கிரிக்கெட் உலகக்கோப்பை: முஷ்டியை உயர்த்திய இந்தியா !

நேற்று (09-06-19) லண்டனின் ஓவல் மைதானத்தில் ஒரு  high-scoring மேட்ச்சில்,  36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா, ஆஸ்திரேலியாவைத் தூக்கி வீசியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி, கடுமையாகவே அமைந்தது. சில சிறப்பு அம்சங்களை மட்டும் கவனிக்கலாம்.

இந்தியா முதலில் பேட் செய்கையில், அதிகவனமாக ஆரம்பித்தது. முதல் பவர் ப்ளேயில் (10 ஓவர்கள்) விக்கெட் இழக்காமல், ஒரு அஸ்திவாரம் அமைத்துக்கொண்டு, பிறகு தாக்கலாம் என்பது வியூகம். நேற்று இந்தியாவின் நாள் – வியூகம் க்ளிக் ஆனது! ரோஹித், விராத் கோலி அரைசதங்கள், தவன் சதம் என அமர்க்களமாக இருந்தாலும் கடைசி 10 ஓவர்களை நெருங்குகையில் பேட்டிங் இன்னும் வேகமெடுத்தாலொழிய சரியான இலக்கை எதிரிக்குக் கொடுக்கமுடியாது என்கிற எண்ணம் கோஹ்லியின் மனதில் அரித்துக்கொண்டிருந்திருக்கவேண்டும்.

Hardik Pandya

37-ஆவது ஓவரில் ஷிகர் தவன் விழுந்தவுடன், கே எல். ராஹுல் வந்திருக்கவேண்டும். பெரிதும் பேசப்பட்ட 4-ஆம் எண் ஆட்டக்காரரின் நிலையில் ஹர்தீக் பாண்ட்யாவை அழைத்தார் கோஹ்லி. பௌலரைப்பற்றி சிந்திக்காமல், இறங்கியவுடன் விளாசும் தன்மைவாய்ந்த உலகின் மிகச் சில வீரர்களுள் பாண்ட்யாவும் ஒருவர். A freakish streak in him all the time.. கோஹ்லி எதிர்த்திசையில் ஆடிக்கொண்டிருக்க, சில பந்துகளிலேயே வெடித்தார் பாண்ட்யா. ஆஸ்திரேலியாவின் நேற்றைய சிறந்த பௌலரான கம்மின்ஸை (Pat Cummins) ஏறிவந்து, அவருடைய தலைக்குமேலே சிக்ஸர் தூக்கியும், ஆஃப் சைடில் பௌண்டரி  விளாசிய விதமும் ஆஸ்திரேலியாவை நடுங்கவைத்தது. அவர்கள் காட்டிக்கொள்ளவில்லை என்பது வேறுவிஷயம். 3 சிக்ஸர்கள், 4 பௌண்டரிகளென, வெறும் 27 பந்துகளில் 48 விளாசல். கோஹ்லிக்கும் இந்தியாவுக்கும் அந்த நேரத்தில் அதுதான் தேவையாக இருந்தது. பாண்ட்யாவுக்குப்பின் வந்த எம் எஸ் தோனி தன் பழையபாணியை மறக்கவில்லை. 14 பந்துகளில் 27 ரன்கள் அவரிடமிருந்தும் பறக்க, ஆஸ்திரேலியா பதறியது. இடையிடையே விக்கெட்டுகள், கோஹ்லி உட்பட விழுந்தும் இந்தியா உயர்ந்து எழும்பியது. 352 என இந்தியா ஸ்கோரை முடித்துக்கொண்டு, ’வந்து விளையாடிக் காமிங்கடா பாக்கலாம்! –  என்றது ஆஸ்திரேலியாவை!

