இந்தியா உலகக்கோப்பையிலிருந்து வெளியேறிவிட்டது. இல்லை, வெளியேற்றப்பட்டுவிட்டது. அதற்கு கோஹ்லியைத் திட்டலாம். ரோஹித்தைத் திட்டலாம். தோனியையும் திட்டலாம். இந்தியாவின் முன்னாள் வீரர்களும் தங்களுக்கு கிடைத்த மீடியாமுன் எதையாவது அலசிப் பொழுதுபோக்குவார்கள். இந்திய கிரிக்கெட் போர்ட் என்ன செய்யும்? ரவி ஷாஸ்திரிக்கு ’ப்ரொமோஷன்’ அல்லது ’எக்ஸ்டென்ஷன்’ கொடுக்கும். அவரை இன்னும் இரண்டு உலகக்கோப்பைகளுக்கு சேர்த்து ’கோச்’ சாக புக் செய்யும். ஷாஸ்திரி, கோஹ்லி-அனுஷ்கா ஷர்மாவுடன் செல்ஃபீ எடுத்து, அடுத்து இந்தியா விளையாடவிருக்கும் வெஸ்ட் இண்டீஸைச் சுற்றிச்சுற்றி வரலாம்.
தொலையட்டும், விடுங்கள். இந்த உலகக்கோப்பையை யார் வெல்வார்கள்? ஆஸ்திரேலியாவை அடித்து வீழ்த்தி, ஃபைனலில் நுழைந்த இங்கிலாந்தா? இந்தியாவை வெளியேற்றிய நியூஸிலாந்தா? பெரும் கேள்வி இது. கிட்டத்தட்ட தன் கையில் கப் வந்துவிட்டதுபோல் இங்கிலாந்து மிதக்க ஆரம்பித்துவிட்டது.. Tomorrow is another day என்கிற சொல்வழக்கை அது மறந்துவிட்டிருக்கலாம்!
விளையாட்டில் எதிர்கால வெற்றிகளை கணிக்க, ஜோதிடமாய் சொல்ல முடியுமா? கால்பந்திற்கும் அமானுஷ்ய கணித்தலுக்கும் தொடர்பு இருந்திருக்கிறது. 2010-ல் நடந்த கால்பந்து உலகக்கோப்பையின் வெற்றி அணியாக, ஸ்பெய்னை சரியாகக் கணித்தது ஒரு ஆக்டோபஸ் (Paul, the Octopus). இப்படி கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு எந்த ஆக்டோபஸும் கிடைக்கவில்லைதான். பார்படோஸ் (Barbados), வெஸ்ட் இண்டீஸில் பிறந்து இப்போது இங்கிலாந்துக்காக வேகப்பந்துவீசும் ஜோஃப்ரா ஆர்ச்சர், கொஞ்சம் அமானுஷ்ய சக்தி உடையவர்போல் தெரிகிறது. 2014-15-ல் அவர் போட்ட சில ட்வீட்டுகள் இந்த உலகக்கோப்பை நடப்புகளைக் குறிப்பவையாகத் தோன்றுகின்றன. இந்த விஷயத்தில், மேலும் ஆராய்ச்சி தேவை!ஆனால் நடப்பு கிரிக்கெட் உலகக்கோப்பையில் என்ன நடக்கும் என்பதை சிலர் முன்னரே கூற முற்பட்டிருக்கிறார்கள்.

இந்தியாவின் செமிஃபைனல் வெளியேற்றத்துக்குப் பின், ஒரு வாட்ஸ்ப் வலம் வந்துகொண்டிருக்கிறது. பெரும்பாலானோர் பார்த்திருக்கலாம். அதில் ஒரு ஜோதிடர். வழக்கமான அதிபிரகாச வீபூதிப்பட்டை, குங்குமம், நாமம், இத்தியாதிகள் அலங்கரிக்காத முகம். இளைஞர். ’புதுயுகம்’ சேனலில், இந்த வருட ஆரம்பத்தில் வந்த நிகழ்ச்சி. ஒரு பெண் அவரைக் கேட்கிறார் உலகக்கோப்பை பற்றி சில கேள்விகள். பதிலாக, அந்த இளம் ஜோதிடர் நிதானமாக, செமிஃபைனலில் நுழையவிருக்கும் அணிகளின் பெயர்களை சரியாகக் குறிப்பிடுகிறார். மேலும் சொல்லியிருக்கிறார். இங்கேதான் கவனிக்கவேண்டிய விஷயம் இருக்கிறது. ’இந்த முறை ஒரு புதிய அணிதான் உலகக்கோப்பையை வெல்லும்’. அதாவது, இதுவரை கோப்பையை வென்றிராத அணி. அப்படிப் பார்த்தால், ஏற்கனவே இது உண்மையாகிவிட்டது. இதுவரை உலகக்கோப்பையை ஒருமுறைகூடத் தொட்டுப் பார்த்திராத இங்கிலாந்தும், நியூஸிலாந்தும்தான் இறுதிப்போட்டிக்காக (14/7/19) ஆயத்தமாகி நிற்கின்றன. கூடவே அந்த இளைஞர் சொல்கிறார்: கிரகங்களின் போக்குப்படிதான் எல்லாம் என்றாலும், ‘ ’என்னோட ப்ரடிக்ஷன் – நியூஸிலாந்து டைட்டில் வின்னர்!’ (உலகக்கோப்பையை வெல்லும்) என்றிருக்கிறார். சரி, இதோடு விட்டாரா மனுஷன்? ’கேன் வில்லியம்ஸன் (நியூஸிலாந்தின் கேப்டன்)தான் ‘Man of the series’ என்றுவேறு சொல்லியிருக்கிறாரே.. அப்படியென்றால், வில்லியம்சன் ஃபைனலில் அடித்து நொறுக்குவாரோ? என்னப்பா இது, அசகாய சூரராக இருப்பார் போலிருக்கிறதே இந்த ஹாசன்? (நடந்துமுடிந்த லோக்சபா, அசெம்ப்ளி தேர்தல் முடிவுகள்- குறிப்பாக ஸ்டாலின்பற்றி- முன்கூட்டியே இவர் ’குறி’ சொன்னதாகத் தெரிகிறது).
