கொரோனாவின் கோரத்தாண்டவம் நாட்டிலும், உலகெங்கும். நாட்டின் தரைவழி எல்லைகளை மூடி, வெளிநாட்டு விமான வருகைகளை நிறுத்தி, தொடர்ச்சியாக உள்நாட்டு விமானப் போக்குவரத்துகளை ரத்து செய்து, மாநிலங்களும் தங்களுக்கிடைய எல்லைகளை மூடி, பொதுப்போக்குவரத்தை நிறுத்தி, இந்திய ரயில்வேயும் தன் மாபெரும் ரயில் சேவையை நிறுத்தி, இப்படி எத்தனை எத்தனையோ செயல்பாடுகள், அமுல்படுத்தப்பட்ட அரசுக் கட்டுப்பாடுகள். கூடவே இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் (ICMR) மூலம் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள், சோதனைகள், நோய் ஆய்வுச்சாலைகள், நாடெங்கும் லட்சணக்கணக்கில் அதிகரிக்கப்பட்ட மருத்துவப் படுக்கைகள். மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அவசரநிலையில் உண்மையில் இயங்குகின்றன. ஆனால் எல்லா நன்முயற்சிக்கும், பொதுமக்களிடமிருந்தும் 100 சதவிகித ஒத்துழைப்பும் தேவை அல்லவா?
வெளிநாட்டிலிருந்து ஓசைப்படாமல் நுழைந்துவிட்டவர்களை, ‘ஹோம் க்வாரண்டைன்’ என கையில் மையால் ஸ்டாம்ப் செய்து அனுப்பியும், வீட்டில் மூடிக்கொண்டு கிடக்காமல், ஊர் ஊராக அலையும் பொறுப்பற்ற ஜென்மங்களை போலீஸ் ஒவ்வொரு மாநிலத்திலும் விரட்டிப் பிடித்துவருகிறது. ஒரு உலகளாவிய மெடிக்கல் எமர்ஜென்சி நிலையில், நாட்டில் வேகமாகப்பரவும் விசித்திரக்கூறுகளை உடைய ஆபத்தான ஒரு நோயை, தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்வதின் மூலமே (Social distancing) ஒவ்வொருவரும் எதிர்க்கவேண்டும். தன்னை, தன் குடும்பத்தை, வாழும் சமூகத்தைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என எத்தனை முறைதான் உலக சுகாதார நிறுவனத்திலிருந்து, நாட்டின் பிரதமர், முதல் அமைச்சர்கள் மூலம் அறிவிப்பது, கேட்டுக்கொள்வது. மருத்துவர்கள், நிபுணர்கள், அதிகாரிகள், மீடியா வழியாகவும் விளக்குவது? விதவிதமாக, குழந்தைக்குச் சொல்லிக்கொடுப்பதுபோல் சொல்லிக்கொடுப்பது? கடந்த வாரங்களில் இப்படி ஒரு massive public exercise, விழிப்புணர்வு இயக்கமாக நாடெங்கும் செயல்படுத்தப்பட்டும், எல்லோருக்கும் நிலைமையின் தீவிரம் இன்னும் புரியவில்லை போலிருக்கிறதே. குறிப்பாக பீஹார், உபி போன்ற மாநிலங்களில் பலருக்கு ஏறமாட்டேன் என்கிறதே மண்டையில்? மண்டையைப் போட்டபின் என்னத்தைப் புரிந்துகொள்வார்கள் இவர்கள்?
இப்படி முட்டாள்களாக நடந்துகொள்ளும் ஆசாமிகளைக் குறிப்பிட, ஒரு புதிய ஆங்கில வார்த்தை சிருஷ்டிக்கப்பட்டுவிட்டது ட்விட்டர் உலகத்தில். Covidiot ! கோவிடியட். எப்படி இருக்கு! ‘கோவிட்-19’ வியாதியின் ஆபத்து நிலையிலும், முட்டாள்தனமாக நடந்துகொள்ளும் மூதேவிகளைக் குறிக்கும் சொல். Covid+idiot. இத்தகைய கோவிடியட்-கள் பிரதானமாக உலவும் பிரதேசங்கள் பீஹார், உ.பி.போன்றவை எனத் தெரியவருகிறது. பெங்களூரிலும் சில இடங்களில், ஊரடங்கி இருக்காமல், இரவில் மக்கள் உல்லாசமாகத் திரிந்ததாகவும் செய்தி இப்போது உலவுகிறது. அநாகரீகம். அவமானம்.
