டி-20 தொடருக்கான அணியில் ஆளில்லை. ஒரு-நாள் போட்டிகளிலும் இடமில்லை. டெஸ்ட் அணியில் பெயர் இருந்தது. ஆனால், முதல் டெஸ்ட்டுக்குத் தேர்வாகவில்லை. தொடரின் விதியையே மாற்றிய இறுதி மேட்ச்சில் என்னடான்னா அவர்தான் ஹீரோ! Madmax என ஒரு சிலரால் வர்ணிக்கப்படும் 23-வயது விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மன் ரிஷப் பந்த் (Rishab Pant). தம்பிக்கு தலையில் சூடேறிவிட்டால் மைதானத்தில் ஆட்டமென்ன…ஒரே சாமியாட்டம்தான். கொஞ்சம் ஸ்டைல் மாற்றியிருந்தாலும், அதுதான் நடந்தது அன்று (19-1-21).. ரிஷப் பந்தின் அதகளம் டெஸ்ட் கிரிக்கெட் உலகில் ஒரு வரலாற்று வெற்றியை இந்தியாவிடம் கொண்டுவந்தது – அதுவும் ஆஸ்திரேலிய அணியின் கோட்டை எனக் கருதப்படும் ‘The Gabba’ -வில். ஆஸ்திரேலியா இந்த மைதானத்தில் கடந்த 32 வருடங்களில் ஒருதடவை கூட எந்த நாட்டிடமும் தோற்றதில்லையாமே.. அட.. !

2020-21 ஆஸ்திரேலிய டூர் – கோவிட் காலத்தின் மத்தியில்- இது நிகழ்ந்ததற்கே இந்திய, ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டுகளுக்கும், வீரர்கள், ஏனைய அணி அங்கத்தினர்களுக்கும் நன்றி சொல்லவேண்டும். ஆனால் கடந்த இரண்டு மாதங்கள் குறிப்பாக, இந்தியாவுக்கு கடும் சோதனை காலமாக அமைந்தது. நவம்பர் 2020-ல் அமீரகத்தில், ஐபிஎல் -இல் ஆரம்பித்த கோவிட் bio-secure bubble, பயணம், ஹோட்டல் க்வாரண்டைன், தனிமையில் மேட்ச் பயிற்சி, தொடர்ந்து பயமுறுத்திய காயங்கள் என வீரர்களைப் புரட்டி எடுத்தது கெட்ட காலம். பிரச்னை மாறி பிரச்னை. மேட்ச்சுகளில் அடி, concussion, fracture, தொடைக்காயம், முதுகுப்பிடிப்பு, பயிற்சியின் போதும் கையில் அடி, காலில் அடி.. சே… இப்படியா ஒரு அணியைப் பேய் பிடித்து ஆட்டும். ஒரு சகிக்கமுடியாத சூழலில், வீரர்களும், அணியின் support staff-ம் பொதுவாக அலுத்து, சலித்துத் துவண்டிருக்கவேண்டும். ஆனால் உள்ளே நிகழ்ந்துகொண்டிருந்த ஏதோ ஒன்று, அவர்களை, ’ பயப்படாதே.. இறங்கு உள்ளே, ஆடு…’ என சொல்லிக்கொண்டே இருந்திருக்கும். காயம்பட்டு டெஸ்ட் சீனியர்கள் ஒவ்வொருவராக அணியிலிருந்து விலகிக்கொண்டிருக்கும் வைபவம் தொடர, சர்வதேச அனுபவம் ஒரு புறம் இருக்கட்டும், இந்திய உள்நாட்டுத் தொடர்களில்கூட சரியாக ஆடி அனுபவம் அடையாத, பெஞ்சின் விளிம்பில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்திருந்த net bowlers / standby players, திடீரென உள்ளே, இந்தியாவுக்காக ஆட அழைக்கப்பட்டார்கள். முக்கியமான கடைசி போட்டியில், வாஷிங்டன் சுந்தர், நடராஜன், ஷர்துல் டாக்குர் (Shardul Thakur) – யார் இவர்கள் – கடைசி டெஸ்ட் மேட்ச்சுக்கான இந்திய அணியைப் பார்த்து கிரிக்கெட் உலகம் விழித்தது.. ஷமி, பும்ரா, அஷ்வின், ஜடேஜா, விஹாரி எல்லாம் எங்கே போய்விட்டார்கள் ? வலிமையான அணியாக, கூடவே சொந்த நாட்டு பிட்ச்சுகளில் ஆடும் சாதகம் பெற்றிருந்த எதிர் அணி. கடைசி மேட்ச்சில் அவர்களது கோட்டையான ’ப்ரிஸ்பேனில் பாக்கலாம்.. வர்றியா?’ எனக் கொக்கரித்த ஆஸ்திரேலிய அணியை, முக்கிய போட்டியில் எதிர்கொள்ளும் இந்திய அணி ஒருமாதிரியாத்தான் இந்தியாவுக்கே காட்சியளித்தது! என்ன செய்வது, வேறு வழியில்லை, முகாந்திரமில்லை. ஏளனமாகப் பார்த்தது எதிரணி. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம். பாவம் இந்தியா.. துரதிர்ஷ்டம். ஆடி, நொறுங்கி வீட்டுக்குத் திரும்பப்போகிறது…

Man for the moment..
