மேஜர் குர்தியால் சிங் ஜல்லவாலியா (Maj. Gurdial Singh Jallawalia). சுதந்திர இந்தியாவுக்காக இரண்டு யுத்தங்களில் போர்புரிந்தவர். முதலில் 1948-ல் பாகிஸ்தான் காஷ்மீரைக் கைப்பற்ற செய்த படை எடுப்பு முறியடிக்கப்பட்டதில் ஜம்மு-காஷ்மீர் எல்லையில் சிறப்பான பங்கேற்பு. 1965 இந்தியா- பாகிஸ்தான் யுத்தத்தில் மேற்கு எல்லையில், அமிர்த்ஸர்-லாஹூர் செக்டரில் இந்திய ஆர்மியின் ஒரு CBO (Counter Bombardment Officer) -ஆக முக்கியப் பங்களிப்பு செய்த பெருமையுண்டு. இந்தியன் ஆர்மியின் Artillery Division-ல் ’surveillance and target acquisition’ பிரிவு உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தவர்.
இளம் இந்திய சிப்பாயாக குர்தியால் சிங்தன் 17 ஆவது வயதிலேயே 1934-ல், ஜலந்தரில் இயங்கிய Royal Indian Military School -இல் சேர்ந்து மலைப்பகுதிகளில் போர்புரிவதற்கான சிறப்புப் பயிற்சி பெற்றான் இளைஞன் குர்தியால் சிங். பிரிட்டிஷாரின் தலைமையில் இரண்டாம் உலகப்போரின் இறுதிக்கட்டத்தில் 1945-ல், பர்மா (தற்போது மயன்மார்) எல்லையில் முன்னணியில் நின்று போரிடும் வாய்ப்பு கிடைத்தது. குர்தியால் சிங் பணிபுரிந்த இந்திய ஆர்மி யூனிட் ஒருநாள் பர்மாவின் ஐராவதி நதிக்கரையில் முன்னேறியபோது, ஒரு ஜப்பானிய எதிரிப்படை யூனிட்டை சற்றுதூரத்தில் பார்க்க நேரிட்டது. துப்பாக்கிச்சூடு அனல்பறந்தது. ஒரு ஜப்பானிய வீரனால் வயிற்றில் சுடப்பட்டு, சுருண்டு விழுந்துவிட்டான் இளம் சிப்பாயான குர்தியால் சிங். ஆனால் கூடவே இருந்த இந்திய வீரன் ஒருவன், அந்த ஜப்பானிய வீரன் மீண்டும் சுடுமுன், அவனைச் சுட்டு வீழ்த்திவிட்டான். சண்டையில் ஜப்பானியர்கள் பின்வாங்கிவிட, கீழே ரத்தவெள்ளத்தில் மயங்கிக்கிடந்த குர்தியால் சிங்கை இழுத்துக்கொண்டு முகாமிற்குக் கொண்டுவந்து விட்டான் அந்த வீரன். (யாரோ ஒரு புண்ணியவான்.. இப்படிப் பெயர், முகம் தெரியா ஆயிரமாயிரம் இந்திய வீரர்கள் அப்போது, ஒரு கணக்கிலும் வராத ராணுவப்பணியில் மாண்டார்கள்). குர்தியால் சிங் உயிர்பிழைக்க நேர்ந்தது.
வீரனின் மறைவுமேஜர் குர்தியால் சிங் பஞ்சாபைச் சேர்ந்தவர். ராணுவப் பணியில் வீரதீரச் செயல்களுக்காக 1962-ல் ‘மகா வீர் சக்ரா’ விருது இந்திய அரசால் வழங்கப்பட்டது. 1967-ல் ஆர்மி மேஜராக பதவி ஓய்வுக்குப்பின் சொந்த ஊரான லூதியானா நகரிலேயே செட்டிலாகி ஓய்வுக்காலத்தைக் கழித்தார். இவருடைய இரு சகோதரர்களும் இந்திய ஆர்மியில் பணியாற்றியுள்ளனராம். தந்தை ரிசல்தார் துலீப் சிங்கும்கூட (Risaldaar Duleep Singh) ஒரு ’இந்திய ஆர்மி’க்காரர்தான்! முதல் உலகப்போரில்(1914-18), இளம் படைவீரனாக பிரிட்டிஷ் இந்தியாவுக்காகத் துப்பாக்கி ஏந்தியவர். அவர் ஆரம்பித்துவைத்த இந்திய ஆர்மிக்கான இந்த அருமையான சீக்கிய குடும்பத்தின் பங்களிப்பு, இன்னமும் ஒரு பாரம்பர்யமாக, பஞ்சாபின் கம்பீரமாகத் தொடர்கிறது. மேஜர் குர்தியால் சிங்கின் மூத்த மகன் ஹர்மந்தர்ஜீத் சிங் இந்திய ஆர்மியில் ’Colonel’ ஆகப் பணிசெய்து, பதவி ஓய்வுபெற்றவர். இரண்டாவது மகன் ஹர்ஜிந்தர்ஜீத் சிங், இந்திய வான்படையில் ‘Group Captain’ ஆக சேவையாற்றி ஓய்வுபெற்றிருக்கிறார். பாகிஸ்தானுக்கெதிராக நடந்த ’கார்கில் போரில்’ (Kargil War, 1999) பங்கேற்ற பெருமை இருவருக்கும் உண்டு. இப்பொழுது மேஜர் குர்தியால் சிங்கின் பேரன் ஒருவர் இந்திய ஆர்மியில் ஜூனியர் அதிகாரியாகப் பணியாற்றி வருவதாகத் தகவல். இப்படி, குடும்பமே ஆர்மி.. ஆர்மி.. ஆர்மிதான் ! வேறொன்றுக்கும் ஆசைப்படாத, சிந்திக்கத் தெரியாத தீவிர தேசபக்தர்கள்.
