Ind vs SA : கோஹ்லியின் .. ஆசை நிறைவேறுமா !

 

இந்தியா தென்னாப்பிரிக்கா டெஸ்ட் மேட்ச் சீரியஸாகப் போய்க்கொண்டிருக்கிறது.. சீரியஸ்லி! முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பில், 502 ரன் அடித்து டிக்ளேர் செய்து, இரண்டாம் நாளின் இறுதியிலேயே தென்னாப்பிரிக்காவின் மூன்று விக்கெட்டுகளை சாய்த்துவிட்ட குஷியில் இருந்தார் கேப்டன் கோஹ்லி. ரோஹித் ஷர்மா, மயங்க் அகர்வால் ஜோடியின் ப்ரமாத துவக்க ஆட்டம், ஒரு மதமதப்பைக் கொடுத்திருக்கவேண்டும், கோஹ்லிக்கும், கோச்சு சாஸ்திரிக்கும் (ரோஹித் 176, மயங்க் 215) !

Virat Kohli

மூன்றாம் நாள், ஸ்க்ரிப்டை மாற்றியது-செமயாகத் திருப்பிக்கொடுத்தது தென்னாப்பிரிக்கா. இன்று (5/10/19 நான்காவது நாள்) காலை 431-ல் தென்னாப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் முடிவுக்கு வந்தது (எல்கர் 160, டி காக் 111, டூ ப்ளஸீ 55). தென்னாப்பிரிக்காவின் (தமிழ்நாட்டு) முத்துசாமி, தங்கள் அணி 400-ஐக் கடப்பதில் பெரிதும் துணையாக இருந்தார், இறுதி வரை அவுட் ஆகாமல்(33 ரன்) கட்டைபோட்டு. முதல் இன்னிங்ஸில் கோஹ்லியை caught & bowled – எனக் காலி செய்திருந்தார் மனுஷன்!

கடைசி நாளான நாளை (6-10-19) மழைவரலாம் என வானிலை மையம் முணுமுணுக்கிறது. எவ்வளவு தூரத்துக்கு சரியாக இருக்கும் இது என்பது, வருண பகவானுக்கே வெளிச்சம். இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய இந்தியா வேகமாக அடித்து டிக்ளேர் செய்தது. ரோஹித் எக்ஸ்ப்ரெஸ் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் விளாசி (7 சிக்ஸர்கள்) தூள்கிளப்ப, பாசெஞ்சர் ட்ரெயினான புஜாராவும் கொஞ்சம் வேகமாக ஓட்டி, 81 எடுத்துவிட்டார். பின் வந்தவர்கள் கொஞ்சம் தட்டிவைக்க, ஸ்கோர் 323க்கு 4 விக்கெட்டுகள் என இருக்கையில், பேட்டிங் செய்துகொண்டிருந்த கோஹ்லி திடீர் டிக்ளேர் செய்து பெவிலியனுக்குள் ஓடிவிட்டார்! விசாகப்பட்டின ரசிகர்களிடையே  சலசலப்பு.

