வந்தது கோபம் அவளுக்கு. ’இது என்ன, தினமும் ஒரே ஊர் வம்பாப்போச்சே.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தி வந்து ஏதாவது குற்றம் சொல்லிட்டுப்போறா.. யார்யாருக்குத்தான், எத்தனைதான் பதில் சொல்வது? போனால்போகிறதுன்னு இனிமேல் விடமுடியாது. இப்பிடி விட்டுத்தான் இவ்வளவு தூரம் வந்திருக்கு. இப்பவே இதுக்கு ஒரு வழி பண்ணிடறேன்..’ என்று உள்ளே போனாள். பெரிய கயிறை எடுத்துக்கொண்டுவந்தாள். அம்மாவின் பரபரப்பு நடவடிக்கைகளைப் பரிதாபமாகப் பார்த்து நின்றுகொண்டிருந்தான் அப்பாவிப் பிள்ளை. தன் சிறுபாலகனின் அழகுசிந்தும் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தாள் தாய். வெண்ணெய் திருடியவனை இன்று தண்டித்தே ஆக வேண்டும். கொஞ்சம் பார்த்தாலும் கோபம் போய்விடுமே! கோபமிகுதியால், பிஞ்சு உடம்பில் அழுந்த, கயிறைச் சுற்றிக் கட்டினாள். அவனை இழுத்துக்கொண்டுபோனாள். அம்மாவின் இழுப்புக்கேற்றவாறு சின்னக்கால்களால் தடுமாறிக்கொண்டே வேகவேகமாக நடந்தான் பால்மணம் மாறாப் பாலகன். அங்குமிங்கும் பார்த்தவளின் கண்களில் உரல் ஒன்று தென்பட, அதோடு சேர்த்து பையனைக் கட்டிவிட்டாள். அவனை ஏறிட்டும் பார்க்காமல், குறையாத கோபத்துடன் வீட்டைவிட்டு வெளியே போனாள் அம்மாக்காரி.. வேறு ஏதோ காரியமாய்.
உரலோடு பிணைக்கப்பட்டவன் உலகளந்தவனாயிற்றே. பொடியனாக இருந்தால் என்ன! கண்களை உருட்டி அம்மா போய்விட்டாள் என்பதை உறுதிசெய்துகொண்டான். வயதை மிஞ்சிய சக்தியோடு உரலை அனாயாசமாக இழுத்துக்கொண்டு வெளியே வந்தான். ஒரு தோட்டம். அந்தத் தோட்டத்தில் இரண்டு மருதமரங்கள் பக்கம் பக்கமாக நின்றுகொண்டிருந்தன. அந்த இடுக்குக்குள் புகுந்தான். வெளியே வந்தான். உரல் மாட்டேன் என்றது. மாட்டிக்கொண்டது. திரும்பிப் பார்த்தவன் தன் பலத்தால் ஒரு இழு இழுக்க, மரங்கள் அதிர்ந்தன. முறிந்தன. விழுந்தன. குபீரென அவற்றிலிருந்து வெளிப்பட்டார்கள் இரண்டு இளைஞர்கள். யாரவர்கள்? சாபம் ஒன்றினால் மருதமரமாய்ப் பிறக்குமாறு விதிக்கப்பட்டவர்கள். சாபம் கொடுத்தது? எல்லாம் நாரத மகரிஷிதான். பாலகிருஷ்ணனால் சாபவிமோசனம் என அருளப்பட்ட, குபேரனின் குமாரர்கள்தான் இப்படி வெளிவந்தார்கள். நன்றியறிதலோடு குழந்தைக் கிருஷ்ணனைக் கைகூப்பி வணங்கினார்கள். மெல்லச் சிரித்தான் கள்ளமிகு சிறுவன். சுய உருவம் பெற்ற சுகத்தில், வானத்திலேறி மறைந்தார்கள் இருவரும்.
இந்த நிகழ்வை ’கோபால விம்ஸதி’ (Twenty verses on Gopala) என்கிற தன் படைப்பின் பாசுரமொன்றில் (பாசுரம் 7) குறிப்பிட்டு, இப்படி மரமாகச் சபிக்கப்பட்ட குபேரனின் குமாரர்களை சாப விமோசனம் செய்த குழந்தையே, பெருமானே! உன்னை தியானிக்கின்றேன். உனது திருவடியில் அடியேனின் வணக்கங்களை சமர்ப்பிக்கின்றேன்’ எனச் சொல்லி நிறுத்துகிறார் வேதாந்த தேசிகன்.
