பக்கத்துவீட்டுப் படுபாவி

பக்கத்துவீட்டுக்காரன் பாவியாக இருந்தால், ’கதவைத்தான் மூடிக்கொண்டுவிட்டோமே, ஒன்றும் ஆகாது..’ என்று பெண்டாட்டி, பிள்ளைகளோடு ஒருவன் நிம்மதியாக இருந்துவிடமுடியுமா?  அவனால் எந்த சமயத்தில் எந்த இடையூறு வருமோ என அஞ்சித்தானே வாழவேண்டியிருக்கும்? அவனே, பாவத்திலும் ஒருபடி மேலேபோய், கொடும் விஷமியாக, அடுத்தவனை அழிப்பதையே வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருப்பவனாக இருந்துவிட்டால், வேறு வினையே வேண்டாம். இந்தியா என்கிற நாட்டுக்கு, அண்டை நாடொன்று இப்படித்தான் வாய்த்திருக்கிறது. அதன் சகிக்கமுடியா விளைவுகளைத்தான், எழுபதாண்டுகளுக்கும் மேலாக இந்தியா அனுபவித்து வருகிறது.

இந்த உலகில், இந்த நாட்டைத் தவிர வேறெந்த நாடும், பாம்புகளைப் பால்கொடுத்து வளர்ப்பதுபோல், தீவிரவாதிகளை, சமூக விரோதிகளை பொத்திப் பொத்தி, சீராட்டி, பாராட்டி வளர்ப்பதில்லை. (ஏதோ, ஜாடை மாடையாக பண உதவி  செய்யும் நாடுகள் சில உண்டுதான்.)  அழிவுக்காரியங்களில் அதிநவீன பயிற்சி தந்து,  அண்டை நாட்டின்மீதும், வெகுதொலைவிலிருக்கும் வல்லரசுகளுக்கெதிராகவும் கூட ஏவப்படும் அளவிற்கு, பயங்கரவாதிகளை உருவாக்கி, வாழ்த்தி அனுப்பிவைக்கும் புண்ணிய தேசம், நமக்கு மேற்கிலிருக்கும் நாடு. இதன் 70 ஆண்டு அரசியல் சரித்திரத்தைப் பார்த்தால்,  இந்தியாவின் சீரழிவைத் தவிர வேறெந்த  லட்சியமும் இதற்கு இருந்ததில்லை என்பது, சர்வதேச அரசியலின் அரிச்சுவடி மாணவனுக்குக்கூட எளிதாய்ப் புரிந்துவிடும்.

