.. வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது அமீரகத்தில். எட்டு ஐபிஅல் அணி வீரர்கள், நிர்வாகிகள், இந்திய, அமீரக கிரிக்கெட் போர்டுகள், அரசாங்கங்கள் (அவர்களது political clearance இல்லையெனில் வெளிநாடுகளுக்குப்போய் ’ஆட’ முடியாது என்பது ரொம்பப்பேருக்குத் தெரிந்திருப்பதில்லை), ஐசிசி, ஸ்பான்சர்கள் என சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். கிட்டத்தட்ட இரண்டு மாதம் கொரோனா எதிர்ப்பு bio security bubble-இல் பொறுமையாக, கவனமாக தங்களை நடத்திக்கொள்வது என்பது, வீரர்களுக்கு விளையாட்டைத் தாண்டி, மன அழுத்தம் தரும் தவிர்க்கமுடியாத செயல்பாடு ஆகும்.

the IPL Cup !
ஐந்தாவது தடவையாக மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் கோப்பையை வென்றுவிட்டது. துபாயில் நடந்த IPL ஃபைனலில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வென்றது. ஆடிய எட்டு அணிகளில் அதுவே சிறந்தது என்பது ஆரம்ப மேட்ச்சுகளின்போதே தெரியவந்தது. அதற்கடுத்தாற்போல் இரண்டாவதாக முடித்துக்கொண்ட டெல்லி கேப்பிடல்ஸ் கிட்டத்தட்ட சீராக ஆடியது. மற்ற அணிகளின் ஆட்டம், பெரும்பாலும் தள்ளாட்டம்! சென்னை சூப்பர் கிங்ஸின் ஆட்டம்பற்றித் தனியாக எழுதலாம். அவர்கள் கதையே வேறு.

Mumbai Indians
வைரஸின் தாக்கப்பின்னணியில் ஆடப்பட்ட high-profile டி-20 சேம்பியன்ஷிப்பான ஐபிஎல்-2020, பல்வேறு ஆட்டத்திறமைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. குறிப்பாக பல இளம் இந்திய வீரர்கள் -இதுவரை நாட்டிற்காக ஆட வாய்ப்புகிட்டாதவர்கள்- தங்களின் சிறப்புத்திறன்களை காட்சிக்கு உட்படுத்தினர். கணிப்புகளை நொறுக்கித்தள்ளினர். ராஜஸ்தான் ராயல்ஸின் ஆல்ரவுண்டர் ராஹுல் டெவட்டியா, மும்பை இந்தியன்ஸின் பேட்ஸ்மன்கள் சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன், ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரின் துவக்க ஆட்டக்காரர் 20-வயது தேவ்தத் படிக்கல், சென்னை சூப்பர் கிங்ஸின் ருதுராஜ் கெய்க்வாட், கொல்கத்தா நைட்ரைடர்ஸின் மிஸ்டரி ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்தி, சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் T.நடராஜன், கிங்ஸ் லெவென் பஞ்சாபின் லெக்-ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் ஆகியோர். இவர்களில் சிலர் வருமாண்டுகளில் இந்திய அணிக்கான கதவைத் தட்டக்கூடும். இந்திய டி-20 அணியில் இணைக்கப்பட்ட நடராஜன் இன்று இந்திய அணியோடு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இறங்கிவிட்டார்!
ஐபிஎல் விருதுகளில் Most Valuable Player award ராஜஸ்தான் ராயல்ஸின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை (Jofra Archer) சென்றடைந்தது. அவருடைய துல்லிய யார்க்கர்களும், முகத்துக்கெதிரே எகிறிய பௌன்சர்களும் எதிரணிகளின் டாப்-பேட்ஸ்மன்களை நிலைகுலையவைத்ததை, அதில் சிலர் தடுமாறிக் கீழே சரிந்ததை ரசிகர்களும், விமரிசகர்களும் ஒருசேர கண்டுகளித்தார்கள்.
டி-20-இல் அதிவேக ரன்குவிப்பு அவசியமாயிற்றே. இந்த வகைமையில் அதிரடியாக பேட்டைச் சுழற்றிய – 191.42 என ’ஸ்ட்ரைக் ரேட்’ வைத்திருந்த – மும்பை இந்தியன்ஸின் கரன் போலார்டிற்கு Super Striker of the Season award கிடைத்தது.
Emerging Player award இளம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பேட்ஸ்மன் தேவ்தத் படிக்கலுக்கு அவருடைய சிறப்பான பேட்டிங்கிற்காக வழங்கப்பட்டது.
இந்த ஐபிஎல்-இல் அதிக ரன்னெடுத்ததற்கான ’Orange Cap’ கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராஹுலுக்கும், அதிக விக்கெட்டுகளுக்கான ’Purple Cap’ விருது டெல்லி கேப்பிடல்ஸின் வேகப்பந்துவீச்சாளர் ககிஸோ ரபாடா (Kagiso Rabada)வுக்கும் சென்றது.
அதிக சிக்ஸர்களுக்கான விருதை மும்பை இந்தியன்ஸின் இஷான் கிஷன் தட்டிச்சென்றார்.
ஒரு போட்டியில் 132 நாட்-அவுட் அடித்த பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராஹுலின் ஸ்கோர்தான், தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோர். பௌலிங்கில் கொல்கத்தா நைட்ரைடர்ஸின் வருண் சக்ரவர்த்தியின் 5 விக்கெட்டுகள் (5/20) என்பதே ஒரு மேட்ச்சில் நிகழ்த்தப்பட்ட சிறப்பான பௌலிங்.
ஐபிஎல்-இன் 13-ஆவது பதிப்பை அமீரகத்தில் அபாரமாக நடத்தியாயிற்று. இந்தியாவில் நடக்கவிருக்கும் அடுத்த வருடத்திற்கான ஐபிஎல்-இல் இன்னுமொரு அணியைச் சேர்க்கலாம் என இந்தியக் கிரிக்கெட் போர்டு சிந்திப்பதாகத் தெரிகிறது. முன்பு ஒரு முறை ஆடிய ‘குஜராத் லயன்ஸ்’ மீண்டு வருமோ! 2021-க்கான ’ஐபிஎல் ஏலம்’ ஜனவரி/ஃபெப்ருவரியில் இருக்கலாம் எனப் பேச்சு அடிபடுகிறது.
**
குஜராத் லயன்ஸ் முன்பே ஆடி இருக்கிறதா?
LikeLike
@Sriram:
CSK, RR சூதாட்டம் காரணமாக இரண்டு வருடங்களுக்காக ஆடமுடியாமல் போனபோது, பதிலாக வந்த இரண்டு புதிய அணிகளில் ஒன்று Gujarat Lions. இன்னொன்று Rising Pune Supergiants.
2016, 2017-ல் ஆடின!
LikeLike