டெஸ்ட் ரிசல்ட் எதிர்பார்த்தபடி. இரண்டாவது டெஸ்ட்டும் இதே மைதானத்தில்தான், மூன்றே நாட்களில். கோஹ்லி&கோ.வுக்கு அடுத்த போட்டியில் எதைக் கவனிக்கவேண்டும், என்ன செய்யவேண்டும் என்று புரிந்ததா? கோஹ்லி டாஸ் வெல்வது என்பது, ஆண்டவனின் கையில்கூட இல்லை என்பதால் அதை விட்டுவிடலாம்.
மேட்ச் முடிந்ததும் முரளி கார்த்திக்கோடு அளவளாவுகையில் கேப்டன் கோஹ்லி என்ன சொன்னார்? சப்போர்ட் ஸ்பின்னர்ஸ் போதுமான அளவுக்கு ஒத்துழைக்கவில்லை. இந்தியா தன் body language- ஐ முன்னேற்றிக்கொள்ளவேண்டும்! ஓ.. புரிகிறது. கோஹ்லி மாதிரி, முகத்தில் உணர்வு ஜாலங்கள், கைகால்களின் மூலம் சேஷ்டைகள்.. இதை மைதானத்தில் கொண்டுவந்தால் போதும். மேட்ச் நம் கைக்குவந்துவிடும். எதிரி காலி. அடடா.. என்ன ஒரு வியூகம்.
ரன்களைக் கட்டுப்படுத்துவதில் சப்போர்ட் ஸ்பின்னர்களின் முயற்சி போதவில்லை என்கிறார் கேப்டன். புது ஸ்பின்னர்கள் – நதீம், சுந்தர் – இவர்களை உடனே ரவீந்திர ஜடேஜாவுடன் ஒப்பிடக்கூடாது. ஜடேஜாவின் திறன், உழைப்பு, அனுபவம் ஒப்பிடமுடியாதது. நதீமும், சுந்தரும் இப்போதுதான் டெஸ்ட் உலகில் நுழைந்திருக்கிறார்கள். புதியவர்களைத் தட்டிக்கொடுப்பது, உற்சாகப்படுத்தவேண்டியது கேப்டனின் கடமை. தோல்விக்கு அவர்களைக் குறைசொல்லித் தப்பிக்கப் பார்ப்பது கோமாளித்தனம். நதீமும் சுந்தரும் டெஸ்ட்டின் எந்தெந்த நாட்களில் பந்து வீசினார்கள்? பிட்ச் சாதுவாக இருந்த, எதிரணி பேட்டிங் செய்ய ஏதுவாக இருந்த முதல் இரண்டு நாட்களில். இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில், அஷ்வினே 51 ஓவர் போட்டுத்தான் 3 விக்கெட்டுகளைத் தூக்கமுடிந்தது. கிட்டத்தட்ட எல்லா பௌலர்களுமே ஓவருக்கு 4 ரன்னுக்குமேல் கொடுத்தார்கள். இந்திய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பௌன்சர் போடும் தைர்யமே வரவில்லை. பேட்ஸ்மனுக்கு ஒத்துழைத்த பிட்ச்சின் ஆரம்ப நாட்கள், இங்கிலாந்து டாஸ் வென்றதால் அவர்களுக்கு சாதகமானது என்பதுதானே பிரதான உண்மை. இது கோஹ்லியின் தலைக்குள் போகவில்லையோ?
இஷாந்த், பும்ரா, அஷ்வின் ஆகியோர், பௌலர்களுக்கு மோசமான பிட்ச்சில் அருமையாக உழைத்தார்கள். சில விக்கெட்டுகள் கிடைத்தன. குறிப்பாக அஷ்வின், 75 டெஸ்ட் விளையாடிய அனுபவமுள்ள ஸ்பின்னர், இரண்டாவது இன்னிங்ஸில் தூள்கிளப்பினார். சப்போர்ட் ஸ்பின்னர்களைக் குறைசொல்லும் கோஹ்லி, இங்கிலாந்து போட்டுச்சாத்திய முதல் இன்னிங்ஸில், முதல் இரண்டு நாட்கள், ஸ்பின்னர்களுக்கு கொடுத்த ஓவர்கள் எப்படி? இதோ:
அஷ்வின் ; 51.5 ஓவர்கள் : விக்கெட் 3.
நதீம் : 44 ஓவர்கள். விக்கெட் 2.
சுந்தர் : 26 ஓவர்கள் விக்கெட் 0.

இப்படி சார்ட் பார்த்தால் போதாது. புரியாது. கொஞ்சம் விளக்குவோம். ஷாபாஸ் நதீம் அணியில் வந்தது அக்ஷர் பட்டேல் (genuine allrounder) காயம் காரணமாக இடம்பெற முடியாததால். குல்தீப் யாதவையும் அலட்சியம் செய்து ஷாபாஸ் நதீமைக் கொண்டுவந்தது கோஹ்லிதான். அக்ஷர், குல்தீப் அளவுக்குத் திறனானவர் இல்லை நதீம். கொஞ்சம் நம்பிக்கை இல்லாதவர்போலவும் பௌலிங் செய்கையில் காணப்பட்டார் என்கிறார் மஞ்ச்ரேகர். அதற்காக அனுபவக் குறைவான வீரரைத் தாக்கமுடியாது.
