முன்னமே எழுந்துவிட்டதனால்..

காலையில் முன்னமே எழுந்துவிட்டால், முந்திக்கொண்டு வந்து விழுகிறதே வார்த்தைகள்.. ம்.. சரி.. மூன்றுதான் :

 

இடமாறுகேட்டல் பிழை ?

 

நல்லவற்றின் மீது ஆசைப்படவேண்டும்

கெட்டதைக் கண்டால் கோபம் வரவேண்டும்

சொல்லிச் சென்றாரே மகாபெரியவர்

காதில் சரியாக விழலியோ ஜனங்களுக்கு

நல்லவற்றைக் கண்டாலே கடுப்பும்

கெட்டவைகளின் மேல் தீரா மோகமும்

தட்டாது உண்டாகிறதே இதுகளுக்கு?

 

**

டேய்.. ஏண்டா இப்படி ?

 

கிட்டாதாயின் வெட்டென மற !

பட்டெனப் போட்டாளே ஒரு பாட்டி

படிக்கவில்லையோ ஒருவேளை – இப்படி

அரிவாளைத் தூக்கிக்கொண்டு

அலையறதுகளே அறிவில்லாமல் ?

 

**

கரைந்து கரைந்து நெஞ்சம் ..

 

பறந்துவந்து உட்காரும் காகம்

பரபரக்கிறது கரைகிறது சத்தமாய்

ஏதேதோ சொல்கிறது அவசர அவசரமாய்

பாவிக்குப் புரியவில்லையே

பறவையின் பாஷை ?

 

**

12 thoughts on “முன்னமே எழுந்துவிட்டதனால்..

 1. திரும்பி உட்கார்ந்து மாற்றிக்கேட்டு மாற்றி யோசித்து விட்டார்களோ!

  வெட்டென என்கிற வார்த்தையை மட்டும் பிடித்துக் கொண்டுவிட்டார்களோ!

  காக்கைகள் தனக்குத்தேவையெனில் அருகில் அமர்ந்து கூட ஆகாரம் கேட்கும். கூடு கட்டியிருந்தால் சுயநலத்துடன் பொட்டென்று மண்டையில் போட்டும் செல்லும்!

  Liked by 1 person

  1. @ஸ்ரீராம்:
   //..வெட்டென என்கிற வார்த்தையை மட்டும் பிடித்துக் கொண்டுவிட்டார்களோ!//
   இருக்கலாம்! வெட்டு குத்து என்பதெல்லாம் ஆனந்தமான வார்த்தைகளாகப் போய்விட்ட காலம்.
   காகத்தின் கதையே தனிதான்.. தலையில் குட்டியிருக்கிறதோ!

   Like

 2. சொன்னதெல்லாம் திருப்பிச் சொல்ல அவர்களில்லை. திருப்பிச் சொல்லுகிற காக்கையின் பாஷை விளங்கவில்லை. இப்படிதான் பதில் கிடைக்கும். அன்புடன்

  Liked by 1 person

 3. காக்காய் பாஷை புரியலியா ஏகாந்தன் அண்ணா? நீங்க இரைச்சல் மிகுந்த பகுதியலருந்து காக்கா பாஷைய கேட்டீங்களோ…ஹா ஹா ஹா..ஏகாந்தமா உக்காந்து கேளுங்க நிறைய விஷயம் சொல்லும்!!!!!! புரியும்!

  மனிதமனதே கெட்டதை டக்கென்று கவ்விக் கொள்வதுதானே!

  ஒரு பக்கம் தொழ்ல்நுட்ப வளர்ச்சி…மறுபக்கம் அறிவாள் தூக்குவது சமீபகாலமாக இன்னும் அதிகமாகியுள்ளதோ? போலத்தான் இருக்கிறது…..

  கீதா

  Liked by 1 person

  1. @ கீதா:
   ஏகாந்தமாக இருக்க விடுகிறதா நகர வாழ்க்கை?

   //.. ஒருபக்கம் தொழில்நுட்ப வளர்ச்சி.. மறுபக்கம் அரிவாள்..//
   நல்ல காலம், தொழில்நுட்பம் என்று சொல்லிக்கொண்டு நியூஸிலாந்து மாதிரி assault rifle-ஐத் தூக்கிவராமலிருக்கிறார்களே.. சந்தோஷப்பட்டுக்கொள்ளவேண்டியதுதான்.

   Like

 4. காக்கையின் மொழி புரிந்து விட்டால் அப்புறம் நம்மைப் பிடிக்க முடியாது! அதான் இறைவன் இப்படி வைச்சிருக்கான் நம்மை! பெரியவரோ போயாச்சு! அவர் பேச்சை அவர் இருக்கும்போதே கேட்டவர்கள் சொற்பம்! இப்போ?

  Liked by 1 person

  1. @ கீதா சாம்பசிவம்:

   காக்கா விஷயத்தில் கடவுள் அளந்துதான் நமக்குக் கொடுத்திருக்கிறான் என்கிறீர்கள்!

   //.. அவர்பேச்சை இருக்கும்போதே கேட்டவர்கள் சொற்பம்..//
   பெரியவர்களின் பேச்சைக் கேட்பது இந்தக்கால இளைஞர்களுக்கு அழகில்லையே..

   Like

 5. இங்கே காகம் அரிது ஆந்தை அதிகம். அதுவும் ஹூ ஹூ என்று கேட்டுக் கொண்டிருக்கும்.
  இன்னொன்று வழிப் பறவை சூரியன் உதயமாவதற்கு முன்னேயே

  வழி வழி என்று கேட்டுக் கொண்டிருக்கும். இரு இரு ஆச்சார்யர்களைக் கேட்டுச் சொல்கிறேன் என்று நானும் சொல்வேன்.
  இங்கே மஹாபெரியவரையே அழைத்து வந்து விட்டீர்கள்.

  எல்லா ஊரிலும் அராஜகம் அதிகமாகித்தான். இருக்கிறது.காதில் விழாத வரை நிம்மதி.

  Like

  1. @ Revathi Narasimhan:

   //…இங்கே காகம் அரிது ஆந்தை அதிகம். அதுவும் ஹூ ஹூ என்று கேட்டுக் கொண்டிருக்கும்.//

   Europe -ஐ சொல்கிறீர்களா?
   சூர்யோதயத்துக்குமுன் என்னென்னவோ பறவை சத்தங்கள் பெங்களூரிலும் காதில் விழுகின்றன. இப்போது டெல்லியில் இருப்பதால் பறவைச்சத்த பின்னணியில்தான் இதை எழுதுகிறேன்! இங்கே காகத்தோடு, மைனா, தேன்சிட்டு, புறா, அணில் என ஒரு கூட்டணி..

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s