இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் : நீயா? நானா?

 

இங்கிலாந்தின் மேன்செஸ்டரில் (Old Trafford, Manchester) இன்று (16-6-19) நடக்கவிருக்கும் போட்டி, இந்த உலகக்கோப்பையின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்று.  சுமார் 1.5 billion ரசிகர்கள் உலகெங்குமிருந்தும் இந்தப் போட்டியைப் பார்க்க இருக்கிறார்கள் என்கிறது ஒரு மதிப்பீடு.  இத்தனை பெரிய ரசிகர்கூட்டம் வேறெந்த கிரிக்கெட் போட்டிக்கும் அமைய வாய்ப்பில்லை! இருநாட்டு ரசிகர்களும் சில இரவுகளாகவே தூக்கத்தை விட்டுவிட்டு கைகளில் கொடி, முகத்தில் வர்ணம், மனமெலாம் ஏக்கமென வலம் வந்துகொண்டிருப்பார்கள். ஐசிசி-க்கும் ஒரே ஆனந்தம்- இந்திய, பாக் வம்சாவளியினர் அதிகம் வசிக்கும் மேன்செஸ்டரில் இதற்காகத்தானே மேட்ச் வைத்திருக்கிறார்கள்? வருமானம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டுமே.. பார்த்துப் பார்த்துத்தான் இந்த ஞாயிறு ’ஸ்லாட்’டும் கொடுக்கப்பட்டுள்ளது இந்தப் போட்டிக்கு. ஆனால் மேலே ஒருவர் இருக்கிறார் – வருணதேவன்! இதுவரை நாலைந்து மேட்ச்சுகளைக் காலிசெய்துவிட்ட தேவாதி தேவன்! இன்றைய கதைக்கு எந்தமாதிரி கட்டம் போட்டுவைத்திருக்கிறாரோ, தெரியவில்லையே..

உலகக்கோப்பை போட்டிகளில் இதுவரை இந்தியாவும் பாகிஸ்தானும்  6 முறை சந்தித்திருக்கின்றன. அனைத்திலும் இந்தியா பாகிஸ்தானைத் தோற்கடித்திருக்கிறது. இது ஏதோ, தற்செயலாக நடந்ததல்ல. இப்படி தொடர்வெற்றிகளை வேறெந்த நாடும் தன்னுடைய பரம வைரிக்கெதிராக (உதாரணம்: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து), நிகழ்த்தியதில்லை. மெச்சத்தக்க இந்திய வெற்றிகள் இவை.

2017-ல் இங்கிலாந்தில் நடந்த ‘சேம்பியன்ஸ் ட்ராஃபி’யில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியது.  அந்தப் போட்டியில் இந்தியா காண்பித்த மோசமான, பொறுப்பற்ற ஆட்டம் காரணமாக, கோபமுற்ற இந்திய கோச் அனில் கும்ப்ளே சில இந்திய வீரர்களைக் கூப்பிட்டுக் கண்டிக்கப்போய், அது கேப்டன் கோஹ்லிக்குப் பிடிக்காமல் போக, கும்ப்ளே தன் கோச் பதவியை விட்டு விலக நேர்ந்தது.   அந்த எளிதான வெற்றியை பாகிஸ்தான் மனதில் நினைத்து மகிழ்ந்து, உலகக்கோப்பையிலும் அது தொடரவேண்டும் என ஏங்குகிறது. அதன் ரிபீட்டைத்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டும், ரசிகர்களும் இன்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

பாகிஸ்தானி வீரர்களில் ஹாரிஸ் ஸோஹைல் மற்றும் ஆசிஃப் அலி மட்டுமே, தனிப்பட்ட காரணங்களுக்காக,  தங்களது மனைவிகளை உலகக்கோப்பையின்போது இங்கிலாந்துக்கு அழைத்துவர பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டினால் அனுமதிக்கப்பட்டவர்கள். மற்றவர்களும் தங்களின் மனைவிகளை இங்கிலாந்துக்கு அழைத்துவர போர்டின் அனுமதியைக் கேட்டனர். பாக். போர்டின் ’இன்ஃபார்மலான பதில்’ இப்படி இருந்திருக்கிறது: ’முதலில் ஜூன் 16-ல் இந்தியாவுக்கெதிராக விளையாடி ரிசல்ட்டைக் காண்பியுங்கள். பிறகு மனைவிமார்களின் கதையைப் பேசுவோம்!’

இந்திய வீரர் கிரன் மோரேயின் மீது பாயும் பாகிஸ்தானின் ஜேவத் மியாண்டாட் (உலகக்கோப்பை 1992)

இந்தியாவை வீழ்த்துவதுபற்றி ரசிகர்களிடமிருந்து மட்டுமல்லாமல் மீடியா, கிரிக்கெட் போர்டு என எல்லா திசைகளிலும் துடிக்கிறது பாகிஸ்தான்! இந்தியாவை ஜெயிப்பது, உலகக்கோப்பையை வெல்வதை விடவும் முக்கியம் என்று பச்சையாகவே சொல்லிவிட்டார் முன்னாள்வீரரும், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைமை செலக்டருமான இன்ஸமாம்-உல்-ஹக்.