1948-லிருந்து இதுவரை நான்கு முழுஅளவிலான யுத்தங்கள். எதிரி சீண்ட சீண்ட, ஒரு நிலையில் தாங்கமுடியாமல்போன இந்தியா, வேறு வழியின்றி,  வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுத்த பயங்கரப் போர்கள். எல்லாவற்றிலும் பாகிஸ்தானுக்குப் படுதோல்வி. 1971-ல் அவர்களது நாட்டின் ஒரு பகுதியே உலக மேப்பிலிருந்து நிரந்தரமாகக் காணாமற்போய்விட்டது. சுமார் தொண்ணூற்றி மூவாயிரம் பாகிஸ்தானி படைவீரர்கள் இந்தியாவிடம் சரணடைந்தார்கள். உலக, போர்சரித்திரத்தில் பிரதானமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள நிகழ்வு.அந்த இக்கட்டான காலகட்டத்தில், இந்திய அரசுக்கு வலிமையான தலைமை தந்த பிரதமர் இந்திரா காந்தி, ராணுவத்தலைமை வகித்த ஃபீல்ட் மார்ஷல் மானேக்‌ஷா மற்றும் இந்திய வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய  மேஜர் ஜெனரல் ஜக்ஜீத் சிங் அரோரா, ஏர் மார்ஷல் அர்ஜுன் சிங் ஆகியோர் இங்கே வெகுவாகப் பாராட்டப்படவேண்டியவர்கள். அப்போதெல்லாம் அண்டை நாட்டுக்கு கிடைத்த பரிசு- அழிவு. அவமானம். 1948, 1965, 1971, 1999 -என கூகிள் செய்தால் தெரியவரும் – பதிவுசெய்யப்பட்டிருக்கும் துணைக்கண்ட சரித்திரம். ஆனால் இப்படித் தன் பின்பக்கத்தில் பழுக்கப்பழுக்க சூடு வாங்கிக்கொண்ட பின்னும், புத்தி வந்ததா அடுத்த வீட்டு அம்பிக்கு?  நஹி.  சூடு,சுரணை என்பதெல்லாம் அவர்களின் ரத்தத்தில் காணப்பட்ட  வஸ்துக்களாக என்றும் இருந்தவையல்ல. ஆனால் ஒன்று தெளிவாக அதற்குப் புரிந்திருக்கவேண்டும். இந்தியாவை நேரடி யுத்தத்தில் வெல்லமுடியாது. உள்நாட்டில் அழிவும், சர்வதேச அரங்கில் அவமானமும் தான் மிஞ்சும். பின், என்னதான் செய்வது? எல்லைதாண்டி, தலையில் முக்காடும், கையில் தாக்குதல் ஆயுதமுமாய் அனுப்பிவைப்போம் ப்ரெய்ன்-வாஷ் செய்யப்பட்ட கோழைகளை. அவர்கள் இந்தியாவுக்குள் புகுந்து அப்பாவிகளைக் கொடூரமாகக் கொல்வார்கள். முக்கிய இடங்களைத் தாக்குவார்கள். நாம் டிவியில் பார்த்து மகிழலாம். கேட்டால் ’எங்கள் மண்ணிலிருந்து வந்தார்களா? எங்கள் நாட்டில் இவர்களுக்குப் பயிற்சிக்கூடமா ? ஐயோ! அப்படியெல்லாம் ஒன்றுமில்லை’ என்று சீனாவின் டிரவுசரை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு உளறிக்கொண்டே வாழலாம். உலகம் வேடிக்கை பார்க்கும். நமது எதிரியான இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக அழியும். இதுதான் அவர்களின் அரசியல் வியூகம், திட்டமிட்டு இயக்கப்படும் அழிவுமுயற்சிகள், கடந்த இரு தசாப்தங்களாக.

பிரதமர் நவாஸ் ஷெரீஃபிற்கு தெரிவிக்காமலேயே, பாகிஸ்தான் தளபதி முஷாரஃப் ஆரம்பித்த (அதெப்படி பிரதமருக்குத் தெரியாமல், அவரின் உத்தரவு இல்லாமல், ராணுவ தளபதி போர் தொடுக்கமுடியும் என இடையிலே புகுந்து கேட்டு, உங்கள் அறியாமையை இங்கே வெளிப்படுத்தவேண்டாம், ப்ளீஸ்!  பாகிஸ்தானில் அப்படித்தான். அங்கே,  பிரதமர் என்பவர் ராணுவத்தின்  கைப்பாவை. வெளி உலகுக்கு ஆட்டிக் காண்பிக்கவென கையிலொரு ஜனநாயக பொம்மை. அவ்வளவுதான்) 1999 கார்கில் (Kargil) போரில் வாஜ்பாயி அரசு கொடுத்த உத்திரவில், இந்திய ராணுவம்  பாகிஸ்தானை அடித்து நிமிர்த்தியதன் ராணுவ, ராஜீய விளைவுகள் அதற்கு பயங்கரமாய் அமைந்துவிட்டன. அதனால் சும்மா இருக்கமுடியுமா?

