உலகக்கோப்பையின் ஆரம்பச்சுற்றுப் போட்டிகள் முடிவுக்கு வந்துகொண்டிருக்கின்றன. நேற்றைய சுவாரஸ்யமான போட்டியில் முரண்டுபிடித்த ஆஃப்கானிஸ்தானை, வெஸ்ட் இண்டீஸ் அடக்கி வீழ்த்தியது. கர்ரீபியன் தீவுகளுக்கு ஃப்ளைட் பிடிக்குமுன், வெஸ்ட் இண்டீஸுக்கு ஒரு ஆறுதல் வெற்றி. சனிக்கிழமை இந்தியா, ஸ்ரீலங்காவுடனும், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவுடனும் மோதுகின்றன.
இன்று (5/7/19) பாகிஸ்தான் பங்களாதேஷுடன் மல்லுக்கட்டப்போகிறது. நடப்பு உலகக்கோப்பையில் இரு அணிகளுக்கும் கடைசிப்போட்டியாக அமையவிருப்பது இது. ஆனால், பாகிஸ்தான் ரசிகர்களில் பலர், 9 பாய்ண்ட்டுகளுடன் ஐந்தாவது இடத்திலிருக்கும் தங்கள் அணியின் மீது நம்பிக்கை இழக்கவில்லைபோலும். பாக். ரசிகர்களை விட்டுத்தள்ளுங்கள். அவர்களது பத்திரிக்கைகளும் தீவிர ரசிகர்களிடையே கற்பனையை வளர்த்துவருகின்றன. இங்கிலாந்திடம் அனாவசியமாகத் தோற்று, அதற்கு இரண்டு பாய்ண்ட்டுகளை தாரை வார்த்த இந்தியாவையும் கடுமையாக விமரிசித்து வருகின்றன. பாகிஸ்தானின் பிரபல நாளேடான டான் (Dawn), பாகிஸ்தான் ஒருவேளை, நியூஸிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி செமிஃபைனலில் நுழைந்துவிட்டால், எதிரணிகளால் சமாளிக்கமுடியாத அளவிற்கு அது பயங்கர அணியாக மாறிவிடும் எனக் கூறியிருக்கிறது! பாகிஸ்தானின் கேப்டன் சர்ஃபராஸ் அஹ்மது, தங்கள் அணி செமிஃபைனலில் நுழைவதுபற்றி இப்படிச் சொல்லியிருக்கிறார்: அல்லா உதவிசெய்வாரேயானால் உலகக்கோப்பையில் அதிசயம் நிகழமுடியும் (“..we need to be realistic, but if Allah helps, then miracles can happen” )

இப்படியாகத்தானே.. பாகிஸ்தானில் இன்னும் சூடு கிளம்பிக்கொண்டிருக்கிறது! பாக்.கின் செமிஃபைனல் நுழைவு சாத்தியக்கூறுகள்பற்றி ரசிகர்கள் (பாக். ரசிகர்களும்தான்) ரசமான விளையாட்டில் இறங்கியிருக்கிறார்கள். ட்விட்டர் ஒரே அல்லோலகல்லோலப்படுகிறது.
களத்தில் காட்சி தற்போது இப்படி இருக்கிறது: நாலாவது இடத்தில் 11 பாய்ண்ட்டுகளுடன்இருக்கும் நியூஸிலாந்தை இழுத்துத் தள்ளிவிட, முதலில் பாகிஸ்தான் பங்களாதேஷை வீழ்த்தி 11 பாய்ண்ட்டுகள் பெறவேண்டும். சமப் பாய்ண்ட்டுகள் வந்துவிடும். ஆனால் நியூஸிலாந்தின் NRR (Net Run Rate) பாக்.கைவிட அதிகமாயிற்றே. அதையும் காலிசெய்யவேண்டுமே.. அதனால், பங்களாதேஷை பாக். வென்றால் போதாது. கீழ்க்காணும் சாத்தியக்கூறுகளில் ஒன்றையாவது பயன்படுத்தி பெரிய வித்தியாசத்தில் பங்களாதேஷை வீழ்த்தினால், பாகிஸ்தானின் ரன் -ரேட் நியூஸிலாந்தைவிட அதிகமாகிவிடும். உள்ளே நுழைந்துவிடலாம்:
1) பாகிஸ்தான் இன்றைய மேட்ச்சில் குறைந்தது 400 ரன் அடிக்கவேண்டும். அதுமட்டும் போதாது. பங்களாதேஷை 84 ரன்களுக்குள் நசுக்கித் தூக்கி எறியவேண்டும். 316 ரன்களில் வெற்றி. நியூஸிலாந்தைவிட பாக். ரன்-ரேட் அதிகமாகிவிடும். செமிஃபைனலில் சீட்டு!