அதிரடிக்குப் பேர்போன டேவிட் வார்னர், அரைசதம் கடந்தாலும், மிக மந்தமான பேட்டிங் செய்து கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமரிசகர்களைக் கடுப்பேற்றினார். அதிரடியாவது, மண்ணாவது,  விட்டால்போதும் என்றாகிவிட்டது, ஃபின்ச் (Aaron Finch), கவாஜா, மேக்ஸ்வெல் போன்ற ஒவ்வொரு ஆஸ்திரேலிய ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மனுக்கும். நின்று ஆடி ரன் சேர்த்த ஸ்டீவ் ஸ்மித்,  69 எடுத்து அவுட் ஆகையில் ஆஸ்திரேலியாவுக்கு ஏறவேண்டிய மலையுச்சி உயரத்தில் மிக உயரத்தில் தெரிந்து பயமுறுத்தியது. புவனேஷ்வர், சாஹல், குல்தீப் என இந்திய பௌலர்களுக்கு வேகமாக விக்கெட் விழவில்லை என்றாலும், ஆஸ்திரேலியாவைத் துள்ள  விடவில்லை. கடும் கட்டுப்பாட்டில் ஆஸ்திரேலிய அதிரடிகளை அழுத்திவைத்திருந்தார்கள். வெஸ்ட் இண்டீஸுக்கெதிராக ஒரேயடியாக ஆட்டம்போட்ட நேத்தன் கூல்ட்டர் நைலை (Nathan Coulter-Nile), 9 பந்துகளில் கழுத்தை  நெறித்து வெளியேற்றினார்  பும்ரா (Jasprit Bumrah). எதிர்பாராதவிதமாக, ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கரே (Alex Carey) 35 பந்துகளில் 55 எனத் தூள்கிளப்பினார். அதைத்தவிர,  ஆஸ்திரேலியாவிடம் அவிழ்த்துவிட வேறொன்றுமில்லை. டெத் ஓவர்களை (death overs) பும்ராவும், புவனேஷ்வரும் அபாரமாக வீச (49-ஆவது ஓவரில் பும்ரா கொடுத்தது ஒரு ரன் – அதுவும் தோனியின் மிஸ்ஃபீல்டிங்கினால் விளைந்தது!), அழுத்தம் உச்சத்தைத் தொட, விக்கெட்டுகள் நொறுங்கின. ஆஸ்திரேலியாவின் தவிர்க்கமுடியாத தோல்வி. நீலத்திற்கு முன், மஞ்சளினால் ஆட்டம் காண்பிக்க முடியவில்லை. ரிஸல்ட்!

சில சுவாரஸ்யங்கள்:

1. Ball tampering கேஸில் மாட்டி, ஒருவருட ban-ற்குப்பின் ஆட வந்திருக்கும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பௌண்டரி எல்லையில் ஃபீல்ட் செய்துகொண்டிருக்கையில் இந்திய ரசிகர்களின் ஒரு குழு cheat ! .. cheat ! எனக் கூச்சலிட்டு கலவரப்படுத்தினர். இந்தியக் கேப்டன் கோஹ்லி தன் ஜெர்ஸியைக் காண்பித்து ’எங்களை ஆதரித்துக் கோஷமிடுங்கள். அவரைத் தொந்திரவு செய்யவேண்டாம்’ என ரசிகர்களை நோக்கி சைகை செய்தும், ரசிகர்கள் நிறுத்தவில்லை. ஆட்டம் முடிந்தபின் இந்திய ரசிகர்களின் இந்த செய்கைக்காகத் தான் மன்னிப்பு கேட்பதாக ஸ்மித்திடம் கூறினார் கோஹ்லி.

2. ஆஸ்திரேலியா பேட் செய்கையில் பும்ரா வீசிய முதல் பந்து டேவிட் வார்னரின் லெக்ஸ்டம்பிற்குக் கிஸ் கொடுத்துச் சென்றது பெய்ல்களுக்கு(bails) அது பிடிக்கவில்லை போலும். கீழே விழவில்லை! வார்னர் தப்பித்தார்.

3. ஆஸ்திரேலிய லெக்-ஸ்பின்னர் ஆடம் ஜாம்ப்பா (Adam Zampa) ஒவ்வொரு முறை பந்துவீசுவதற்கு முன்னும் தன் பேண்ட் பாக்கெட்டுக்குள் கைவிடுவார். பின் பந்தைத் தேய்ப்பார். வீசுவார். பாக்கெட்டுக்குள் என்ன? ரசிகர்கள் சந்தேகப்பட்டார்கள். Ball tempering? (இப்போதுதான் இரண்டு ஆஸ்திரேலியர்கள் ஒருவருட தண்டனைக்குப்பின் ஆடத் திரும்பியிருக்கிறார்கள்). ஆஸ்திரேலிய கேப்டன் Finch விளக்கினார்: ஜாம்ப்பா தன் பாக்கெட்டுக்குள் hand-warmers வைத்திருந்தார். அதைத்தான் தொட்டுக்கொண்டார்! ஜாம்ப்பாவிற்கு விக்கெட் ஏதும் விழாததால், இது இத்தோடு விடப்பட்டது..

