ஸஞ்சயனுக்கு மட்டும் ஏன்?

மாயக்கிருஷ்ணன் தன் அழகிய அறையில், மின்னும் தங்கக்கட்டிலில் சயனம் கொண்டிருக்கிறான், தனது தேவி ஸத்யபாமாவின் மடியில் தலையையும், கால்மாட்டில் அமர்ந்திருக்கும் அர்ஜுனனின் மடியில் தன் திருப்பாதங்களையும் வைத்துக்கொண்டு. திரௌபதியும் அப்போது அங்கிருக்கிறாள். பொற்கட்டிலின் கால்பக்கத்தில், கீழே, தரையில். அர்ஜுனனின் பாதங்களை மெல்ல எடுத்துத் தன்  மடியில் வைத்துக்கொண்டு, கண்ணனைப் பார்த்தவாறு உட்கார்ந்திருக்கிறாள். நால்வரும் ஏகாந்தமான சூழலில் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அப்போது அந்தப்பக்கமாக வந்த மாவீரன் அபிமன்யூ, கண்ணனைப் பார்க்க விரும்புவதாய், உள்ளே செய்தி அனுப்பினான். கிருஷ்ணன் காதுகொடுத்துக் கேட்டான். அனுமதி மறுத்தான். சிறிது நேரம் கழிந்தது. நகுலனும், ஸகதேவனும் அவ்வழியே வந்தனர். கண்ணன் அங்கிருப்பதைப்பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டவுடன், கண்டு பேசிவிட்டுப்போக விரும்பினர். செய்தி அனுப்பினர். உள்ளே வந்து பார்க்க அவர்களுக்கும் ஏனோ, கிருஷ்ணனின் அனுமதி கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் போய்விட்டனர்.

கொஞ்ச நேரம் மேலும் கழிந்தது. காவலாளி வாசலில் வந்து தயங்கி நின்றான். ஸஞ்சயன் வெளிவாசலில் வந்திருப்பதையும், கிருஷ்ணனை தரிசிக்க விண்ணப்பித்ததையும்  பகவானிடம் சமர்ப்பித்தான்.  ‘உடனே அவனை உள்ளே அனுப்பு!’ என்றான் கண்ணன். உள்ளே வந்து பணிந்து வணங்கினான் ஸஞ்சயன். ஏகாந்த தரிசனம் கண்டு பூரித்தான். கொஞ்சம் பேசியிருந்துவிட்டு அகமகிழ்ந்து அகன்றான்.

எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்த ஸத்யபாமாவுக்கு மனசு குறுகுறுத்தது. ஒரு சஞ்சலம். கேட்டேவிட்டாள் கண்ணனிடம். ”நகுலனுக்கு இல்லை. சஹதேவனுக்கும் இல்லை. நம் குழந்தை அவன்.. அந்த அபிமன்யூவையும் உள்ளே வர விடவில்லை. ஸஞ்சயன்மேல் மட்டும் ஏனிந்தப் பரிவு? அவனுக்கு மட்டும் ஏன் அனுமதி அளித்தீர்?” என்றாள் சற்றே படபடப்பாக.

கண்ணனின் அழகு வதனம், மொட்டவிழ்ந்த மென்னகையால் மேலும் மிளிர்ந்தது. ஸத்யபாமாவை வாஞ்சையோடு பார்த்தான் பரந்தாமன். திருவாய் மலர்ந்தது: “ஏனென்றால்.. அவன் ஒரு ஞானி!”

**

6 thoughts on “ஸஞ்சயனுக்கு மட்டும் ஏன்?


 1. அவன் ஒரு ஞானி”. ஏக அர்த்தம் பொருந்துகிறது.
  கண்ணனின் ஏகாந்த சயனத்தையும். அர்ஜுன
  த்ரௌபதி யின் ஏகாந்தமும்
  அற்புதமாக இருந்திருக்கும்.
  அதைப் புரிந்து கொள்ள குழந்தைகளுக்கும்
  நகுல சகதேவர்களுக்கும் முதிர்ச்சி
  போதாதாக இருக்கும்.
  நீங்கள் விவரித்திருக்கும் விதரணை
  மிக அருமை.
  சுகப் பிரும்ம ரிஷியின் வருகையைக் கண்டு
  கொள்ளாத மங்கையர்,
  வியாச மகரிஷி வரும்போது உடை உடுத்திக் கொண்ட கதை
  நினைவுக்கு வருகிறது.

  Liked by 1 person

  1. @ ரேவதி நரசிம்ஹன்: கருத்துக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சம்பவங்கள் சுவாரஸ்யமும்,, உள்ளர்த்தமும் கொண்டவை.

   Like

  1. @ ஸ்ரீராம்:

   நேரீடுதான்! ஆனால் ஞானத்தின் சிறப்பை, ‘அவன்’ வாயினாலேயே செப்புவதால், குறிக்கும் விஷயம் உன்னதமானது. அதனால் குறியீடும்தான்..

   ஞானநிலை அல்லது ஞானி என்பவர்பற்றி பிறிதொரு சமயத்தில் கொஞ்சம் எழுதலாம் என எண்ணம்.

   Like

 2. அருமை! நல்ல விவரணை. ஞானி என எல்லோராலும் ஆக முடியாதே!

  Liked by 1 person

 3. @ Geetha Sambasivam : ஞானவழியைத் தேர்ந்தெடுப்போரே மிகவும் அரிது. அவர்களில் உச்சத்தை அடைபவர் அரிதிலும் அரிது..

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s