வாஷிங்டன் சுந்தர், அத்தகைய dead pitch-லும் சுமாராக ஆஃப்ஸ்பின் வீசினார். அவரின் ஓவரில் ஒரு நிச்சய எல்.பி.டபிள்யூ. தரப்படவில்லை. DRS வாய்ப்புகள் மிச்சமில்லாததால் இந்தியாவால் அப்பீல் செய்யமுடியவில்லை! மேலும் சுந்தரின் இன்னொரு ஓவரில் மிட்-ஆனில் ரோஹித் ஒரு லாலிபாப் கேட்ச்சை நழுவவிட்டு அசடுவழிந்தார். இது சப்போர்ட் ஸ்பின்னரின் குற்றமல்லவே! இவை கிடைத்திருந்தால் சுந்தருக்கும் 2 விக்கெட்டுகள் 26 ஓவர்களிலேயே கிடைத்திருக்கும்தான். இரண்டாவது இன்னிங்ஸில் – அஷ்வினுக்கு 17.3 ஓவர், நதீமுக்கு 14 ஓவர் கொடுக்கப்பட்டன. சுந்தருக்கு கோஹ்லி கொடுத்தது ஒரே ஓவர். அதில் ஒரு ரன் கொடுத்தார் அவர். பேட்டிங்கும் செய்யவேண்டும் என்பதால் அதிக ஓவர்களை சுந்தருக்குக் கொடுக்கவில்லைபோலும். தவறில்லை.

ஆட்டத்தின் இன்னொரு பக்கத்தை கவனிப்போம். முதல் இன்னிங்ஸில் இந்திய ஸ்கோர், இங்கிலாந்தின் ஸ்கோருக்கு (578) அருகிலாவது வந்திருக்கவேண்டும். 500-ஐ நெருங்கமுடியாவிட்டாலும், 450- க்குப் பக்கத்திலாவது வந்திருக்கவேண்டும். ஆனால் அதற்கு டாப்-ஆர்டர் பேட்டிங் சரியாக இயங்கவேண்டுமே. என்ன நடந்தது? ரோஹித் 6, ஷுப்மன் கில் 29, கோஹ்லி 11, ரஹானே 1. கில் (Gill)-ஐத் தவிர்த்து, இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் பெருந்தலைகளின் பேட்டிங் லட்சணம். இந்திய முதல் இன்னிங்ஸ் 73/4 எனத் தத்தளித்தது ஒரு கட்டத்தில். ரிஷப் பந்த்-உம், வாஷிங்டன் சுந்தரும் அடிக்காவிட்டால் ஸ்கோர் 200-ஐத் தாண்டுவதற்கே முக்கியிருக்கும். சென்னை பிட்ச்சில் -கடைசி நாளில்- பேட் செய்வது எளிதல்ல. பௌலர்களுக்கு சாதகமாக மாறிவிட்ட பிட்ச். Anderson’s reverse swing at its best. கில், ரஹானே, பந்த் எனத் தலைகள் உருண்டன. இரண்டு இன்னிங்ஸிலும் batting flops : ரோஹித் , ரஹானே . (ராஹுல், ஆஹா.. நாம் நுழைந்துவிடவேண்டியதுதான் என எண்ணியிருப்பாரோ?)
கோஹ்லி, இந்தியாவின் கேப்டன், இதையெல்லாம் புரிந்துகொள்கிறாரா? இல்லை, சப்போர்ட் ஸ்பின்னர்களின் சப்போர்ட் கிடைக்காததால்தான் தோல்வி எனச் சொல்லி அடுத்த மேட்சிலும் ஜகா வாங்கப்போகிறாரா? நிபுணர் சாஸ்திரி வாயைத் திறக்கக் காணோமே?
**
முக்கிய பேட்ஸ்மேன்கள் சொதப்பியது இது முதல் முறையல்ல. ரோஹித் சர்மாவுக்கு சூடு பிடிப்பதற்குள் சீரிஸ் முடிந்துவிடும். நாம் டி ஆர் எஸ் கேட்டது விட இங்கிலாந்து கேப்டன் கேட்ட இரண்டு டி ஆர் எஸ்ஸுமே ரொம்ப மோசம்.
LikeLike
நான் நினைக்கிறேன். கோஹ்லி, கிரிக்கெட்டை நேசிப்பது குறைந்துவிட்டது, அவர் ஃபேமிலி மேன் ஆகிவிட்டார். அதனால் அவர் கேப்டன்சியைத் துறப்பதுதான் சரி. அவர்தான் நதீமை எடுத்ததற்குக் காரணம். கேப்டன் பெர்ஃபார்மன்ஸும் சரியில்லை. கோஹ்லிக்கு ராசியும் சுத்தமாகக் கிடையாது. டெஸ்ட் போட்டி இறுதிக்குக் கூட இந்தியாவால் கோஹ்லி தலைமையில் செல்லமுடியாது என்றே நினைக்கிறேன். சுந்தர் இந்த மேட்சில் அடிக்கவில்லை என்றால் எப்போதோ மேட்ச் முடிந்திருக்கும்.
LikeLike
@ ஸ்ரீராம், @ நெல்லைத்தமிழன் :
DRS-க்கும் கோஹ்லிக்கும் ரொம்ப தூரம்! கடைசியில் தாக்குப்பிடித்து ஆடிக்கொண்டிருந்த சுந்தரை எப்படியாவது அவுட் செய்ய, அனாவசிய DRS-களைக் கேட்டுக்கொண்டிருந்தது இங்கிலாந்து.
கோஹ்லியின் கேப்டன்சி கேள்விக்குறியாகியிருக்கிறது. ரஹானேயோடு இனி அவர் அடிக்கடி ஒப்பிடப்படுவார். தலைவலி அதிகமாகிவிட்டது கேப்டனுக்கு!
LikeLike