2008 நவம்பரில், பாகிஸ்தானிலிருந்து கடல்வழி வந்த நாசகாரக்கும்பல், மும்பையின் புகழ்பெற்ற தாஜ்மஹால் ஹோட்டலில் புகுந்தும், அதை சுற்றியும் நான்கு நாட்கள்  தாக்குதல்களை நடத்தியது.  இறுதியில், இந்தியா விஷமிகளை ஒருவழியாக அழித்துவிட்டாலும், இந்தத் தாக்குதல் அதற்கு பெரும் துன்பத்தையும், உலக அரங்கில் தலைகுனிவையும் ஏற்படுத்தியது. இந்தியாவுக்கு ஆதரவாக, சர்வதேச அரங்கில் குரல்கள் எழுப்பப்பட்டன. இருந்தும் விஷம் விதைத்தவர்களை அது ஒன்றும் பாதிக்கவில்லை. மாறாக ‘ பயங்கரவாதிகளா, எங்கள் மண்ணிலிருந்தா? இல்லவே இல்லை. நாங்களும் தீவிரவாதத்துக்கெதிராக உலக நாடுகளோடு ஒத்துழைக்கிறோம்’ என்றெல்லாம் வாயடித்து ஒதுங்கிக்கொண்டது அண்டை நாடு. அப்போதிருந்த இந்திய அரசு, எந்த விதமான எதிர்த் தாக்குதலையும் திட்டமிடவுமில்லை. ராணுவத்திற்கு உத்திரவு இடவுமில்லை. நமக்காக சில நாடுகள் ‘ச்சூ’.. என சூ கொட்டினார்களே ஒழிய, பாகிஸ்தானைப் பெரிதாக யாரும் கண்டித்துவிடவில்லை. சீனா மழுப்பலாகச் சிரித்து, தனது சீடனின் விஷமத்தை  ரசித்துக்கொண்டிருந்தது. இதுதான் சோனியா ஆசீர்வாதத்தில், ’மாட்டிக்கொண்ட மன்மோகன் சிங்’ தலைமையிலான அப்போதைய இந்திய அரசு, தன்னை உள்நாட்டிலும், உலக அரங்கிலும் நடத்திக்கொண்ட லட்சணம். இந்திய வெளியுறவுக்கொள்கையின் படுதோல்வி, இந்திய அரசுத் தலைமையின் கையாலாகாத்தனம் அது. அன்னை சோனியாவுக்கும், ஐயா சிங்குக்கும் ஆயிரம் பிரச்னைகள். யார் மும்பைக்குள் நுழைந்து தாக்கினால் என்ன, இல்லை டெல்லி வந்தே அடித்தால்தான் என்ன? சிங்குக்கு அப்புறம் தன் செல்வப்புதல்வனை நாற்காலியில் உட்காரவைத்தால்தான் ஜென்ம சாபல்யம் சோனியா அம்மையாருக்கு. அதற்கான முனைப்பிலேயே ’அவர்கள்’ செயல்பட்டதால் (ப்ளஸ் – வேறு யாரும் அரியாசனம் ஏறிவிடக்கூடாதே என்கிற மரணபயம்), அவர்களுக்கு  இந்தியா என்கிற நாடோ, அதன் கௌரவமோ, பாதுகாப்போ முக்கியமாகப்படவில்லை. நமது தலையெழுத்து அப்படித்தான் இருந்தது 2004-2014-வரை. இந்தியாவின் சோதனை மிகுந்த காலகட்டம்.  இதைச் சொல்ல பலர் தயங்கலாம். ஒளிந்துகொண்டு, வாய்மூடி, அல்லது எதையாவது கலந்துகட்டியாகச் சொல்லி, வேறுசிலரிடம் நல்லபேர் வாங்கிக்கொள்ள முயற்சிக்கலாம். ஆனால் முழுப்பூசணிக்காயை சோற்றிலே மறைத்துவிடுவீர்களா! சரித்திர உண்மையை சந்திக்காது எங்கே ஓடுவீர்கள்?

