கொரோனா : தனித்திருத்தல், பொதுநல ஏற்பாடுகள்

தாய்நாட்டைப்பற்றிய அக்கறையுடைய ஒவ்வொரு இந்தியனும், இந்த ஆபத்தான சூழலில் வீட்டுக்குள்ளேதான் இருக்கவேண்டும். கொடும் நோயொன்றின் கொட்டத்தை அடக்க இப்படித்தான் இருக்கவேண்டியிருக்கிறது. இயங்கவேண்டியிருக்கிறது. இத்தாலி, இங்கிலாந்து, ஸ்பெய்ன், அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி எனப் பல தேசங்களிலும் இதுவே நோய் பரவாமல் தடுக்க பிரதான வழியெனக் கண்டுபிடித்து அமுல்படுத்தியிருக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனையும் இதுதான். இந்தியாவிலும் ’தனித்திருத்தல்’ (social distancing) அறிவுறுத்தப்பட்டு, நாடு முழுவதுமான லாக்-டவுன் செயல்படுத்தப்படுகிறது. எதற்கெடுத்தாலும் கூச்சல், கூப்பாடு என காலங்காலமாகப் பழக்கப்பட்டுப்போன ஒரு சமூகத்தில் இதனை சரியாக, உடனடியாக செயல்படுத்துவதில் அரசு இயந்திரங்களின் நிர்வாக சிரமங்கள் ஆங்காங்கே தெரிகின்றன. மக்களுக்காக லாக்-டவுன் முழுமையாக அமுல்படுத்தப்பட, மக்களின் பூரண ஒத்துழைப்புதான் தேவையே. அந்நிய ஆக்கிரமிப்பாளனுக்கெதிராக காந்தி நடத்திய தீவிர ‘Civil Disobedience Movement’ போல, இப்பொழுது ஒரு ‘Civil Obedience Movement’ – ’மக்கள் ஒத்துழைப்பு இயக்கம்’ அத்தியாவசியமாகிறது தாய்நாட்டின் நலனுக்காக. முகம் சுழித்தும், விமரிசித்தும் எந்தப் பயனுமில்லை. ஆங்காங்கே தலைகாட்டும் சில எதிர்ப்பாளர்களுக்குப் புரியவேண்டும். மறுக்க வாய்ப்பு தரப்படாது. அடிவாங்கும் முன்பே அறிந்துகொண்டால் அல்லல் இல்லை!

பாதிக்கப்பட்ட மற்ற எல்லா நாட்டினரும் சந்திக்கும் பிரச்னைகளைத்தான் இந்நேரத்தில் நாமும் சந்திக்கிறோம், வேறு வழி இல்லாததால். இத்தகைய ‘லாக்-டவுன்’ காலத்தில், உணவு, மருந்து, சமையல் வாயு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் சரிவரக் கிடைக்க, அதன் சப்ளை-செயின் ஒழுங்காக இயங்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயல்கின்றன. ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. கடினநிலையினால் பொதுப்போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், வேலைக்கு வர முடியாதவர்களுக்கு முழுசம்பளத்துடன் விடுமுறை தர, தனியார் கம்பெனிகளுக்கான அரசின் உத்தரவுகள் போயிருக்கின்றன. அரசின் முயற்சிகளுக்கு ஆதரவு தரும் விதமாக, மஹிந்திரா, ரிலையன்ஸ், டாடா போன்ற சில பெரும் தொழில்நிறுவனங்கள் ஏழைத்தொழிலாளர்களுக்கு மருத்துவ சலுகைகளோடு, இரண்டு மாத அட்வான்ஸ் சம்பளம் தர இணங்கியிருக்கின்றன.

