இந்தியா  இப்போது ஒரு விண்வெளி வல்லரசு

இன்று (27/3/19) காலையில், மூன்றே நிமிடங்களில் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட  ‘மிஷன் ஷக்தி’ (Mission Shakti)  எனக் குறிக்கப்பட்ட ஒரு சிறப்பு ஏவுகணை (ASAT) சோதனையில், இந்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் உற்பத்தி மையம் (Defence Research and Development Orgnization of India) மற்றும் இந்திய விண்வெளி ஆய்வுக் கழக   (ISRO) விஞ்ஞானிகள், விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு துணைக்கோளை (Live Low-orbiting Earth Satellite) துல்லியமாகத் தாக்கித் தகர்த்தெறிந்தனர். விண்வெளியிலேயே யுத்தம் செய்ய நேர்ந்தாலும் (Space Wars) ,  அதற்கான நிபுணத்துவம், வல்லமை  எங்களிடம் இருக்கிறதென உலகிற்கு அறிவித்திருக்கிறது இந்தியா.  ‘இந்தியா இப்போது ஒரு விண்வெளி வல்லரசு (Space Superpower)’ என்கிற  அறிவிப்பை தனது சிறப்பு செய்தியறிவிப்பு மூலம் நாட்டுமக்களுக்கு சற்றுமுன் தெரிவித்தார் பிரதமர்.
கடும் போர் ஆயுதங்களான ஏவுகணைகளில், பொதுவாக சில வகைகள் உண்டு: தரையிலிருந்து ஏவப்பட்டு போர்விமானங்களைத் தாக்கும் ஏவுகணைகள் (surface to air missiles), போர்விமானங்களிலிருந்து ஏவப்பட்டு விமான இலக்கை அழிக்கும் ஏவுகணைகள் (air to air missiles (அபிநந்தன் MIG-21-லிருந்து ஏவிய R-73 இத்தகையதுதான்), தரையிலிருந்து ஏவப்பட்டு சில ஆயிரம் மைல்கள் வரை  சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகள் (IRBMs-Intermediate Range Ballistic Missiles), மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (Inter-Continental Ballistic Missiles) போன்றவை. இதுதவிர, குறுகியதூரமே சென்று தாக்கும் ஏவுகணைகள், போர்க்கப்பல்கள்/நீர்மூழ்கிக் கப்பல்களிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள் எனவும் உண்டு.
     ASAT – என்றால் என்ன? Anti-Satellite Missiles. இது வேற லெவல் ! அதாவது  எதிர்கால விண்வெளி யுத்தத்திற்கான ஆயுதங்கள் என  சுருக்கமாகச் சொல்லலாம்.  ராணுவ மற்றும் அழிவு வேலைகளைச் செய்யும் எதிரிநாட்டு (சீனா போன்றவை எனக்கொள்க) துணைக்கோள்களைத் தாக்கி அழிக்கும் விண் ஆயுதங்கள் இவை. இத்தகைய விண்வெளி ஆயுத வல்லமைகொண்ட நாடுகளாக அமெரிக்கா, ரஷ்யா  மற்றும் சீனா  என மூன்று நாடுகள் மட்டுமே இதுநாள்வரை கோலோச்சிக்கொண்டிருந்தன. கவனியுங்கள் – பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான், ஃப்ரான்ஸ் போன்ற தொழில்நுட்பமிகு நாடுகளும் இதில் இல்லை.  இந்த சிறப்பு நாடுகளின் வரிசையில் (Elite Club) இந்தியா இன்று சேர்ந்துகொண்டது என்பதே இதன் முக்கியத்துவம். ’ஒவ்வொரு இந்தியனும் நினைத்துப் பெருமைப்படவேண்டிய நாளிது’ என மேலும் சொல்லியிருக்கிறார் பிரதமர் மோதி.
**

6 thoughts on “இந்தியா  இப்போது ஒரு விண்வெளி வல்லரசு

 1. அறிவிப்பு என்றவுடனே ATM நோக்கி படை எடுத்தோர் இங்கும் பலர்…

  ஹா… ஹா… ரொம்பவே பெருமையா இருக்கு…!