இப்படி இந்தியாவைப்போன்ற ஒரு பெரும் தேசம், ஆபத்தின்போது தன்னை சரியாகத் தற்காத்துக்கொள்ளாது, தாக்கப்பட்டும் திருப்பியும் தாக்காது பம்மிக்கிடந்தால், பாவிஸ்தானுக்கு மேலும் துளிர்விடத்தானே செய்யும்? நம்மைக் குறைகூறுவார்களே தவிர, இந்தியாவிற்கு நம்மைத் தாக்கும் அளவிற்கு தைரியம் இல்லை என்று கொக்கரித்துக் கிடந்தது. தன் எஜமானனான சீனாவின் காலைக் கட்டிக்கிடந்ததன் கதகதப்புவேறு, குளிருக்கு இதமாய் இருந்தது அதற்கு அப்போது.

மேலும் பார்ப்போம்..

**

15 thoughts on “பக்கத்துவீட்டுப் படுபாவி

 1. அண்ணா செம பதிவு.

  சமீபத்தில் இம்ரானின் பேச்சு வாட்சப்பில் வந்தது அதற்கு முன் வலைத்தளத்திலும் ஒருவர் போட்டிருந்தார். அதற்கு நான் சொன்ன பதில்..அண்ணா நீங்களும் கேட்டிருப்பீங்க.

  என் அறிவுக்கு எட்டியவரை புல்வாமா நிகழ்வுக்குப் பிறகு அந்த தீவிரவாதிக் கூட்டம் தாங்கதான் என்று சொன்ன பிறகும் கூட பாகிஸ்தான் எந்தக் கண்டெனமும் தெரிவிக்கவில்லை. காத்திருந்துவிட்டுத்தான் அங்கிருந்து எதுவும் சொல்லப்படாததால்தான் இந்தியா அந்தத்தீவிரவாதக் கும்பலை அழித்தது…அதன் பின் தான் இந்த பேச்சு வலம் வந்தது. அதில் அவர் பேச்சு பெரும்பாலும் எங்களிடமும் ஆயுதம் இருக்கு…போர் விளைவுகள் போர் என்றுதான் பேசினாரே அல்லாமல் நாங்கள் அந்தத் தீவிரவாதத்தை அழிக்க கை கோர்ப்போம் என்று சொல்லவில்லை…இந்தியா அவர்களிடம் போர் தொடுக்கவில்லையே இது ஒன்றும் கஷ்மீர் பிரச்சனையோ அல்லது எல்லைப் பிரச்சனையோ இல்லையே…திவிரவாதம்..அதை எதிர்த்துத்தான்..தீவிரவாதம் என்பது எலல நாட்டுக்கும் விஷம் தானே…அதற்கு முடிவே இல்லையே… ஆனால் அவர்கள் அதைச் சொல்லவே இல்லை. போர் வேண்டாம் போர் வேண்டாம் என்றுதான்…

  அவர் சொல்லிருந்தார் அவர் சும்மாதான் அவர்கள் ஃபைட்டர் ப்ளேனை அனுப்பி ஜஸ்ட் பூச்சாண்டி காட்டினாராம் எங்களுக்கும் தில்லுண்டு னு..ஃப்ளைட்டர் ப்ளே அனுப்பிருக்கவே வேண்டாமே இது போர் இல்லையே ஸோ…நான் இக்கருத்தைச் சொல்ல்ரிந்தப்ப…
  இம்ரான் அட்லீஸ்ட் ஒரு ஸ்டெப் முன்வந்து போர் வேண்டாம்னு சொல்லிருக்காரே அதைத்தான் பார்க்கனும் பழம் பகைமை பாராட்டக் கூடாதுனு…

  சரிதான் ஆனால் தீவிரவாதம் எல்லாவற்றையும் விடக் கொடிய விஷம் என்பதை புரிந்த் கொள்ள வேண்டும் என்று…அடுத்து சொல்லிருந்தேன்…

  கீதா

  Liked by 1 person

 2. நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. இன்னும் அறிய ஆவல் தொடர்கிறோம்…

  இப்ப பாகிஸ்தான் ஒத்துக் கொண்டது போலும் அங்குதான் அந்த தீவிரவாத கும்பல் இருக்கிறது அதன் தலைவன் இருக்கிறான் என்றும் அவன் உடல் தளர்ந்து வீட்டை விட்டு வெளிய வரமுடியாமல் இருக்கிறான் என்றும் ஒத்துக் கொண்டதாகத் தெரிகிறது.
  அவனை சுட்டுவிட்டதாகவ்ம். இந்தத் தகவல் உண்மையா என்று தெரியவில்லை..

