கவிஞர் ஆத்மாநாம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு கவிதைக்கெனப் பிரத்தியேகமாகத் தொடங்கப்பட்டு பல கஷ்டங்களுக்கிடையே அவராலும், நண்பர்களாலும் நடத்தப்பட்ட இதழ் ‘ழ’. 1978-லிருந்து 1988 வரை விட்டுவிட்டு காட்சி தந்த இலக்கியப் பத்திரிகை.
ஆத்மாநாமின் கவிதைகளுடன், க.நா.சுப்ரமணியம், கலாப்ரியா, தேவதச்சன், பிரும்மராஜன், காளிதாஸ், ஞானக்கூத்தன், ஆர். ராஜகோபாலன், காசியபன், எஸ். வைத்யநாதன், மாலன், ’ஷாஅ’ , சத்யன் போன்றோரின் கவிதைகளும் ’ழ’ -வில் அப்போது வெளிவந்தன.
ஆத்மாநாமின் நண்பரும், எழுத்தாளருமான விமலாதித்த மாமல்லனின் முயற்சியில், ‘ழ’ இதழ்கள் இப்போது அமேஸான் கிண்டிலில் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. அவற்றில், இரண்டு ‘ழ’ இதழ்கள் இலவச வாசிப்புக்கு (இரண்டு நாட்களுக்கு) இப்போது:
‘ழ’ 16 (ஏப்ரல் 1981): ஆகஸ்ட் 16 மதியம் – ஆகஸ்டு 18 மதியம் (12:30வரை)
‘ழ’ 17 (ஜூன் 1981): ஆகஸ்ட் 17 மதியம் – ஆகஸ்ட் 19 மதியம் (12:30வரை)
கவிதை ப்ரேமிகள் கிண்டிலுக்குள் புகுந்து, வாசித்து மகிழ்வார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த ’போஸ்ட்’!
‘ழ’ இதழ் 15 -ஐ வாங்கிப் படித்துப் பார்த்தேன். க.நா.சு., ஞானக்கூத்தன், காசியபன், கலாப்ரியா, எஸ்.வைத்யநாதன், பிரும்மராஜன் போன்றோரோடு ஆத்மாநாமின் இரண்டு கவிதைகளும் படிக்கக் கிடைத்தது நல்ல அனுபவம்.
***
தகவலுக்கு நன்றி. தரவிறக்கம் செய்து கொள்வேன்.
LikeLike
ழ இதழ்கள் பற்றிக் கேள்விப்பட்டதுண்டு ஆனால் அதிகம் தெரிந்ததில்லை. உங்கள் பதிவில் தகவல்கள் அறிய முடிந்தது.
தரவிறக்கம் செய்து கொள்கிறேன் அண்ணா மிக்க நன்றி
கீதா
LikeLike
தகவல் நன்று நன்றி நண்பரே
LikeLike
ஏதாவது இரண்டை இங்கு பகிர்ந்திருக்கலாமோ… நான் அமேசான் கிண்டிலில் இல்லை!
LikeLiked by 1 person
@ வெங்கட் நாகராஜ் @கீதா, @கில்லர்ஜி @, ஸ்ரீராம் :
வருகைக்கு நன்றி. தரவிறக்கம் செய்து படித்து மகிழுங்கள்
நான் படித்த ’ழ’ இதழிலிருந்து இரண்டை எடுத்து விடுகிறேன் அடுத்த போஸ்ட்டில் !
LikeLike