**
எங்கு இருந்தாலும் இதுபோல் நடந்து கொள்பவர்கள் முட்டாள்களே…
LikeLike
சோஷியல் டிஸ்டன்சிங் இல்லை என்றே தோன்றுகிறது எல்லாம் க்ட்டாயப்படுத்தத்தான் வேண்டும்பொல
LikeLike
வெளிநாட்டிலிருந்து ஓசைப்படாமல் நுழைந்துவிட்டவர்களை, ‘ஹோம் க்வாரண்டைன்’ என கையில் மையால் ஸ்டாம்ப் செய்து அனுப்பியும், வீட்டில் மூடிக்கொண்டு கிடக்காமல், ஊர் ஊராக அலையும் பொறுப்பற்ற ஜென்மங்களை போலீஸ் ஒவ்வொரு மாநிலத்திலும் விரட்டிப் பிடித்துவருகிறது.//
ஹையோ ஏகாந்தன் அண்ணா அதை ஏன் கேக்கறீங்க….படிச்சதுங்களே இப்படிச் செய்யும் போது மற்றவர்களை என்ன சொல்ல முடியும்? எல்லா ஊர்களிலும் மக்கள் வெளியில் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
வெளிநாட்டிலிருந்து பாவம் நம் மக்கள் அங்கு தவிக்கிறார்களே என்று ப்ளேன் அனுப்பி இங்கு பாதுகாப்பாகக் கொண்டு வந்து தனிமைப்படுத்தி மருத்துவக் கண்காணிப்பு கொடுக்கலாம் என்று நல்லது செய்தாலும் அந்த கோவிடியட்ஸ் நீ என்ன பெரிய அரசு …அப்படி ஒன்னு இருக்கா பேப்பரைக் காட்டு என்று கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் நம் அரசைக் கேள்வி கேட்பவர்களை எல்லாம் தூக்கி…வேண்டாம் இதுக்குமேல நான் எதுவும் சொல்லலை…அந்த அளவுக்கு நம் மக்கள் மேல் கோபம் வருகிறது.
எத்தனை கூவல்கள் வந்தாலும் சரி காணொளிகள் வந்தாலும் சரி…மக்கள் ஒத்துழைக்காவிட்டால் கஷ்டம்தான். மத்திய அரசும் மாநில அரசும் இதற்கு மேல் என்னதான் செய்ய முடியும்?
பொருட்கள் வாங்குவதிலும் சரி சொல்லி முடியாது.
இப்ப மார்ச் 31ற்குப் பிறகு? இன்னும் கவலை அளிக்கிறது. .ஊரடங்கு வரும் முன் ரயிலிலும் பேருந்துகளிலும் அதுவும் தொலை தூரம் பயணித்தவர்களில் (அதான் ரயில்ல வந்தது கொஞ்சம் கன்ஃபெர்ம்ட் கேஸ் வந்துச்சு அதுங்க பரப்பினது..) தொற்றியவர்களின் அறிகுறிகள் மார்ச் 31ற்குப் பிறகு தான் தெரிய வர வாய்ப்புகள் அதிகம். அல்லது இந்த ஊரடங்கின் போதும் சுற்றியவர்களில் எத்தனை பேருக்குத் தொற்றிக் கொண்டுள்ளதோ தெரியவில்லை. ஸோ இவை எல்லாம் மார்ச்31ற்குப் பிறகு அறிகுறிகள் தெரியவரும் போது இவர்கள் பரப்பியதும் அதன் பின் சேர்ந்து அதிகமாக சான்ஸ் உண்டு…தெரியவராமல் போகும் கேஸ்களும் உண்டு….
கோவிடியட்ஸ் இருக்கும் வரை ம்ம்ம்ம் என்ன சொல்ல..