  நல்லவேளை திருமிகு அப்துல்கலாம் ஐயா நம்மிடம் இல்லை…

  Liked by 1 person

  1. @ Dindigul Dhanabalan:

   ATM ஜோக்குகளை நானும் பார்த்தேன்.
   நமது ஏவுகணை நிபுணர் (Missile Technologist)அப்துல் கலாம் அவர்களின் நினைவு வராமல் இருக்குமா? 1998 தான் மறந்துவிடுமா..

   Like

 2. @ ஸ்ரீராம்:

  நமது விஞ்ஞானிகள், technocrats, experts மற்றும் டெக்னீஷியன்கள் – ஆகியோரின் அயரா உழைப்பை எண்ணிப் பெருமிதம் கொள்வோம்.

  Like

 3. இந்த திறமை நம் நாட்டிற்கு சில வருடங்களுக்கு முன்பே உண்டு…

  இந்த சோதனை ஏன் இப்போது செயல் படுத்த வேண்டும்…? அதை ஏன் ஒரு பிரதமர் சொல்ல வேண்டும்…? ஏற்கனவே ராணுவ வீரர்கள் புகைப்படங்களை வைத்து தேர்தல் பரப்புரை செய்ததே தவறு… ஒருவேளை இதை சொல்லி, அதாவது மார்தட்டிக் கொண்டு இனி வரும் தேர்தல் பரப்புரையின் போது சொன்னால், அதை விட கேவலம் கிடையாது…

  விண்வெளி விஞ்ஞானி அமைப்பு கூட இதை ஒரு செய்தியாக சொன்னாலே தவறு என்று நினைக்கிறேன்… எப்போது எதை வெளிப்படுத்த வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும்… திருமிகு அப்துல்கலாம் ஐயா இருந்திருந்தால், இவ்வாறு செய்து இருக்க மாட்டார்… பொக்ரான் பற்றி தெரியும் நினைக்கிறேன்… அது ஒரு சாதனை தான் என்றாலும், அதன் பின் எத்தனை உலக நாடுகள் கண்டனங்கள் தெரிவித்தன… முறிவுகளும் ஏற்பட்டன…

  இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் உள்ளன… இது ஒரு ஆரம்பமே…

  நாட்டிலே யுத்தம் செய்வதை / நடப்பதை எந்த நாடும் விரும்புவதில்லை… இதில் உங்கள் கூற்று // விண்வெளியிலேயே யுத்தம் செய்ய நேர்ந்தாலும் // கொடுமை சார்…

  கல்வி மையங்கள், நீதி மன்றங்கள், வங்கிகள், தேர்தல் ஆணையம், சிபிஐ என பலதும் பாழ்பட்டு போய் பல வருடங்கள் ஆகி விட்டது… இப்போ ராணுவம் + விண்வெளி…வாழ்க பாரதம்…!

  யார் பிரதமராக இருந்தாலும் பல துறைகள் தேசம் காக்கும்… காத்தது… காக்கவும் வேண்டும்… ஆனால் இப்போது அனைத்தும் மோசடி ஆகாமல் இருந்தால் நல்லது… ‘ச’ extra letter…

  நன்றி ஐயா…

  Like

 4. இந்தியாவின் கேப்பில் மற்றொரு இறகு என்று சொல்லலாமோ!!

  இது ஜஸ்ட் நானும் வீரன் தான் என்று சொல்வதற்கு இருந்தால் போதும். விண்வெளிப் போர் என்று எதுவும் வேண்டாம்…அது சரி பழைய காலத்துல புராணங்கள்ல கூட வருமே ஆயுதங்கள் விட்ட்டாங்க பாணங்கள் விட்டாங்கனு அதுவும் கூட இப்படி விண்வெளி ஸ்டார் வார்/ஸ்பேஸ் வார் (அப்படித்தான் ஆங்கில ஃபிக்ஷன் சினிமாவும் சரி நம்ம புராணப்ப படங்களும் காட்டுகின்றன!! வானத்தில் தேரில் பறந்து கணை விடுவது போல!!!)

  கீதா

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s