அவருக்குமா கொரோனா ?

நேற்று வலையில் அலைந்தபோது  கண்ணில்பட்டு அதிர்ச்சி தந்தது இது: மனுஷ்யபுத்திரனுக்கு கொரோனா. இலக்கியத்தின் பக்கமும் இப்போது கொரோனாவின் கவனம் திரும்பிவிட்டதா?  ஆனால் இந்த செய்தி பல ’பிரபல’ தமிழ் ஊடகங்களில் பத்திரிக்கைகளில் நேற்று காணப்படவில்லை!  ஐஷ்வர்யா ராய், அமிதாப் பச்சனைத் தாண்டினால்தானே அவர்களுக்கு மற்றவர்கள் தெரிவார்கள்?

சில நாட்களாகக் கவிஞருக்குக் காய்ச்சல் தொடர்ந்திருக்கிறது. என்ன பிரச்னை என திருச்சி மருத்துவமனை ஒன்றில் டெஸ்ட் செய்து பார்த்ததில், தம்பி கொரோனாவின் பிரவேசம் தெரியவந்திருக்கிறது. சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சைக்கும் உள்ளாகியிருக்கிறார் மனுஷ்யபுத்திரன். அதிலிருந்து குணமடைந்து வருகையில் இது. யாருக்கு என்ன வரும் என்று எப்படிச் சொல்வது? மருத்துவர்களே மண்டை காய்கிற காலமாயிற்றே.. மனித ஆரோக்யத்தைப்பற்றிப் பேசவே பயப்படவேண்டியிருக்கிறது. Disturbing, destabilizing times…

”இந்த நான்கு மாதத்தில் கரோனா தொற்று குறித்து எவ்வளவோ எழுதிவிட்டேன்.. ஊடகங்களில் எவ்வளவோ பேசிவிட்டேன். இப்போது நானே அதன் நேரடி சாட்சியமாகவும் ஆகியிருக்கிறேன்.” என முகநூலில் வருத்தப்பட்டிருக்கிறார் கவிஞர். விரைவில் குணமாகி ஆபத்திலிருந்து மீண்டு வர அவருக்கு இறையருள் துணைபுரியட்டும்.

இவ்வாறே உலகெங்கும் அவதிப்படும் உயிர்களை ஆண்டவன் காத்தருளட்டும். ”கடவுள்தான் காப்பாற்றவேண்டும்” என மந்திரிகளே முந்திக்கொண்டு விண்ணப்பிக்கும் காலத்தில் அல்லவா  வாழ்ந்துவருகிறோம்  நாம்?

**

14 thoughts on “அவருக்குமா கொரோனா ?

 1. ஆம்.  மனிதர்கள் யாராலும் என்னால் முடியும் என்று சொல்ல முடியாத கையறு நிலை.   கண்ணுக்குப் புலப்படாத அந்த சக்தி மனம் வைத்தால்தான் உண்டு.  பிரார்த்திப்போம் அனைவரும்.

  Like

  1. @ஸ்ரீராம்: ‘அந்த சக்தி’யைப் பற்றி இப்போது பருக்கும் புரிய ஆரம்பித்திருக்கிறது என்பது கொரோனாவால் விளைந்த கைங்கர்யம்!

   Like

  1. @ துரை செல்வராஜு:
   இறைவனே கதி என்றிருப்பது உடம்பையும், மனதையும் ஒரு நேர்க்கோட்டில் கொண்டுவரும்.

   Like

 2. ஏதோ மனுஷ்யபுத்திரனுக்கு வந்தது பெரிய ஆச்சர்யம்போல எழுதியிருக்கீங்க….. கட்சிக்காரங்களோட சஜகமா பழகும் அரசியல்வாதிகளுக்கு வருவதுதானே இவருக்கு வந்திருக்கிறது.

  அமிதாப்பச்சன் குடும்பத்துக்கு வந்ததுதான் ஆச்சர்யம்.

  Like

  1. @ நெல்லைத்தமிழன்:

   பெரிய ஆச்சர்யம் என்று தோற்றம்தர இதை எழுதவில்லை! முதலில் சிக்கிய இலக்கியவாதியாயிற்றே – அதை சிலர் வேண்டுமென்றே கண்டுகொள்ளவில்லையா என்ற சிந்தனையிலே எழுதியது. மற்றபடி, யாருக்கும் வரக்கூடும்தான் கொரோனா – அமிதாப் பச்சன் & கோ. உட்பட..

