IND Vs SA First Test : இந்திய அணியில் மாற்றங்கள்?

 

தென்னாப்பிரிக்காவுடன் நாளை (அக். 2) விசாகப்பட்டினத்தில் தொடங்க இருக்கும் முதல்போட்டியில், இந்திய அணியில் சில மாறுதல்கள் எனப் பேச்சு அடிபட ஆரம்பித்திருக்கிறது. கோஹ்லி-சாஸ்திரி குழப்பக் கூட்டணியின் சிந்தனையில் நிஜமாகவே  தெளிவு ஏற்பட ஆரம்பித்துவிட்டிருக்கிறதா? இல்லை, வீரர்-தேர்வுபற்றி விமரிசனம் நாலா திசைகளிலும் சூடுபிடித்திருக்கிறதே, உள்நாட்டுத் தொடர்வேற.. கொஞ்சம் உஷாராக இருப்போம் என்கிற தற்காப்பு எண்ணமா?

முதன்முறையாக ‘உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டி’களை, இந்த ஆகஸ்டில் நடந்த இங்கிலாந்து-ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடரிலிருந்து ஆரம்பித்திருக்கிறது ஐசிசி. 9 நாடுகள் கலந்துகொள்ளும் டெஸ்ட் தொடர் போட்டிகளாதலால் (5-day matches), இவை மெல்லச் செல்லும். வெற்றி, டிரா, டை(Tie) என, போட்டிகளின் கதிக்கேற்றபடி பாய்ண்ட்டுகள் உண்டு.  2021 ஜூன் மாதம் இங்கிலாந்தில் நிறைவுபெறும். ஏற்கனவே 2-போட்டி டெஸ்ட் தொடரில் பலவீனமான வெஸ்ட் இண்டீஸைத் தோற்கடித்த மிதப்பில், கோஹ்லியின் இந்தியா இருக்கிறதோ! இருந்தால், தென்னாப்பிரிக்காவிடம் அது வேலைக்காவாது. இது, கோஹ்லி-சாஸ்திரி ஜோடிக்குத் தெரியும். இந்த நிதர்சனம் கொடுத்த உதறலினால்தான், அணியில் மாற்றம்பற்றிய சிந்தனைகள் இப்போது. சிந்தனை செய் மனமே … செய்தால்…!

ரோஹித் ஷர்மா-மயங்க் அகர்வால், இந்தியாவின் துவக்க பேட்டிங் ஜோடி என்பது கிட்டத்தட்ட நிரூபணமாகிவிட்டது. ஒருவேளை, கோஹ்லி-சாஸ்திரி தலைக்குள் ஏதாவது பூச்சி ஊறித்தென்றால், போட்டி துவங்குவதற்கு முன் இதுவும் மாறிவிடும். திடீரென்று ஷுப்மன் கில் (Shubman Gill, another Kohli-favourite, but talented), ரோஹித்தை பெஞ்சில் உட்காரவைத்துவிட்டு, மயங்குடன் இறங்கினாலும் ஆச்சரியப்படத்தேவையில்லை!

Saha in action !

கோஹ்லி இப்போது சொல்லியிருப்பது ரிஷப் பந்த் (சொதப்பல் கீப்பிங்)- க்குப் பதிலாக, நாட்டின் நம்பர் 1 டெஸ்ட் விக்கெட் கீப்பர் வ்ருத்திமான் சாஹா விளையாடுவார் என்பது. நம்புவதற்கு சிரமமாக இருக்கிறதா ரசிகர்களே! எதிரி வெஸ்ட் இண்டீஸ் இல்லையே, தென்னாப்பிரிக்கா அல்லவா?

