இந்நாளில் அன்று ! 

’’ஆழ்நிலை தியானத்தை

அந்நிய நாடுகளில்

அரங்கேற்றிக் காண்பித்த

இந்திய ஆன்மிக குரு

இறந்த நாள் பிப்ரவரி 5, 1917.

அவர் 1939-ல் .. ஸ்வாமியின் சீடராகி

1941-லிருந்து 1953 வரை

இமயமலைச் சாரலில் செய்தது தவம்

மேற்கொண்டு ஸ்தாபித்தது ஒரு ஆசிரமம்

உலகப்பயணத்தை 1958-ல் தொடங்கி..’’

ஐயோ.. நிறுத்துங்கடா.. டேய் !

முடில..

புரிந்துகொண்டேன்

புரிந்துகொண்டேன்

இறந்தவர் மறுபடி பிறந்துவந்து

இணக்கமாய் வாழ்வதெல்லாம்

இந்தியாவில் மட்டும்தான்

தெளிவாகச் சித்தரித்த

தெள்ளுமணி தமிழ் மீடியாவே

தலைவணங்குகிறேன்

காலைக்காப்பி ஆறிக்கொண்டிருக்கிறது..

கொஞ்சம் குடிச்சுக்கட்டுமா?

**ஏகாந்தன்
அடிக்குறிப்பு:  நேற்றைய ப் பத்திரிக்கை செய்தி ஒன்று, ஒரு யோகியின் பிறந்த  வருடத்தை (1917)  ‘இறந்த வருடமாக்கி’, தேதிகளையும்  குளறுபடி செய்து வெளியிட்டிருந்தது. அதன் விளைவாகப் பொங்கிய அங்கதக் கவிதையே இது! 

10 thoughts on “இந்நாளில் அன்று ! 

    1. @ திண்டுக்கல் தனபாலன்:

      நேற்றையத் தமிழ் இணையச் செய்திகளைக் கொஞ்சம் கவனித்துப் பார்த்ததன் விளைவு! வருடங்களைக் கவனித்தீர்களா..

      Like

    1. @ Ramanujam, Congo:

      ஒரு பத்திரிக்கையின் இணையப்பதிப்பில் இந்த blunder-ஐக் கண்டேன். இப்படித்தான் இஷ்டத்துக்கும் எழுதுகிறார்கள். யார் கேட்கப்போகிறார்கள் என்கிற தைரியத்தில் அல்லது அசட்டுத்தனத்தில்.. வருஷத்தை சரியாகப் போட்டு வார்த்தையில் அபத்தம் செய்திருந்தார்கள். அதனால் மேற்கொண்டு எல்லாமே அதில் அபத்தம்..அதை கிட்டத்தட்ட அப்படியே போட்டு ஒரு அங்கதக் கவிதையை எழுதினேன்..அதுதான் மேலே நீங்கள் படித்தது..

      தமிழ்ப்பத்திரிக்கைகளைப் படிக்கவும் முடியவில்லை. படிக்காமல் இருக்கவும் முடியவில்லை. தலையை இப்படி அடிக்கடிப் பிய்த்துக்கொண்டிருந்தால் மொட்டையாகும் வாய்ப்பும் உண்டு!

      Like

    1. @ பாலசுப்ரமணியம் ஜி.எம்.:

      கொஞ்சம் ஜாக்ரதையாகப் படிக்கவேண்டிய கவிதை இது! இல்லாவிட்டால் என்ன சொல்கிறது எனப் புரியாதுதான். அனேகமாக ரொம்பப்பேர் இதில் உள்ள அங்கதத்தைக் கவனிக்கவில்லை என்றே நினைக்கிறேன். சொல்கிறேன் :

      நேற்று மகரிஷி மகேஷ் யோகியின் பிறந்தநாள். அதை ஒரு பத்திரிக்கை அவர் ’’இறந்தநாள் பிப்.5, 1917’’ என்று அபத்தமாக பிரசுரித்ததால் , மேற்கொண்டு எழுதியதெல்லாம் அபத்தமாகவே காட்சியளித்தது. நாம் படிக்கும் தமிழ்ப் பத்திரிக்கைகளின் தராதரம், லட்சணம் எப்படி இருக்கிறது என்பதைத்தான் கிண்டல் செய்து கவிதையாக வடித்தேன். இப்போது படித்துப்பார்க்கவும்.

      மேலே நண்பர் ராமானுஜத்திற்கு எழுதியிருக்கும் பதிலையும் வாசிக்கவும்

      Like

  1. பின்னூட்டத்தில் விளக்கம் படித்து விட்டதில் சௌகர்யமாகி விட்டது! தாமதமாக வருவதில் ஒரு பலன்!

    Like

  2. @ ஸ்ரீராம்:

    சரிதான்!
    இப்போது ஒரு அடிக்குறிப்பும் கொடுத்துவிட்டேன், கவிதைக்குக் கீழே..
    ஜனங்கள் குழம்பாதிருக்கட்டும் என்று!

    Like

  3. ஹூம், பத்திரிகைகளும் சரி, தொலைக்காட்சி சானல்களும் சரி, உண்மையை ஒரு போதும் சொல்லுவதில்லை என்பதோடு பொது அறிவு என்பதும் யாருக்கும் இல்லை. முன்னெல்லாம் பள்ளிகளில் பொது அறிவுத் தேர்வு வைப்பார்கள். இப்போது வைத்தால் ஆசிரியர்களே தேர்ச்சி பெறுவார்களா சந்தேகமே! 😦

    Like

Leave a comment