.

  Like

 4. மிளகாய்ப்பழச் சாமியார் – என் நினைவை எங்கெங்கோ கொண்டு சென்றுவிட்டது. என் அப்பா ஹெட்மாஸ்டராக இருந்த ஸ்கூலில் 6ம் வகுப்பு சேர்ந்தேன். அப்போதான் பள்ளியில் லைப்ரரி என்ற கான்சப்ட் வந்து, நிறைய புத்தகங்கள் வாங்கினார்கள். எனக்கு என் அப்பா ஷேக்ஸ்பியரின் ‘கழுதையின் காதல்’ என்ற புத்தகத்தை எடுத்துப் படிக்கச் சொன்னார். அப்போது படித்தது பாரதியாரின் வாழைப்பழச் சாமியார் மிளகாய்ப்பழச் சாமியார் கதை (நினைவில் இல்லை ஆனால் நல்ல வண்ணப் படங்களுடன் சிறிய புத்தகம்).

  நாம் ஆணாதிக்க மனப்பான்மையுடன் வாழ்ந்திருக்கிறோம். இதற்கு என்ன விதமான விளக்கங்கள் கொடுத்தாலும், ஆணுக்கு தனி நீதி, பெண்ணுக்கு அநீதி என்றுதான் பெரும்பாலானவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.

  ஆனால் அது அவளை குட்டிச்சுவராக்க அல்ல. வாழும்வரை கௌவரவமாக வாழணும் என்பதற்காக. உலகியல் வாழ்க்கையில் ஆணின் தவறுகள் பெரியதாக பாதிக்காது. பெண்ணின் தவறுகள் அதீதமாக பாதிக்கும்.

  Liked by 1 person

  1. @ நெல்லைத்தமிழன்:

   ஆணாதிக்கம் இருந்ததேயில்லை என்று இங்கே விளக்கவில்லை! (பெண்ணுக்கு அநீதி என்பதைப்பற்றிய கதைதான் இங்கே பிரஸ்தாபத்தில் இருப்பது). இப்போது, சமூகம் ’முன்னேறிவிட்ட’ காலகட்டத்திலும், ஆணாதிக்கம் சமூகத்தைவிட்டு எங்கும் போய்விடவில்லை.

   அது, ஒழுக்க மதிப்பீடுகள் இருந்த காலம், பெண் கட்டுப்பாடோடு வாழ்ந்த காலம், பாதுகாக்கப்பட்ட காலம் – பெண்ணுக்கெதிரான குற்றங்களை மிகக் குறைவாகக் கண்டது. இப்போது, பெண் ‘விடுதலை’ கிடைத்தபின் (!), பெண்கள் முன்னேறிவிட்டபின் அவர்கள் எப்படியிருக்கிறார்கள்? ஆண்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள்? பெண்ணுக்கெதிரான குற்றங்கள் குறைந்து, எல்லாம் சரிநிகர் சமானம் என மதிப்பு, மரியாதையோடு நாடே ’அமைதிப்பூங்கா’வாக (தமிழ்நாட்டு டர்மினாலஜி!) ஆகிவிட்டதா? ‘விடுவிக்கப்பட்ட’ பெண்கள் தான் -அவர்களில் பெரும்பாலான சராசரிக்கும் கீழான அசடுகள் – என்ன செய்கிறார்கள்? என்ன நடக்கிறது நவீன சமூகத்தில்? பின்புலம் அறியாத, எவனோ ஒரு பொறுக்கியோடு முகநூல் பந்தம்.. ஆனந்தம்.. பின் அவன் கூப்பிட்டான், இவன் தான் சொன்னான், நம்பிப் போனேன்.. என ஊருக்கு வெளியே உள்ள ‘பண்ணைவீடு’ விசிட், அடுத்த நாள்…ஐயோ போச்சே… போச்சே.. போலீஸ்…மீடியா எண்டர்டெய்ன்மெண்ட்.. ச்சூ.. ச்சூ.. யாருக்கு மானநஷ்டம்? யாருக்குப் போச்சு வாழ்க்கை? நினைவில் கொள்ளுங்கள். ’ஒரு பொள்ளாச்சி’தான் வெளியே வந்திருக்கிறது..

