சுஜாதா காட்டிய கவிதைகள்

சின்னச் சின்னக் கவிதைகளில் ஒரு தனிக்கவர்ச்சி. சின்னதாக இருப்பதால்தான் என்று இதற்குப் பொருளல்ல. எளிய வார்த்தைகளில் சில வலிய கருத்துகள். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல!

தன் ’கற்றதும் பெற்றதும்’ நூலின் (விகடன் பிரசுரம்) கட்டுரைகளுக்கிடையில் பெட்டிச் செய்திபோல் ‘எபிக’ எனக் குறிப்பிட்டு கவிஞர்கள் சிலரின் கவிதைகளை அவ்வப்போது சுஜாதா போடுவது வழக்கம். சிலசமயங்களில் சில பெரிசுகளின் கவிதைகளும் தென்படுவதுண்டு. சில சீரியஸ்.. சிலது simply funny! :

வீடுகள் எரிய
வீதிகள் வழியே
விழுந்தோடிய
ஊர்களை மறப்போமா

நல்லதம்பி சிவநாதன்
**
திண்ணையில் வசித்த
அப்பா வீட்டுக்குள் வந்தார்
புகைப்படமாய்

-பா.சேதுமாதவன்
**
கோடரியுடன்
வெட்ட வந்தவன்
வியர்வை காய
இளைப்பாறினான்
விரிந்த மரத்தின்
பரந்த நிழலில்

-ராஜகுமாரன்
**
உயிர் பிரிந்து ஊர்ந்தோடி
நீர் தேடிக்
கொணர்ந்தது வேர்
பாராட்டும் கண்களில்
பூ மட்டும்

-ஆதவன்
**
எழுதவோ படிக்கவோ
ஏலாத தாயப்பத்தி
எழுதி என்ன லாபமின்னு
எழுதாமப் போனேனே

-வைரமுத்து
**
ராமச்சந்திரனா
என்று கேட்டேன்
ராமச்சந்திரன்தான்
என்றார்
எந்த ராமச்சந்திரன்
என்று நான் கேட்கவில்லை
அவர் சொல்லவில்லை

-நகுலன்
**
உணவைத் தாண்டி
உயிரும்
உடையைத் தாண்டி
உடலும்
பெரிதல்லவா?
சிறகை விரித்துச்
சிலிர்த்தே செல்லும்
பறவைகள் கூட்டம்
பார்ப்பீர் தினமும்

-வின்செண்ட் சின்னதுரை
**
நான் இல்லாதுபோன பிறகும்
ஒழுங்காகத் தேடிப் பாருங்கள்
இங்குதான் எங்காவது இருப்பேன்
எவ்வளவு பெரியது
பூமி
வானம்
அண்டம்
பேரண்டம்?

-அழகுநிலா
**
குற்ற நெஞ்சு குறுகுறுக்கும்-அதில்
குறைகள் பல உண்டு- எனைப்
பெற்றவள் செய்த சமையல்தான்- அதில்
பிழைகள் கண்டதுண்டு-ருசி
அற்றுப்போன அமெரிக்க வாழ்வில்
பற்றே இல்லையடி- ஒரு
வற்றக்குழம்பு அதுபோதும்- அன்னைக்
கைமணம் அதில் வேணும்

-ரவி அன்பில்
**
செல்வார் வருவாரின் சிந்தைகளைச் சீண்டுகிற
சல்வார் கமீஸனிந்த சந்திரன்கள்- மெல்லமெல்ல
ஃபில்டர் பிளைனாகும் பீடியாகும் – ஆண்வர்க்கம்
மெல்ட்டாகிச் சாகுமே மெய்!

-தஞ்சை இனியன்
**
கொட்டாவி விட்டபடி ஜன்னலோரம் பாத்தாக்க
குட்டை குளமெல்லாம் கொட்டாவி – கிட்டக் கிட்ட
மீனெல்லாம் வாய்பிளந்து பாத்திருக்க- மொக்கு மொக்குத்
தாமரை கொட்டாவி விடும்

-சேஷாசலம்
**
ஒருத்தியை மணந்தான்
மற்றொருத்தியைக் காதலித்தான்
ஒருத்தியின் கணவனான்
மற்றவளின் பாஸ்வேர்டு ஆனான்!

-அம்மணி
**
கடவுளிடம்
மனு ஒன்றை அளித்தேன்
பரிசீலிக்கப்படவில்லை.
இன்றுவரை
மரங்கள்
இலைகளை
உதிர்த்தவண்ணம்தான்
இருக்கின்றன

-அய்யப்ப மாதவன்
**
காலை
கதவைத் திறந்தால்
காலடியில் செய்தித்தாள்
இலவச இணைப்பாக
மென்காற்று

-மார்கன்

**
நெஞ்சில் துயரம் நெருப்பாகச் சுட்டுவிட்டால்
தஞ்சம் அடைவேன் கவிதையில் – பஞ்சம்
கவிதைக்கும் வந்துவிட்டால் நானென்ன செய்வேன்
புவியைப் படைத்தவனே சொல்

-ந. கந்தசாமி

***

6 thoughts on “சுஜாதா காட்டிய கவிதைகள்

  1. சில கவிதைகள் நன்றாகவே இருக்கின்றன.  சிலகவிதைகளை சுஜாதா ஏன் தேர்ந்தெடுத்தார் என்று தோன்றும்.. (இந்தத்தொகுப்பில் இருக்கும் கவிதை எதையும் சொல்லவிலை!)

    Like

  2. @ ஸ்ரீராம்:
    நானும் கவனித்திருக்கிறேன். சில கவிதைகள் அப்படித்தான் இருக்கின்றன.
    அவர் அடிக்கடி குறிப்பிடும் சிறுகவிதை, ஹைக்கூ எழுத்தாளர் மார்கன் பற்றி அறிய ஆவல்!

    Like

  3. சில கவிதைகள் மிக மிக நன்றாக இருக்கின்றன!

    சிலது புரியவில்லை. இவை எப்படி சுஜாதாவிற்குப் எபிக ஆனது என்று தோன்றுகிறது. சுஜாதாவிற்குப் புரிந்திருக்கலாம். அதனால் பிடித்திருக்கலாம். அதனால்தான் எபிக வில் வந்துள்ளது!

    கீதா

    Liked by 1 person

    1. @ துளசிதரன், கீதா:

      சுஜாதாவே சொன்னபடி, எல்லாக் கவிதைகளும் புரியவேண்டும் என்பதில்லை!

      Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s