  ஸ்வாரஸ்யமான இடத்தில் தொடர் கதை முடிவது போல நீங்களும் முடிச்சுட்டீங்க.

  ஸ்ரீராம் வியாழன் பதிவில் சொன்னதும் 14 நாட்கள் கதையை வாசித்தேன் சுஜாதா எழுதியது ..செம இன்ட்ரெஸ்டிங்க். ஸஸ்பென்ன்ஸ் பதைபதைப்பு…

  கீதா

  Liked by 1 person

 3. இந்தப் பக்கத்துவீட்டு உறவை என்றோ வெட்டு ஒன்று துண்டு ரெண்டுனு சரிக்கட்டிருக்கனும் என்றே நினைப்பேன்..அது இல்லாமல் இன்று வரை தொடர்வதற்குக் காரணம் என்ன என்பதும் புரிகிறது.

  நீங்க கடைசில சொல்லியிருப்பது போல இந்தியா தன்னைக் காத்துக் கொள்ளாமல், அதே சமயம் தாக்காமல் பம்மி இருந்தால் அவர்களுக்குத் துளிர்விடத்தான் செய்யும்…

  மீண்டும் ஒரு முறை வாசித்தப்பதான் இன்னும்புரிந்து கொள்ள முடிந்தது…தீவிரவாதிகளை வளர்த்தே மறைமுக அட்டாக் என்பதே…

  அப்ப என் முதல் கமென்டில் சொன்னது சரியில்லை என்றே தோன்றுகிறது..

  சமீபத்திய இந்தியாவின் ஸ்ட்ராட்டஜிப் படி பார்த்தால் இனி கொஞ்சம் அடங்கி இருப்பார்களோ என்றுதான் தோன்றுகிறது….உங்களின் அடுத்த பதிவி என்ன சொல்லப் போறீங்கனு ஆவல்…(என்னவோ தெரியலை இந்த நம்ம ராணுவத்தின் பலம், பாகிஸ்தான் என்றால் ஆவல் கூடுகிறது…) இப்போதைய நிகழ்வு புல்லரித்து புளகாங்கிதம் அடையவைத்த நிகழ்வு…

  கீதா

  Liked by 1 person

 4. @ கீதா, @ஸ்ரீராம், @ திண்டுக்கல் தனபாலன்:
  :
  கொஞ்ச நாளாகவே சர்வதேச அரசியல்பற்றி எழுதலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். வெனிஜுவலா, எகிப்து போன்ற நாடுகளின் நிலவரங்கள், டொனால்ட் ட்ரம்ப், தெரஸா மே (யூகே) என்றெல்லாம் படிப்பு..

  இடையிலே இது புகுந்து முக்கியத்துவம் பெற்றுவிட்டது. சர்வதேச வெளியில் நமது மாபெரும் தேசத்தின் இருப்பு, பாதுகாப்பு, தலைமை, நேசநாடுகள், உறவுகள் போன்ற விஷயங்களைப்பற்றிக் கொஞ்சம் எழுதுவோம் என ஆரம்பித்திருக்கிறேன் . ஒரேயடியாக புள்ளிவிவரங்கள் வேண்டாம், அதே சமயத்தில் சரியாக சொல்லப்படாத /கவனிக்கப்படாத முக்கிய விஷயங்கள், அவற்றின் மங்கலான, திரைமறைவுப் பின்னணிகள் என்றெல்லாம் படித்த பல்வேறு சங்கதிகள்..
  எப்படி இது வளரவிருக்கிறது எனப் பார்ப்போம்.

