உலக்கோப்பை கிரிக்கெட்: ஆஃப்கானிஸ்தான் எடுத்த பாடம் !

இங்கிலாந்தின் சௌத்தாம்ப்டனில் 22 ஜூனில் நடந்த உலகக்கோப்பைப் போட்டியில் இதுவரை தோற்காத இந்தியாவை, ஒரு ஆட்டு ஆட்டிப் பார்த்தது ஆஃப்கானிஸ்தான்! இந்தியாவைக் கடுமையாக எதிர்கொண்ட உலக்கோப்பையின் கத்துக்குட்டி அணி, கடைசி ஓவர் வரை சவால்விட்டு அசத்தியது.  ஆட்டத்தின் ஒரு கட்டத்தில், இந்திய முகங்கள் வாட ஆரம்பிக்க, ஆஃப்கன் வெற்றியே நிதர்சனம் எனத் தோன்றியது.

ஆஃப்கன் கேப்டன்
குல்பதின் நாயப்
(Gulbadin Naib)

அருமையான பேட்டிங் பிட்ச் என்று வர்ணனையாளர்கள் உளறினார்கள். இந்தியா டாஸ் வென்றதும், முதலில் பேட்செய்தது. பிட்ச்சை சரியாகக் கணித்திருந்த ஆஃப்கானிஸ்தான், நான்கு ஸ்பின்னர்களோடு தைரியமாக இறங்கியது. தனது லெக்-ஸ்பின் கூக்ளி பௌலரான 20-வயது முஜீப்-உர்-ரஹ்மானிடம் ஆரம்பப்பந்தைக் கொடுத்து, இந்தியாவுக்கு மணி அடித்தது. ராஹுல், ரோஹித் கட்டை போட, ரன் வருவதே அரிதாயிருந்தது முதல் ஐந்து ஓவர்களில். ஐந்தாவது ஓவரில் திணறிய ரோஹித்தை அருமையாக ஏமாற்றி, க்ளீன் போல்ட் செய்தார் ரஹ்மான். அதிர்ச்சியைக் காட்டிக்கொள்ளாது இந்தியா ஆட, ரன்கள் சிங்கிள்களில் நடந்தன. முகமது நபி, ரஹ்மத் ஷா, ரஷீத் கான் என மேலும் தரமான ஸ்பின்னர்களைப் போட்டு இந்தியாவைத் தாக்கி நெளியவைத்தார் ஆஃப்கன் கேப்டன் குல்பதின் நாயப் (Gulbadin Naib). விராட் கோஹ்லி ஒருவர் மட்டுமே இந்திய இன்னிங்ஸில் சிறப்பாக ஆடியவர். மற்றவர்கள் ஏகப்பட்ட கஷ்டத்துடன் ரன், ரன்னாக முன்னேற முயன்று வழியிலேயே விழுந்து வெளியேறினர். ராஹுல் 30, விஜய் ஷங்கர் 29, தோனி 28 ஆகியோரின் ஆட்டம், இந்தியாவின் வலிமையையா காண்பித்தது ?

குறிப்பாக விராட் கோஹ்லி விழுந்தவுடன், சீனியரான தோனி சில ஓவர்களில் சார்ஜ் எடுத்துத் தாக்கியிருக்கவேண்டும். செய்யவில்லை. அப்போது களத்திலிருந்த தோனி-கேதார் ஜோடி அடுத்த ஐந்து ஓவர்களில் (31-36) ஒரு பௌண்டரியும் அடிக்கவில்லை.  ரிஸ்க் எடுத்துத் தாக்கவேண்டிய 41-45 ஓவர்களில் ஓவருக்கு 2 ரன் என, தோனி கட்டைபோட்டுக்கொண்டிருந்தது ரசிகர்களுக்கு வெறுப்பேற்றியது. இவருடைய மந்த ஆட்டம் ஜாதவின் ஆட்டத்தையும் குழப்பியது. தோனி அவுட்டாகி, பாண்ட்யா வருகையில் நிலைமை மோசம். உடனடியாகத் தாக்கமுயன்ற பாண்ட்யா, முடியாது வீழ்ந்தார். என்னதான் கஷ்டமான பிட்ச் எனினும், 250-ஐ இந்திய ஸ்கோர் தாண்டியிருக்கவேண்டும். ம்ஹூம். ஜாதவ் போராடி அரைசதம் எடுத்திருக்காவிட்டால், இந்தியா 190-ஐக்கூடத் தாண்டியிருக்காது. இந்திய மிடில் ஆர்டரை ஒரேயடியாக நெருக்கி, நிலைகுலையவைத்ததில் ஆஃப்கன் ஸ்பின்னர்களுக்கு அபார வெற்றி.

