சஞ்சாரம்

போதும்.. போதும்

போய்விடலாம்

போய்விடலாமா

ஆமாம்..  போய்விடலாம்

அது சரி..

இருத்தல் என்பதுதானென்ன

அழகான இந்த உலகிலிருந்து

மெல்ல மெல்ல

விலகிப் போதல்தானே

விலகி விலகி

விடுபட்டுப் போய்விடல்

இருக்கும்போதும்

இல்லாது

போனபிறகும்

இனிதே தொடரும்

வாழ்தல்..

**

5 thoughts on “சஞ்சாரம்

 1. ஜி எம் பி ஸாரின் பதிவின் தாக்கமோ…    

  அழகான இந்த உலகம் என்றுதான் நினைத்திருக்கிறோம்.  அவ்வுலகம் இதைவிட சிறப்பானதாயிருக்கக் கூடும்!

  Like

 2. @ Sriram : இல்லை.

  மனதில் அவ்வப்போது ஓடிக்கொண்டிருந்ததுதான் இது. கவிதையாக வருமா என்று நினைக்கவில்லை. போஸ்ட் போடும் மன நிலையிலும் இல்லை. பழைய பாட்டுக்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன் நேற்று!

  அவ்வுலகம் இதைவிட ..//
  இருக்கலாம்! நாம் இங்கே என்ன செய்தோம் என்பதைப் பொறுத்ததோ அது? ஒருமுறை இளைஞர்களோடு அளவளாவுகையில்,ஜேகே இதனை லேசாகத் தொட்டுள்ளார்…

  Like

 3. இருத்தல் சுகமா மீண்டும் பிறத்தல் சுகமா.

  நேற்று கைகால் வலி அதிகமான போது, தனிமையில் பெற்றோரை
  நினைத்து, அம்மா கை கால் வலிக்கிறது என்று வாய்விட்டு சொன்னேன்.
  சொன்ன பிறகு ஏதோ நிம்மதி.

  அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
  விடுபடும் நேரம் வலி இருக்கக் கூடாது.
  பூரண நித்ய ஆனந்தம் வேண்டும்.
  என் பிரார்த்தனை. நன்றி ஏகாந்தன் ஜி.

  Like

 4. வாழ்வின் விடியல்,பகல்,மாலை வரை வந்து
  விட்டாய்,வென்றுவிட்டாய். வாழ்க்கை நிறைவேயன்றோ
  நீ சென்ற பின்னே பழிக்கும்படியா இருப்பாய்.

  உன் உயிர்ப் பறவை இன்னும் இருக்கிறது
  அறம் ,பொருள் ,இன்பம் கழித்தாயிற்று;
  வீடு நோக்கிப் பறப்பதே மீதி.

  என்னுயிர்ப் பறவையே,
  நான் கண்களை மூடிக் கொள்கிறேன்
  நீ உன் சிறகசைப்பை துவக்கலாம்.
  என் நெஞ்சுக்கூட்டை விட்டு
  அழகாக வெளியேறிவிடு, யாரும் அறியாமல்.
  மூடிய கண்கள் விழித்து விட்டால்
  இன்னும் இன்னும் எண்ணச் சிறகடிப்பாயே

  Like

  1. @ ரேவதி நரஸிம்ஹன் :
   நீங்கள் சொல்வது புரிகிறது. வேதனையில் இருக்கையில், நம்மிலிருந்து இயல்பாக வரும் ‘அம்மா..’ என்கிற சொல் ஒரு மந்திரச்சொல்லாகிவிடுகிறது.

   //..வலி இருக்கக்கூடாது.. பூரண நித்ய ஆனந்தம் வேண்டும்//
   கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அவனல்லவா இன்-சார்ஜ்.. அவன் காதில் விழுந்ததா !

   @ ஜி.எம்.பாலசுப்ரமணியம் :
   //..நெஞ்சுக்கூட்டை விட்டு அழகாக வெளியேறிவிடு, யாரும் அறியாமல்…//

   ஆ! சரிதான். யாரும் அறியாமல்தான் செல்லும்.. ஆனால் ‘அழகாக’ வெளியேறுமா !
   உங்கள் பதிவில் மீண்டும் எதிர்வினை செய்திருக்கிறேன்.

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s