ஒரு-நாள் தொடர்: முதல் வெற்றி இந்தியாவுக்கு

ஷிகர் தவன் (98, 106 balls), ஜானி பேர்ஸ்டோ (Jonny Bairstow) (94, 66 balls) என்று இரண்டு வித்தியாசமான அணுகுமுறை கொண்ட துவக்க ஆட்டக்காரர்களின் சிறப்பான ஆட்டம் கண்ட, புனேயில் நிகழ்ந்த இங்கிலாந்து-இந்திய தொடரின் முதல் ஒரு-நாள் மேட்ச். ஆட்டம் காண்பித்த இருவரும் 90-களில் அவுட்! பின் வந்தவர்களின் சாகசத்தினால் இந்தியா வென்றது.

Jonny Bairstow
England Opener

இந்திய அணியில் இரு புதுமுகங்கள். கர்னாடகாவின் வேகபந்துவீச்சாளர் ப்ரஸித் கிருஷ்ணா. பரோடா கேப்டன் /ஆல் ரவுண்டர் க்ருனால் பாண்ட்யா. ஹர்திக்கின் அண்ணா! தவனும் (98), கோஹ்லியும்(56) சிறப்பாக ஆட ஆரம்பித்து சூடுபிடிக்கும் வேளையில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டார்கள். 205-க்கு 5 விக்கெட் என்ற இந்திய நிலை. 280-வரை இந்தியா வந்தாலே அதிசயம். அனேகமாக மேட்ச் காலி எனவே தோன்றியது. ஹர்திக் மலிவாக அவுட்டானபின் களத்தில் தன் முதல் இந்திய ஒரு-நாள் இன்னிங்ஸிற்காக இறங்கிய க்ருனால், ஆரம்ப முதலே அதிரடி காட்ட, அடுத்த முனையில் தடுமாறிக்கொண்டிருந்த ராஹுலுக்கும் இதுவரை சமீபத்திய தொடர்களில் காணப்படாத உற்சாகம் கிளம்பியது. ஃபார்மில் இல்லாத ராஹுல் (62), புதுவீரர் க்ருனாலிடமிருந்து அந்த சமயத்தில் இங்கிலாந்து இத்தனை வேகத்தை எதிர்பார்க்கவில்லை! நடந்தது அதுதான். இருவரும் செம பார்ட்னர்ஷிப் காண்பிக்க, இந்தியக் குதிரை திடீரென 300-ஐத் தாண்டி ஓடியது. 318 என இங்கிலாந்துக்குப் பொறி வைத்தது!

Prasidh Krishna, Medium Pacer

இங்கிலாந்தின் பதில்தான் எப்படி இருந்தது ஆரம்பத்தில்! ரோஹித்-தவன் துவக்கிவைத்த இந்தியா முதல் 10 ஓவர்களில் 39 எடுத்தது-கவனமாக ஆடினார்களாம். Conservative, cautious attitude coupled with difficulty in facing the swing! இங்கிலாந்தோ முதல் பவார்-ப்ளேயில்(10 ஓவர்கள்)  89 விளாசியது. தான் இந்த வகைமைப் போட்டிகளில் உலக சேம்பியன் எனக் காண்பிக்க முற்பட்டது போலும். விறுவிறுவென 135-க்கு ஸ்கோர் எகிறுகையில், ஸ்விங் ஆர்ட்டிஸ்ட் புவனேஷ்வர் தவிர்த்து, எல்லா இந்திய பௌலர்களுக்கும் செம அடி. தளராத ப்ரஸித் கிருஷ்ணா, இங்கிலாந்து 135-ல், ஜேஸன் ராயை முதலில் வெளியே பிடித்துத் தள்ளினார். மூன்றில் இறங்கிய ஸ்டோக்ஸ் தடுமாற அவரும்,  94 எடுத்திருந்த ஜானி பேர்ஸ்டோவும் வெளியேற்றப்பட, இந்திய பௌலிங் புத்துயிர் பெற்றுத் தாக்கியது. வழக்கம்போல் ஷர்துல் டாக்குர் அடுத்தடுத்து கேப்டன் மார்கனையும், பட்லரையும் ஒரே ஓவரில் கழுத்தைப்பிடித்துத் தள்ளிவிட இங்கிலாந்துக்கு மூச்சுத் திணறல். பிறகு மொயீன் அலி, கர்ரன் சகோதரர்கள் என இறங்கியும் கதை ஓடவில்லை இங்கிலாந்துக்கு. 251-ல் மரவட்டையாய் சுருண்டு விழுந்தது. ஷர்துல், கிருஷ்ணா, புவனேஷ்வர் பௌலிங்கில் கலக்கினர். 66 ரன் மார்ஜினில் வெற்றி இந்தியாவுக்கு என்பது, கொஞ்சம் ஜாஸ்திதான்! Shikhar Dhawan -Player of the match.

க்ருனால் பாண்ட்யா – 58 ரன், 1 விக்கெட், ப்ரஸித் கிருஷ்ணா 4 விக்கெட் – தங்கள் முதல் போட்டியில். Excellent debuts. நீண்ட நாட்கள் இந்தியாவுக்காக உழைத்து ஆடுவார்களாக.

**

4 thoughts on “ஒரு-நாள் தொடர்: முதல் வெற்றி இந்தியாவுக்கு

 1. கோஹ்லி ஒரு கேட்சை தவறவிட்டார். அதை உடனே எடுத்து எறிந்திருந்தால், அதையும் பௌலர் உடனே பிடித்து அடித்திருந்தால் அப்போதே அடுத்த விக்கெட் காலியாகி இருக்கும்.  ஜெயித்து விட்டோம் என்றாலும் நாம் கவனமாக சரி செய்து கொள்ள வேண்டிய இடங்கள் இவை எல்லாம்.

  Liked by 1 person

 2. முதல் 15 ஓவர்கள் பார்த்தபின் (அதாவது கிரிகின்ஃபோவில் பார்த்தபின், எனக்கு லைவ் மேட்சுகள் தொலைக்காட்சியில் பார்க்கமுடியாது… டென்ஷன் எகிறிடும் ஹாஹா) தூங்கப் போய்விட்டேன், இது தேறாது என்று. இந்தியா வெற்றி பெற்றது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம், இங்கிலாந்து வீரர்களைத்தான் குறை சொல்லணும், வெற்றி பெறும் வாய்ப்பைக் கெடுத்துக்கொண்டதற்காக)

  Liked by 1 person

 3. முதலில் தேறாது என்றிருந் த மாட்ச்இந்தியா வசம் என்பது the glorious uncertaiinties sof cricket என்பதை நிரூபித்தது

  Liked by 1 person

 4. @ Siram, @ Nellaithamizhan, @ Balasubramaniam GM :

  வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் எந்த ஒரு கட்டத்திலும், எதுவும் நடந்துவிடும். சில பந்துகள் திடீரெனப் பாய்ந்து பெரிசுகளின் உயிரை எடுத்துவிடும்! இங்கிலாந்து கேப்டன் என்னதான் சமாளித்தாலும் நடந்தது அதுதான்.

  அடுத்த இரண்டு போட்டிகள் ஆர்வமாகக் கவனிக்கவேண்டியவை. இந்திய ஃபீல்டிங் முன்னேறவேண்டியிருக்கிறது. முதல் போட்டியிலேயே இருதரப்பிலும் தளரவைக்கு காயங்கள்..

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s