நகரமொன்றின் புறநகர்ப் பகுதி. ஒரு மத்திமவயது பெண்மணி மெல்ல நடந்துவருகிறார், நிழல்போல் ஒரு உருவம் தன்னைத் தொடர்வதை கவனிக்காமல். இதோ வந்தாயிற்று. ஏடிஎம்(ATM). யாருமில்லை அக்கம் பக்கம். உள்ளே நுழைந்து பணம் எடுத்து வெளியே வருகிறார். மறைந்திருந்த உருவம் திடீரென எதிரே. கையில் மின்னும் கத்தி
‘கொண்டா இப்படி! சத்தம்கித்தம் போட்டே சொருகிருவேன்!’ பெண் மிரள்கிறார். உயிர் பயம். எடுத்த பணத்தை எதிர்ப்பு ஏதுன்றி, அப்படியே அந்த உருவத்திடம் கொடுத்துவிடுகிறார். உடம்பு நடுங்குகிறது. பணத்தை பறித்தாயிற்று. போகவேண்டியதுதானே. போகவில்லை. உருவம் மேலும் மிரட்டுகிறது. ;போ உள்ளே.. கார்டைப்போட்டு இன்னும் பணம் எடு. கொடு! ஜல்தி.. ம்..!’ அவரைப் பதில் சொல்லவிடவில்லை கத்தியின் மின்னல். உள்ளே போகிறார் அந்தப் பெண். கார்டைப்போட்டு, ஸ்க்ரீனில் விரலால் பாலன்ஸை (‘balance’)-ஐத் தொடுகிறார் நடுங்கிக்கொண்டே. திருடன் ஆவலாய் பார்த்திருக்க, ’பாலன்ஸ் மினிமம். மேற்கொண்டு எடுக்கமுடியாது’ என எச்சரிக்கிறது ஸ்க்ரீன்! அந்தப் பெண்ணுக்கு அவமானமாகவும் இருக்கிறது. திருடன் என்ன சொல்வானோ.. செய்வானோ.. பயம்வேறு. பதற்றத்துடன் முகம் வியர்க்க, திருடன் பக்கம் திரும்புகிறார் அந்தப் பெண்.
‘ஆ! இவ்வளவுதானா உன்னிடம் பணம்? இத்தனை ஏழையா நீ?’ கத்தியை மடக்கி உள்ளே வைத்துக்கொள்கிறான். ’சாரிம்மா! தெரியாமல் தொந்திரவு செஞ்சுட்டேன். இந்தா.. உன் பணம்!’ என்று அவ்வளவு பணத்தையும் அவளிடம் திருப்பிக்கொடுத்தான். அங்கிருந்து நகர்ந்து ஒதுக்குப்புறமாக வேகமெடுக்கிறான் மென்மனத் திருடன்.
ஆனால் அவனுடைய நேரம் காலத்தைப்பற்றி என்ன சொல்ல. கெட்டகாலம். மறைந்திருந்து மோப்பம் பிடித்துக்கொண்டிருந்த போலீஸ், திடீரெனப் பாய்ந்து அவனை லபக்குகிறது. ’ஏய்.. எங்கடா ஓட்றே! பணத்தையும் திருடிட்டு, அந்தப் பொண்ணைக் கொலை செய்யவேறு பார்த்தியா? ஏறு வண்டில..’
’சார்.. திருடப்போனது நெஜந்தான். ஆனா.. ஆனா.. அவங்ககிட்ட பணத்தத் திருப்பிக் கொடுத்துட்டேன்.. என்னிடம் இப்போ ஒன்னுமில்லை.. செக் பண்ணிக்கிங்க சார்.. ப்ளீஸ்..விட்ருங்க.’
’இந்தக் கதையை ஸ்டேஷன்ல வச்சிப்போம். ஏறு.. இப்ப..!’ திருட்டு முயற்சி மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த முயற்சி எனக் குற்றம் சாட்டி அவனை உள்ளே போட்டுவிட்டது சட்டம்.
*
கடந்த வருடம், இன்னுமொரு நகரில்.. படிக்க வந்திருக்கும் ஒரு மாணவி. லேப்டாப்பைத் தொலைத்துவிட்டாள். திருட்டுப்போய்விட்டது. என்ன செய்வதெனத் தெரியாமல் தோழிகளிடம் சொல்லிக் கவலைப்படுகிறாள். அடுத்த நாள் அவளுடைய மெயிலில்:
’சாரி.. நீங்கள் ஒரு மாணவி.. படிக்கத்தான் இங்கே வந்திருக்கிறீர்கள். தெரியும். இருந்தாலும் எனக்கு பணம் அவசியமாகத் தேவைப்படுகிறது. வேறுவழி தெரியவில்லை. அதனால்தான் லேப்டாப்பைத் திருடிவிட்டேன். ஆனால், பணம் வேண்டும் என்பதற்காக ஒரேயடியாக ஆசைப்படவில்லை. உங்கள் வாலட், மொபைல் எல்லாவற்றையும் விட்டுவிட்டேனே.. பார்த்தீர்களா..
