நகரத்தில் நகரும் ஒரு காலைப்பொழுது

 

 

முதுகிலேறிய  பையும்

மொபைல்திரையில் கண்ணுமாய்

முறுவலித்தோ முணுமுணுத்தோ

முன்னால் ஊரும் வாலிபங்கள்

முறுக்கோடு நடந்துபார்க்கும் பெரிசுகள்

முக்குகளில் முட்டவரும் ஆட்டோக்கள்

பஞ்சவர்ணப் பளபளப்பாய்க் கார்கள்

பிஞ்சுமுகங்களை அள்ளிக்கொண்டு

மஞ்சள் பஸ்களின் பள்ளிக்கூட பவனி

குறுக்குமறுக்குமாய் டூ-வீலர்ப் பிசாசுகள்

குப்பையை நாசூக்காகப் பெருக்கித் தள்ளும்

மாநகராட்சியின் வேலைக்கார யுவதி

வியப்போடு பார்த்துக்கொண்டு ஓரத்தில்

வெறுங்காலோடு நிற்கும் அவள் குழந்தை

**

4 thoughts on “நகரத்தில் நகரும் ஒரு காலைப்பொழுது

  1. கவிதையை விட வந்தியத்தேவன் கவர்ந்தான்.. என்னனு போய்ப் பார்க்கணும். வரேன் பார்த்துட்டு! மற்றபடி காலைப்பொழுது அழகாய் மலர்ந்துள்ளது. எனக்குக் காலைப்பொழுதுன்னா அந்தக் காலத்தில் நா.பார்த்தசாரதி, தனது “பொன்விலங்கு” நாவலின் முதல் அத்தியாயத்தில் வேலைக்கான பேட்டி முடிந்து திரும்பும் சத்தியமூர்த்தியின் மதுரையின் காலை அழகை வர்ணித்திருப்பார் அதான் தோன்றும் எந்த ஊருக்குப் போனாலும்!

    Liked by 1 person

    1. @ கீதா சாம்பசிவம்:

      ஓ! கவிதையைப் படிக்கவந்தவரை, வந்தியத்தேவன் கடத்திவிட்டானா !

      Like

  2. தினத்தந்தியை கட்கத்தில் இடுக்கிக்கொண்டு எலெக்ட்ரிக் டிரெயினில் ஏற செல்லும் காட்சியை மறந்து விட்டீர்கள்!

    Liked by 1 person

    1. @ Sriram :
      அதற்கு உங்களைப்போல் நான் சென்னைவாசியாக அல்லவா இருந்திருக்கவேண்டும்!

      Like

Leave a comment