ஆனால் கத்துக்குட்டிகள் புகுந்து விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி நிகழ்த்தியதோ ஒரு நம்பமுடியாத வெற்றி. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் திகிலான ஒரு பக்கம் அந்த நாட்களில் அழுந்த எழுதப்பட்டது, பின் வருபவர்கள் படித்து சிலிர்ப்பதற்காக. ஷர்துல் டாக்குர், வாஷிங்டன் சுந்தர், நடராஜன், சிராஜ் முகமது – குறிப்பாக கடைசி நாளில் இளம் ஷுப்மன் கில் (Shubman Gill) காட்டிய திறன், சீனியர் புஜாராவின் பொறுமை, அதிநிதான அணுகுமுறை, ரிஷப் பந்த் வெளிக்கொணர்ந்த உத்வேகம், ஜெயிக்காமல் அகல்வதில்லை என்கிற, தீ போல் அகத்தில் எழுந்த முனைப்பு. இவைதான் ஒரு இரண்டாம் பட்ச அணியாக பார்க்கப்பட்ட இந்தியா, ஆஸ்திரேலியா என்கிற உலக நம்பர் 1 அணியை அவர்களின் கொல்லைப்புறத்திலேயே நசுக்கி, துவம்சம் செய்ய வழிவகுத்தது.
அடிபட்டு பாதிப்பேர் விழுந்துவிட்ட இந்தியாவின் படுமோசமான காலகட்டத்தில், அஜின்க்யா ரஹானே அணியை நடத்திச்சென்ற விதம் – அவரது தலைமைப்பண்பு, நிதானம், விவேகம்.. எவ்வளவு பாராட்டினாலும் தகும். அப்பாவி முகத்தை வைத்துக்கொண்டு, அதிகம் பேசாமல், அதிரடி மாற்றங்கள், முடிவுகளைக் களத்தில் எடுத்து, ஒட்டுமொத்த இந்தியாவையே ஒரு அசத்து, அசத்திவிட்டார் மனுஷன். கோஹ்லி என்றாலே கேப்டன், கிங் என்கிற அழுத்தமான பிம்பத்தை, ஒரே வீச்சில் கலைத்துப்போட்டார் ரஹானே. ஆஹா.. இவரல்லவா கேப்டன்.. கிரிக்கெட் ரசிகர்கள் 2021-ஐ மறக்கமாட்டார்கள்.
கோஹ்லியின் தலைமையில் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா சந்தித்தது அவமானத்தை. இரண்டாவது இன்னிங்ஸில் 36 ஆல்-அவுட். ஒரு பெரும் தோல்வியை இந்தியாவின் தலையில் சுமத்திவிட்டு நாட்டுக்குத் திரும்பிவிட்டார் அப்பாவாகப்போகும் கோஹ்லி! உலகம் அதிர்ந்திருந்த வேளையில், கோஹ்லியும் இல்லை, ரோஹித் ஏற்கனவே அணியில் இல்லை. இத்தோடு இந்தியாவின் ஆட்டபாட்டமெல்லாம் ஒழிந்தது என நினைத்து சுகித்திருந்தது ஆஸ்திரேலியா. ’நாளை பொழுது யாருக்கு விடியும்? நடந்து பார்த்தால்.. நாடகம் புரியும் !’ -என்கிற கண்ணதாசனின் வரிகளை ஆஸ்திரேலியர்கள் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை! ”4-0 Whitewash” -இந்தியா பரிதாபமாகத் தொடரைத் தோற்கும்” என்று கேலி செய்தார் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன்/வர்ணனையாளர்-Michael Vaughan. ’India will be smoked in Tests!’ என்றது உலகக்கோப்பை வென்ற ஒரு ஆஸ்திரேலிய பெருந்தலை – மைக்கேல் கிளார்க். கடைசி நாளில் ஒரு பக்கம் ரிஷப் பார்த்திருக்க, இன்னொரு முனையில் புஜாரா, தலையில், மார்பில், கையில் என அடிபட்டு ஆடிக்கொண்டிருக்கையில், ‘Pujara is in his elements. Unsettle him… Rip open his helmet’ என வெறி கொண்டு ட்விட்டரில் தாக்கிய முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்ன் – ஆஸ்திரேலியாவின் வீர, தீர ஒரிஜினல் முகங்கள்.