இரண்டு நாட்கள் முன்பு லூதியானாவில், மேஜர் குர்தியால் சிங் தன் 102-ஆவது வயதில் இயற்கை எய்தினார். இந்தியாவின் ராணுவத் தலைமை, தாய்நாட்டின் சிறந்த வீரர்களுள் ஒருவனுக்கு செய்யவேண்டிய ராணுவ இறுதிமரியாதையை சிரத்தையாகச் செய்தது. அந்த உன்னத இந்தியக் குடிமகனின் தேச சேவையை நினைவுகூர்ந்து, நன்றியறிதலுடன் ஒரு பெரிய ஸல்யூட். ஜெய் ஹிந்த்!
இந்திய ராணுவ வீரர்களைப் பற்றியோ அவர்களது சேவை, வாழ்க்கைபற்றியோ நமது மீடியாக்கள் எதுவும் சொல்வதில்லை. அவர்களுக்கு மேற்கொண்டு காசு சம்பாதிக்க, இந்த மாதிரி தேசபக்தி, அபார சாதனைகள், நல்வாழ்வியல் முறைகள் உதவுவதில்லை போலும்.
இந்தியக் குடிமகனின் தேச சேவையை நினைவுகூர்ந்து, நன்றியறிதலுடன் ஒரு பெரிய ஸல்யூட். ஜெய் ஹிந்த்!//
கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
எங்களின் வணக்கங்களும் ராயல் சல்யூட்டும்!
துளசிதரன்
மெய் சிலிர்த்தது. அதுவும் இன்றைய தலைமுறை வரை ஆர்மியில்!! போற்றப்படவேண்டிய குடும்பம். ஆனால் பாருங்கள் நம்மூரில் குறிப்பாக மீடியாவில் இதெல்லாம் யாரும் பேச மாட்டார்கள்.. அவர்களுக்கு ஆயிரம் அக்கப்போர் செய்திகள் டிஆர்பி ரேட்டுக்கு இருக்கும் போது…
நமது டிவி சேனல்களில், பத்திரிக்கைகளில் தேசபக்தர்கள்பற்றி, தொண்டு செய்தவர்பற்றியெல்லாம் வர வாய்ப்பில்லை. மக்களுக்கு இந்தியாவைப்பற்றிய சரியான பிம்பம் கிடைக்காதவாறு பார்த்துக்கொள்வதே அவர்களது சமூகக் கடமை என்று இயங்குகிறார்கள்.
இப்படிப்பட்டவர்கள்தான் வணங்கப்படட வேண்டியவர்கள். இந்தியாவின் தலைமகன்கள்.
LikeLiked by 1 person
பஞ்சாபில் சிக்கியர்கள் போல தமிழ்நாட்டில் வெல்லூர் வாசிகள் 1962 சினாவுடன் நடந்த போரில் ஆறுமுகம்ன்பவர் சிலாகித்து பேசப்பட்டார் l
LikeLiked by 1 person
தேசத்தைக் காப்பதில் இராணுவ வீர்ர்களின் பங்கு மிக அதிகம்.
அவர்கள் பலர் unsung heros.
நல்ல பகிர்வு
LikeLiked by 1 person
@ ஸ்ரீராம், @ ஜி.எம்.பாலசுப்ரமணியம், @ நெல்லைத்தமிழன் :
இந்திய ராணுவ வீரர்களைப் பற்றியோ அவர்களது சேவை, வாழ்க்கைபற்றியோ நமது மீடியாக்கள் எதுவும் சொல்வதில்லை. அவர்களுக்கு மேற்கொண்டு காசு சம்பாதிக்க, இந்த மாதிரி தேசபக்தி, அபார சாதனைகள், நல்வாழ்வியல் முறைகள் உதவுவதில்லை போலும்.
LikeLike
இந்தியக் குடிமகனின் தேச சேவையை நினைவுகூர்ந்து, நன்றியறிதலுடன் ஒரு பெரிய ஸல்யூட். ஜெய் ஹிந்த்!//
கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
எங்களின் வணக்கங்களும் ராயல் சல்யூட்டும்!
துளசிதரன்
மெய் சிலிர்த்தது. அதுவும் இன்றைய தலைமுறை வரை ஆர்மியில்!! போற்றப்படவேண்டிய குடும்பம். ஆனால் பாருங்கள் நம்மூரில் குறிப்பாக மீடியாவில் இதெல்லாம் யாரும் பேச மாட்டார்கள்.. அவர்களுக்கு ஆயிரம் அக்கப்போர் செய்திகள் டிஆர்பி ரேட்டுக்கு இருக்கும் போது…
பெரியதொரு சல்யூட்! வீர வணக்கங்களும்.
கீதா
LikeLike
@ துளசிதரன், @ கீதா :