கிரிக்கெட்: ஆச்சர்ய இந்திய வெற்றி

நேற்று (28-3-21) புனேயில், ஒரு லாஸ்ட்-ஓவர் த்ரில்லரில் இந்தியா இங்கிலாந்தைத் தூக்கி எறிந்தது. ரிஸல்ட்டை மட்டும் பார்ப்பவர்களுக்கு மேட்ச்சின் அதிர்ச்சிகள்/ஊசலாட்டங்கள் புரிய வாய்ப்பில்லை. டிவி முன் உட்கார்ந்து படபடத்தவர்களுக்கே அந்த உச்சபட்ச அனுபவம்!

டாஸ் தோற்பதில் ரெகார்ட்-ஹோல்டரான இந்திய கேப்டன் கோஹ்லி, நேற்றும் தன் கைங்கர்யத்தைத் தவறாது செய்தார். அதனால் முதலில் பேட்டிங் .  பவர் ப்ளேயில் (1-10) வேகம் காட்டிய ரோஹித்(37), தவன்(67), அடுத்தடுத்து விழுந்தனர். அடுத்து வந்த கோஹ்லியும் அவரது தம்பி ராஹுலும் ஆளுக்கு 7 எடுத்துவிட்டு ஓடினார்கள். இளம் மிடில்-ஆர்டர் பேட்ஸ்மன்களான ரிஷப் பந்த் (78), ஹர்தீக் பாண்ட்யா(64) இருவரும் 12 ஓவருக்குள் 99 விளாசி இங்கிலாந்து பௌலிங்கை ஒரு கை பார்க்க, இந்திய ஸ்கோர் நிமிர்ந்தது. இறுதி ஓவர்களில் பேட் செய்த ஷர்துல் டாக்குர் (30), க்ருனால் பாண்ட்யா (25). இருவரது பங்களிப்பின்றி இந்தியா 300-ஐக் கடந்திருக்காது. கடைசி 3 ஓவர்களில் இந்தியா எடுத்தது 11 ரன். 48.2 ஓவர்களில் ஆல்-அவுட்!  இங்கிலாந்தின் கேப்டன் ஜோஸ் பட்லர்  7 பௌலர்களை பயன்படுத்தினார். ஒவ்வொருவரும் விக்கெட் எடுத்தார்கள். 330 என்கிற இலக்கு இங்கிலாந்துக்கு பெரிய விஷயம் இல்லை. தொடர் இங்கிலாந்திடம் போய்விட்டது எனவே தோன்றியது.

இங்கிலாந்தின் பதிலில், ஆரம்பத்திலேயே அதிரவைத்தார், இந்தத் தொடர் முழுதும் அழகாக வீசி வரும் புவனேஷ்வர். 2 விக்கெட்டுகளை அவர் தூக்க, 3-ஆவதாக வந்த பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) நடராஜனிடம் சரிந்தார். (குல்தீப்பிற்கு பதிலாக உள்ளே  டி.நடராஜன். Tactical move என்றார் ‘toss-ஐத் தோற்றுப் பேசிக்கொண்டிருந்த கோஹ்லி). டாவிட் மலனின் (Dawid Malan) அரைசதம். அவர் வீடு திரும்புகையில் இங்கிலாந்தின் தள்ளாட்டம். 168க்கு 6 விக்கெட். ஷர்துல் டாக்குர் (Shardul Thakur) வரிசையாக 3 விக்கெட்டுகளை விரட்டிவிட்டதால் வந்த வினை. அந்த நேரத்தில் இந்த ஆள்! ஆல்ரவுண்டர் சாம் கர்ரன். மோய்ன் அலி கொஞ்சம் துணையிருந்தார். அதற்கப்புறம் ஒன்-மேன் ஷோதான் கர்ரனிடமிருந்து. நடராஜன், பிரசித் கிருஷ்ணா என இந்திய பௌலர்களை வரிசையாகப் பதம் பார்த்தார் கர்ரன். 200/7 என்ற நிலை வருகையில், இங்கிலாந்து ஒப்பேறாது என இந்தியர்களுக்குத் தோன்ற ஆரம்பித்தது. தொடர்ந்து விளாசி 300-ஐக் கடந்து ஸ்கோரைக் கொண்டுவந்துவிட்டார் கர்ரன். இப்போது இந்தியாவுக்கு உதறல். 47-ஆவது ஓவரில் டாக்குரைப் பின்னிப் பெடலெடுத்த கர்ர்ன், 18 ரன் சேர்த்தார். 