யார் இந்த மனிதர், ஊர்? பேர்? கூகிள்ஸ்வாமி புண்ணியத்தால் கொஞ்சம் தெரிந்தது. நம்ப சேலத்துக்காரர். பெயர்: பாலாஜி ஹாசன். நாளை இரவு ’காட்டி’விடும் – பாலாஜி சரியாகத்தான் சொன்னாரா இல்லையா என்று. ஒருவேளை உலகக்கோப்பைக்குப் பின், பாலாஜி ஹாசன் புகழ், பன்மடங்கு பெருகுமோ, என்னவோ?
**
பாலாஜி ஹாசன்! நம்ம கமலஹாஸனுக்கு உறவா? அந்த வீடியோ நானும் பார்த்து ஆச்சர்யப்பட்டேன்.
LikeLiked by 1 person
@ ஸ்ரீராம்:
கமல் ஹாசனுக்கு உறவா! அப்படியென்றால் குழப்பம்தானே மிஞ்சவேண்டும்? இங்கே இவர் bull’s eye -ஆக அடிக்கப்பார்க்கிறாரே!
LikeLike
ஏகாந்தன் அண்ணா நானும் அந்த ஜோஸ்ய வீடியோ பார்த்தேன் வாட்சப்பில் வலம் வந்தது தேர்தல் குறித்தும். கொஞ்சம் ஆச்சரியம்தான். கிரிக்கெட் குறித்தும். நான் சும்மா இணையத்தில் செய்தி பார்த்ததுதான்… ஆனால் இங்கிலாந்து வென்றிருக்கிற்து அவர் தனிப்பட்ட ப்ரெடிக்ஷன் படி கிவ்வி வெல்லவில்லை இல்லையா?
கீதா
LikeLiked by 1 person
@ கீதா:
வாங்க.. ரொம்ப நாள் ஆச்சு!
பாலாஜி ஹாசன் கிரிக்கெட் பற்றி ஜனவரி 19-ல் சொல்லி இருக்கிறார். ஆனால், செமிஃபைனலில் இந்தியா நியூஸிலாந்திடம் தோற்றபின் தான் இவரது வார்த்தைகளுக்கு மீடியா மதிப்பு கொடுத்து கவனிக்க ஆரம்பித்தது. அவர் கிட்டத்தட்ட எல்லாமே சரியாக சொல்லிவிட்டார் என்றே நினைக்கிறேன்.
1. செமிஃபைனலில் வரப்போகும் 4 அணிகளை மிகச் சரியாகச் சொன்னார். கிரிக்கெட் தெரிந்தவர்களும், தீவிர ரசிகர்களும் இந்த நான்கில், பாகிஸ்தான் அல்லது தென்னாப்பிரிக்கா இருக்கும் எனவே சொல்லி இருப்பார்கள். இந்த இரண்டு நாடுகளைப்பற்றி அவர் குறிப்பிடவே இல்லை. இவை இரண்டும் அட்ரஸ் இழந்து ஓடிவிட்டன.
2. ஃபைனலில் இங்கிலாந்து, நியூஸிலாந்து என்றார். மிகச் சரியாக வந்தது. கவனியுங்கள்: அவர் சொன்னது ஜனவரியில். அப்போது ஆஸ்திரேலியா இந்தியா இல்லாத ஃபைனலை ஒருவரும் நம்பியிருக்கமாட்டார்கள்.
3. இந்த முறை ஒரு புதிய அணியே வெல்லும் என்றார். அதாவது இதுவரை கோப்பையை ஜெயித்திராத அணி. இங்கிலாந்தோ, நியூஸிலாந்தோ..என இழுக்கிறார். பிறகு என்னுடைய ப்ரடிக்ஷன் நியூஸிலாந்து என்கிறார்.
-இங்கேயும் அவர் சரியாகவே சொன்னார்! ஐசிசி கோப்பையை தவறுதலாக இங்கிலாந்துக்குக் கொடுத்துவிட்டது என்றே வல்லுனர்கள், முன்னாள் வீரர்கள் இன்னும் சாடி வருகிறார்கள். Two days ago in NDTV, Mukul Kesavan wrote an article titled : ”No. England did not win the World Cup!”. இணையத்தில் ndtv.com-ல் வாசிக்கலாம். மொத்தத்தில் நியூஸிலாந்து ஜெயித்த கோப்பையை, உல்ட்டா-ஸீதா ரூலை வைத்துக்கொண்டு தங்களது ஃபேவரைட்டான இங்கிலாந்துக்குக் கொடுத்துவிட்டது ஐசிசி.
இப்படி நிறைய எழுதலாம்.
4. ஹாசனின் இன்னுமொரு (ஜனவரியில்) நம்பமுடியாத ப்ரடிக்ஷன். நியூஸி கேப்டன் வில்லியம்சன Man of the (World Cup) Series ஆகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது. உண்மையாகிவிட்டதே!
LikeLike