சிரித்து சிரித்து ..

இன்னல் எதுவும் தீரவில்லை
ஏனெனில் நீ இல்லவே இல்லை
இருப்பதாக நினைத்து
இரவும் பகலுமாய் உனை
இரந்து நின்றேனே
இறப்பதற்கு முன்னாவது
புரிந்ததே உண்மை
ஒருவேளை புரியாமலேயே
நான் போயிருந்தால் ?
ஒரு மண்ணும் ஆகியிருக்காது
இப்போதுமட்டும் என்ன
புரிந்துகொண்டுவிட்டதால்
புவியிலே நான் நிரந்தரமா
சிரிப்பு வந்தது அவனுக்கு
இல்லாத நீயே என்னை
இப்படிச் சிதைத்திருக்கிறாயே
இருந்திருந்தால்.. ஈவுஇரக்கமின்றி
ஒழித்துக் கட்டியிருப்பாய்
உலகம் முழுவதையுமாய்
இல்லை நீ என அறிந்ததில் 
இன்பம் கொஞ்சம் எனக்கும்
வாழ்வில் முதன் முறையாக
வாய்விட்டுச் சிரித்தான் 
மேலும் பொங்கிவர சிரிப்பு
சத்தமாக எழுந்தது உயர்ந்தது
மேலே இருந்தவன்..
நித்திரை கலைந்தான்
எழுந்து உட்கார்ந்தான்
என்ன  இது
இப்படி ஒரு இரைச்சல்
கீழே மேகம் விலக்கிப் பார்க்க
மேல்நோக்கி சிரித்துக்கொண்டு அவன்
இதோ வருகிறேன்.. என்றெழுந்தான்
இதுவரை  புலப்படாதவன்

-ஏகாந்தன்

**



 

22 thoughts on “சிரித்து சிரித்து ..

  1. மீதான் 1ஸ்ஸ்டூஊஊஊ ஹா ஹா ஹா டத்துவம் ஏ அண்ணன் டத்துவம் இது கவிதை அல்ல அதையும் தாண்டி….:))

    Like

  2. //இரவும் பகலுமாய் உனை
    இரந்து நின்றேனே
    இறப்பதற்கு முன்னாவது
    புரிந்ததே உண்மை
    ஒருவேளை புரியாமலேயே
    நான் போயிருந்தால் ?
    ஒரு மண்ணும் ஆகியிருக்காது//

    ஹா ஹா ஹா அப்போ கடவுள் இல்லையாமா?:)).. அவர் இருக்கிறாஅர் என நினைப்பதாலதான் நம்மால கொஞ்சமாவது நடமாட முடிகிறது ஏதோ ஒரு நம்பிக்கையில்:)).. கற்பனை அழகு.. இப்பூடிக் குட்டிக் குட்டிக் கவிதை எனக்கு ரொம்பப் பிடிக்கும். இன்னும் எழுதுங்கோ.

    Like

    1. @ அதிராமியா :

      //..,, அப்போ கடவுள் இல்லையாமா ? ..//

      சிரிப்பவனையெல்லாம் நம்பினால் ஆபத்து !

      Like

  3. சிரிப்பாய்ச் சிரித்தால்தான் உறக்கம் விழிப்பான் போலும் மேலே படுக்கையில் உறங்கியவன்!

    Like

    1. @ Sriram; //..என்ன இது.! //

      A satirical portrayal of the spiritual search and the seeker… not of the One above! The last part is something else..

      Like

  4. முதலில் எண்ணங்கள் அப்ஸ்ட்ராக்ட் ஆகத்தான் வரும் போல

    Like

    1. @ Balasubramaniam GM :

      வண்ணங்கள் தெரிகின்றன.. எண்ணங்கள் வருகின்றன ! அதில் abstract, poetry என்றெல்லாம் வகைமைகள் இல்லை.

