சோகமும் நட்பும்

இந்த கொரோனா சனியன் யார் யாரை எல்லாம் எப்படியெல்லாம் படுத்துகிறது? உயிரை எடுத்துக்கொண்டுபோவது கிடக்கட்டும். சிலரைப் படுத்தவும் செய்கிறதே!

ஆஸ்திரேலியாவின் ஒரு எட்டு வயது பொடியனை கொஞ்ச நாட்களாக ரொம்பத்தான் வம்புக்கிழுத்துவிட்டது. அவனுக்குப் பள்ளிக்கூடம் போகவே, பிடிக்கவில்லை. வகுப்புத்தோழர்களைப் பார்க்காமல் இருப்பதே நல்லது என்கிற நிலையில் வந்திருந்தான். என்ன ஆச்சு? அவனது தோழர்கள் அவனை ‘கொரோனாவைரஸ்’ எனக் கொடுமையாக அழைக்க ஆரம்பித்ததுதான் பையனின் எரிச்சலுக்குக் காரணம். என்ன திமிர்? ஏன் இப்படி ஒரு ‘பேர்வைத்து’ அவனைக் கூப்பிட்டதுகள் அதுகள் ? நம்ப பயலின் பெயர் அப்படி: கொரோனா டி வ்ரைஸ் (Corona de Vries)! போச்சே.. அவனது நார்மல் வாழ்க்கையை பாதித்துவிட்டதே இந்த கொரோனா!

சிறுவன் ‘கொரோனா’ !
நொந்துபோய் வீட்டில் சுருண்டு கிடந்த பையன் ஒரு நாள் டிவியை உருட்டிக்கொண்டிருந்தான். அந்தச் சேதியைக் கவனித்தான். அவனது ஃபேவரைட் ஆக்டரான டாம் ஹாங்க்ஸ் (Tom Hanks) கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு தனிமைப்பட்டுக் கிடந்ததுபற்றிய நியூஸ் அது. ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் (Gold Coast)-ல் உல்லாசப்பயணமாக அவரும் அவரது மனைவியும் வந்து தங்கியிருந்தபோது ஏற்பட்ட கதி. உடனே டாம் ஹாங்க்ஸுக்கு ஒரு கடிதம் எழுதினான். ‘உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் கொரோனா என்று கேள்விப்பட்டேன். நீங்கள் நலமா இப்போது?’ மேலும் தன் பெயர் கொரோனா டி வ்ரைஸ் என்றும், பள்ளியில் நண்பர்கள் தன்னை ’கொரோனாவைரஸ்!’ எனச் சீண்டி பரிகாசம் செய்வதை சகித்துக்கொள்ளமுடியவில்லை என்றும் தன் வேதனையை ஆத்திரத்தோடு வெளிப்படுத்தியிருந்தான் பையன். டாம், ஆஸ்திரேலிய சிறுவனின் கடிதத்தைப் பார்த்தார். கூடவே சிறுவனின் கதையை வெளியிட்ட ஆஸ்திரேலிய ’சேனல் 9’ நிகழ்ச்சிகளை கவனித்தார். அட! ஒரு பொடிப்பயலின் ’கொரோனா’ கதை. நம்மைப்பற்றிவேறு கேட்டு எழுதியிருக்கிறான்.. பதில் சொல்லவேண்டுமே.

டாம் ஹாங்க்ஸ் அனுப்பிய டைப்ரைட்டர் !
ஒரு கடிதம், கொரோனா டி வ்ரைஸுக்குத் தன் டைப்ரைட்டரில் எழுதி அனுப்பினார் ஹாங்க்ஸ். ‘அன்பு நண்பனே! உனது கடிதம் என்னையும் என் மனைவியையும் நெகிழவைத்துவிட்டது. எனக்குத் தெரிந்து கொரோனா என்கிற பெயருடைய பையன் நீதான். சூரியனைச் சுற்றியிருக்கும் வாயுக்களால் ஆன வளையத்துக்கும் ’கொரோனா’ என்றுதான் பெயர்!’ எனத் தேற்றியிருந்தார். கடிதத்தில் மேலும் குறிப்பிட்டார்: ’எனக்குப் பிடித்தமான ‘கொரோனா’ டைப்ரைட்டரை உனக்கு அனுப்பியுள்ளேன். அதை எப்படி உபயோகிப்பது என பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அதில் எனக்கு ஒரு பதில் ‘டைப்’ செய்து அனுப்பு’ என்றவர் மேலும் சொன்னார்: ’என்னில் ஒரு நண்பனை நீ பெற்றுவிட்டாய்!” ‘You Got A Friend In Me’ – என்பது அவரது புகழ்பெற்ற படமான ’Toy Story’-ன் theme tune.கூடவே தான் ஆசையாக உபயோகப்படுத்திய அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘கொரோனா’ ப்ராண்ட் டைப்ரைட்டரை சிறுவனுக்குப் பரிசாக டிவி சேனல் மூலமாக அனுப்பிவிட்டார்.

