நான் உயிரோடிருக்கிறேன் ..

 

நான் உயிரோடிருக்கிறேன்..
அது வலிக்கிறது
எனக்குப் பிடிக்கிறது
மேலே இருப்பது தலைப்பு. 
கீழே கவிதை :


எல்லாம் பழையபடியே என்கிற
ஒரு சலிப்புத் தருணத்தில்
நான் எங்கே இருக்கிறேன்
என்பதை மறந்துவிடுகிறேன்
என் கைகளின் இரத்தம்
படுக்கையில் கசிகிறது
பிறகு சுவர்களிலும்.
வண்ணங்கள் இருக்கின்றன
அவை வெவ்வேறு
வண்ணங்களாகின்றன
இதிலெல்லாம் அர்த்தமில்லை
இது எப்போதும் நடக்கிறது
நாம்தான் கவனிப்பதில்லை.
ஒரு அடுக்கு..
அடுக்கு என்றால்?
அடுக்குகள் மூலமாகத்தான்
தொட்டுக்கொள்கிறோம்
இரண்டு தகர டப்பாக்கள்
அவற்றோடு கட்டப்பட்ட
ஏகப்பட்ட கயிறுகள்
எல்லா திசைகளிலிருந்தும்..
என்னோடு பேசு
எதையாவது சொல்லு
சாதாரண வார்த்தைகளில்..
உன் வார்த்தைகளைப் புரிந்துகொள்ள நான்
கல்லூரிக்குத் திரும்பவேண்டிய அவசியமில்லாமல்
இந்த உலகம் ஒரு குப்பை
அதைப்பற்றி நீ கவலைப்படுகிறாயா?
நான் படுகிறேன்
நானே குப்பை
என்கின்ற உணர்வில்
காதலாகிறேன்

**
ஜோஷுவா ஜென்னிஃபர் எஸ்பினோஸா

ஜோஷுவா ஜென்னிஃபர் எஸ்பினோஸா. வயது 31. அமெரிக்காவின் கலிஃபோர்னியா வாழ்விடம். கவனத்தை ஈர்க்க ஆரம்பித்திருக்கும்  சமகாலக் கவிஞர்களில் ஒருவர். ‘Troubling the Line: Trans and Genderqueer Poetry and Poetics’ எனப்படும் 55 அருமையான கவிதைகளடங்கிய தொகுப்பு ஒன்று அங்கு வெளியாகியிருக்கிறது. அதில் இவரது கவிதைகள் சில உள்ளன. ஜென்னிஃபர் எஸ்பினோஸாவின் முதல் கவிதை நூலின் பெயர்:  “I’m Alive / It Hurts / I Love It ” (Boost House, 2014) . அதிலிருந்து, அதே தலைப்பில் ஒன்று கிடைக்க (டைட்டில் சாங் மாதிரி!), மொழியாக்கினேன் – அதாவது நம்ப மொழிக்குக் கொண்டுவந்தேன். வேறொன்றுமில்லை.

இன்னும், இப்படி ஏதாவது திடீர் எனக் கிடைத்தால், கவர்ந்தால், அந்த படைப்பு, படைப்பாளிபற்றி கொஞ்சம் எழுதுவேன் என எச்சரித்து வைக்கிறேன்!

 

**

4 thoughts on “நான் உயிரோடிருக்கிறேன் ..

 1. ஏகாந்தன் அண்ணா இது என்ன? இது மட்டும்தான் பதிவா? அல்லது எனக்குத்தான் முழு போஸ்டும் பார்க்க முடியவில்லையா? நான் உயிரோடு இருக்கிறேன் என்பது மட்டும் தெரியுது…

  ஒன்னும் புரியலை…

  என்று பார்த்துக் கொண்டிருந்த போதே கணினி முழு பக்கத்தையும் காட்டியது..

  கவிதையை வாசித்தேன்..அப்பவும் புரிந்ததா என்றால் புரியலை….புரியலையா? என்று கேட்ட்டால் புரிந்தது! ஹா ஹா ஹா

  முடியாமல் படுக்கையில் இருக்கும் போது மனதில்/மூளைக்கும் சிதறியடிக்கும் எண்ண ஓட்டங்கள் போல இருக்கிறதோ?!!!!

  எச்சரிக்கை எல்லாம் வேண்டாம் அண்ணா தகிரியமா நாங்க படிப்போம்…

  கீதா

  Like

 2. @ கீதா:
  தலைப்பை மட்டும்தான் காண்பித்ததா முதலில்..? கவிதையைத் தாண்டி உங்கள் கணினி வேறு mystical-ஆக இருக்கிறதே.. உங்கள் யோகம்!

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s