   அப்படி ஒன்றும் கட்சிக்காரர்களோடு ‘சகஜமா’ பழகிவிடவில்லை நமது பழுத்த அரசியல்வாதிகள் இப்போதெல்லாம். பல ரூம்கள் கொண்ட தங்களின் வசந்த மாளிகைகளில், தனித்தனி ரூம்களில் வசித்துத் தங்களைக் காப்பாற்றிக்கொண்டுவருகிறார்கள். ஆனால் அரசிற்கு புத்திமதி சொல்ல மட்டும் எந்த நாளிலும் தவறியதில்லை!

   Like

 3. மனுஷ்யபுத்திரனுக்குக் கொரோனா என்னும் செய்தியை நாங்களும் படித்தோம். ஆனால் இவ்வளவெல்லாம் ஆச்சரியப்படவில்லை. அவரும் நம்மைப் போன்ற மனிதர் தானே! பலருடனும் பழகுபவர் வேறே. இறைவன் காப்பாற்றட்டும். அனைத்து உலக மக்களுக்காகவும் பிரார்த்திப்போம்.

  Like

  1. @ கீதா சாம்பசிவம்: நெல்லைக்கு மேலே சொன்ன பதில் உங்களுக்கும்தான்!

   Like

 4. எல்லோரும் சமம் தான் கொரொனாவின் முன் எல்லோரும நலமடைய வேண்டும் என்று பிரார்த்திப்போம் வேறு என்ன சொல்ல?!

  துளசிதரன்

  Like

  1. @ துளசிதரன்: எல்லோருக்கும் சேர்த்துப் பிரார்த்திக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம், அதில்தான் நமது நன்மையும் !

   Like

 5. ஏகாந்தன் அண்ணா மாயாவி யாரையும் விட்டு வைக்காதுபோல! எல்லாரையும் ஒரு ஆட்டு ஆட்டிவைத்து விட்டுத்தான் போகும் போல. பல பிரபலங்களையும் இந்த மாயாவி பற்றிக்கொண்டிருக்கிறதே.

  தமிழ்நாட்டு சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் மனைவி மகன், மாமனார் மாமியார் எல்லாரையும் விசிட் செய்துவிட்டது.

  இதில் சிலர் ஹ இந்த தொற்றெல்லாம் சும்மா அப்படியெல்லாம் எதுவுமில்லை சுத்த ஹம்பக் என்று தினமும் பலர் இறப்பதைக் கண்டாலும் சொல்லிக் கொண்டு திரிபவர்களும் இருக்கிறார்கள்.(ற்றம்ப் சொல்லிக் கொண்டிருந்தாரே!!! அது போல) என்ன சொல்ல? எல்லாம் தனக்கு வந்தால்தான் தெரியும் தனக்கு வராதவரை அப்படித்தான் பேசும் உலகம்.

  விரைவில் எல்லாம் குணமாகி உலகம் நலம் பெற வேண்டும் இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்று பிரார்த்திப்பதைத் தவிர வேறு என்ன சொல்ல?

  கீதா

  Liked by 1 person

  1. @ கீதா:
   டாக்டர் ராதாகிருஷ்ணனின் குடும்பம் பூராவும் சிக்கிவிட்டதா!
   இது எப்போதும் ஓயும் ஒழியும் என்று எவராலும் சொல்லமுடியவில்லை. வாக்சீன் கண்டுபிடிக்கிறேன் பேர்வழி எனச் சொல்லிக்கொண்டு விஞ்ஞானிகளின் மண்டை காய்ந்ததுதான் மிச்சம்!

   ட்ரம்பிற்கு இப்போதுதான் மாஸ்க் கிடைத்திருக்கிறது, போட்டுக்கொள்ள!

   Like

 6. கொரோனாவிடம் பிடித்த(???!!!) ஒரே விஷயம் பாகுபாடு பார்ப்பதில்லை மனிதர்களைப்போல்.

  திரு மனுஷிய புத்திரன் அவர்கள் விரைவில் குணம் அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s