கடைசியில் Brisbane-ல் நடந்தது என்ன! குறிப்பாக இந்தியாவின் ’சின்னப்பசங்க’ ஐந்தே நாட்களில், என்னென்ன வித்தைகள் செய்துகாட்டினார்கள் ? ”நெட்-பௌலர்களையும், ஸ்டாண்ட்-பை ப்ளேயர்களையும் வைத்தல்லவா இந்தியா கடைசியில் ஆடியது? இது இந்தியாவின் முழு டீமே இல்லையே! ஆஸ்திரேலியாவின் வலிமையான அணி, இந்தியா “A” டீமிடம் தோற்றுவிட்டதே! “ – முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்ட்டிங்கின் புலம்பல்.. அப்பப்பா.. தாங்கமுடியவில்லை!
இன்னும் நிறைய எழுதலாம் இந்த மாபெரும் ’டெஸ்ட் தொடர் வெற்றி’பற்றி. இங்கே நிறுத்திக்கொள்வோம் இப்போது.
**
சொல்லிக்கொண்டே இருக்க, சொல்லி, சொல்லிக் களிக்க இன்னும் நிறைய இருக்கிறது. அசத்தி வீட்ட ஆட்டம் அன்றைய ஐந்தாம் நாள் ஆட்டம். புஜாராவின் மகள் ‘வீட்டுக்கு வா… அடிபட்ட இடங்களில் முத்தம் தருகிறேன்” என்றதும், கங்காரு வடிவ கேக்கை வெட்ட மாட்டேன் என்ற ரஹானேவின் பெருந்தன்மையும், நடராஜனின் டேக் இட் ஈஸி கமெண்ட்ஸ்களும் பின்னால் ரசிக்கப்பட்டவை.
LikeLike
@ ஸ்ரீராம்: ஆமாம். நிறைய இருக்கிறது அலச. கட்டுரைக்கு பதிலாகப் புத்தகம் வெளியிட வேண்டியிருக்கும்!
LikeLike
Cheers! மாற்றம் ஒன்றே மாறாதது. புதிய இளங்குருதி கோண்ட அணி புலிக் குருளைக் கூட்டம் போல வெற்றி காணட்டும்.
LikeLike
@ பாண்டியன் ராமையா:
வாங்க, ரொம்ப நாளாச்சு!
ஆஸ்திரேலிய வெற்றி சரியாக மனதில் இறங்குவதற்குள், இங்கிலாந்துடனான தொடர் இரண்டு வாரங்களுக்குள் ஆரம்பம்! பார்ப்போம்.
LikeLiked by 1 person
எனக்கு ஒர் வாட்ஸாப் செதி வந்தது dont takelong paternity leave others will deliver in your place நம் வீரர்களுக்கு ஏதோ 20 20 மாட்ச் மாதிரிஆடினல் ஜெயிக்கலாம் என்னும் உள்ளுணர்வு இருந்திருக்க வேண்டும் பந்தும் வாஷிங்டன் சுந்தரும் ஆடியதைக் கண்டபோது தோன்றியது
LikeLiked by 1 person
@ பாலசுப்ரமணியம் ஜி.எம்.:
அந்த வாட்ஸப் எனக்கும் வந்தது.
கடைசி நாளில்ப்ரிஸ்பேனில் 324 ரன் எடுப்பது, அவர்களது துல்லிய பௌலிங்கிற்கு எதிராக – next to impossible. டி-20 ஃபார்முலாவை நாடவேண்டியிருந்தது, டெஸ்ட் சூழலில். பயங்கர ரிஸ்க்! The boys delivered. That was India’s day !
LikeLike