பிரதமந்திரியின் ஏழைகள் நலத் திட்டம் (PM’s Garib Kalyan Yojana) மூலமாக 1.7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், பொதுமக்களுக்கான பல நலத்திட்டங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (26/3/20) அறிவித்திருக்கிறார். இதன் கீழ், விளிம்புநிலைத் தொழிலாளர்கள் மற்றும் 15000 ரூபாய்க்கும் குறைவாக மாத சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் ஆகியோருக்கு மூன்று மாத பிராவிடெண்ட் நிதிக்கான தொகையை மத்திய அரசே தரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ஏழைத்தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். தொழிலாளர் நல நிதியாக, கட்டுமானத்தொழிலாளர்களுக்கு மட்டுமே ரூ.31000 கோடியை மத்திய நிதி அமைச்சகம் ஒதுக்கியுள்ளது. நாடெங்குமுள்ள 3.5 கோடி கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இது பலன் தரும். வாழ்வுகாக்கும் சிறப்புப் பணியிலிருக்கும் டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு எனப் பிரத்தியேகமாக ரூ.15000 கோடி ரூபாய் செலவில் பலதிட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மத்திய அரசின் ‘உஜ்வாலா திட்ட’த்தின் (‘Ujjwala Yojana 2020’)கீழ், ஏழைப்பெண்களுக்கென மூன்று மாதங்களுக்கு இலவச ’சமையல் வாயு’ வழங்கப்படும். வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு மாதம் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இனாமாக வழங்கப்படும். மேலும் விவசாயிகள், உதவித்தொகை பெறும் ஏழை முதியோர்கள், விதவைகள் ஆகியோருக்கான மாதாந்திர பண உதவிக்கும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ATM-பணம் எடுத்தலுக்கான கட்டணங்களுக்கு 3 மாதங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இவற்றைத் தாண்டி, மாநில அரசுகள் தங்கள் நிதியிலிருந்து மாதாந்திர ரேஷன் உணவுப்பொருட்களோடு, குடும்பத்துக்கு ஆயிரம்/இரண்டாயிரம் என பணமும் இனாமாகத் தருகின்றன. இப்படி வரிசையாகப் பல பொதுநல நடவடிக்கைகள் மத்திய/மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டு நாட்டில் செயல்பாட்டில் வந்துகொண்டிருக்கின்றன.

Mylab’s Corona testkit
Pic courtesy: ANI
கொரோனா வைரஸ் தாக்கத்தை தாமதமின்றி, துல்லியமாகக் கண்டுபிடிக்கும் சோதனைகளுக்காக இதுவரை அரசாங்க சோதனைச்சாலைகளே பயன்படுத்தப்பட்டுவந்தன. நாடெங்கும் பரவிவரும் தொற்றுநோயின் அறிகுறிகளை அறிவதற்கான சோதனைகளைத் துரிதப்படுத்துவதற்காக, இந்திய அரசு இரண்டு தனியார் நிறுவனங்களின் திறன் மிக்க கிருமி-சோதனைச்சாலைகளுக்கு அங்கீகாரம் அளித்திருக்கிறது. National Institute of Virology, Drug Controller of India ஆகிய இந்திய அரசின் அறிவியல் கழகங்களால் தரமறியப்பட்ட அவைகள்: அல்டோனா டயக்னாஸ்டிக்ஸ் (Altona Diagnostics) என்கிற ஒரு ஜெர்மன் கம்பெனியும், மைலாப் (Mylab) எனப்படும் புனேயிலுள்ள ஒரு இந்திய கம்பெனியுமாகும். ’மைலாப்’ தயாரித்த ’சோதனைக் கருவி’யை டெல்லியிலுள்ள இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் (Indian Council of Medical Research (ICMR, Delhi) மேலும் ஆராய்ந்து, அதன் பயன்பாட்டிற்கான அங்கீகாரம் அளித்துவிட்டது. அதனைப் பெருமளவில் வாங்கி மாநிலங்களுக்கு விநியோகம் செய்யவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சிறந்த சோதனைக்கருவி என்பதோடு, இதன் விலை (ரூ.1200), வெளிநாட்டிலிருந்து தற்போது இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் சோதனைக் கருவிகளின் விலையில் நாலில் ஒரு பங்கே என்பது கூடுதல் தகவல். கொரோனா நெருக்கடியை கடுமையாக எதிர்கொள்ள உதவியாக, இரண்டு வாரங்களில் ஒரு லட்சம் சோதனைக் கருவிகளைத் தன்னால் உற்பத்தி செய்ய இயலும் என்று அரசுக்குத் தெரிவித்திருக்கிறது மைலாப்.

இப்படிப் பலவேறான மக்கள் பணிகளை தனியார் துறை வாயிலாகவும், அரசுத் துறைகள் மூலமாகவும் முடுக்கிவிட்டுள்ளது இந்திய மத்திய அரசு. மாநில அரசுகளும் கூடுமானவரை அவ்வாறே. இவையெல்லாம் ஜனங்களின் ஒட்டுமொத்த நலனுக்காகத்தான் என அனைவரும் தீர்க்கமாகப் புரிந்துகொள்ளவேண்டும். நல்ல பலன் அனைவருக்கும் விரைவில் கிடைக்க, குடிமக்களின் மனமார்ந்த ஒத்துழைப்பே முக்கியம். இது ஒரு பெரும் தேசீய இயக்கமாக நிகழ்ந்தால் நன்றாக இருக்கும். இதனைத்தான் இந்தியப் பிரதமர் தன் டிவி உரையில், உலக சுகாதார நிறுவன ((WHO) அறிக்கைகளையும் மேற்கோள்காட்டி வலியுறுத்தியிருக்கிறார். பிரதமர் மக்களிடம் கைகூப்பி வேண்டுகோள் விடுப்பதாகத் தோன்றினாலும், நெருக்கடி நிலையில் அது அரசாங்கத்தின் உத்தரவு என்பது சந்தேகமறப் புரிந்துகொள்ளப்படவேண்டும். தப்பிப் பிழைக்க வேறு மார்க்கமில்லை. Just obey and follow the instructions dear citizens; Stay indoors in your own interest. ஒன்றுபட்டால்தான் வாழ்வு. ஊளையிட்டு எதிர்த்தால், ஓரத்தில் விழுந்துகிடக்க நேரும் – நோயின் கடுமை அப்படி.

