வருடம் 2020-சீசன்களில் வெவ்வேறு வகை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்கு விளையாடுவதற்காக, ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்களை இந்திய கிரிக்கெட் போர்டு (BCCI) இன்று (16/01/2020) அறிவித்தது. Grade A+, Grade A, Grade B, Grade C என வீரர்களை அவர்களின் திறன், முந்தைய சாதனை, தற்போது காட்டிவரும் ‘ஃபார்ம்’ போன்றவற்றின் அடிப்படையில், வகைமைப்படுத்துவது வழக்கம். ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள் :
Grade A+ வீரர்கள் : விராட் கோஹ்லி, ரோஹித் ஷர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா -மூன்றே மூன்று!
Grade A : பேட்ஸ்மன்கள்: (ச்)செத்தேஷ்வர் புஜாரா, அஜின்க்யா ரஹானே, ஷிகர் தவன், கே.எல்.ராஹுல், ரிஷப் பந்த்.
பௌலர்கள்: ஆர். அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், இஷாந்த் ஷர்மா
Grade B : பேட்ஸ்மன்கள்: வ்ரித்திமான் சாஹா, ஹர்தீக் பாண்ட்யா, மயங்க் அகர்வால். பௌலர்கள் : உமேஷ் யாதவ், யஜுவேந்திர சாஹல்.
Grade C : பேட்ஸ்மன்கள் : ஹனுமா விஹாரி, ஷ்ரேயஸ் ஐயர், மனீஷ் பாண்டே. கேதார் ஜாதவ். பௌலர்கள்: வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் செய்னி, தீபக் சாஹர், ஷர்துல் டாக்குர்
இவர்களில் வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் செய்னி, ஷ்ரேயஸ் ஐயர், மயங்க் அகர்வால் ஆகியோருக்கு முதன் முறையாக இந்த வருடம் BCCI Central Contract கிடைத்துள்ளது. Grade A-ல் காணப்படும் ரிஷப் பந்த், Grade B -க்குத் தள்ளப்பட்டிருக்கவேண்டும். மாறாக, Grade C -ல் இருக்கும் ஹனுமா விஹாரிக்கு Grade B தரப்பட்டிருக்கலாம்.
மேற்கண்ட வருடாந்திர காண்ட்ராக்ட்களின்படி, யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கும் BCCI ? இதோ:
’A+’ : ஒவ்வொருவருக்கும் ரூ. 7 கோடி
‘A’ : தலா ரூ. 5 கோடி
‘B’ : தலா ரூ. 3 கோடி
‘C’ : தலா ரூ. 1 கோடி
கடந்த வருடம்வரை Grade ‘A’ -ல் இடம்பெற்றிருந்த முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை, இந்த வருட Central Contract List-லிருந்து தூக்கிவிட்டது BCCI. உலகக்கோப்பைக்கு அப்புறமாக அவர் எந்த மேட்ச்சிலும் விளையாடவில்லை. விதம்விதமான விளம்பரப்படங்களுக்கான ஷூட்டிங்குகளின் கால அட்டவணைப்படி அங்குமிங்குமாகப் பறந்துகொண்டிருக்கிறார் மனுஷன்! இன்னும் இரண்டு மாதங்களில் துவங்கவிருக்கும் 2020 ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸுக்காக மஞ்சளாய் இறங்கி ஆடுவார். கவலை வேண்டாம் ’தல’ ரசிகர்களே!
பணம்… பணம்… பணம்…!
LikeLiked by 1 person