தந்தைக்காக

அப்பனுக்காக அன்பு மகள். பின்னே யார் வருவார்? வந்துவிட்டார் வீதிக்கு. என்னப்பா விஷயம்? ஏதாவது ப்ரச்னையா? நியாயம், நீதி கேட்கவா? அதெல்லாம், ஒன்றுக்கும் வக்கில்லாப் பாமர அசடுகள் செய்யும் வேலை. போடும் கூப்பாடு. இங்கே குறிப்பிடப்படுவது படித்த ’பெரு’மக்கள், செழித்த பணக்காரர்கள் செய்யும் திருப்பணி. கேட்டால் எமது மக்களுக்காகத்தான் இந்த உழைப்பெல்லாம் என்பார்கள், அப்பாவி முகத்தோடு!

அப்பன் அப்படியிருந்தால், மகள் தெருவுக்கு வந்து ஆடவேண்டியதுதான். போடவேண்டியதுதான் குத்தாட்டம். வேறென்ன பரதநாட்டியமா ஆட முடியும்? அதற்கெல்லாம்  கலை வசப்பட்டிருக்கவேண்டாமா? அப்படியே க்ளாசிக்கலாக முன்னே வந்து ஆடினால்தான், பாடினால்தான் நமது தமிழ்ப் பெருமக்களுக்குப் புரியத்தான் புரியுமா? ரசிக்குமா? குத்தாட்ட மட்டத்தில்தானே பொதுரசனையைக் கொண்டுவந்து வைத்திருக்கின்றன நமது தரங்கெட்ட சினிமாக்கள், தொலக்காட்சிகள். பழக்கி வைத்திருக்கின்றன தமிழ்மனதைக் காலங்காலமாய்? அத்தகையக் கேவல ரசனையின் வெளிப்பாட்டுக்குத்தானே சரியான விளம்பரம் கிடைக்கும்? வீடியோ வெளிச்சம் வந்து விழும்? அதுதான் விமரிசையாக நடந்துவருகிறது தற்போது நாட்டில். இதையெல்லாம் பார்த்து, பெற்று வளர்த்தவர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டியதுதான். சிலிர்த்துக்கொள்ளலாம்தான். கலைஞன் என்கிற உயர் நிலையிலிருந்து, அரசியல் கரகாட்டக்காரன் என்கிற நிலைக்கு வந்திருக்கும் அல்லது அதற்குக் கீழேயும் இறங்க ஆயத்தமாயிருக்கும் ஒருவருக்கு, இதெல்லாம் வெகுமதிதானே.

மேலும்மேலும், இத்தகைய  உன்னதக் காட்சிகள், விதம்விதமாய், சமூகச்சீரழிவை வெவ்வேறு கோணங்களில் காண்பிக்கும் விதமாய் அரங்கேறும் நாட்டில், தமிழ்நாட்டில். விவரமில்லா, விவஸ்தையில்லா பொதுஜனமும் சேர்ந்து ஆடும். பாடும். பல்லிளித்துப் பொழுதுபோக்கும். பொதுவெளியில் குப்பையெல்லாம் வைரலாகி சந்திசிரிக்கும். தமிழ், தமிழ்ப்பண்பாடு, தமிழர்தம் வாழ்வு என மிளிரும், ஒளிரும் உலகெங்கும்.

அழகெது, அசிங்கமெது, அபத்தமெது என்பதைப் பிரித்துக் காட்டும் கோடுகள் கலைந்துவிட்ட நிலையில், சுய ப்ரக்ஞை, மென்னுணர்வு போய்விட்ட மாநிலத்தில், இதையெல்லாம் பேசுவதே கூட காலவிரயம்தான். என்ன செய்வது,  பேசாமலும்  இருக்கமுடிவதில்லை.

**

10 thoughts on “தந்தைக்காக

 1. நீங்க வேற… நான்லாம், என்ன ஒரு பெண் மட்டும்தான் குத்தாட்டம் போட்டிருக்கு, இன்னொரு பெண் ஏன் வரலை, அவங்க இன்ஃப்ளூயன்ஸ்ல மற்ற நடிகைகளையும் கூட்டிட்டு வரலையே என்ற கவலையில் இருக்கிறேன்.

  இனி அடுத்த திருவிழாவுக்கு 5 வருடங்கள் இருக்கே..

  Liked by 1 person

  1. @நெல்லைத்தமிழன்:

   மூனு வருஷம்தான். பாராளுமன்றத்தேர்தல் வருகிறது. பிரதமர் வேட்பாளரான அப்பாவுக்காக, ஆட்டம்போட வருவார்கள்.. பொறுமை காக்கவும்!