அனேகமாக 2+2 என்பது, நமது பௌலிங் அட்டாக்-ஆக இருக்கும் எனத் தோன்றுகிறது. 2 வேகப்பந்துவீச்சாளர்கள். 2 ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர்கள். அஷ்வின் ஆட்டோமேட்டிக் சாய்ஸ் இல்லை என்று மூன்று நாள் முன்னால் தான் அந்த கோச்சு சொல்லித்து! இப்போது தலையில் வேறுவிதமாக மணி அடிக்க ஆரம்பித்திருக்கிறதுபோலிருக்கிறது. கோஹ்லி pre-match press briefing-ல், திடீரென அஷ்வினின் முக்கியத்துவம்பற்றிப் பேசுகிறார். ”நிலைமைக்கேற்றபடி தேர்வு செய்கிறோம். இந்திய மைதானங்களில் ஆஷ் எப்போதுமே எதிரிக்குப் பெரும் சவாலாக நிற்பவர். அவரது பேட்டிங்கும் கைகொடுக்கும். ஆஷ் மற்றும் ஜட்டுதான் (Ashwin and Jadeja) எங்கள் ப்ரிமியர் ஸ்பின் ஜோடி! தேவைப்பட்டால் ஹனுமா விஹாரியை மூன்றாவது ஸ்பின்னராகப் பயன்படுத்துவோம்..” ஹ்ம்… என்னமோப்பா, புத்திவந்தால் சரி..

இந்த நிலையில், இஷாந்த் ஷர்மாவும், முகமது ஷமியும் நாளை ஆரம்பிக்கவிருக்கும் போட்டியில், வேகப்பந்துவீச்சாளர்களாக இறக்கப்படக்கூடும். Red ball cricket -லும் சிறப்பாகவே வீசியிருக்கும், புவனேஷ்வர் குமார், இவர்களின் சிந்தனை ராடாரில் சிக்கவில்லையோ.. Poor Umesh Yadav! அணிக்குள் வந்தபின்னும், பெஞ்சுதாம்ப்பா இப்போதைக்கு, உனக்கு!

**

6 thoughts on “IND Vs SA First Test : இந்திய அணியில் மாற்றங்கள்?

 1. இவர்கள் தேர்நதெடுப்பது, தேர்ந்தெடுக்காதது ஒருபக்கம்…     நிறைய ஆப்ஷன்கள் கூட ஒரு தடங்கலாய் இருக்கக்கூடும்.  லிஸ்ட்டில் பும்ரா இல்லவே இல்லையோ….

  Like

  1. @ ஸ்ரீராம்: Problem of plenty -இந்தியாவுக்கு இது உண்டு. இந்தமாதிரி தருணத்தில்தான் சரியான 11-ஐத் தேர்வு செய்ய புத்திசாலித்தனம் வேண்டும்! பாரபட்சம் இல்லாதிருக்கவும் வேண்டும்.

   பும்ரா இஞ்சுரி லிஸ்ட்டில். இங்கிலாந்து போகிறார் ஸ்ட்ரெஸ் ஃப்ராக்ச்சருக்காக.

   Like

 2. கோஹ்லிக்கு நல்ல நேரம் என்றால், கஷ்டப்பட்டு அணியில் நுழைந்த ரோஹித், அஸ்வின் போன்றவர்களுக்கு கெட்ட நேரமாகியிருக்கும். இவர்களுக்கு நல்ல நேரம் என்றால் கோஹ்லி, ரவி சாஸ்திரிக்கு கெட்ட நேரமாகியிருக்கும். யாருக்கு எப்படி நேரம் என்பது விரைவில் தெரிந்துவிடும். ஹா ஹா

  Liked by 1 person

  1. @ நெல்லைத்தமிழன்:
   அப்படியா! அப்படியென்றால் கோஹ்லி/சாஸ்திரிக்கு கெட்டகாலமாயிருக்கட்டும்! ரோஹித், அஷ்வின், சாஹா போன்றவர்கள் க்ளிக் ஆகட்டும்!

   Like

 3. ஆட்டக்காரர்களை தேர்வு செய்வது கடினம்நன்றக ஆடும்போது ஓஹோ என்றும் சிறிது சுமாரானால் சீச்சீ என்றும் நினைப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டியதுகிரிக்கட்டில் எதையும் தீர்க்கமாகச்சொல்ல முடியாது கன்சிஸ்டெண்ட் கன்சிஸ்டென்சி கிரிக்கட்டில் இல்லை ஒரு பந்து போதும் அவுட் செய்ய இட் இஸ் எ கேம் ஆஃப் சான் ஸ்

  Like

 4. @ Balasubramaniam GM:
  புதிதாக எதையும் சொல்லவில்லை நீங்கள்!

  Its a game of chance என்பதால், வருகிற பந்தையெல்லாம் பேட்ஸ்மன், ஃபீல்டருக்கு அனுப்பக்கூடாதல்லவா?

  Some players do show consistency – in repeated failures !

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s