சொல்வனத்தில் “.. என்றார் யூ.ஜி. கிருஷ்ணமூர்த்தி”

கலை, இலக்கிய மின்னிதழான  ‘சொல்வன’த்தின் நடப்பு இதழில் (இதழ் 227) (solvanam.com), தத்துவஞானியும், சிந்தனையாளருமான ‘யூ.ஜி.‘பற்றி அடியேனுடைய கட்டுரை வெளியாகியிருக்கிறது.  வாசகர்கள் லிங்கில் சென்று படிக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்:

…என்றார் யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி

மேலும், சொல்வனம் இதழில் நாஞ்சில் நாடனின் சொல்லாராய்ச்சிக் கட்டுரை ’வயாகரா’, பாவண்ணனின் சிறுகதை  ‘கனவு மலர்ந்தது’ மற்றும் அருமையான சிறுகதைகள், மொழிபெயர்ப்புக் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவை நீங்கள் வாசிக்கக் காத்திருக்கின்றன. படித்து ஆனந்தியுங்கள்.

– ஏகாந்தன்

6 thoughts on “சொல்வனத்தில் “.. என்றார் யூ.ஜி. கிருஷ்ணமூர்த்தி”

  1. மிகவும் ஆழ்ந்து ஆர்வத்துடன் வாசித்தேன் ஏகாந்தன் அண்ணா, அது நீங்கள் எழுதிய விதம் தான் காரணமாக இருக்கமுடியும் என்று நம்புகிறேன், வாசிக்க வாசிக்க எனக்கு ஆச்சரியம், இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் கதையில் கரு மற்றும் இதில் நீங்கள் சொல்லியிருக்கும் ஒரு சில விஷயங்களும் நான் சொல்லியிருக்கிறேன், ஆச்சரியமாக இருந்தது, கதை எபியில் வரும் போது நீங்கள் வாசிக்க நேர்ந்தால் தெரியும்

    இவரைப் பற்றி எங்கோ பெயர் மட்டும் கேட்டிருந்தாலும் இன்று உங்கள் பதிவின் மூலம் தான் இத்தனை விரிவாக அறிகிறேன்,

    நல்ல பதிவு

    கீதா

    Liked by 1 person

    1. @ கீதா :
      ஆழ்ந்து வாசித்து கருத்திட்டமைக்கு நன்றி. இரண்டு மாதத்துக்கு மேலாக வாசிப்பு, கட்டுரை தயாரிப்பு எனக் கழிந்தது எனக்கு. விஷயம் இன்னும் நிறைய இருக்கிறது!

      உங்கள் கதையில் கட்டுரையில் உள்ளதுபோன்ற சங்கதிகளா! சஸ்பென்ஸ்! கதை வரட்டும் எ.பி. யில். படிப்போம்.

      Like

  2. முன்பு எப்போதோ ஒருமுறை எங்கள் பிளாக்கில் இவர் பற்றி நீங்கள் சொல்லி இருக்கும் ஞாபகம்.   மிகவும் ஆழ்ந்து இவரைப் படித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது.   உள்வாங்கி எழுதி இருக்கிறீர்கள். 

    Like

  3. மிக அருமையான கட்டுரை. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. இன்னொரு முறை படித்து உள்வாங்க வேண்டும். தொடர்புடைய கட்டுரையையும் படிக்க வேண்டும். ஜேகே வின் சாயல் தெரிகிறதோ? யூஜிகேயின் அனுபவம் நான் படித்த யோகிகளின் தன் வரலாற்று நிகழ்ச்சிகளையும் நினைவுபடுத்தியது.

    உருப்படியான ஒரு இடுகையை அளித்ததற்குப் பாராட்டுகள்.

    Like

    1. @ ஸ்ரீராம், @ நெல்லைத் தமிழன்:

      பொறுமையோடு அங்கு சென்று படித்து கருத்திட்டதற்கு இருவருக்கும் நன்றிகள்.
      முடிந்தால் ஜே.கே.யின் பிரசங்கம் பற்றிய போன வருடக் கட்டுரையையும் படிக்கவும்.

      Like

Leave a comment