**

13 thoughts on “கொரோனா : தனித்திருத்தல், பொதுநல ஏற்பாடுகள்

 1. எதற்கெடுத்தாலும் கூச்சல், கூப்பாடு என காலங்காலமாகப் பழக்கப்பட்டுப்போன ஒரு சமூகத்தில் இதனை சரியாக, உடனடியாக செயல்படுத்துவதில் அரசின் நிர்வாக சிரமங்கள் ஆங்காங்கே தெரிகின்றன. மக்களுக்காக லாக்-டவுன் முழுமையாக அமுல்படுத்தப்பட, மக்களின் பூரண ஒத்துழைப்புதான் தேவையே. //

  அதே அதே. நம் அறிவிலிகள் இன்னும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் படித்த அறிவிலிகள். நீங்கள் கூட அந்த வாட்சப் வீடியோ பார்த்திருப்பீர்கள் ஒரு போலீஸ்காரர் கெஞ்சுவது. பாவம்.

  அந்நிய ஆக்கிரமிப்பாளனுக்கெதிராக காந்தி நடத்திய ‘Civil Disobedience Movement’ போல, இப்பொழுது ஒரு ‘Civil Obedience Movement’ அத்தியாவசியமாகிறது தாய்நாட்டின் நலனுக்காக.//

  ப்ரயோகத்திய ரசித்தேன்.

  முகம் சுழித்தும், விமரிசித்தும் எந்தப் பயனுமில்லை. ஆங்காங்கே தலைகாட்டும் சில எதிர்ப்பாளர்களுக்குப் புரியவேண்டும். மறுக்க வாய்ப்பு தரப்படாது. அடிவாங்கும் முன்பே அறிந்துகொண்டால் அல்லல் இல்லை!//

  மிகச் சரியாகச் சொன்னீங்க. அடித்தால் தான் கேட்பேன் என்றால் என்ன செய்யும் அரசுகள்? அடிப்பதை யாரேனும் அராஜகம் என்று சொன்னால் அவர்களைத் தூக்கி உள்ளே போட வேண்டும். பின்ன அவனவன் இங்கு கொரோனா பயத்தில் எப்படா இது தீர்ந்து இயல்புநிலை திரும்பும் என்று பீதியில் இருக்க…

  மை லேப் வாழ்க! நல்ல சிறப்பான விஷயங்கள் முன்னெடுக்கப்படுகிறது. அமெரிக்கா கூடத் திணறுகிறது. அதன் தலைவன் சரியாக இல்லாததால் உளறிக் கொண்டு இருப்பதால்…

  நம் நாட்டில் முடிவுகள் நன்றாக எடுக்கப்படுகின்றன. மக்கள்தான் புரிந்து கொண்டு ஒத்துழைக்க வேண்டும்.

  நல்ல தகவல்கள் உள்ள பதிவு குறிப்பாக லேப்கள் பற்றியவை அண்ணா

  கீதா

  Liked by 1 person

  1. @ கீதா: ‘அடி உதவுவதுபோல் அண்ணன், தம்பி உதவமாட்டான்’ என்கிற வாசகமும் பழையது. காலங்காலமாக அடி, உதைதான் தேவைப்பட்டிருக்கிறது, மனிதரில் மடையருக்கு!

   Like

  1. @ துரை செல்வராஜு: சில மாநிலங்களில் தோப்புக்கரணம் போடச்சொல்வதோடு, கையெடுத்துக் கும்பிடுவதோடு விஷயம் சரியாக புரியுமாறு காவலர்களால் செய்யப்பட்டுவிடுகிறது. சில ஊர்களில் பிரம்படிதான் பலனளிக்கிறது. நானும் அந்த ‘வாட்ஸப்’பைப் பார்த்தேன். சிரிப்பும், வேதனையும் ஒருங்கே. வேறொரு கோணத்தில் சிந்திக்கையில் இந்த அடிகள், தவறாக வழிநடத்தும் ’தலை’களின் மேல் விழுந்திருக்கவேண்டுமோ?

