இப்படியா ?

 

ஏய்,  ஊர்சுற்றி !

கோயில்பக்கம் போனியாடா

நாளைக்காலை அர்ச்சனைக்கு

பட்டரிடம் சொல்லிட்டியா

ட்விட்டர் பையன் காதில்

ஷட்டர் போட்டா மூடியிருக்கிறான்

பட்டர் கிடைக்கும்மா..

பக்கத்துக் கடையிலேயே

பதறாதே வாங்கிட்டு வர்றேன் என்றான்

தொடுதிரையிலிருந்து தலையைத் தூக்காமல்

பல்லைக்கடித்த மாமியின் முன்

கிட்டு மாமா வந்து நிற்க இதுவா நேரம்

வாட்டர்வாலா இன்னுமா வரல..

கூட்டிப்பெருக்கற கோகிலாவையும் காணோம்

திட்டக்கூடாதுன்னு பாக்குறேன் காலைல..

கிட்டக்கவந்து  மனுஷன் இப்படியா அடுக்குவார்

விட்டிருப்பாள் பட்டுன்னு கன்னத்தில் ஒன்னு

கட்டிய புருஷனாச்சேன்னுதான் ..

வெட்டுவதுபோல் ஒரு பார்வை பார்த்துவிட்டு

சட்டென  நகர்ந்துவிட்டாள் மாமி

**

16 thoughts on “இப்படியா ?

  1. அருமை, சார்.
    புன்முறுவல் இதழ்க்கடையில்
    பூத்தது நிஜம்
    எதுகை மோனைகள்
    பாதுகை போட்டு நடக்கின்றன
    பட்டரும் ‘பட்டரும்’
    டிவிட்டரும் ஷட்டரும்
    பட்ட பாடென்ன?
    தொடுதிரை மாமி
    தொட்டால் சிணுங்கி
    கட்டிய (!) புருஷன் மேல்
    காட்டம் இவ்வளவு ஏனிவளுக்கு?…

    Liked by 1 person

    1. @ Venkataraman Ganesan:

      //..கட்டிய (!) புருஷன் மேல் காட்டம் ..//

      ஆஹா! emphasis ப்ரமாதம்!

      Like

  2. கூட்டிப்பெருக்கற கோகிலா வராததுதான்
    நீட்டி முழக்கற மாமாவுக்கு
    கோட்டியாப்போச்சோ..
    நல்லவேளை,
    வெட்டுவதை பார்வையோடு நிறுத்தினாளே
    சட்டென்று நகர்ந்த மாமி!

    Liked by 1 person

    1. @ Sriram:
      //..கோகிலா வராததுதான்
      நீட்டி முழக்கற மாமாவுக்கு
      கோட்டியாப்போச்சோ..//

      அப்பாவி கோகிலாவை சீண்டாதீர்கள்.. மாமிக்கு இன்னும் கோபம் தணியவில்லை என்று கேள்வி..!

      Like

    1. @ ஜி.எம்.பாலசுப்ரமணியம்:

      //..காலம் கலியாச்சே..//

      நமக்கு வாழக்கிடைத்தது இந்த காலம்தானே ..என்ன செய்ய!

      Like

  3. ஹா ஹா ஹா ஹா தொடுதிரை பையனுக்கு பட்டர் மாமா பட்டராகிப் போனாரே!!

    பாவம் மாமா அடி வாங்காமல் பிழைத்தார்…ஹா ஹா

    கீதா

    Liked by 1 person

    1. @ கீதா:

      //..பாவம் மாமா அடி வாங்காமல் …ஹா ஹா..//

      மாமிக்குக் கோபம் தலைக்கேறி ஏடாகூடமாக ஏதாவது நடந்து.. அப்போது பார்த்துக் கோகிலா சீனில் நுழைந்திருந்தால்…!

      Like

  4. @ கீதா சாம்பசிவம்:

    //..ஹாஹா, மாட்டிக்கொண்டாரோ …? பாவம்!//

    அவர் நேரம்!

    Like

  5. விட்டாலும் விட்டிருப்பாள் மாமி. அவருக்கு அது பழக்கமாக இருந்திருக்கும். அன்புடன்

    Like

Leave a comment