சூப்பர் கிங்ஸின் சூப்பர்-டூப்பர் தோல்விகள் !

அமீரகத்தில் நடந்துவரும் ஐபிஎல் 2020-இல் அதோகதியாகிவிடும் போலிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK). முதல் 7 போட்டிகளில் 5-ல் காலி! பஞ்சாபோடு கைகோர்த்து பாய்ண்ட் லிஸ்ட்டில் கடைசி வரிசையில் உட்காந்திருக்கிறது. 2010-ல் இப்படி ஒருமுறை நடந்தது; ஆனால் அப்போது இரண்டாவது பாதியில் ஆக்ரோஷமாக ஆடி, கோப்பையை வென்றது! ஆனால் இப்போது? நாக்-அவுட் நுழையவே ததிங்கினத்தோம் போடுகிறது தோனியின் ’சூப்பர்’ டீம்..

Dhoni with CSK Boss Srinivasan

ஏன் இந்த அவல நிலை? முக்கிய காரணிகளில் கேப்டன் தோனியும் ஒருவர்! அவரது வியூகங்கள், பேட்டிங் ப்ளான் ஒன்றும் இதுவரை தேறவில்லை. தோனியின் தனிப்பட்ட பேட்டிங்கும் முன்புபோல் கைகொடுக்கவில்லை. போதாக்குறைக்கு டெத்-ஓவர்களில்கூட கட்டையைப்போட்டு  கவிழ்த்துவிட்ட ஆல்-ரவுண்டர் கேதார் ஜாதவ்! ஆட்ட வியூகங்களைப் பொறுத்தவரை, சூப்பர் கிங்ஸ் தன் பழைய டெம்ப்ளேட்டையே திருப்பித் திருப்பி உபயோகிக்கப்பது சூப்பர் முட்டாள்தனங்களில் ஒன்று. அதாவது மிடில் ஓவர்களில் தூங்கி வழிந்துவிட்டு, டெத்-ஓவர்களில் (17-20) போட்டுத் தாக்கி இலக்கை அடையலாம் என மந்தமாக இயங்குவது. இந்த ஃபார்முலா அமீரகத்துப் பிட்ச்சுக்களில் சுத்தமாக எடுபடவில்லை. 16-ஆவது ஓவருக்குப் பின் ஆட வரும் தோனியால் மேட்ச்சை finish செய்ய முடியவில்லை. ஓடி ரன்னெடுக்கையில், ஐயாவுக்கு மூச்சு வாங்குகிறது, வேர்த்து வேர்த்துக்கொட்டுகிறது என்பது நன்றாகவே தெரிகிறது. மேலும், மேட்ச் கைநழுவிப்போனபின்,  கடைசி- ஓவர் சிக்ஸர்களினால் யாருக்கு லாபம்? சீன் போட்டு ஐபிஎல் -ஐ ஜெயிக்கமுடியுமா என்ன!

