இரவு 9 மணி.. ஏற்றுவோம் தீபம் !

இன்று (5 ஏப்ரல், ஞாயிறு) இரவு துல்லியமாக ஒன்பது மணி. அணைப்போம் வீட்டின் மின்விளக்குகளைத் தற்காலிகமாக. ஏற்றுவோம் தீபங்களை. நெய், எண்ணெய் விளக்காகவோ அல்லது மெழுகுவர்த்தி ரூபத்திலோ. வாசலிலும், பால்கனிகளிலும். குடும்பத்தினர் ஒவ்வொருவரும் தள்ளி நின்றுகொண்டு. மற்றவர்களைச் சேர்த்துக் கூட்டமாக நின்றுகொண்டல்ல. இந்த நோய்த்தொற்றுக் காலத்தில் சமூகவிலகல் (social distancing) முக்கியம்.

9 நிமிடங்களுக்கு மட்டுந்தான் இந்த தீபம். பிரதமர் சொன்னபடி, இந்த ஒன்பது நிமிடங்களில் -லாக்டவுன் சமயத்தில் நாம் அவரவர் வீட்டில் இருப்பினும்- நம்மில் யாரும் தனியாக இல்லை என உணர்வோம். நம்மோடு எப்போதும் நம் நாட்டு மக்கள். 130 கோடி மக்களைக்கொண்ட வலுவான தேசம். அன்போடு நினைப்போம் நம் நாட்டவர் எல்லோரையும். பெறுவோம் நம் மனதில் பெரும் உற்சாகம். நேர்மறை சக்தி. நமது தேசத்தினரின் நலனுக்காகவும், உலகமக்கள் அனைவரின் நலன் விரும்பியும் மனதில் மென்மையாக, ஆழமாகப் பிரார்த்திப்போம்.

பயங்கரத் தொற்றுநோய் உலகெங்கும் பரப்பியிருக்கும் கொடும் இருளை, தீப ஒளியில் நேருக்கு நேராக சேர்ந்தே சந்திப்போம். மிரளட்டும், திகைத்து ஓடட்டும் தீய சக்திகள் யாவும். ஒளிரட்டும் புத்துயிர் பெற்று, நம் பாரத தேசம். கூடவே, நாம் வாழும் உலகமும்.

**

10 thoughts on “இரவு 9 மணி.. ஏற்றுவோம் தீபம் !

 1. நமது தேசத்தினரின் நலனுக்காகவும், உலகமக்கள் அனைவரின் நலன் விரும்பியும் மனதில் மென்மையாக, ஆழமாகப் பிரார்த்திப்போம்.//

  அதே ஏகாந்தன் அண்ணா…

  விரைவில் உலக மக்கள் அனைவரும் நிம்மதியாக இருந்திட வேண்டும். நலம் விளைந்திட வேண்டும்.

  கீதா

  Liked by 1 person

 2. @ Sriram, Thulasidharan, Geetha :

  ஆபத்தான காலகட்டத்தில், தேசமக்களின் ஒற்றுமை உணர்வைக் கோருவதே பிரதமர் மோதியின் இத்தகைய அழைப்புகள். ‘இந்தியா’ என்பதும், ‘இந்தியன்’ என்பதும் வெறும் வார்த்தைகளல்ல எனப் பலரும் புரிந்துகொள்ளவேண்டிய காலகட்டம் இது.
  மழுங்கல் கேஸுகளுக்கும் காலம் தலையில் குட்டிப் புரியவைக்கும்!

  Like

 3. விளக்குகளை ஏற்றிக் கொடிய வியாதியைத் துரத்துவோம். இதில் எதிர்ப்புத் தெரிவிப்பவரும் பின்னால் புரிந்து கொள்வார்கள். விளக்கு ஏற்றுவோம். ஒளியைப் பரப்புவோம்.

  Liked by 1 person

  1. @ கீதா சாம்பசிவம் : நமது காரியத்தை நாம் செய்துவிட்டோம். ஒன்பது நிமிஷம் துடிப்போடு ஒளிர்ந்த விளக்குகள் எங்கும் – பரவசம்!

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s