  Like

  1. சர்வதேச விஷயங்கள் குறித்து அறிய ஆவல். ட்ரம்ப் மாமா பற்றியும் அறிய ரொம்பவே ஆவல் உங்கள் பதிவில்.

   கீதா

   Liked by 1 person

 5. தெரியாத விஷயங்கள் பல உங்கள் பதிவில். ஏதோ கொஞ்சம் பள்ளியில் வரலாற்றில் படித்திருக்கிறேன். செய்தித்தாளில் வருவது வாசித்திருக்கிறேன். நீங்கள் சொல்வதில் இன்னும் நுணுக்கமான பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

  அடுத்த பதிவுக்கு ஆவலுடன் தொடர்கிறோம்.

  துளசிதரன்

  Liked by 1 person

  1. @கீதா, @ துளசிதரன் :

   நன்றி.
   Sensational -ஆக இல்லாமல், கவனமாக எழுத வேண்டிய விஷயமாதலால், நேரம் எடுத்துக்கொண்டு முயற்சிக்கிறேன்

   Like

 6. பல அரிய உண்மைகள்! வெளிவரக்காத்திருக்கிறேன். டிடி சொன்னது போல் இன்னமும் முக்கியமான விஷயத்துக்கு வரவில்லை என்றே நினைக்கிறேன்.இதை ஒரு முன்னுரையாக எடுத்துக்கொள்ளலாம். தொடருங்கள். காத்திருக்கிறேன். சுவாரசியமாக உள்ளது. தூர்தர்ஷன் ஜர்னலிஸ்ட் எழுதின புத்தகத்தின் சிறப்புப் பகுதிகளைப் பற்றிப் படித்தேன். அதிர்ச்சியாக இருந்தது! 😦

  Liked by 1 person

  1. @கீதா சாம்பசிவம்:

   தூர்தர்ஷன் ஜர்னலிஸ்ட்டின் புத்தகமா? எதன் மீது, என்ன டைட்டில்?

   Like

   1. தெரிஞ்சிருக்கும்னு நினைச்சேன்.2004 ஆம் ஆண்டில் இருந்து 2014 வரை நடந்தவற்றின் நினைவுகள்.

    Liked by 1 person

   2. @ கீதா சாம்பசிவம்: //.. தெரிஞ்சிருக்கும்னு நினைச்சேன்..//

    ‘The Accidental Prime Minister’-புத்தகத்தைப் பற்றியா சொல்கிறீர்கள்? அதுதான் உலகத்துக்கே தெரியுமே! அதை எழுதிய சஞ்சயா பாரு (Baru), மன்மோகனின் மீடியா அட்வைஸராக இருந்தவர். அந்த அடிப்படையில் எழுதிய புத்தகம் அது. அதற்கு முன்பு Secretary General, FICCI, Director in International Institute of Strategic Studies, Associate Editor of Economic Times, Times of India என்றெல்லாம் பதவிகள் வகித்தவர்.
    நீங்கள் தூர்தர்ஷன் ஜர்னலிஸ்ட் என்றிருக்கிறீர்களே! அங்கேதான் வந்தது குழப்பம்!

    Like

 7. இன்றைய காலகட்டத்தில்போரை நினைத்து கூடப் பார்க்க முடியாது ஒரு தவறான அடியெடுப்பு அழிவின் வாசலில் நிறுத்தும் அமேரிக்கா பின் லாடனைப் பிடித்து அழித்தது தெரிந்தும் நாமேன் போருக்கெல்லாம் போகவேண்டும்

  Like

  1. @GM Balasubramaniam:

   அமெரிக்கா அந்த மகானுபாவனை எப்படியெல்லாம் தேடியது, இறுதியில் எங்கே கண்டுபிடித்தது, எப்படித் தூக்கியது, தடயத்தைக்கூடக் காண்பிக்காமல் எப்படி அழித்தது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அமெரிக்காவும் போருக்கெல்லாம் போகவில்லை என்று நினைக்கிறேன்..!

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s