சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐ மறந்துவிடலாம்.
மிச்சமிருக்கும் அணிகளிடையே நடக்கவிருக்கும் கடும்போட்டிகளை இனி, ‘ஆராம்ஸே’ உட்கார்ந்து ரசிக்கலாம். சாதிப்பவர்களைக் கொண்டாடலாம்! சென்னை அணிக்காக இரவு பகலென உருகிய, முணகிய, மனதுக்குள் கிரிக்கெட் ஆடிய சிஎஸ்கே ரசிகர்களே.. துடித்தது, துவண்டது போதும். கிரிக்கெட் எனும் மாபெரும் விளையாட்டை ஆராதியுங்கள், ஆனந்தியுங்கள். இனிவரும் IPL போட்டிகளில் உயிர்த்துடிப்புடன் யார் யார் விளையாடுகிறார்கள் என pure cricketing pleasure-க்காகப் பார்த்து மகிழுங்கள். You deserve better things..
ஏதோ வெறுப்பில், அலுப்பில், சொரணை ஏதுமில்லாமல், புதிய வீரர்களை, பெஞ்சில் உட்கார்ந்திருந்தவர்களை, இதுகாறும் மைதானத்துக்குள் டவல், ட்ரிங்க்ஸ் எடுத்துவந்தவர்களை, ஒரே மேட்ச்சில் உள்ளே தள்ளிப் பதறவைத்து அணியையும் வீரர்களையும் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடப் பார்த்தாரா மஹீந்தர் சிங் தோனி? அதாவது சென்னையின் ‘தல’? இவரைப்போய் ஓவராக ’போற்றி போற்றி’ எனப் பாடி, தலையில் தூக்கிவைத்து ஆடி – கொண்டிருந்த தமிழர்களுக்கு இது தேவைதான். தோல்வி எதிர்வந்து முட்டி மோதி சாய்த்தபின், கீழேபோட்டு மிதித்தபின் குறை சொல்லி, குற்றம்சாட்டிப் பிரயோஜனம் இல்லை. தோனியின் ‘ஆட்டம்’ ஆட்டம்கண்டுவிடவில்லை. முற்றிலுமாக முடிந்துவிட்டது. ரோஹித் ஆடாத, கேப்டனாக இல்லாத மும்பை இண்டியன்ஸுக்கு எதிராக 30 ரன்களில் 6 விக்கெட்டுகள் வீழ்ந்தது- கேப்டன் தோனி உட்பட- என்பது, ’கண்முன்னே தெரிந்தது, தெரியாதது’ என எல்லாவற்றையும் சேர்த்தே சொல்கிறது. விளக்கவேண்டியதில்லை.
2019-ல், உலக்கோப்பைத் தோல்விக்கப்புறம் உடனடியாக ஓய்வை அறிவித்திருக்கவேண்டும் தோனி. வயசாகிவிட்டது என்பது அப்போதே ஸ்க்ரீனில் தெரிந்ததே. செய்யமாட்டாரே.. ஒரு வருடத்துக்கு ஆடாமல் ஆறப்போட்டு, மற்றவர்களைத் தன் ரிடையர்மெண்ட் பற்றிப் பேசவைத்து, கேட்டு மகிழ்ந்து, முடிவேதும் எடுக்காமலும் காலம் கடத்துவதில் ஒரு கர்வம். ’தல’க்கனம். தனி சுகம். கூடவே நிறைய ’டைமும்’ கிடைத்தது அல்லவா ‘தல’க்கு. எதுக்கு? விதவிதமான விளம்பரப்படங்களில் ஆனந்தமாக நடித்து, கூவிக்கூவி சாமான்களை விற்க. விளம்பர உலகிலும் நான்தான் சூப்பர்ஸ்டார் என வணிக உலகிற்குக் ’காண்பிக்க’வேண்டாமா? இதுவரை சேர்த்த சொத்தும் போதாதே. இன்னும்.. இன்னும்..
ஒருகாலத்தில்.. ஒரு காலத்தில் இந்தியாவுக்காக நன்றாக ஆடியவர். இரண்டு உலகக்கோப்பை வெற்றிகளுக்குக் காரணமானவர். மஞ்சள் சட்டைகளைப் பெரும் அணியாக ஐபிஎல் -இல் நிலைநாட்ட ஒத்துழைத்தவர். நிலைகுலைந்ததற்கும் அவரேதான் பிரதான காரணமெனினும்….
போகட்டும் விடுங்கள். ஆகிற காரியத்தைப் பாருங்கள்.
**
ஒன்று ரொம்ப ஆர்வமாக எல்லாம் கிரிக்கெட் பார்ப்பதில்லை. இரண்டாவதாக நிச்சயமாக சென்னை அணியை ஆதரித்தெல்லாம் பார்த்ததே இல்லை!
LikeLiked by 1 person
@ Sriram :
அப்ப இது உங்களுக்கானதல்ல!
பிரதானமாக, சென்னை! சிஎஸ்கே! தல..தல..! தோனி, டோனி ..வா.. நீ! விசில் போடு.. ஆடு.. என்றெல்லாம் ஆர்ப்பரித்த தோனிவெறியர்களுக்கு, சென்னைமோஹிகளுக்கானது. ரசனைதாண்டி அவர்களின் ஓவர்-ஆட்டம், பித்து..இப்படியும் ரசிகத்தனம் உண்டுதான். தவறேதுமில்லை. இருந்தும் அயரவேண்டாம் என்பதற்காக.
மற்றவர்களும் படிக்கலாம்..!
LikeLike
ஊருக்கெல்லாம் ஜோசியம் சொல்லுமாம் பல்லி…
மத்தவங்க நல்லா விளையாடாதபோது வாய்ப்பு கொடுக்காமல் , அல்லது மறைமுகமாக அவமதித்த தோனி, தனக்கு திறமை இல்லாதபோது, வயதாகிவிட்டபோது இன்னும் பணத்துக்காக தன் புகழை விலை பேசுவது ஜீரணிக்கக் கஷ்டமாக உள்ளது.
ச்ச்சின் 200 ரன் அடிப்பாரா, தோனி அதற்கு வழிவிடுவாரா என அந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தோனி நடந்துகொண்டபோதே அவர் மீதான மதிப்பு சரிந்தது. இன்னும் விளையாடியருக்கலாமே என்ற காலம் வரும்போதே ரிடையர் ஆகியிருக்கணும்.
LikeLike
@ நெல்லைத்தமிழன்:
தோனியின் கடந்த சிலவருட செயல்பாடுகளை நன்கு கவனித்தால் அவர் எப்படி தன் கேரியர், புகழ், வருமானம், ரிடையர்மெண்ட் தாண்டிய வாழ்க்கைவளம் எனத் திட்டம்போட்டு இயங்கிவருகிறார் எனத் தெரியும். அதில் கிரிக்கெட் தாண்டிய விஷயங்கள் பதிந்துகிடப்பதும் புரியும்.
LikeLike