50-ஆவது ஓவர். 14 ரன்களே தேவை இங்கிலாந்தின் தொடர் வெற்றிக்கு. சாம் கர்ரன் இன்னும் இருக்கிறார். வேர்க்க விறுவிறுக்க 91-ல். Death over specialist நடராஜனிடம் பந்து. புவனேஷ்வரும் கோஹ்லியும் ஏதேதோ சொன்னார்கள். சிங்கிள் தொலையட்டும்,  சிக்ஸர், பௌண்டரி வராம பாத்துக்கப்பா! – என்றிருப்பார்களோ? முதல் பந்து. நடராஜன் யார்க்கர். தூக்கி அடிக்கமுடியாமல், ஸ்டம்ப் காலியாகிவிடாமல் தடுத்த கர்ரன், லாங்-ஆஃப் திசையில் செலுத்த, முதல் ரன் ஓடினார்கள். ஹர்தீக்கின் ஃபீல்டிங், ஷார்ப் த்ரோ! இரண்டாவது ரன்னுக்கு முயற்சித்த மார்க் வுட் திருப்பி அனுப்பப்பட, ஹர்தீக்கிடமிருந்து சீறிய பந்து ரிஷப் பந்தின் கையில்! கோட்டுக்குள் வுட் பாய்வதற்குள் ஒரே தட்டாகத் தட்ட, பறந்தது பெய்ல்ஸ்! சிவப்பொளி. வுட் காலி. கடைசி ஆளான ரீஸ் டாப்லே (Reece Topley) இறங்கி நடராஜனின் அடுத்த பந்தை எப்படியோ சிங்கிளுக்கு தட்டி, அந்தப்பக்கம் ஓடி நின்றுகொண்டார். எதுக்கு வம்பு! சாம் கர்ரன். நடராஜனின் அடுத்த இரண்டு பந்துகள்.. சிக்ஸா, ஃபோரா? சான்ஸே இல்லை. Dot balls!  5-ஆவது பந்தை கவர் திசையில் பௌண்டரி அடித்தார் கர்ரன். அடுத்த பந்தும் துல்லியமாகக் கீழிறங்க, யார்க்கர். Dot ball. கடைசி ஓவரில் வெறும் 6 ரன்களே அருளினார் நடராஜன்! 7 ரன் வித்தியாச ஆச்சர்ய வெற்றி இந்தியாவுக்கு. கோஹ்லியின் நடராஜன்-அணைப்பு,  ஆட்டபாட்டம் துவங்கியது!

இந்தப் போட்டியில் தோற்க, இந்தியா கடும் முயற்சி செய்ததாகத் தோன்றியது.  காட்ச்சுகள் சர்வசாதாரணமாக கை நழுவின. Poor ground fielding. இந்தியர்களுக்கு ஃபீல்டிங் எப்போதுதான் கைவருமோ! ரவீந்திர ஜடேஜாவின் ஞாபகம் உடனே வருகிறது. He is India’s gun fielder என்று புகழ்ந்தார் ஆஸ்திரேலிய வீரர்  மோஸஸ் ஹென்ரிக்ஸ் (கடந்த வருட ஆஸ்திரேலிய டூரின்போது).

95 நாட்-அவுட் என ஜொலித்த சாம் கர்ரன் Player of the match. இதற்கு முன் இங்கிலாந்துக்காக அவர் அடித்த உச்சபட்ச ஸ்கோர் 15. இங்கிலாந்து குறித்துக்கொண்டதோ இல்லையோ, CSK – யின் தோனி கவனித்திருப்பார். யூஸ் பண்ணிக்குவோம்..!

டெஸ்ட், டி-20, ஒரு-நாள் தொடர்கள் என மூன்றையும் இந்தியாவிடம் தோற்றுவிட்டு இங்கிலாந்து நாடு திரும்புகிறது, ஜூனில் இந்தியா அங்கே வரட்டும்.. பார்த்துக்கொள்வோம் என்கிற சிந்தனையோடு..

**  

3 thoughts on “கிரிக்கெட்: ஆச்சர்ய இந்திய வெற்றி

  1. இந்தியா didn’t deserve to win. நம் பவுலிங் பேட்டிங் வீக் என்றே தோன்றுகிறது. கோஹ்லியின் ராசி போய்விட்டது என்றே நினைக்கிறேன் (செஞ்சுரி). நேற்று 370 அடிக்காதது நம் தவறுதான்.

    Liked by 1 person

  2. உண்மையிலேயே பரபரப்பான கடைசி நிமிடங்கள்…  மேட்ச் நம் கைக்கு வந்தது போல இருந்து அப்புறம் கைவிட்டுப் போனது என்றே நினைத்தேன்.  ஜெயித்தது ஆச்சர்யம், அதிருஷ்டம்.

    Liked by 1 person

    1. @ நெல்லைத்தமிழன், @ ஸ்ரீராம்:

      பெரும்பதற்றம், கடும் போட்டிக்குப் பேர்போன hi-voltage மேட்ச்.

      இந்தியா முழுசாக 50 ஓவர்கள் தாக்குப்பிடிக்கவில்லை என்பது கவனிக்கவேண்டிய விஷயம். Catches win matches என்பது கவாஸ்கர் காலத்து மொழி! Dropping catches is no problem !- இது இன்றைய கதை! அதிர்ஷ்டம் ரொம்பவே வேலை செய்யும் ஸ்போர்ட் இந்த கிரிக்கெட்!

      Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s