   Like

 2. வாக்கு என்று வந்து விட்டால் எந்த அளவுக்கும் இறங்குவார்கள்!  திரையுலகில் மட்டும் இருந்த வரை அவர் மதிப்பு ஓரளவு உயரத்தில்தான் இருந்தது!

  Liked by 1 person

  1. @ ஸ்ரீராம்:

   ஒரு கலைஞன் என்கிற ரீதியில் மேலேதான்.
   மாத்தி யோசித்து, மக்களுக்கு வேறுவித எண்டர்டெய்ன்மெண்ட் கொடுக்கத்தான் அர்சியலுக்கு வந்திருப்பாரோ!

   Like

 3. இன்னும் என்னவெல்லாம் மீதியாய் இருக்கின்றனவோ..

  நாங்க ஆடுறதும்
  பாடுறதும் காசுக்கு..
  பல ஆளைக் குல்லா
  போடுறதும் காசுக்கு…
  காசுக்கு காசுக்கு..
  காசுக்கு!..

  என்றொரு பாட்டு அலிபாபாவும் 40 திருடர்களும்… என்ற படத்தில்..

  Liked by 1 person

  1. @துரை செல்வராஜு:

   நிஜந்தான். இன்னும் நிறைய பார்க்கவேண்டியிருக்கிறது தமிழ்நாடு, அனுபவிக்கும் தமிழ்ச்சமூகம். டமிளர்கள் ஆட்டம்போடும் காலம். உண்மைத் தமிழன் ஓரமாய் நின்று முகத்தைத் திருப்பிக்கொள்ளவேண்டியதுதான்.

   அலிபாவும் 40 திருடர்களும் படத்தில்தான் இந்தப் பாட்டும்:

   உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
   சொல்லாமல் போவார் அல்லாவிடம் !

   Like

 4. உண்மைதான் மிக வருத்தமாக. இருந்தது. ஆனால் அவர்கள் வாழ்ககையை எதிர் வீட்டிலிருந்து பார்த்த (பாக்கியம்) சந்தர்ப்பம் இருந்தது. அங்கே இவர்கள் குடி வந்த பின் பிறந்த பெண் இது. முன் மாதிரியான பெற்றோர்கள். :(. உலகம் எத்தனையோ மாறி விட்டது என்பதை உணரவே எனக்கு வெகு காலமானது. ஏமாறுகிறவர்கள் இருக்கும் அவரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள். கலைக் குடும்பமாச்சே!

  Liked by 1 person

  1. @ ரேவதி நரசிம்ஹன் :

   பக்கத்திலிருந்து பார்த்த பாக்யசாலியா நீங்கள்? இப்போது இணையத்தில் பார்த்து சந்தோஷியுங்கள். டெக்னாலஜி உங்களை விட்டுவிடுமா!

   Like

   1. ஆமாம் ஜி.
    அப்பொழுது அவர் திரையில் கொடிகட்ட ஆரம்பித்தார். தினம்
    வாக்குவாதங்கள் வீதிக்கே வரும். அப்பொழுது இந்த ஆடிய மகளின் அம்மா,
    பொறுக்க முடியாமல் வெளியேறினார். இந்தக் குழந்தைகளும்
    மும்பை சென்றன.

    17 வருடங்கள் அந்தக் குடும்பம் அங்கே இருந்தது. பிறகு
    நீலாங்கரை சென்றதாகக் கேள்வி.

    இன்னும் ‘அம்மாவும் நீயே’ பாடலை நம்பி வோட் போடப்போகிறார்கள் என்று கேள்வீ!!!!!!
    திரை மோகம் ஒழியாவிட்டால்
    நம் நாடு பிழைப்பது கடினம்.

    Liked by 1 person

 5. @ Revathi Narasimhan:
  சாரிகா மும்பை சென்று செட்டில் ஆகிவிட்டதாகத்தான் கேள்விப்பட்டேன். குழந்தைகளையும் அங்கே கொண்டுபோய் வைத்துக்கொண்டாரா? அவருக்கும்தான் எத்தனை கஷ்டம்?
  இப்போது நீலாங்கரையிலா!

  அம்மாவும் நீயே… நான் ஆணையிட்டால்… என்று திரையில் பார்த்தால், கேட்டால் போதாது நம்ப தமிளனுக்கு/தமிளச்சிக்கு . அதை நிஜம் என நம்பி குட்டிச்சுவரானால்தான் ஒரு ஆத்ம திருப்தி!

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s