ஆஃப்கானிஸ்தான் நிதானமாக,அவ்வப்போது தூக்கி அடித்து இலக்கை(225) நோக்கி முன்னேறியது. கேப்டன் குல்பதீன் நாயபும் ரஹ்மத் ஷாவும் சிறப்பாக ஆடினர். நிலைமை சீராக சென்றுகொண்டிருக்கையில், 29-ஆவது ஓவரை வீசிய ஜஸ்ப்ரித் பும்ரா, ரஹ்மத் ஷாவையும், ஹஷ்மதுல்லா ஷஹீதியையும் அடுத்தடுத்து சாய்த்துவிட்டார். ஆஃப்கன் அணி தள்ளாடியது. கீழ்வரிசை பேட்ஸ்மன்கள் ஒவ்வொருவராக தொடர்ந்து விழுந்துகொண்டிருக்க, ஆல்ரவுண்டர் முகமது நபி, ஆஃப்கானிஸ்தானின் ஹீரோவென அபாரமாக ஆடி, போட்டியை இறுதி ஓவர் த்ரில்லுக்குத் தூக்கிச்சென்றார்.

கடைசி இரண்டு ஓவர்களில் ஆஃப்கானிஸ்தான் வெற்றிக்கு 21 ரன்கள் மட்டுமே தேவை என்கிற நிலையில் இந்தியா முகம் வெளுத்துப்போயிருந்தது. 49 ஆவது ஓவரை வீச, டெத்-ஓவர் ஸ்பெஷலிஸ்ட்  பும்ராவிடம் பந்தைக் கொடுத்தார் கோஹ்லி.  ஐந்தே ரன்கள்தான் கொடுத்தார் பும்ரா. யார்க்கர் மேல் யார்க்கராக வீசி, நபியைக் கட்டிப்போட்டுவிட்டார். இந்த ஓவர்தான் இந்தியாவை வெற்றியை நோக்கித் திருப்பிவிட்டது. கடைசி ஓவரில் 16 ரன் எடுத்தால் ஆஃப்கன் வெற்றி. முதல் பந்திலேயே நபிக்கு பௌண்டரியைத் தாரை வார்த்தார் முகமது ஷமி. பும்ராவுக்கும், ஷமிக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் என வர்ணனையாளர்கள் முணுமுணுக்கிறார்கள். 5 பந்துகளில் இப்போது 12 ரன்களே தேவை ஆஃப்கானிஸ்தானுக்கு. ஆஃப்கன் ரசிகர்கள் ஆகாசத்துக்கும் விண்ணுக்குமாக இருந்தார்கள். இந்திய ராஜாவைப்போல் வேஷமிட்டு வந்திருந்த கணவனோடு அமர்ந்திருந்த ஒரு இந்திய ரசிகை அழ ஆரம்பித்துவிட்டார்! ஷமியின் அடுத்த பந்தை நபி நேராக மேலேத் தூக்கினார்.. பௌண்டரிக்கு முன் ஓடிவந்த பாண்ட்யா லாவகமாக லபக்கிவிட்டார்! முகமது ஷமியிடம் முகமது நபி காலி!  அவர் சேர்த்தது 52 ரன்கள். இந்தியாவுக்கு மூச்சு திரும்பவந்தது. அடுத்து நடந்தது அதை விட ஆச்சரியம். கடைசி ஓவரின் 4 ஆவது 5 ஆவது பந்துகளில் பாதத்தை நொறுக்கும் யார்க்கர்களை வீசி, அடுத்தடுத்து 2 ஆஃப்கன் விக்கெட்டுகளை க்ளீன் -போல்ட்  செய்தார் ஷமி. இந்த உலகக்கோப்பையில், தன் முதல் மேட்ச்சிலேயே ஹேட்ரிக்.  வார்ரே… வா..! ஷமி.. நீ ஒரு கில்லாடி! 11 ரன்களில் இந்தியாவின் ஜெயம். கோஹ்லிக்கு நிம்மதி.

