ஆபத்பாந்தவன்

தட்டில் இறங்கிய
தங்கப்பழுப்பு தோசை
வாசனையில் தூக்கியது
நாக்கை சுழற்றிவிட்டது
நல்லெண்ணெய் மழையில்
நனைந்திருந்த மிளகாய்ப்பொடி
அடுத்த அறையிலிருந்து அலறல்
ராத்திரியே செத்துட்டான் அவன்
எவன்?
கும்பகர்ணன்!
ஆ.. நாளைக்கு இந்திரஜித் !
அவன் சாவதையாவது
மறக்காமல் பார்க்கவேண்டும்
கொரோனாபேயிலிருந்து
பித்துமனதைப் பிடுங்கி அதில்
பிரபு ராம், சீதா, லக்ஷ்மண்
கும்பகர்ணன், இந்திரஜித் எனத்
தூவிவிட்ட தூர்தர்ஷனே
உன் சாகசம்தான் என்னே
உள்ளே கிடந்து முழிக்கும்
ஒன்றுமறியா ஜனங்களுக்கு
ஊரடங்கு நிலையில்
உனையன்றி யார் துணை?

**

8 thoughts on “ஆபத்பாந்தவன்

  1. என் டிவி இரண்டு நாளாக பழுதாய் இட்டது தூர்தர்ஷன் பார்க்கவில்லை இருந்தால் என்ன பார்த்தது தானே

    Like

    1. @ Sriram: ஹா! ஹா!

      @ Karthik Lakshminarasimhan : வருகைக்கு நன்றி

      @ Balasubramaniam GM : இந்த சமயத்திலா பழைய டிவி-யை நம்புவது? புது எல்சிடி டிவி வாங்கியிருந்தால் கண்ணுக்கும் இதமாக, க்ளாரிட்டியும் செமயாக இருந்திருக்குமே!

      Like

    1. @ஜட்ஜ்மெண்ட் சிவா:
      லாக்டவுன் வேப்பங்காயாகக் கசக்கிறதே, ஸ்பெய்ன், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில். நோய்த் தொற்றைத் தடுக்க, வேறுவழியில்லை எனப் புரிவதற்கே மாதங்கள் ஆகிவிட்டது. பரிதாப நிலை.

      Like

  2. ஹா ஹா ஹா நல்லாருக்கு
    எப்படியோ மக்களுக்கு பொழுது போனால் சரி ! என் உறவினர்கள் எல்லாம் ராமாயணம் மஹாபாரதத்தில் காலச்சக்கரத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்..

    கீதா

    Liked by 1 person

    1. @கீதா: தூர்தர்ஷனின் TRP rating துள்ளுகிறது! மக்களும் குஷி, மன்னனும் குஷி!

      Like

Leave a comment