உங்களது லேப்டாப்பில் படிப்பு, ப்ராஜெக்ட் சம்பந்தமாக ஏதாவது இருக்கிறதா என்று பார்த்து, அப்படி ஏதேனும் இருந்தால் உங்களது மெயிலுக்கே அனுப்பிவிடுவேன். படிப்பு விஷயத்தில் உங்களுக்குக் கஷ்டம் வரக்கூடாதல்லவா.
மற்றபடி, சிரமத்திற்கு மன்னிக்கவும்.’
என்று வந்திருந்தது லேப்டாப் திருடியவனிடமிருந்து அந்த மெயில்.
’ஒன்னத்துக்கும் நீங்கள் லாயக்கில்லை. திருடியாவது பிழையுங்க.. போய்த் தொலைங்க!’ என்று, மேலே சொன்ன இருவரையும் வாழ்க்கை பின்பக்கம் ஒரு கிக் கொடுத்து விரட்டிவிட்டுவிட்டதுபோலும். முதலாமவன் ஷாங்காய், சீனாவிலிருந்து. இரண்டாமவன் பிரிட்டனின் பர்மிங்காமிலிருந்து. இது ஒரு ரெஃபரென்ஸுக்காக மட்டும்தான். ஊரும், நாடுமா முக்கியம்?
வாழ்க்கை எனும் மாபெரும் வெளியில், திருடிக் காலத்தைக் கழிக்கும்படி நேர்ந்துவிட்டவர்கள் அவர்கள். இருந்தாலும், மனிதர்கள்..
**
திருடனாக இருந்தாலும்…. நல்ல மனம் வாழ்க!
சூழல்கள் பலரை இப்படி தவறு செய்ய வைத்து விடுகிறது.
LikeLiked by 1 person
@ Venkat:
வருகை, கருத்துக்கு நன்றி.
LikeLike
ஹா… ஹா… இப்படியுமா…!
LikeLiked by 1 person
@ திண்டுக்கல் தனபாலன்: ஆச்சரியம் உலகில் அவ்வப்போது நிகழ்வதுதான்!
LikeLike
நம்ம சிரிப்புத் திருடன் சிங்காரவேலு நினைவில் வந்தான்! 🙂
LikeLiked by 1 person
@ கீதா சாம்பசிவம்: அடடே! மதனின் சிருஷ்டி ஞாபகம் வருகிறதா!
LikeLike
நல்ல திருடர்கள்
LikeLiked by 1 person
@ ஜி.எம்.பாலசுப்ரமணியம்: ஆமாம்..!
LikeLike
சுவாரஸ்யம்தான்.
இது போல நான் ஒரு செய்திக் கதை போட்டிருந்தேனெங்கள் தளத்தில் சில நாட்கள் முன்பு.. அம்மா பணமோ ஏதோ தலைப்பு!
LikeLiked by 1 person
@ ஸ்ரீராம்: எங்கள் ப்ளாகில் ஒரு செய்திக்கதை – இதைப்போலவா? மிஸ் செய்துவிட்டேன் என நினைக்கிறேன்.
LikeLike
கல்லுக்குள் ஈரம்!
இப்படியானவங்க, ஏதோ ஒரு சூழல்நால தவறு செய்யறாங்கனுதான் தோனுது.
கீதா
LikeLiked by 1 person
@ கீதா:
ஈரம் இருந்தும், செய்துவிட்ட வந்த கர்மாவோ எதுவோ வம்பில் மாட்டிவிட்டுவிடுகிறது போலும்..
LikeLike
கதைதான் எழுதப்போகிறீர்கள் என்று நினைத்தேன். ஆனால், திருடிய பணத்தை திரும்ப கொடுத்தவனை போலிஸ் கைது செய்தது ஆன்டி கிளைமாக்ஸ் ஆகி விட்டதே. இந்த சம்பவங்களை வைத்து அனேகமாக நெல்லை தமிழன் கதை எழுதலாம்.
இரண்டு திருடர்களுமே வித்தியாசமானவர்கள்.
LikeLiked by 1 person
@Bhanumathy Venkateswaran:
நெல்லைத் தமிழன் இதை வைத்துக் கதை எழுதக்கூடுமா! அவர் இதைப் படித்தாரோ என்னவோ தெரியலையே..
LikeLike