ஆனால், முழு ஆட்டத்தையும் பார்த்த, கிரிக்கெட் தெரிந்தவர்களுக்குப் புரிந்திருக்கும் – ஜெயித்திருக்கவேண்டிய அணி.. ஆஃப்கானிஸ்தான்!

ஒரு ஸ்லோ பிட்ச்சில் இந்தியாவைப் புரட்டி, நன்றாகப் பாடம் எடுத்து அனுப்பியிருக்கிறது ஆஃப்கானிஸ்தான். எதிரணியில் தரமான ஸ்பின்னர்கள் பந்துபோட்டால், சமாளித்து ரன் விகிதத்தை உயர்த்த இந்திய மிடில்-ஆர்டர் பேட்ஸ்மன்கள் தடவுகிறார்கள் என்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. ஷகீப்-உல்-ஹசன்  red-hot form-ல் இருக்கும் பங்களாதேஷுக்கு எதிராக ஒரு போட்டி இந்தியாவுக்கு இருக்கிறது.. அவர்களிடம் ஹசனைத் தாண்டியும், மெஹ்தி ஹாசன், மொஸாதெக் ஹுசேன் ஆகிய ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள்.

**

Advertisements

6 thoughts on “உலக்கோப்பை கிரிக்கெட்: ஆஃப்கானிஸ்தான் எடுத்த பாடம் !

  1. Seen

    On Mon, 24 Jun 2019, 11:54 am ஏகாந்தன் Aekaanthan, wrote:

    > Aekaanthan posted: “இங்கிலாந்தின் சௌத்தாம்ப்டனில் 22 ஜூனில் நடந்த..

    Like

  2. என்ன இப்படி பொசுக்குன்னு எழுதிட்டீங்க.

    இந்திய அணி, 6+ இடத்திலிருக்கும் அணிகள் மோசமல்ல, அவங்களும் வலிமையானவங்கதான் என்று காட்ட முனைந்தது.

    ஸ்ரீலங்கா, வலிமையான பங்களாதேஷ் – இவங்க இருவரிடமும் இந்தியா மோசமாக விளையாடும் என்று என் மனசுக்குத் தோணுது. தவான் மிக முக்கியமானவர் என்று காட்டிவிட்டார். தட்டுத் தடுமாறி ப்ளே ஆஃப்க்கு இந்தியா போகுமா?

    Liked by 1 person

    1. @ நெல்லைத் தமிழன்:

      தவன் உலகக்கோப்பைக் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடுபவர். நல்ல சராசரி உள்ள பேட்ஸ்மன். அவருடையது இந்தியாவுக்கு இழப்புதான். ராஹுலின் பேட்டிங் மோசமில்லை என்பதும் ஒரு ஆறுதல். தோனியை ஒரேயடியாக நம்புவது சரியல்ல.

      இந்தியா, இனிவரும் மேட்ச்சுகளில் 4-ல் 2-ஐயாவது ஜெயித்தால்தான் செமிஃபைனல் ஸ்பாட். இல்லாவிட்டால், ஃப்ளைட் பிடிக்கவேண்டியதுதான்.

      Like

  3. கேதார் ஜாதவ் இன்னும் காயத்திலிருந்து மீளவில்லையோ என்னவோ… அவர் ஆடிய இரண்டு ஆட்டங்களும் தண்டம்.ராகுல் பொறுப்பற்ற முறையில் அவுட் ஆனார். நேற்று அதே பிட்சில் பங்களாதேஷ் விளையாடி எப்படி எடுத்திருக்கிறார்கள் பாருங்கள் – அதே அணிக்கெதிராக…

    Like

    1. @ Sriram:
      பங்களாதேஷ் கடுமையாக ஆடிவருகிறது. அதற்கெதிரான நமது ஆட்டம் கவனமாக இருக்கவேண்டும். முதலில் நாளைய வெஸ்ட் இண்டீஸைக் கவனிப்போம்! தோனியை உட்காரவைத்து கார்த்திக்கை சேர்க்கலாம். செய்யமாட்டார்கள்!

      Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s