பொதுவாக இந்தமாதிரி சுவாரஸ்யமான கதைகளை, அழகாக, அற்புதமாக வர்ணிக்கும் கவியாயிற்றே அவர்.. இவ்வளவு சுருக்கம் ஏன் எனக் கேள்வி வரும், அவரது பாசுரங்களைப் படித்து அனுபவித்திருப்பவருக்கு. ’அளவிலா சக்தியையுடைய ப்ரும்மமாகிய உன்னை, கோபத்தில் இப்படிக் கயிற்றால் கட்டிப்போட்டுவிட்டாளே உன் தாய் யசோதை. அதனைச் சொல்லமுயன்றேன். ஆனால், அந்தக் காட்சியை நினைத்துப் பார்க்கவே மனம் பதறுகிறதே.. அதனை வர்ணிப்பதா? என்னால் முடியாது. எனக்கு அந்த சக்தியில்லை அப்பா..’ என்று நந்தகோபாலனிடம் சொல்கிறார் வேதாந்த தேசிகன் என்கிறார்கள் உரையாசிரியர்கள்.
**
ஹர்த்தும் கும்பே விநிஹித கர ஸ்வாது ஹை யங்க வீனம்
த்ருஷ்ட்வா தாம க்ரஹண சடுலாம் மாதரம் ஜாத ரோஷாம்
பாயா தீஷத் ப்ரச லித பதோ நாப கச்சன் நதிஷ்டன்
மித்யாகோப சபதி நயனே மீலயன் விஸ்வ கோப்தா
..
பரிவர்த்தித கந்தரம் பயேந ஸ்மித புல்லாதர பல்லவம் ஸ்மராமி
விட பித்வ நிரா சகம் கயோஸ் சித் விபுலோ லூகல கர்ஷகம் குமாரம்
ஸ்ரீ கோபாலவிம்சதியின் அதற்குரிய பாடலையோ இல்லை வரிகளையோ கோடிகாண்பித்திருக்கலாம். உண்மையான கற்பனையும், தன்னை அசோதையைப் போலவோ இல்லை அவதாரத்தில் நடந்த சம்பவங்களில் தானொரு சாட்சியாக நிற்பதுபோன்ற கற்பனை இல்லாமல் இத்தகைய கவிதை/பாடல் எழுதுவது கடினம்.
LikeLiked by 1 person
@ நெல்லைத்தமிழன்:
’பரிவத்தித கந்தரம் பயேந..’ என ஆரம்பிக்கும் 7-ஆவது பாசுரம்தான்
கட்டுரையில் குறித்திருப்பது. எதையோ தேடிக்கொண்டிருந்தபோது ’ஸ்ரீகோபால விம்ஸதி’யின் இந்த ஸ்லோகமும் அதுபற்றிய commentaries-உம் கொஞ்சம் கிடைத்தது. கவர்ந்தது.
Commentaries பகுதியில்தான் ‘வர்ணிக்கத் தன்னால் முடியாது’ என ஸ்வாமி தேசிகன் சொல்வதாக வந்திருந்தது. அதனையும் மனதில்கொண்டதால் எழுதினேன். கடைசிவரியில் ‘… என்கிறார்கள் உரையாசிரியர்கள்’ என இப்போது சேர்த்துள்ளேன்.
LikeLike
ரசித்தேன். ருசித்தேன்.
LikeLike
நன்றி ஸ்ரீராம்.
LikeLike
இப்போதிருக்கும் மனோநிலைக்கு இந்தப் பாடலும் விளக்கமும் ஆறுதலை அளிக்கிறது. நன்றி.
LikeLike
@ கீதா சாம்பசிவம்:
வாங்க! என்ன செய்வது? அறிந்தோர் மறைந்தால் மனம் அல்லாடத்தான் செய்கிறது.
LikeLike
பிள்ளைப் பிராயத்தில் மண் உண்ட கண்ணன் வாயில்
சிறிதே மண் காண எண்ணிய தாய் யசோதா,விண்ணுடன்
நீரும் நிலமும்,அண்ட அகிலமும் கண்டே மயங்கியதும்
மீண்டும் பின் மாயையால் கட்டுண்டு,வெண்ணெய் திருடிய
முகுந்தனை உரலில் கட்ட, அன்புக்குக் கட்டுப்பட்டவன் ,
கட்டிய உரலுடன் நகர்ந்து, நாரதன் சபிக்க மருத மரங்களாய்
நின்றிருந்த குபேர புதல்வர்”நளகூபரன்” “,மணிக்கிரிவன் “
இடைபுகுந்து, சாபவிமோசனம் அளித்ததும் திரு விளையாடலே/ என்று எனது கிருஷ்ணாயணத்தில் எழுதி இருந்தேன்
LikeLiked by 1 person
@ Balasubramaniam GM :
அட! நீங்கள் ஏற்கனவே இத்தகைய திருவிளையாடல்கள்பற்றி எழுதியிருக்கிறீர்களா? அதுவும் கிருஷ்ணாயணம் என்றபெயரில். பொருத்தம்தான்!
LikeLike