கீதா
LikeLike
ஹப்பா மதியத்திற்கு முன்னேயே வாசித்து அப்பலருந்து போட முயற்சி செய்து செய்து இப்பத்தான் கமென்ட் போயிருக்கு…
கீதா
LikeLike
எங்க வீட்டு ஏர்டெல் நெட்டும் கவர்ன்மென்ட் உத்தரவுப்படி ரொம்ப ஒபீடியண்டா இருக்கு போல ஹா ஹா ஹா…
காலைல கொஞ்சம் அப்புறம் மாலை கொஞ்சம் மட்டும் தான் வேலை செய்யும் போல பகல் முழுவதும் வருவது இல்லை…
கீதா
LikeLike
@ திண்டுக்கல் தனபாலன், @ ஜி.எம்.பாலசுப்ரமணியம், @ கீதா: வருகை, கருத்துகளுக்கு நன்றி.
வெளிநாடுகளிலிருந்து வந்திறங்கியதோடு, பொறுப்பில்லாமல் ஊர், ஊராகச் சுற்றும் இந்தியர்கள், வெளிநாட்டுக்காரர்களால் இந்தியர்களின் தலைக்கு மேலிருக்கும் நோய் ஆபத்து நாளுக்கு நாள் அதிகமாகிறது. ஒவ்வொருவரின் உயிருக்கே ஆபத்தான நிலையில், அரசின் ஊரடங்கு உத்தரவை மீறுவது, அதை அலட்சியம் செய்வது, அலைந்து திரிந்து பெருமை பீற்றிக்கொள்வது என்பது அடிமுட்டாள்தனம். தேசவிரோதச் செயல் என்றாலும் சரியே. இது அத்துமீறுபவர்களின் மண்டைக்குள் அவசரமாகப் புகுத்தப்படுவது, வலுக்கட்டாயமாக எனினும், நல்லது- அவர்களுக்கும், ஒட்டுமொத்த சமூகத்துக்கும்.
’சோஷியல் டிஸ்டன்சிங்’ என்பது ஒரு கவர்ச்சிகரமான நவீன வார்த்தை அல்ல. அது ஒரு அபாய அறிவிப்பு. மிஞ்சினால் மரணத்தில் போய் முடியும். பேராபத்திலிருந்து நாமும், நமது குடும்பமும் தப்பிக்க,ஒவ்வொருவரும் ’வீட்டிற்குள்ளேயே இருப்பது ஒன்றே ஒரே வழி’. இதுதொடர்பாக சற்றுமுன் பேசிய பிரதமரும் தேசத்து மக்களை நோக்கி மீண்டும் கைகூப்பி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
மத்திய, மாநில அரசின் உத்தரவுகளை, டாக்டர்களின்/நிபுணர்களின் அறிவுரைகளை வாதம் செய்யாது ஏற்போம். கடைப்பிடிப்போம். லாக்டவுன் காலத்தில் தனித்திருப்போம். வாழ்வோம்.
LikeLike
இவரென்ன வந்து சொல்வது?.. சாதாரண சுகாதாரப் பணியாளர் இதைச் சொல்லியிருக்கலாமே.. – என்றெல்லாம் ஐந்தெழுத்து நாளிதழ் ஒன்றின் கருத்துரையில் கதறிக் கொண்டு இருக்கிறார்கள்…
LikeLike
சீனாவில் அவர்கள் அவர்களுக்குக் கொடுமைகள் செய்ததால் தான் இறைவனால் அங்கே சீரழிவு கொடுக்கப்பட்டது என்று கண்டு பிடித்துச் சொன்னார்கள்…
இங்கே காலவரையின்றி கல்வி நிலையங்கள் மூடப்பட்டு விட்டன.. 12 நாட்களாக விமான சேவை நிறுத்தப்பட்டு விட்டது.. 12 நாட்களாக பேருந்துகள் இயக்கப்பட வில்லை… நேற்று முதல் மாலை 5 மணி முதல் விடியற்காலை 4 மணி வரை முழு ஊரடங்கு ..
