இந்திய டி-20 கிரிக்கெட்: தமிழ்நாடே ராஜா !

டி-20 வகைக் கிரிக்கெட்டில் இளம் வீரர்களின் திறமையை வளர்க்க, கொண்டாட என தேசீய அளவில், சையது முஷ்டாக் அலி கோப்பை (SMA Trophy) இந்திய கிரிக்கெட் போர்டினால் 2007-ல் (ஐபிஎல்- இன் அதிரடி ஆரம்பத்திற்கு முன்னால்) தொடங்கப்பட்டது. முதல் ட்ராஃபியை தமிழ்நாடு ஜெயித்தது – இதே தினேஷ் கார்த்திக்தான் (அப்போது 22 வயது) கேப்டன்!

2021-ஆம் வருட சையது முஷ்டாக் அலி ட்ராஃபிக்கான இறுதிப் போட்டி நேற்று இரவு (31-1-21) அகமதாபாதில் நடந்தது. பரோடா அணியை செமயாக துவைத்தெடுத்து,  தமிழ்நாடு அணி கோப்பையைக் கைப்பற்றியது. (2020 கோப்பையை ஒரு ரன்னில் கர்னாடகாவிடம் தோற்றிருந்தது தமிழ்நாடு)

தமிழ்நாட்டின்  மகத்தான வெற்றியில் சில கவனிக்கத்தக்க அம்சங்கள். க்ரூப் ஸ்டேஜிலிருந்து இறுதி ஆட்டம் வரை தமிழ்நாடு எந்த அணியிடமும் தோற்கவில்லை. இத்தனைக்கும் டெல்லி, மும்பை, கர்னாடகா, குஜராத், பிஹார், பஞ்சாப், ஜார்கண்ட், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற வலிமையான அணிகள் ஆடிய டூர்னமெண்ட் இது. ஆச்சரியம் ஊட்டிய இன்னொரு விஷயம்: இப்போது சர்வதேச வெளியிலும் பெயர்பெற்றிருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய முன்னணி வீரர்கள், தமிழ்நாட்டிற்காக இந்தப் போட்டிகளில் (வெவ்வேறு காரணங்களால்) ஆட முடியவில்லை: ஆர். அஷ்வின், முரளி விஜய், விஜய் ஷங்கர், வாஷிங்டன் சுந்தர், டி.நடராஜன். ஐந்து முக்கிய வீரர்கள், கிட்டத்தட்ட பாதி டீம் ஆடாத நிலையில், புதுமுகங்கள் சிலருடன் தினேஷ் கார்த்திக் களத்தில் இறங்கி, தேசீய அளவில் தமிழ்நாட்டை வேகமாக முன்னெடுத்துச் சென்றிருக்கிறார். சிறப்பான தலைமைப் பண்பு, கள வியூகங்கள், இளம் வீரர்கள் அதகளம் .. தமிழ்நாட்டின் கையில் இந்திய டி-20 கோப்பை.