      Like

  5. //என்ன இது
    இப்படி ஒரு இரைச்சல்
    கீழே மேகம் விலக்கிப் பார்க்க
    மேல்நோக்கி சிரித்துக்கொண்டு அவன்
    இதோ வருகிறேன்.. என்றெழுந்தான்
    இதுவரை புலப்படாதவன்// நல்ல தத்துவம் அல்லது தத்துப்பித்துவம்? ஆனால் இதுதான் கவிதையின் கருவே! ஸ்ரீராம் அதான் போய்ப் படிக்கச் சொல்லி இருக்கார்.

    Like

    1. @ கௌதமன்:

      கவிதையைப் பொறுத்தவரை, புரியாது போவதும், புரிதலின் ஆரம்பம்தான் ! புரியாதது.. மனம் பிரியாதது…

      Like

  6. கௌதமன்@
    இப்போ ஒன்னும் ஆயிடல..தெளிவு என்பது குழப்பத்தின் மறுபக்கம்தானே!

    Like

  7. அண்ணா யாரோ அதிராமியா ந்னு ஃபர்ஸ்ட்டூஊஊஊஉன்னு கூவினதால் நான் லாஸ்ட்டூஊஊஊஊனு கூவிடறேன் ஹா ஹா ஹா ஹா..

    கவிதை வாசித்துவிட்டேன் அப்பவே…கொஞ்சம் மழுங்கிய மூளையைக் கொஞ்சம் பயன்படுத்தி ஹிஹிஹிஹி

    //இன்னல் எதுவும் தீரவில்லை
    ஏனெனில் நீ இல்லவே இல்லை
    இருப்பதாக நினைத்து
    இரவும் பகலுமாய் உனை
    இரந்து நின்றேனே
    இறப்பதற்கு முன்னாவது
    புரிந்ததே உண்மை//

    சரி இப்படி வரிகள் கோட் செய்தால் எளிதாகிவிடும் (ஹப்பா தமிழ் வகுப்பு போல வரிக்கு வரி அர்த்தம் சொல்ல வேண்டாமா அப்பத்தானே கவிதாசிரியருக்கு சந்தோஷமா இருக்கும் இல்லையா அண்ணா!!?!!)

    சரி முதல்ல அந்தப் பரம் பொருளைப் புரிஞ்சுக்க முடியலை ஏன்னா இன்னல் தீர்க்கவில்லை.

    அது சரி நம் இன்னலை தீர்த்து வைக்க அவன் யார்? அதனால அவன் இல்லைனு மனிதன் புலம்ப?!!!

    இறப்பதற்கு முன்னர் என்ன புரிந்தது?!! இதோ பார்க்கிறேன் மனிதன் என்ன புரிந்து கொண்டான் என்று (அண்ணா நான் பொதுப்படையில் பார்க்கிறேன் ஓகேயா!!!!!!)

    கீதா

    Like

  8. ஒருவேளை புரியாமலேயே
    நான் போயிருந்தால் ?//

    அது சரி என்ன புரிந்து கொண்டான்…

    //ஒரு மண்ணும் ஆகியிருக்காது
    இப்போதுமட்டும் என்ன
    புரிந்துகொண்டுவிட்டதால்
    புவியிலே நான் நிரந்தரமா//

    அதானே ஒரு சுக்குமில்லை…அதானே புரிந்து கொண்டுவிட்டதால் நாம் நிரந்தரம் இல்லை…அட கடைசில புரிஞ்சு போச்சே!!!

    அவனைப் புரிந்து கொள்வதை விட உணர்ந்தாலே போதுமன்றோ?!! ஆராய்ச்சி எதற்கு ஆராயாமல் அனுபவிப்போமே…

    அவன் என்னவோ சரியாகத்தான் செய்துகொண்டிருக்கிறான். நாம தான் அதைப் புரிந்து கொள்ளாமல் எதை எதையோ தேடி…கடைசில சலித்து ஹூம் நான் எம்புட்டு பிரார்த்தனை பண்ணினேன் ஒண்ணுமே நடக்ல்லை அவனாவது மண்ணாவதுனு…போயிடுகிறோம் மனிதர்கள்…

    உருவத்தில் தேடுவதால் இருக்குமோ?!!