நேரம் இருந்ததால், தென்னாப்பிரிக்கா சில ஓவர்களை இன்றே விளையாடவேண்டியிருந்தது. அதற்குள் இரண்டு விக்கெட்டைத் தூக்கிவிடலாம் என்றுதான் கோஹ்லியின் அந்த அவசரம்.  வேகப்பந்து வீச்சாளர் முதல் ஓவர், அஷ்வின் இரண்டாவது ஓவர் என ரசிகர்கள் அனுமானித்த நிலையில், அதிர்ச்சி. கையில் புதுப்பந்தோடு முதல் ஓவர் அஷ்வின், இரண்டாவது ஜடேஜா. ஸ்பின்னிலேயே டெஸ்ட் இன்னிங்ஸ் துவக்கம்.  காரணம், வெளிச்சம் போதாமையால்,  இந்தியா வேகப்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்த அம்பயர்கள் அனுமதிக்கவில்லை.  நல்லதாப் போச்சு. ஸ்பின்னர்கள்தான் எப்படியும் அதிக ஓவர்கள் போடப்போகிறார்கள். அங்கேதான் தென்னாப்பிரிக்காவின் சிக்கலும்.  இப்படியான  ஸ்பின் ஆரம்பத்திற்கு,  பலனும் கிடைத்தது. தென்னாப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஹீரோவான டீன் எல்கரை (Dean Elgar), வீட்டுக்கு அனுப்பிவிட்டார் ஜடேஜா. இந்த அதிர்ச்சியிலிருந்து  மீண்டு, நாளை ஒழுங்காக மட்டையை சுழற்றினால், தென்னாப்பிரிக்கா தப்பிக்கலாம். இலக்கு 395 ரன்கள். அஷ்வினின் சுழல் ஜாலம்,  ஜடேஜாவின் எரிச்சலூட்டும் துல்லியம் ஆகியவற்றை எதிர்த்து நிறைய கட்டை போடவேண்டியிருக்கும். முத்துசாமி மீண்டும் கைகொடுப்பாரா?  கடைசிநாள் இந்தியப் பிட்ச்சில் எந்த ஒரு வெளிநாட்டு அணிக்குமே அது எளிதல்ல. பெரும்பாலும் எதிரி மண்ணைக் கவ்வுவதுதான் வழக்கம். அப்படி நடந்தால் 40 பாய்ண்ட்டு இந்தியாவுக்கு -உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டி என்பதால்.

போன இன்னிங்ஸில் வழிந்த, ஆய்டன் மார்க்ரம் (Aiden Markram), டி ப்ருய்ன் (de Bruyn) க்ரீஸில் இப்போது இருக்கிறார்கள். கேப்டன் டூ ப்ளஸீ (Faf du Plessis) மற்றும்  டி காக் (Quinton de Cock, பவுமா (Tenda Bavuma) ஆகியோர் நிறைய உழைக்கவேண்டியிருக்கும். முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் வீழ்த்தி அதிரவைத்த அஷ்வின், ஜடேஜாவோடு இணைந்து தென்னாப்பிரிக்கர்களுக்கு சிம்ம சொப்னமாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஒருவேளை, விசாகப்பட்டினத்தில் மழைதேவன் நாளைக்கென்று, வேறு ஏதாவது ட்விஸ்ட் வைத்திருப்பாரோ?

**

4 thoughts on “Ind vs SA : கோஹ்லியின் .. ஆசை நிறைவேறுமா !

  1. ஏகாந்தன் சார்… வேகப்பந்து வீச்சாளர்களை உபயோகிக்காதது கோஹ்லியின் முடிவல்ல. அம்பயர்கள், வெளிச்சம் போதாமையால் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீசக்கூடாது என்று சொன்னதால்தான் ஜடேஜா, அஸ்வினுடன் பந்து வீச்சு ஆரம்பமானது.

    எனக்கு மனசுல, பெரிய பார்ட்னர்ஷிப் வந்து, இவங்க ரெண்டுபேரைத் தவிர்த்து ஷமி விக்கெட்டுகள் எடுக்கலாம்னு தோணுது. பார்ப்போம்.

    Liked by 1 person

    1. @ நெல்லைத்தமிழன்:
      தென்னாப்பிரிக்காவின் இரண்டாவது இன்னிங்ஸின் ஆரம்பத்தை நான் பார்க்கவில்லை. 4-ஆவது ஓவரில்தான் பார்க்கவந்தேன். ஆரம்பத்தில் அம்பயர்களின் ’வெளிச்ச’ முடிவை நான்கவனிக்கவில்லை! இப்போது ஸ்பின் ஆரம்ப விஷயத்தை, சரிசெய்துவிட்டேன். நன்றி.

      ஷமி போன இன்னிங்ஸிலும் நன்றாக வீசினார். இதிலும் விக்கெட் எடுக்கக்கூடும். பெரிய பார்ட்னர்ஷிப் ? சந்தேகம்தான்…

      Like

  2. @Sriram : சற்றுமுன் ஜெய்த்துவிட்டது இந்தியா! அடுத்த பதிவில் கொஞ்சம் பார்ப்போம்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s