இந்தியா விளையாடும் மைதானங்களிலெல்லாம் படையெடுக்கும் ’பாரத் ஆர்மி’ உட்பட, இந்திய ரசிகர்களில் பலரும் பாகிஸ்தான் விஷயத்தில் கிட்டத்தட்ட ஒரு வெறியோடுதான் திரிகிறார்கள்!. ’ஜெயிக்க வேண்டும் என்கிற உத்வேகத்தில் விளையாடினாலும், இது எங்களுக்கு இன்னுமொரு போட்டிதான்!’ -என்ற இந்தியக் கேப்டன் விராட் கோஹ்லி, ’இது ஒரு marquee event! எங்களிடமிருந்து உச்சபட்ச திறமையை இந்தப் போட்டி வெளிக்கொணரும்..’ என்றும் சொல்லியிருக்கிறார். அணித் தேர்விலிருந்து, போட்டியின் ஒவ்வொரு கட்டத்திலும் அழுத்தம் வீரர்களின்மீது சற்றுக் கூடுதலாக இருக்கத்தான் செய்யும். இந்தியா பாகிஸ்தான் எல்லைக்கு இருபுறத்திலிருந்தும் கோடிக்கணக்கானோர் காட்டும் ஹைப்பர் எமோஷன் -தான் இதற்குக் காரணம். ஒன்றும் செய்வதற்கில்லை. Lets enjoy !

பாகிஸ்தான் தரப்பிலிருந்து பேட்ஸ்மன்கள் ஃபக்ர் ஜமன், இமாம்-உல்-ஹக், பாபர் ஆஸம், முகமது ஹஃபீஸ் முக்கியமானவர்கள். பௌலிங்கில் வேகப்புலி முகமது ஆமீர் இந்தியாவுக்கு சவாலாக இருப்பார்.

ஷிகர் தவன் காயம் காரணமாக ஆடமுடியாத நிலையில், ரோஹித் ஷர்மாவுடன் கே.எல்.ராஹுல் ஆட்டத்தைத் துவக்குவார் என்பது நிச்சயம். நான்காவது இடத்தில் யார் என்பது இந்தியாவின் இன்றைய பெரிய கேள்வி! விஜய் ஷங்கர் அல்லது தினேஷ் கார்த்திக் எனப் பெயர்கள் அடிபடுகின்றன. ஷங்கரைவிட கார்த்திக்கிற்கு சர்வதேசப்போட்டிகளின் அனுபவம், மற்றும் big match temperament உண்டு. கவனிக்கப்படவேண்டிய விஷயம் இது. ரவீந்திர ஜடேஜா அவருடைய அதிரடி பேட்டிங், இடதுகை ஸ்பின் பௌலிங்கிற்காக இணைக்கப்பட ஒரு ‘outside chance’ தெரிகிறது. ஒருவேளை, வெள்ளிக்கிழமைதான் இங்கிலாந்து வந்துசேர்ந்த ’இளம்புயல்’  ரிஷப் பந்த்-ஐ, நேரடியாக அணியில் 4-ஆம் இடத்தில் போட்டுவிடுவார்களோ! ரிஷப் பந்த் மிடில்-ஆர்டரில் உள்ளே புகுந்து பாக் பௌலர்களைத் துரத்தித் தாக்கினால், அதைவிட ரசிகர்களுக்குக் குஷி ஏதுமில்லை. ஹர்தீக் பாண்ட்யா, தோனி போன்றோரிடமிருந்தும் இத்தகைய எதிர்பார்ப்புகள் எகிறுகின்றன. பும்ரா, புவனேஷ்வர், சாஹல், குல்தீப் ஆகிய இந்திய பௌலர்கள், பாகிஸ்தானை சாய்க்க ஏதாவது வியூகம் வைத்திருப்பார்கள்.

இன்னும் சிலமணிநேரங்களில் ஆட்டத்தின் போக்கு தெரிய ஆரம்பிக்கும்.  இருதரப்பு ரசிகர்களே, நிதானம்! வெடிகள் ரெடி !

**

Advertisements

2 thoughts on “இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் : நீயா? நானா?

  1. ஒரு கிரிக்கட் போட்டியை ஏதோ இரு தேச போர் போல சித்தரிப்பது சரியல்ல என்றே தோன்று கிறது எல்லாமே வெறும் ஹைப்தான்

    Liked by 1 person

  2. ஜி எம் பி சார் இந்திய பாக் போட்டிகளின் களநிலவரம் தெரியாது சொல்கிறார் என்று தெரிகிறது! நேற்று ஆட்டத்தில் நாம் ஜெயித்து விட்டோம் என்றாலும்..

    ரோஹித் பின்னால் பில்டர் மாற்றப்பட்டதைப்பார்த்திருக்கலாம். கோஹ்லி சுட்டிக் காட்டியும் கவனிக்கத் தவறினார். கே எல் ராகுல் தனது இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள ஆரம்பத்தில் மந்தமான ஆட்டம் ஆடினார். கோஹ்லி கேப்டனாயிருந்தும் பொறுப்பற்று அவுட்டே இல்லை என்றாலும் தானாக வெளியேறினார். விஜய்சங்கர் நிறைய பந்துகள் வீணடித்தார். தினேஷ் கார்த்திக் எடுத்திருக்கலாம் என்கிற எண்ணம் வந்தது. ஆனால் விச தான் பௌலிங்கில் பிரேக் கொடுத்தார்! மழை குறுக்கிட்டிருக்கா விட்டாலும் நேற்று இந்தியா ஜெயித்திருக்கும்.

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s