ராஞ்சி கிரிக்கெட் டெஸ்ட் : ஷாபாஸ் !

 

இந்தியாவுக்கெதிராக இரண்டு படுதோல்விகளுக்குப்பின் தென்னாப்பிரிக்கா செம கடுப்பில் இருப்பதாகத் தெரிகிறது.  இன்று (19/10/19) துவங்கியிருக்கும் மூன்றாவது டெஸ்ட்டுக்கான அணியில், தடாலடியாக ஐந்து மாற்றங்கள்! ஃபிலாண்டர், கேஷவ் மகராஜ், முத்துசாமி, டி ப்ருய்ன் (de Bruyn), மார்க்ரம் அவுட். உள்ளே வந்திருப்பவர்களில் இருவர் டெஸ்ட்டுக்கே புதியவர்கள். மஹராஜின் இடத்தில் வந்திருக்கும் இடதுகை சுழல்பந்துவீச்சாளர் ஜார்ஜ் லிண்ட்  மற்றும் டி ப்ருய்னின் இடத்தில்  பேட்ஸ்மன் ஹென்ரிக் க்ளாஸன். முத்துசாமியின் இடத்தில் ஆல்ரவுண்டர் டேன் பீட் (Dane Piedt), ஃபிலாண்டரின் இடத்தில் லுங்கி இங்கிடி(Lungi Ngidi) மற்றும் மார்க்ரமின் இடத்தில் ஜுபேர் ஹம்ஸா (Zubayr Hamza)- பேட்டிங் வரிசையில் மூன்றாவதாக இறங்கக்கூடும். பாதி டீமை மாற்றிவிட்டதே.. தென்னாப்பிரிக்கா ஒரு தீர்மானத்தோடு இறங்கியிருக்கிறதா இந்த டெஸ்ட்டில்?

தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சு ஆட்டத்தின் முதல் இரண்டு மணிநேரத்தில் அபாரமாக இருந்தது. உழைப்புக்கான பரிசும் கிடைத்தது.  அகர்வால், புஜாரா, கோஹ்லி அவுட். ரபாடாவுக்கு 2, ஆன்ரிச் நோர்த்யா  -வுக்கு 1. லஞ்சுக்கு முன்னான ஸ்கோர் 73/3. ஆரம்பத் தடுமாற்றத்துக்குப்பின் ரோஹித் ஒரு விளாசு விளாசி, சதம் அடித்துவிட்டார் இப்போது (1335 hrs). அவருடன் அரை சதத்தோடு ரஹானே…

ஷாபாஸ் நதீம்..
ஒரு கில்லாடியோ!

இந்திய அணியிலும்  ஒரு மாற்றம். வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மாவின் இடத்தில் புதிய இடதுகை சுழல்பந்துவீச்சாளர் ஷாபாஸ் நதீம் (Shahbaz Nadeem)! முதல் டெஸ்ட் ஆடப்போகிறார். விஜய் ஹஸாரே (ஒரு-நாள்) சேம்பியன்ஷிப் போட்டிகளில் ஜார்க்கண்டுக்காக ஆடிக்கொண்டிருந்தவரை உடனே அழைத்து உள்ளே நுழைத்திருக்கிறார்கள் (கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்திய டொமஸ்டிக் கிரிக்கெட்டில் தூள்பறக்கவிட்டுக்கொண்டிருந்தவர்). குல்தீப் யாதவிற்குத் தோள்வலி..  இந்தக் கடைசி டெஸ்ட்டில்,  அஷ்வின், ஜடேஜா, நதீம் என மூன்று சுழல்வீச்சாளர்களுடன் இந்தியா இறங்கியிருக்கிறது. தென்னாப்பிரிக்க பேட்ஸ்மன்கள் சுழலில் தலைசுற்றிக் கீழே விழுவார்களா, எதிர்த்துத் தாக்குவார்களா?  எம் சுழலுக்கென்ன பதில்?

Picture courtesy: google/news18 creative

**

15 thoughts on “ராஞ்சி கிரிக்கெட் டெஸ்ட் : ஷாபாஸ் !

  1. மழை ஆட்டத்தை நிறுத்தும்போது 200 ஐக் கடந்து விட்டார்கள்!   டாஸ் கேட்க தன் ராசியின்மேல் நம்பிக்கை இல்லாமல் வேறொருவரை அழைத்து வந்தும் பயனில்லாமல் போனது தெ ஆ கேப்டனுக்கு!

    Liked by 1 person

  2. ஒரே விளம்பர மயமாக இருக்கிறதே தளம்…    படித்துக்கொண்டு வரும்போதே ஒரு பெண் வந்து புடைவையை முகத்தின்முன் விசிறிச் செல்கிறாள்…!

    Like

    1. @ ஸ்ரீராம்:
      தென்னாப்பிரிக்காவின் டாஸ் துரதிர்ஷ்டம் தொடர்கிறது. பேட்டிங்காவது க்ளிக் ஆகட்டும்.

      ஒரே விளம்பர மயமாக இருக்கிறதா ! என் தளத்திலா? இது எனக்கு ஒரு அதிர்ச்சி செய்தி. இப்படியெல்லாம் எனக்குத் தெரியாமலே விளையாட்டு நடந்துகொண்டிருக்கிறதா.. !