2) பாகிஸ்தானால் 350 ரன்தான் எடுக்கமுடியுமா? தோஷமில்லை. பங்களாதேஷை 38 ரன்களில் ஆல்-அவுட் செய்துவிட்டால், 312 ரன் வித்தியாசத்தில் வெற்றி கிடைத்துவிடுமே.. அப்புறம் என்ன, செமிஃபைனல்தான்.
3) ’என்ன, 350, 400 ரன்களா? ரொம்ப ஜாஸ்தியில்லையா?’ – என்கிறதா பாகிஸ்தான்? போனால்போகட்டும். ஒரு கடைசி வாய்ப்பு: 308 ரன்னாவது பங்களாதேஷுக்கு எதிராக எடுத்துவிடட்டும். ஒரே கண்டிஷன்: பங்களாதேஷை ஒரு ரன்கூட எடுக்க, பாகிஸ்தான் விடக்கூடாது. அதாவது 0-வில் ஆல்-அவுட். சரிதானே! பாக். வந்துடுமே செமிஃபைனல்ல!
ஆனால் இதிலும் ஒரு பயங்கரம்: பங்களாதேஷ் டாஸ் வென்று முதலில் பேட்(bat) செய்தால், பாகிஸ்தானுக்கு சங்குதான்..
Fazal Amin தென்னாப்பிரிக்காவிலிருந்து இப்படி ட்வீட்டிக் கலக்குகிறார்: What if Sarfaraz wins the toss and decides to bowl first !
**
Picture courtesy : Google
மிகுந்த சுவாரஸ்யமான கணக்குகள். சிரிப்பை வரவழைக்கின்றன. ஆனால் ஓரிரு சமயங்களில் இந்தியாவும் இதே போன்ற நிலைகளில் இருந்திருக்கிறது.
LikeLiked by 1 person
@ ஸ்ரீராம் : இந்தியாவுக்கு சில நெருக்கடி நிகழ்வுகள் நடந்திருக்கின்றன- குறிப்பாக 2007-ல் மகா அவமானம்.. பர்முடாவிடம்தான் நாம் ஹீரோ எனக் காண்பித்தோம்! ராகுல் திராவிட் கேப்டன் என்பதைவிடவும் நமக்கு க்ரெக் சேப்பல் என்றொரு வில்லன் கோச்சாக இருந்தான்!
LikeLike
மேட்ச் எல்லோரும் பார்கணும் என்பதற்காக அவிழ்த்துவிடப்படும் கட்டுக்கதைகள் இவை.
எப்படியும் போன மேட்சில் இந்தியா வெற்றிபெறும் என்ற பெரும் நம்பிக்கையோடு இருந்தது பாகிஸ்தான்.
அல்லா ஒருவேளை பங்களாதேஷுக்கு உதவி செய்யத் தீர்மானித்துவிட்டால்? Actually Bangaladesh deserves. Their talent was exceptional.
LikeLiked by 1 person
@ நெல்லைத்தமிழன்:
பாகிஸ்தான் வென்ற இங்கிலாந்திடம் நாம் அசட்டுத்தனமாகத் தோற்றோம்! இந்தக் கோப்பைத் தொடரில் பங்களாதேஷ் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காண்பித்திருக்கிறது. சற்றுமுன்கூட முஸ்தாஃபிசுர் ரஹ்மான் பாக்.கிற்கெதிராக 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்திய துணைக்கண்டத்தில் பங்களா ஒரு வலிமையான டீமாக உருவெடுத்துள்ளது.
LikeLike