    கீதா

    Like

  9. சிரிப்பு வந்தது அவனுக்கு
    இல்லாத நீயே என்னை
    இப்படிச் சிதைத்திருக்கிறாயே
    இருந்திருந்தால்.. ஈவுஇரக்கமின்றி
    ஒழித்துக் கட்டியிருப்பாய்
    உலகம் முழுவதையுமாய்
    இல்லை நீ என அறிந்ததில்
    இன்பம் கொஞ்சம் எனக்கும்
    வாழ்வில் முதன் முறையாக
    வாய்விட்டுச் சிரித்தான் //

    ஓகே ஓகே புரியுது ரொம்பவே தேடிருக்கான்.!! ஸோ வேற ஒரு லோகத்துல இருக்கான் இது வரை!!

    //மேலும் பொங்கிவர சிரிப்பு
    சத்தமாக எழுந்தது உயர்ந்தது//

    ஓ அவன் இன்னும் சிரிச்சு முடியலையோ..!!

    //மேலே இருந்தவன்..
    நித்திரை கலைந்தான்
    எழுந்து உட்கார்ந்தான்
    என்ன இது
    இப்படி ஒரு இரைச்சல்
    கீழே மேகம் விலக்கிப் பார்க்க//

    ஓ இவனைத்தான் அவன் தேடிக் கொண்டிருக்கிறானா?!!!!!!! அப்படிப் பார்த்தால் மேலே இருப்பவனுக்கு ஏது நித்திரை?

    அவன் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே!! இந்த வரியே அந்த பிரபஞ்சம் குறித்ததுதானே. அந்தப் பிரபஞ்சத்தில் அந்த சக்தி இல்லையேல் எதுவுமே இல்லையே அதுதானே அந்த ஆகாசதத்துவம் இல்லையோ? என் மிகச் சிறிய மூளையின் புரிதல்.

    //மேல்நோக்கி சிரித்துக்கொண்டு அவன்
    இதோ வருகிறேன்.. என்றெழுந்தான்//

    இது புலப்படாதவனை தேடியவனா?!!

    //இதுவரை புலப்படாதவன்//

    இங்கதான் சம்சயம் தட்டுது!!!!!!

    அண்ணா நல்ல தத்துவம் செமையா சொல்லிருக்கீங்க…ஆனால் இந்தக் கடைசிதான் முட்டுது! ..மீக்குப் புரியவில்லை..முடிந்தால் விளக்கம் ப்ளீஸ்…

    கீதா

    Like

  10. //மேல்நோக்கி சிரித்துக்கொண்டு அவன்
    இதோ வருகிறேன்.. என்றெழுந்தான்
    இதுவரை புலப்படாதவன்//

    காட் இட் காட் இட் ஏகாந்தன் அண்ணா..

    இது வரை தேடியும் ஹைட் அண்ட் சீக் செய்தவன் இப்ப, தேடியவன் நீ இல்லைனு முடிவு கட்டியதும் மீட் பண்ண இர(ற)ங்கி வருகிறான்!! தேடியவனுக்கு அந்தப் புலப்படாதவன் தான் வருகிறான்னு புரியுமோ?!!!

    அப்படி உணர முடியாததால்தானே இங்கு அத்தனை கூக்குரல்கள்!!

    எதையோ தேடினால் எப்படிப் புலப்படும்? உள்ளே இருப்பதை விட்டு வெளியே தேடினால் இப்படித்தான்…எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும் பாடல் இது ஆனால் கூகுளில் தேடியும் வரிகள் கிடைக்கவில்லை. யார் எழுதியது என்றும் தெரியவில்லை. ஆனால் நான் பள்ளியில்/கல்லூரியில் படித்திருந்த போது ஜேசுதாஸ் மாமா பாடினது..