      நான் என் தளத்தில் ஒரு விளம்பரத்தையும் அனுமதிக்கவில்லை, அனுமதித்ததில்லை ஒருபோதும். அப்படி இதுவரை நான் பார்த்ததுமில்லை. அதாவது நான் பக்கத்தைத் திறக்கும்போது இதுகள் மறைக்கப்பட்டிருக்கின்றன என இப்போது தெரிகிறது..!

      சேலை விளம்பரமா.. இப்படி இன்றுதான் தெரிந்ததா? எப்போதுமே ஏதாவது குறுக்கே அல்லது பக்கவாட்டில் தெரிந்து படுத்துகிறதா?

      Like

  3. முன்னரே அவ்வப்போது கவனித்ததுண்டு.  இன்று உங்களையே கேட்டேன்.  இப்போது  சேலைப்பெண்ணைக் காணோம்.  பார்த்த ஒன்றை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து மெயிலில் அனுப்புகிறேன்.

    Like

    1. @ ஸ்ரீராம்:
      நன்றி. ஸ்க்ரீன் ஷாட் அனுப்புங்கள். என்ன நடக்கிறது எனத் தெரியவரும்.

      Like

  4. விளம்பரம் என் கண்ணுக்குத் தட்டுப்படவில்லை.

    கோஹ்லி நினைத்ததற்கு மாறாக, ரோஹித் ஷர்மா தன் இடத்தை நங்கூரம் போட்டுப் பிடித்துவிட்டாரே.

    பார்ப்போம் ஆட்டம் எப்படிச் செல்கிறது என்று… ஆரம்பத்தில் தென்னாப்பிரிக்கா அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. எனக்கென்னவோ 350க்குள் நாம் சுருண்டுவிட வாய்ப்பு உண்டு, இந்த ஆட்டம் மழையினால் முடிவு தெரியாமல் போகுமோ என்றும் தோன்றுகிறது.

    Like

    1. @ நெல்லைத்தமிழன்:

      மழையும், காலைப் பனிமூட்டமும் தொந்திரவு செய்யும் போலிருக்கிறதே -வடநாட்டில் குளிர்தாக்க இன்னும் சமயமிருக்கிறது என்ற போதிலும்.
      ரபாடாவும், நோர்த்யாவும் ஆரம்பித்த விதத்தில், இந்திய ஸ்கோர் 300-ஐ த் தாண்டி வெகுதூரம் ஓடாது என நினைத்தேன். ரோஹித் கதையை மாற்றி எழுதுகிறார். நாட்டுக்கு நல்லது. நாளை டீ வரையிலாவது இந்தியா ஆடும் எனத் தோன்றுகிறது – காலைச் சரிவிலிருந்து நாளை மீண்டால். பார்ப்போம்.

      Like

  5. ஏற்கெனவே இரண்டு போட்டிகளில் ஜெயித்துள்ள இந்தியாவுக்கு, இந்த மூன்றாவது டெஸ்ட், தொப்புள்ள கஞ்சி நிலைதானே! அதனால் ஒன்றும் அவ்வளவு முனைப்பு காட்டமாட்டார்கள். வெறும் ரிகார்ட் ப்ரேக் வாய்ப்புகள் மட்டும் பார்க்கப்படும்.

    Like

  6. நான்கைந்து முறை க்ளிக் பண்ணிப் பார்த்தாலும் புடவை எதுவும் என் கண்ணில் படவில்லையே! ஸ்ரீராமுக்குத்தான் மச்சம்!

    Liked by 1 person

  7. என்ன, கௌதமன் சார். ஒரு டாப் ப்ரொஃபனல் டீமைப் பற்றி இப்படியா ஒரு கேஷுவல் ரிமார்க் அடிப்பது! கோஹ்லியின் குறி 3-0 வெற்றி . Thats why he has opted for a 3-man spin attack..Lets see..

    Like

  8. சாதாரண விளம்பரம்னா ஒருத்தருக்கும் உறுத்தியிருக்காது. ஏதோ சேலையை விசிறிவிடற மாதிரி விளம்பரம்னால எல்லார் கண்ணையும் உறுத்துது, எங்க நமக்குத் தெரியலையே என்று.ஹா ஹா

    அதிருக்கட்டும். இந்த டெஸ்டில் பாயிண்ட் இருப்பதால் எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. என்ன ஒண்ணு… மழை மேகமூட்டம் காரணமாக ரிசல்ட் வராமல் இருந்தால்தான் ஏமாற்றமாக இருக்கும். முதலில் முதல் 10 விக்கெட்டுகள் எப்போது வீழ்கிறதுன்னு பார்ப்போம்.

    Like

    1. @ நெல்லைத்தமிழன்:

      நினைத்தபடி தேநீர் இடைவேளைக்கு முன் இந்திய இன்னிங்ஸ் முடிவுக்குவந்தது. 500-க்கு முன்னாலேயே ‘டிக்ளேர்’ செய்வார் கோஹ்லி என்று தெ.ஆ.-வே எதிர்பார்க்கவில்லை என்று எல்கர், டி காக் முகங்களில் தெரிந்தது! இருட்டாகி, ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்படுமுன், இரண்டு ஓடிவிடும்கள் என நினைக்கவில்லை!

      Like

Leave a comment