   இப்போதெல்லாம், பெண்ணோடு ‘விளையாடி’ , அவர்கள் வாழ்வை சிதைப்பது என்பதை ஒரு சாதாரண நிகழ்வாகப்பார்க்க சமூகம் பழகிவிட்டது. வசதிப்பட்ட சிலருக்கு அதுவே வாழ்வியலாகவும் ஆகிவிட்டது. ‘ஆம்பளப் பயல்னா அப்படித்தான் இருப்பான். இதெல்லாம் ஒரு விஷயமா!’ எனக் கேட்டார் ஒரு முன்னாள் முதல்வர் – ஏழைப்பெண்ணுக்கு நடந்த வன்கொடுமைபற்றிய விவாதத்தில்.

   Like

 5. “ஆண், பெண்ணுக்கு நடத்தும் அநியாயம்.. சொல்லுக்கடங்காது. அதை ஏட்டில் எழுதியவர் இல்லை. அதை மன்றிலே பேசியவர் யாருமில்லை…

  எவனும் தனது சொந்த ஸ்த்ரீயை அலக்ஷ்யம் பண்ணுகிறான்.//

  உண்மை ஏகாந்த்ன் அண்ணா. பலர் வாழ்விலும்.

  கடைசியில் சொல்லியிருக்கும் இப்போதைய ஹைடெக் துரோகம் டிட்டோ …
  பெண்ணுக்கு சம உரிமை கொடுக்க வேண்டும் ஆஅனால் அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. ஆண்கள் அதைக் கையிலெடுத்துக் கொண்டு பெண்ணை இளக்காரமாகப் பேசுவது ஆண் என்றால் அப்படியும் இப்படியும்தான் இருப்பான் என்றும்,
  அவன் எப்படிப்பட்டவன் ஆனாலும் அவன் வக்ற்றவன் ஆனாலும் ஏற்று குடித்தனம் நடத்த வேண்டும் என்றும் பெண்களுக்கு அட்வைஸ் கொடுப்பவர்களும் அதுவும் பெண்களே இருக்கும் போது? இதையே ஆண்களுக்குச் சொல்ல முடியுமோ? (எக்செப்ஷன்ஸ் உண்டுதான்..)

  கீதா

  Liked by 1 person

  1. வாங்க! வாங்க!

   இந்த சப்ஜெக்ட் இருக்கே.. சொல்லி மாளாது! உலகெங்கும் ஏதேதோ வகையில் கொஞ்சம், கொஞ்சம் மாறினாலும், மூலக்கதை என்னவோ ஒன்றுதான்.

   அதே சமயம் பெண்களை உள்ளார்ந்து மதிப்பவர்களும், போற்றுபவர்களும் ஆங்காங்கே சிலர் உண்டுதான் – ஏதோ சாஸ்த்ரத்துக்கு இருக்கட்டுமேன்னு ஒன்னு ரெண்டு..!

   Like

 6. இயற்கையாகவே பெண்களால் நேர்மையாக வாழ்ந்து விட முடியும்.. ஆனாலும் ஒரு சிலரை அவ்வாறு வாழ்வதற்கு காலமும் சூழ்நிலையும் விடுவதில்லை…

  பதினேழு/ பதினெட்டு.. இப்படியான வயதில் என்னையொத்த வயதுடைய நண்பர்களின் போக்கு சிதைந்து மாறியது.. அவர்களது வாழ்வை அழித்த பெண்களையும் கேள்விப்பட்டிருக்கிறேன்…

  அவரவர் விதி அப்படி !.. என்று
  அங்கிருந்து அகல வேண்டியது தான்..

  Liked by 1 person

  1. @ துரை செல்வராஜு:
   ஆண்களை ’மயக்கி’ வஞ்சிக்கும் பெண்’மணி’களையும் நம் சமூகம் கண்டிருக்கிறது. இப்போதும் ஏகமாகப் பார்த்துவருகிறது. உண்மை என நம்பி உள்ளம் கொடுத்தவன் தூசியை உதறுவதுபோல் உதறப்பட்டிருக்கிறான்..
   ஆனால் இதைவிட, அப்பாவிப் பெண்களைத் தங்கள் சல்லாப ஆசைக்கென சிதைக்கும் காவாலிகளின் கூட்டம்தான் நாட்டில் பெருகிவருகிறது. தானே பல்லைக்காட்டி விழுந்து நொறுங்கும் இளிச்சவாயிகளும் சமூகத்தில் அதிகம்தான். எதைச் சொல்ல, எதைப்பற்றிக் கவலைப்பட..

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s