சரி, என்னென்ன மாற்றங்கள் வேண்டும் உடனடியாக? சூப்பர் கிங்ஸின் முதல் மூன்று பேட்ஸ்மன்கள் – ஷேன் வாட்ஸன், ஃபாஃப் டூப்ளஸீ (Faf du Plessis), அம்பதி ராயுடு – just OK. ஃபார்மில் இருப்பவர்கள், ஸ்கோர் செய்பவர்கள். மாற்றம் இங்கே தேவையில்லை. செய்யவேண்டிய மாறுதல்களில் முக்கியமானது ஆல்-ரவுண்டர்கள் சாம் கர்ரன் (Sam Curran), ரவீந்திர ஜடேஜா இருவரையும் பேட்டிங் ஆர்டரில் முன்னே கொண்டுவந்து ஆடவைக்கவேண்டும்.  4, 5 எண் வரிசையில் அவர்கள் வரவேண்டும்.  ஆவேசமாக ஆடும் இவர்களுக்கு ஏழெட்டு ஓவராவது கிடைத்தால்தான் அணியின் ஸ்கோர் எகிறும். இருவரும் அபுதாபி போன்ற பெரிய மைதானத்திலும் பௌண்டரி, சிக்ஸ் பறக்கவிடும் சாதுர்யம், திறனுடையவர்கள். விக்கெட்டுகளுக்கிடையே வேகமாக ஓடி ரன் எடுப்பவர்கள். அவர்களை 17-ஆவது ஓவரில் கொண்டுவந்து அழுத்தத்தை அதிகரிப்பதைப்போன்ற முட்டாள்தனத்திலிருந்து, சிஎஸ்கே முதலில் வெளியே வரவேண்டும். கர்ரன், ஜடேஜாவிற்கு அடுத்தாற்போல், தோனி 6-ல் இறங்கி ஆக்ரோஷம் காட்டவேண்டும். குறைந்தபட்சம் பந்துகளை வேஸ்ட் செய்யாது ஆடவேண்டும். இரண்டு ஆண்டுகளில் முதன்முறையாக, போன ஐபிஎல் மேட்ச்சில் சென்னைக்காக ஆடிய ஜெகதீசன் நன்றாகத்தான் ஆடினார். தொடரலாம்.    

இன்னொன்று தென்னாஃபிரிக்க லெக்-ஸ்பின்/கூக்ளி பௌலர் இம்ரான் தாஹிர் (Imran Tahir) ஆடுகளத்தில் இறக்கப்படவேண்டும். 2019 ஐபிஎல்-இல் அதிக பட்ச விக்கெட் வீழ்த்திய வீரர், இந்த ஐபிஎல்-இல் இன்னும் ஒரு மேட்ச்சில்கூட சேர்க்கப்படவில்லை. பெஞ்சில் உட்கார்ந்து பஜியா சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். இதுவா தோனி-ஃப்ளெமிங்கின்  மேட்ச் வியூகம்? சிஎஸ்கே boss ஸ்ரீனிவாசனுக்கு BP எகிறாமல் வேறென்ன செய்யும்!

இப்படிச் சில மாறுதல்களுடன் இறங்கி, உத்வேகத்துடன் ஆடினால் சிஎஸ்கே இந்த ஐபிஎல்-இல் தன் கௌரவத்தை ஓரளாவாவது காப்பாற்றிக்கொள்ளமுடியும். இல்லையென்றால், தலையில் காசித்துண்டைப் போட்டுக்கொண்டு தோனி  திரும்பிடவேண்டியதுதான்!

**

7 thoughts on “சூப்பர் கிங்ஸின் சூப்பர்-டூப்பர் தோல்விகள் !

    1. @ ஸ்ரீராம்: நெருக்கடிகள் ஒவ்வொரு அணிக்கும் உண்டு. அவற்றைத் தாண்டாது எந்த அணியும் முன்னேற வாய்ப்பில்லையே..

      Like

  1. தோனிக்கு இதுவே கடைசி ஐ.பி.எல்லோ? பார்க்க பாவமாத்தான் இருக்கு. அணி மேனேஜ்மெண்ட் என்ன நெருக்கடியை அவருக்குக் கொடுக்கப்போவுதோ

    Like

    1. @நெல்லைத்தமிழன்: ஆனைக்கும் அடி சறுக்கும்தான். என்ன செய்ய !

      Like

    1. @ பாண்டியன் ராமையா :
      வாங்க! புதுத் ‘தல’ கிடைத்துவிட்டாராக்கும். நடத்துங்க..
      மிச்சமிருக்கும் மேட்ச்களில் என்ன நடக்கப்போகிறதெனப் பார்ப்போம்.

      Liked by 1 person

      1. ஒன்னும் நடக்காது. நாக் அவுட்டில் வெளியேறி, மீதமுள்ள பந்தயங்களில், புதுமுகங்களுக்கு வாய்ப்புக் கொடுத்து, எதிர்கால CSK-வை கட்டியமைப்போம்.

        Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s