சாய் கிஷோர்

இறுதிப்போட்டியில் பந்து வேகமாக எகிறியும், கூராகத் திரும்பியும் கூத்தடித்த அஹமதாபாதின் சர்தார் பட்டேல் மைதானத்தில், முதலில் ஆடிய பரோடாவின் இன்னிங்ஸில் முதல் 13 ஓவர்களை ஸ்பின்னர்களிடம் கொடுத்து எதிரணிக்கு அதிர்ச்சி கொடுத்தார் தமிழ்நாடு கேப்டன். திணறித் தத்தளித்தது பரோடா. ஐபிஎல் பெங்களூர் அணிக்காக வீசும் வாஷிங்டன் சுந்தரைப்போல் சிக்கனம் காட்டிய லெக்-ஸ்பின்னர் சாய் கிஷோர், 4 ஓவர்களில் வெறும் 11 ரன்களே கொடுத்து, பரோடா பேட்ஸ்மன்களை நெருக்கினார். இந்த வருட டி-20 போட்டிகளில்,  ஒரு மேட்ச்சிலும் ஆடாத ஃபிங்கர் ஸ்பின்னர் மணிமாறன் சித்தார்த்தை திடீரென ஃபைனலில் நுழைத்து, 4 ஓவர் கொடுத்து, பரோடா பேட்ஸ்மன்களை குழப்போ குழப்பென்றுக் குழப்பிக் கலக்கினார் கார்த்திக். சித்தார்த்தின் சுழலில் 4 எதிரி விக்கெட்டுகள் பொத்துப்பொத்து என விழுந்தன. 9-ஆவது ஓவரிலேயே 36 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து மூச்சுவாங்கிக்கொண்டிருந்தது பரோடா.  ஆல்ரவுண்டர்கள் ஹர்தீக் பாண்ட்யா, க்ருனால் பாண்ட்யா இந்தத் தொடரில் ஆடாததும் பரோடாவைப் பலவீனப்படுத்தியிருந்தது. இத்தகு களநிலையில்,  120/9 என்கிற ஸ்கோர் மோசமில்லை. விஷ்ணு சோலங்கி  நன்றாக ஆடி 49 ரன் என டாப்-ஸ்கோர் கொடுத்தார். அதித் ஷேத் (Athit Sheth) 29. தமிழ்நாடு ஆடுகையில் துவக்க ஆட்டக்காரர் செழியன் ஹரி நிஷாந்த் 35, பாபா அபராஜித் 29 நாட்-அவுட், தினேஷ் கார்த்திக் 22 என விளாசி வென்றனர். ஸ்பின்னர் சித்தார்த் ஆட்ட நாயகன்.

சித்தார்த்

தமிழ்நாட்டின் வெற்றிக்கு சிறப்புப் பங்களிப்பு செய்த வீரர்கள் என இவர்களைக் குறிக்கவேண்டும்: ஸ்பின்னர்கள் சாய் கிஷோர், மணிமாறன் சித்தார்த், முருகன் அஷ்வின் (எழுத்தாளர் இரா.முருகனின் மைந்தன்), ஆல்ரவுண்டர் சோனு யாதவ், பேட்ஸ்மன்கள் நாராயணன் ஜெகதீசன், ஹரி நிஷாந்த், அருண் கார்த்திக், ஷாருக் கான்.

வரப்போகிறது பிப்ரவரி 18-ல், சென்னையில் ஐபிஎல் ஏலம். ஏற்கனவே ஐபிஎல் அணிகளில், தமிழ்நாட்டின் சாய் கிஷோர், ஜெகதீசன் (சி.எஸ்.கே), முருகன் அஷ்வின் (பஞ்சாப்), தினேஷ் கார்த்திக், வருண் சக்ரவர்த்தி, சித்தார்த் (கொல்கத்தா). ஆர்.அஷ்வின் (டெல்லி), நடராஜன்  (ஹைதராபாத்) வாஷிங்டன் சுந்தர் (பெங்களூர்) என இடம்பிடித்திருக்கின்றனர். இந்த  வருடம் தமிழ்நாட்டின்  ஷாருக் கான், ஹரி நிஷாந்த் போன்றோருக்கு ஐபிஎல்-அணிகளில் வாய்ப்புக் கிடைக்குமா?  பார்க்கவேண்டும்.

அதற்கு முன், ஃபிப்ரவரி 5-ல்  ஆரம்பிக்கிறது சென்னையில் – இங்கிலாந்து-இந்தியா டெஸ்ட் தொடர். 

**

6 thoughts on “இந்திய டி-20 கிரிக்கெட்: தமிழ்நாடே ராஜா !

    1. @ ஸ்ரீராம், @ பாலசுப்ரமணியம் ஜி.எம்.:

      பலருக்கு, கிரிக்கெட் என்றால் நேஷனல் டீம், வெளிநாட்டினருடன் ஆடுவதுதான். அல்லது செம பாப்புலரான ஐபிஎல்.

      இளம் வீரர்களை வளர்த்தெடுக்கும், புடம்போட்டு வெளிக்கொணரும் ரஞ்சி, தேவ்தார், துலீப், எஸ்.எம்.ஏ. போன்ற உள்நாட்டுப் போட்டிகளைப்பற்றி கிரிக்கெட் ரசிகர்களில் பெரும்பாலோருக்கு அவ்வளவாகத் தெரிவதில்லை. அல்லது தெரிந்துகொள்ள ஆர்வமில்லை!

      Like

  1. இம்மாதிரி ஆட்டங்கள்அதிகம் கவனிக்கப்படுவதில்லை

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s