ஆயினும் ட்விட்டர்க்காரர்கள் சீறினார்கள். ஒருவர் : Australians were, are and will be cheaters..! இது ரொம்பவே ஓவர். ஆஸ்திரேலியா உலகக்கோப்பையின் வலிமையான அணிகளில் ஒன்று. நாம் ஆட்டத்தில் கவனம் செலுத்துவோம்..

**

8 thoughts on “கிரிக்கெட் உலகக்கோப்பை: முஷ்டியை உயர்த்திய இந்தியா !

  1. என் மகன் வார்னரின் கடுமையான எதிரி! அவனை அவுட் ஆக்காமல் இருந்தால் நாம் ஜெயிப்போம் என்பான். எனக்கு தவான் பிடிக்காது. நேற்று தவான் நன்றாக ஆடிவிட்டதால் பிடிக்கும் என்று ஆகிவிடாது! கோஹ்லி ஸ்மித்தின் நல்லெண்ணத்தைப் பெற்றதில் சந்தோஷம். ஆனாலும் ரசிக்கத்தக்க ஆட்டம் நேற்று.

    Liked by 1 person

  2. @ ஸ்ரீராம்:

    உங்களுக்கு தவண் பிடிக்காது; பையனுக்கு வார்னர் பிடிக்காது! இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவரைப் பிடிக்காதுதான். ஜூன் 16-க்குப் பின், இந்த ’பிடிக்காதது’களின் லிஸ்ட் நீண்டுவிடும்!

    Like

  3. ஏகாந்தன் சார்… ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதால் இந்தியா சிறந்த டீம் என்றாகிவிடாது. கோஹ்லி அளவுக்கு அதிகமாக மெதுவாக விளையாடினாரோ என்ற சந்தேகம் வந்துவிட்டது. மைல்ஸ்டோன்கள் என் இலக்கல்லா என்று காண்பிக்கவே மெதுவாக விளையாடினாரோ?

    கேப்டன் கோஹ்லியிடம் நான் சீரியஸ்னெஸ்ஸைக் காணவில்லை. அசால்டாக பாகிஸ்தானிடம் தோற்றுவிட்டு அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல் இருந்தார். இந்தத் தடவை ப்ளே ஆஃபுக்குப் போவோமா? 2019ன் யுவராஜ் யார்? ரவி சாஸ்திரி கிளீன் போல்ட்தான். உலகக் கோப்பைக்குப் பிறகு ரோஹித் அணித் தலைவர் ஆவார்னு நினைக்கிறேன்.

    Like

    1. @நெல்லைத் தமிழன்:
      ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதால்தான் இந்தியா சிறந்த டீம் என்று யார் சொன்னார்கள்!
      ஐசிசி ரேங்க்படி பார்த்தால், இங்கிலாந்து முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் இருந்தாலும், முதல் ஐந்து ஐசிசி டீம்களில் எந்த ஒரு டீமும் டாப் டீம்தான் அதற்கான நாளில்! எந்த டீம் யாரை என்று காலி செய்யும் என்று யூகிப்பதற்கில்லை. ஐசிசி தரவரிசையில் மூன்றாவது இடத்திலிருக்கும் தென்னாப்பிரிக்கா முதல் மூன்று மேட்ச்சுகளிலும் தோற்றுக்கிடக்கிறதே!

      ரவிசாஸ்திரி – இந்த ஆள் முதலில் இந்தியக் கோச்சாக்கியதே பெரும் தவறு. கோஹ்லிக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு கோஹ்லி அடிக்கும் சில்லி ஜோக்குக்கு எல்லாம் இளித்துக்கொண்டு வருடம் 5 கோடி வாங்கி ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கிறார். போதாக்குறைக்கு ஆங்காங்கே பெண்களுடன் ஃபோட்டோக்கள் வேறு. சகிக்கமுடியவில்லை.

      Like

  4. கிரிக்கட் விளையாட்டில் யார் போட்டி அன்று நன்கு ஆடுகிறார்கள் என்பதே முக்கியம் ஹேஷ்யம் கூற முடியாது

    Like

Leave a comment