இத்தகைய வர்த்தகக் கப்பல்கள் ஒன்றிரண்டு வாரங்கள் துறைமுகங்களில் நின்று காற்றுவாங்குவதுண்டு. வழக்கமாகக் கப்பலில் வருபவர்கள் அந்தக் கால அவகாசத்தைப் பயன்படுத்தி இறங்கி உள்ளே வருவதற்காகத் தரப்படும், ’துறைமுக அனுமதிச்சீட்டுகள்’ இந்தமுறை இந்தியத் துறைமுக அதிகாரிகளால் மறுக்கப்பட்டுவிட்டன. இந்திய கப்பல்போக்குவரத்து அமைச்சகத்தின் கடும் நடவடிக்கைகள் காரணமாக, சீனக்கப்பல்களின் மாலுமிகள், ஊழியர்கள் மற்றும் இதர பயணிகள், இந்தியத் துறைமுகங்களில் இறங்கி காலாற ஊர்சுற்றிப் பார்க்க, உல்லாசம் அனுபவிக்க, முடியவில்லை. ’வேகமாக சாமான்களை இறக்கு, ஏற்று, ஓடு!’ என்பதே கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறை.
’துறைமுக இறங்கல் அனுமதிச்சீட்டு’ வழங்கப்பட்டிருந்தால், இந்தக் கப்பல்களில் வந்திருந்த மொத்தம் 62,948 பேர் (பெரும்பாலானோர் சீனர்கள்), தமிழ்நாட்டின் துறைமுகங்கள் உட்பட, 12 முக்கிய இந்தியத் துறைமுகங்களில் இறங்கி ஊருக்குள்ளும் சென்று ஆனந்தமாக உலவியிருப்பார்கள்! உயிர்வாங்கி கொரோனாவின் தொற்றுப் பரவல் நாட்டில் மேலும் அதிகரித்துவிடாதபடி, இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டிவந்தது.
**
அப்போதே டொற்று பற்றி தெரிந்திருந்ததா
LikeLike
@ Balasubramaniam G.M:
கொரோனா வைரஸ்பற்றி இந்தியா உட்பட வெளி உலகுக்குத் தெரிய ஆரம்பித்தது ஜனவரி முதல்வாரத்தில். அப்போது அவ்வளவு சீரியஸாக யாரும் எடுத்துக்கொள்ளவில்லை. வெளிநாடுகள் இது சீனாவில் மட்டும் நடந்துகொண்டிருப்பது, அங்கேயே மடங்கிவிடும் என முதலில் நினைத்தன. அதன் சீனாவுக்கு வெளியிலும் தொற்றிப் பரவும் விஷமம் ஜனவரி இரண்டாவது வாரத்திலேயே நமக்கும் மற்றவர்களுக்கும் தெரிந்துவிட்டது. முதலில் இத்தாலி, ஈரான் போன்ற நாடுகள் சரிந்தன. பின்பு ஒவ்வொன்றாய்..
LikeLike
முன்னதாகவே எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை. பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம்.
LikeLiked by 1 person
ம்…
LikeLike
சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
LikeLiked by 1 person
@ ஸ்ரீராம், @ திண்டுக்கல் தனபாலன், @ ரேவதி நரசிம்ஹன் :
முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் பல, பயன் தந்திருக்கின்றன என்பது தெரியவருகிறது. கொஞ்சம் அசந்திருந்தால் இன்னும் பரவல் தாங்கமுடியாதபடி போய், இன்னல் மிகுந்திருக்கும். தரை, நீர், ஆகாயவழி மார்க்க நுழைவுகளில் இந்தியா கடுமையான தடைகளை விதித்தது. சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் உத்தரவுகளை சிரமேல் ஏற்று, கவனமாக, தீவிரமாக செயல்பட்டதை இது காட்டுகிறது.
LikeLike
நல்ல நடவடிக்கை. இப்படி முன்னெச்சரிக்கை எடுத்தும் கூடிக் கொண்டே போகிறதை நினைக்கும் போது எந்த எச்சரிக்கையிம் இல்லாதிருந்தால் நிலைமை எப்படிப் போயிருக்கும் என்று நினைக்கவே அச்சமாக இருக்கிறது.
துளசித்ரன்
கீதா
LikeLike
நல்ல நடவடிக்கை. இப்படி முன்னெச்சரிக்கை எடுத்தும் கூட கூடிக் கொண்டே போகிறதை நினைக்கும் போது எந்த எச்சரிக்கையிம் இல்லாதிருந்தால் நிலைமை எப்படிப் போயிருக்கும் என்றும் நினைக்கவே அச்சமாக இருக்கிறது.
துளசித்ரன்
கீதா
LikeLike
@ துளசிதரன், கீதா :
ஏகப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டிருந்தும் இப்படி ஏறிக்கொண்டே போவது அயரவைக்கிறது. என்ன செய்வது? அனுபவிக்கவேண்டியதை அனுபவித்தே ஆகவேண்டும்..
LikeLike
சிறப்பான நடவடிக்கை. கொரானாவுக்கு எதிரான யுத்தத்தில் அரசின் செயல்பாடுகள் சரியாகத்தான் இருக்கின்றன. மீதம் மக்களின் கையில்.
LikeLike
@ Bhanumathy. V பல பெரிய நாடுகள் உலகில் நோய் எதிர்ப்பு செயல்பாடுகளில் தடுமாறிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது இந்திய அரசும், மாநில அரசுகள் பலவும் நன்றாக இயங்கிவருகின்றன. ஐ.நா. வும், சில மேலைநாட்டு அமைப்புகளும்கூட இந்திய கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ளன.
LikeLike