    இல்லாததை நினைத்து வருந்துகிறான் அது எட்டாததை நினைத்து கொட்டாவி விடுகிறான் எல்லாம் உனது மனதுள் இருக்க இன்பம் அது எங்கே என்றால் …அப்புறம் சரியா தெரியவில்லை…

    அண்ணா நல்ல தத்துவம் செமையா சொல்லிருக்கீங்க….

    கீதா

    Liked by 1 person

  11. திருப்தி என்பது மனதில் வந்துவிட்டால் உணர்தல் எளிது. அந்தத் திருப்தி இல்லாததால்தான் சலிப்புகள். அடுத்து நமக்குக் கிடைப்பதற்கும் கிடைக்காததற்கும், நடப்பதற்கும் நடக்காததற்கும் அந்த சக்தி பொறுப்பல்ல, என்பதை நாம் உணர்ந்துவிட்டால்!! அதுதானே இல்லை…பிரார்த்தனை என்பது மனதில் நம்பிக்கை, மனம் தொயுந்து விடாமல் வலுப்பெற மனதை நம்பிக்கையில் அமைதியாக வைத்துக் கொள்ள …

    ஆனால் மனிதர்கள் நாம் சாதாரணவர்கள் தானே..புரிந்து கொள்ள முடியாமல் சலிப்புடன் கடக்கின்றோம்..

    கீதா

    Like

  12. @ கீதா :

    அடேங்கப்பா பொழிந்துவிட்டீர்கள் கருத்துமழையாக! பொழியப் பொழிய ‘பக்’ ’பக்’ என்றது எனக்கு – என்னடாது ஒரு சிறு கவிதைக்குப் பதிலாக, ‘thesis’ வருகிறதே!

    உங்களுடைய முதல் மூன்று கருத்துக்களைப்படித்தவுடன், குழப்பம் அதிகமாகிறதோ என நினைத்தேன். ’எங்க சுத்தியும் ரங்கனைச் சேவி’ என்பதாக நான்காவதில் வந்தது தெளிவு!
    //..காட் இட் காட் இட் .. இது வரை தேடியும் ஹைட் அண்ட் சீக் செய்தவன் இப்ப, தேடியவன் நீ இல்லைனு முடிவு கட்டியதும் மீட் பண்ண இர(ற)ங்கி வருகிறான்!! தேடியவனுக்கு அந்தப் புலப்படாதவன் தான் வருகிறான்னு புரியுமோ?!!//!

    அதைப்பற்றிக் கவிஞன் கவலைப்படமாட்டான்! ’புலப்படாதவ’னும் வாசகர்களும் பார்த்துக்கொள்வார்கள்!

    //..மேலே இருப்பவனுக்கு ஏது நித்திரை // : இது என்னடா வம்பாப் போச்சு.. ஸ்ரீரங்கத்தில் மட்டும்தான் கால்நீட்டிக் கண்ணயர அனுமதியா அவனுக்கு!
    உங்கள் கமெண்ட்டை படிக்கையில் பத்ரகிரியார் வந்துபோனார்: ‘தூங்காமல் தூங்கி சுகம்பெறுவதெக்காலம் !

    Like

  13. முதலில் இந்த கவிதையை மேலோட்டமாக படித்து விட்டு, கால் பிடரியில் பட ஓடி விட்டேன். கீதா கவிதை அபாரம் என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். சரி என்று படித்தேன் நிஜமாகவே அபாரம்தான். கிட்டத்தட்ட இதையே கருவாக கொண்டு லா.ச.ரா. ‘கல் சிரித்தது என்று ஒரு கதி எழுதியிருந்தார். படித்திருக்கிறீர்களா?  

    Liked by 1 person

    1. @ Banumathy V.:

      வந்து படித்த உங்களுக்கு, தூண்டிய கீதாவிற்கு நன்றிகள்!

      லாசரா-வைப்பற்றிப் படித்திருக்கிறேன். நண்பர்கள் சிலாகிக்கக் கேட்டிருக்கிறேன். லாசரா-வை படித்ததில்லை! ஒரு சிறுகதை படித்திருக்கிறேனோ என சந்தேகம் நினைவிலில்லை.

      Like

Leave a comment