வேகத்தைத் தாண்டியும் ..

நண்பனொருவன்

எப்போதாவது வாய் திறப்பவன்

அன்று ஏதோ ஒரு சுபகணத்தில்

திருவாய் மலர்ந்தான் :

அவ்வப்போது

பின்னோக்கி

திரும்பிப்பார்ப்பது நல்லது

இரண்டு விஷயங்கள் இதில்

ஒன்று -

எத்தனை தூரம் வந்திருக்கிறோம்

எனப் புரிந்துகொள்ள

இன்னொன்று -

ஆரம்பிக்குமுன்

எத்தனைப் புழுதியும் வியர்வையும்

நம்மைப் பூசியிருந்தது

என்பதை மறந்துவிடாதிருக்க..

எங்கோ பார்த்துக்கொண்டிருந்தவன்

மேலும் சொல்லலானான்

வேகமாகத்தான் பலரும்

சென்றுகொண்டிருக்கிறார்கள்

எதனை நோக்கி என்கிற

தெளிவில்லாமல்

**

15 thoughts on “வேகத்தைத் தாண்டியும் ..

 1. நிஜமாகவே திரும்பிப் பார்க்கணும். நாம் வந்த பாதையை என்றுமே மறக்கக் கூடாது. நிகழ்வுகளை விட அதிலிருந்து கற்ற பாடங்கள் தான் முக்கியம்.

  இறுதி வரிகள் உண்மை…தெளிவில்லாமல்தான் பலரும் வேகமாகக் கூடச் செல்லவில்லை… ஓடிக் கொண்டிருக்கிறார்கள்…எதையோ நினைத்து எதையோ பறிக்க என்று…..எதற்காக இந்த ஓட்டமோ?!!

  கீதா

  Liked by 1 person

  1. @ கீதா:

   தேடித் தேடி இளைத்தவர்கள் சிலர்..
   ஓடி ஓடிக் களைத்தவர்கள் பலர்..
   என் செய்வது, வாழ்க்கை என்பது
   ஏதோ ஒரு வகையில்
   எல்லோரையும்
   விரட்டிக்கொண்டுதானிருக்கிறது..

   Like

  1. @ ஸ்ரீராம்:
   வண்டியில் பூட்டிய மாடுகள் போலே மனிதர்களின் வாழ்க்கை.
   அடியையும் வாங்கிக்கொண்டு, ஓடிக்கொண்டு…

   Like

 2. ஓட்டமாகத் தான் ஓடுகிறது வாழ்க்கை. இன்றைய தினம் மனதில் பதியும் முன்னரே நாளை வந்து விடுகிறது. இது காலத்தின் ஓட்டமா? நாம் தான் ஓடுகிறோமா?

  Liked by 1 person

 3. என்னவோ தெரியலை, ஒரு சமயம் அனுமதிக்கிறது, மற்றொரு சமயம் அனுமதிப்பதில்லை, உங்கள் வேர்ட் ப்ரஸ்! :))))) இப்போக் கடின முயற்சிக்குப் பின்னர் கூகிள் வழி உள்ளே விட்டிருக்கு. சில சமயங்கள் பிரச்னை இருப்பதில்லை! பல சமயங்கள் பிரச்னை தான்! :))))

  Liked by 1 person

  1. நீங்க இலக்கு நோக்கி சரியா ஓடி வந்திருக்கீங்க போலிருக்கு கீதாக்கா… அதுதான் சரியா வழிவிட்டிருக்கு!!!

   Liked by 1 person

  2. @கீதா சாம்பசிவம்:

   //..இது காலத்தின் ஓட்டமா? நாம் தான் ஓடுகிறோமா?..//

   காலன் டேக்-ஓவர் செய்யும்வரை, காலம் ஓட்டுகிறது மனிதனை..கூடவே அதுவும் ஓடிக்கொண்டு…

   வர்ட்ப்ரெஸ் தொந்திரவு இன்னும் தீரவில்லையா! சிலருக்கு ஸ்மூத்தாக வந்து குதிக்கமுடிகிறதே..!

   Like

 4. ‘They also serve who stand and wait’ என்னும் மில்டனின் வரிகள் நமக்கு பெரும்பாலும் மறந்துதான் போய் விடுகிறது.

  Liked by 1 person

 5. @ பானுமதி வெங்கடேஸ்வரன்:

  கவியின் வார்த்தைகள் பெரும்பாலும் நம் தலைக்குமேலேயே பயணித்துவிடுகின்றன !

  Like

 6. //வேகமாகத்தான் பலரும்
  சென்றுகொண்டிருக்கிறார்கள்
  எதனை நோக்கி என்கிற
  தெளிவில்லாமல்///

  உண்மைதான்…

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s