பார்சல் வந்தது. பார்சலில் ஒரு கருப்பு டைப்ரைட்டர் பளபளவென மின்னியது. தன் பெயர் ‘கொரோனா’ என நெஞ்சை நிமிர்த்தியது. அதிலிருந்த கடிதத்தைப் படித்து அசந்துபோய்விட்டான் சிறுவன் கொரோனா. டாம் ஹாங்க்ஸ் எனக்கு எழுதியிருக்கிறாரா! எல்லோருக்கும் பெருமையுடன் காண்பித்தான். நடந்த கதை சொன்னான். இனி வருமா தைரியம் அவனது வகுப்பு நண்பர்களுக்கு, அவனை சீண்ட!

டாம் ஹாங்க்ஸ் ’Forrest Gump’, ‘Sleepless in Seattle’, ’Saving Private Ryan’, ‘The da Vinci Code’, ‘Toy Story’ (1,2,3,4) – போன்ற சிறந்த படங்களில் நடித்த பிரபல ஹாலிவுட் நட்சத்திரம்.
**

9 thoughts on “சோகமும் நட்பும்

 1. நல்ல கதை! அறியாத செய்தி! அறியத்தந்தமைக்கு நன்றி.

  Like

 2. பெரியவங்க எப்போதும் பெரியவங்கதான்.

  வலம்புரி ஜான், எம்ஜிஆர், மும்பை வரதராஜ முதலியார் இருவர் சந்திப்புக்குப் பாலமாக இருந்தார். ஏதோ தட்டச்சு செய்யவேண்டிவந்தபோது வரதராஜ முதலியார் உடனே புது டைப்ரைட்டர் வாங்கி வலம்புரி ஜானுக்குப் பரிசளித்ததாகவும், தன் கவனக் குறைவால் பரிசை பிறகு தொலைத்ததையும் தன் நூலான வணக்கம் நூலில் குறிப்பிட்டிருப்பார் அவர். வலம்புரி குறிப்பிட்டிருந்த இன்னொரு சம்பவம் (90களில் நடந்தது என நினைக்கிறேன்), தில்லியின் புகழ்பெற்ற ஜோசியர் வலம்புரியிடம், இந்த அம்மாவை (ஜெ.ஜெ) 2016 வரையில் அடித்துக்கொள்ள ஆள் கிடையாது. அவர் அரசியல் வாழ்வு அப்போது வரை உச்சத்தில் இருக்கும் என்றாராம்.

  Liked by 1 person

 3. @ திண்டுக்கல் தனபாலன்: பையனுக்குத்தானே தெரியும் அவன் பட்ட கஷ்டம்!

  @ கீதா சாம்பசிவம்: முதலில் The Guardian -ல் இதைப் பார்த்தேன். பிறகு வேறு சில வெளிநாட்டுப் பத்திரிக்கைகளில்

  @ ஸ்ரீராம்: உலகம் பெரிது. அதை வளைத்துப்போட முயல்கிறது இந்தக் கொரோனா. நாளுக்கு நாள் பிரச்னைகள், ஏதேதோ நிகழ்வுகள்..

  @ நெல்லைத்தமிழன் : வலம்புரியின் கதை சுவாரஸ்யமாக இருக்கிறது. டெல்லி ஜோஸ்யர் அப்போதே இப்படிச் சொன்னாரா! அரசியல் கிழங்கள் அவரை வளைத்திருக்கவேண்டுமே.
  மும்பை ’டான் வரதாபாய்’ ஒரு சுவாரஸ்ய ஆசாமி எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அங்குள்ள ஏழைத் தமிழர்களுக்கு நிறைய செய்திருக்கிறார் மனுஷன்.

  Like

 4. இது அறியாத செய்தி. இப்படியும் ஸ்வாரஸ்யங்கள்.

  துளசிதரன்

  அட! பாருங்க சின்னப்பையன் எழுதியும் அதற்கு அழகாகப் பதில் சொல்லி அப்பொடிப்பயலின் எண்ணத்தை நேர்மறையாக்கி…அவனுக்கு மகிழ்ச்சியளித்தது பெரிய விஷயம்…அதானே இனி நண்பர்கள் இப்படிக் கூப்பிடுவார்களா என்ன ராஜ மரியாதைதான்!!!

  கீதா

  Liked by 1 person

 5. @ Karthiklakshminarasimman : வருகைக்கு நன்றி.
  @ Bhanumathy V,: வருகைக்கு நன்றி
  @ Thulasidharan: ஒவ்வொரு நாட்டிலும் ஏதேதோ நடப்புகள்..

  @ Geetha :
  ஸ்டார்கள், ஹீரோக்கள் என்கிற பெயரில் கிளுகிளுத்து வாழும் நம்நாட்டின் வெறும் பணமுதலைகளிடமிருந்து இப்படி ஏதும் எதிர்பார்க்கமுடியுமா?

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s