இவையெல்லாம் மறு அறிவிப்பு வரும்வரை நீடிக்கும்…
LikeLike
ஊடகங்களை பார்த்து ஹைட்ராக்சி க்ளோரோக்வின் மருந்தை தானாகவே, மருத்துவர் உத்தரவின்றி சாப்பிடத் தொடங்கி இருக்கிறார்கள். அதில் கோவைச்சிறுமி ஒருத்தி பலியானதாக வாட்சாப் தகவல் சொல்கிறது. உண்மையோ, பொய்யோ, ஆனால் அபப்டி தானாக மருந்து எடுத்துக் கொள்வது தப்பு.
LikeLike
உ பி, பீஹார் என்ன, தமிழ்நாட்டிலும் இப்படி ஆட்கள் இருக்கரியார்கள். எல்லா ஊரிலும் இருக்கிறார்கள். ஊடகங்கள், மற்றும் அரசு ஓவராக பில்டப் கொடுப்பதாகச் சொல்லும் படித்தவர்களே உண்டு… என்ன சொல்ல…
LikeLike
@ துரை செல்வராஜு, @ ஸ்ரீராம்: கருத்துக்களுக்கு நன்றி.
நமது ‘படித்த’ மக்களில் பலர் புத்திமந்தங்கள். சுயசிந்தனை அற்றவர்கள். அரசு எதைச் செய்தாலும் அதை எதிர்க்கவேண்டும் என ‘எதிர்க் கச்சி’களால் காலங்காலமாக ‘சனநாயக’ முறைப்படிப் ‘பழக்கப்பட்டவர்கள்’. அவர்களிடம் நல்ல விஷயம் நாலு சொல்லி, ‘உங்க உயிரைக் காக்கத்தான் ’கர்ஃப்யூ,’ ‘லாக்-டவுன்’, உள்ளேயே இருங்கப்பா’ என்றால், கேட்க மறுப்பார்கள். எல்லை மீறுவார்கள். ஏதேதோ மீம்ஸ் தயார் செய்து அனுப்பி இளிப்பார்கள், விதவிதமாக ஊளையிட்டு ஓசை எழுப்புவார்கள்.
இதையெல்லாம் தாண்டித்தான் அரசு காரியம் செய்யவேண்டும்.
LikeLike
//டாய்லெட் சோப், குனைன் மருந்துகள், யூகலிப்டஸ் ஆயில் என ஒரேயடியாக ஸ்டோர்களிலிருந்து கிடைப்பதையெல்லாம் சுருட்டி எடுத்துக்கொண்டு // – மிக மிக ரசித்த வரிகள். சமூகப் பொறுப்புணர்வு, மற்ற மனிதர்களைப் பற்றிய கரிசனம் இவைகள் இல்லையென்றால், குடிமகன் என்று சொல்லிக்கொள்ளவே அருகதை கிடைக்காது. இவர்கள் நாட்டின் அரசியலைப் பற்றி, அரசியல் தலைவர்களைப் பற்றிப் பேசவே லாயக்கற்றவர்கள்.
ஆனா பொதுவா fear buying இருக்கும். அதாவது 2 வாரத்துக்கு 4 கிலோ அரிசி போதும் என்றாலும் பயத்தில் 10 கிலோ வாங்குவது. நமக்குத் தேவைக்கு அதிகமாக நாம் சமூகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும் எதுவும், இன்னொரு சமூக அங்கத்தினருக்குக் கிடைக்காமல் செய்யும் தந்திரம் என்பதைப் புரிந்துகொண்டால் போதும்.
பெங்களூரில், இதுதான் சாக்கு என்று லூஸில் விற்கும் பொருட்களை விலை அதிகமாக விற்பதும், செயற்கையாக காய்கறி பழங்களுக்கு விலை அதிகம் வைப்பதும் நடந்துகொண்டிருக்கிறது நேற்றிலிருந்து. 55 ரூபாய் கிலோ அரிசியை 70 ரூபாய் என்றும் 12 ரூபாய் வாழைக்காயை 20 ரூபாய் என்றும், 40 ரூபாய் கிலோ வா.பழத்தை 60 ரூபாய் என்றும் விற்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
LikeLike