   நேற்று மாலை ‘இந்தியா டிவி’ யில் காட்டப்பட்ட வடநாட்டுக் கதைகள் வலி தருபவை. வேண்டுமென்றே குழப்பம் ஏற்படுத்த முனைவோர் மஹாராஷ்ட்ரா, வங்காளத்தில் அதிகம் போலிருக்கிறது. உ.பி.யிலும் நிலைமை மோசம்- சில மாவட்டங்களில். ஆனால் யோகியின் கீழ் காவல் கழிகள் வேகமாக சுழற்றப்படுகின்றன. ரிசல்ட்டும் வேகமாகக் கிடைத்திருக்கிறது!

   Like

 2. இன்றைக்குப் பார்த்தீர்களா? கிராமத்தில் இருக்கும் ஒரு வாலிபன், நாடகம் போல, ஐந்து ஆறு போலீஸுடன் வாக்குவாதம் செய்தான். வாக்குக்கேட்க வரும் எடப்பாடி இங்கு வந்து கொரானா எங்கிருக்கிறது என்று காட்டட்டும் என்றெல்லாம் எகத்தாளமாகப் பேசினான். பிறகு அவனுக்கு சரியான பூசை போலீஸ் ஸ்டேஷனில் கிடைப்பதைக் காட்டியபிறகுதான் மனதுக்குள் ஒரு ஆறுதல்.

  Like

  1. @ நெல்லைத்தமிழன்:
   அந்த ‘வாட்ஸப்’ வலம் வருகிறது. அரசு இயந்திரத்தை ஓபனாக சேலஞ்ச் செய்யும் முரடர்களை, ‘கவனித்தால்’தான் சரியாகும். அது எந்த மாநிலமாக இருந்தாலும், யார், எந்த வகுப்பைச் சார்ந்தவர்களாயினும்.
   பெங்களூரில் ஊரடங்கை மீறி ‘பக்தி’ காட்டமுயன்ற தொப்பிகளுக்கு முதுகில் விழுந்தது நேற்று. வீடியோ பத்திரிக்கைகளில். நெல்லிக் காய்கள் சிதறி ஓடின! உ.பி.யிலும் கத்திகாட்டி போலீசை பயமுறுத்திய ஒரு பெண் ’சாமியாரு’க்கு – யார், எவர் எனத் தெரியப்படுத்தப்பட்டது! எதிர்த்த ஆதரவாளர்கள்-பெரும்பாலும் பீஹாரிகள்- பிரம்புப் பிரசாதம் பெற்று ஓடினர்.

   Like

 3. இந்தியாவுக்கு எதனால் கொர்ரானா கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டது?….

  காலி டப்பாவின் சத்தம் ஒன்று Fb ல் கேட்கிறதே..

  நீங்களும் கேட்டிருப்பீர்கள்..

  Like

 4. எதிர்த்தல் என்பது அரசியல்..  எதிர்த்தல் என்றில்லாமல் இது ஏதோ சாதாரண விஷயம் என்றே மனதில் எண்ணி சாலைகளில் அலைவோரைப் பார்க்கிறேன்.  அவர்கள் பேசுவதும் மிகவும் அலட்சியமாக இருக்கிறது.  இஸ்லாமியர் சிலரும், கிறித்துவர் சிலரும் தங்கள் தங்கள் கடவுள் இதிலிருந்து எல்லாம் அவர்களை (அவர்களை மட்டும்)  காக்க வல்லவர் என்பது போல பேசியதை காதுகொண்டு கேட்டபோது என்ன பதில் இவர்களுக்கெல்லாம் சொல்ல என்று ஆயாசம்தான் ஏற்பட்டது.

  Liked by 1 person

  1. @ ஸ்ரீராம்:
   மத விஷயத்தில் தான் ஒரு ‘தல’ எனக் காட்டிக்கொள்ளும் சில வக்கிரங்கள் இப்படி அப்பாவிகளைத் தூண்டிவிடுகின்றன. தெலங்கானாவில் இப்படி ஒரு குழு பணி செய்யவிடாமல் டாக்டர்களைத் தடுத்தது, திட்டிப் போகச்சொன்னது.. ஒரு வெள்ளைக்குல்லாய் டாக்டர் ஒருவரை முதுகில் காலால் உதைத்து வெளியேற்றியது, பத்திரிக்கையில் வந்தது.
   இத்தகைய அநியாயங்களுக்கிடையில் இந்தியா முன்னேறவேண்டியிருக்கிறது.

   Like

 5. சீக்கிரம் இக்கொடிய நோய் ஒழிய வேண்டும்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s