இருப்பவருக்கு. . நினைவு மட்டும்

நார்வேயின் கிர்கினெஸ் (Kirkenes)  நகரில்  தாய்க்கான  நினைவுச் சின்னம்

 

 

 

 

**
அம்மா என்பது

ஒரு கவிதையா

கட்டுரையா

தொடர்கதையா

புதினமோ ?

அவள் ஒரு கலானுபவம்

இருந்தபோதும்

இல்லாது..

போய்விட்டபிறகும்

**

விலைபேச முடியாததுதான் உயிர் எனினும்

தலை சாயும்போது நாள் நட்சத்திரம் பார்ப்பதில்லை..

**

18 thoughts on “இருப்பவருக்கு. . நினைவு மட்டும்

 1. ஏகாந்தன் அண்ணா என்னாச்சு காணாமப் போயிருந்தீங்க?!! பயணமா இல்லை உபனிஷத்துல மூழ்கி ஏகாந்தமா இருந்தீங்களா?!!!!!!!!!!

  கவிதை அருமை அண்ணா! அம்மா இருக்கும் போது ஒரு வித அனுபவம் என்றால் இல்லாத போது ஒவ்வொரு நாளும் பல முறை நினைத்திட வைத்தாலும் வருத்தம் எட்டிப் பார்த்தாலும் அதுவும் ஒரு அனுபவம்.

  நான் தினமும் நினைத்து குறிப்பாக என் மகனை அவள் இருந்து இன்று பார்த்திருந்தால் இவ்வுலகிலேயே அதிகமாகச் சந்தோஷப்பட்டுப் பூரித்துப் போயிருக்கும் ஜீவனாக இருந்திருப்பாள். …அதே சமயம்…

  இதற்கு மேல் எதுவும் எழுத முடியலை அண்ணா…உணர்ச்சிகள் மேலோங்கிவிட்டது…

  கீதா

  Liked by 1 person

  1. @கீதா: எபி-யில் நீங்களும் ஸ்ரீராமும் விஜாரித்ததற்கு அங்கே பதில் தந்திருந்தேன். நீங்கள் பார்க்கவில்லை போலும்

   அம்மா டெல்லியில் தம்பி வீட்டில் போய்விட, நான் இங்கிருந்து போயிருந்தேன் காரியங்களை செய்ய. முடித்துவிட்டு 22-ல் திரும்பினேன். லேப்டாப்பும் படுத்துக்கிடந்ததது. ரிப்பேர் செய்தபின் ஓடுகிறது..

   //..என் மகனை அவள் இருந்து இன்று பார்த்திருந்தால் இவ்வுலகிலேயே அதிகமாகச் சந்தோஷப்பட்டுப் பூரித்துப் போயிருக்கும் ஜீவனாக ..//
   இப்படி என் அப்பாவைப்பற்றி நினைப்பதுண்டு. அவர் நிறையப் பார்த்துவிட்டுத்தான் அமைதியாகச் சென்றார் என்றபோதிலும்.
   அப்பாவாவது இரண்டு முறை ஆஸ்பத்திரி சென்றுவந்தார். வீட்டில், கடைசி பிள்ளையின் மடியில் உயிர் நீத்தார். நான் டோக்யோவிலிருந்தேன். என் லட்சணம் அப்படி.
   அம்மா ஆஸ்பத்திரி இருக்கும் தெருப்பக்கமும் போகாதவள். பேருக்குக் கொஞ்சம் ஹோமியோபதி. கடைசிவரைத் தன் கையே தனக்குதவி என்றிருந்தவள்..

   Like

 2. எதிரில் உயிரும் உடலுமாக நின்றவள் நமக்குள் நினைவுகளாய் முழுவதும் நிறைந்து விடுகிறாள். இல்லாமல் போகும்போதுதான் இழப்பின் வலியும் புரிகின்றது.

  Liked by 1 person

  1. @ஸ்ரீராம்:
   உண்மை. அவள் போகையில் அருகில் யாருமில்லை என்பது சோகம். மற்றபடி நிம்மதியாகப் போயிருப்பாள் எனத் தோன்றியது.. காரியங்கள் தங்கு தடையின்றி நடந்ததிலிருந்து. சுபத்தன்று திவ்யப்பிரபந்தமும், ரிக், சாம வேதங்களிலிருந்து கொஞ்சமும் ஓதப்பட்டன.

   Like

 3. எனக்கு என்னைப் பெற்றதாயின் நினைப்புகளெல்லாம்பிறர்சொல்லி கேட்டதுதான் ஆனால் அம்மாவாக இருப்பது பற்றி தெரிந்துகொண் டது எல்லாம் என்மனைவியைப் பார்த்து தெரிந்து கொண்டதுதான்

  Liked by 1 person

  1. @ ஜி.எம்.பாலசுப்ரமணியம்:
   நினைவு தெரிந்த நாட்களில், உங்கள் தாயாரின் நேரடி அனுபவம் கிட்டாதது உங்களுக்குள் ஏக்கமாக இருக்கும். ஆயினும், அன்பு மனைவியின் தாய் ரூபமும் கண்டு மகிழ்வு கிட்டியிருக்கும்.

   Like

 4. அவள் ஒரு கலானுபவம்//
  மிக அருமையாக சொன்னீர்கள்.
  அம்மாவின் பிரிவு மனதில் ஒரு வெற்றிடத்தை தருவது போல் இருந்தாலும் , மனமெல்லாம் நிறைந்து காணபடுவாள்.
  அம்மாவை நினைக்க நினைக்க பலவித அனுபங்களை தருவாள்.

  Liked by 1 person

  1. @கோமதி அரசு:

   வெற்றிடம் காட்டுவதும், அதே சமயம் நெருங்கி இருப்பதும் அன்னைதான். திக்குமுக்காடவைக்கும் அன்பையும், பரிவையும் அவளால்தான் காட்டமுடியும் இவ்வுலகில்.

   Like

 5. எத்தனை வயசானாலும் அம்மா என்றால் அம்மா தான். மாற்று என்பதே இல்லை. அந்த வகையில் நாங்கல்லாம் எங்க அம்மா ரொம்ப நாள் இருக்கக் கொடுத்து வைக்கலை! 😦 உங்கள் உணர்வுகள் புரிகின்றன. உங்கள் அம்மா தெய்வமாக இருந்து உங்களை வழி நடத்துவார். உங்கள் மன ஆறுதலுக்குப் பிரார்த்திக்கிறேன்.

  Liked by 1 person

  1. @கீதா சாம்பசிவம்:

   பிரார்த்தனைகளுக்கும், கனிவான வார்த்தைகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

   Like

  1. @ திண்டுக்கல் தனபாலன் :

   அதனால்தான், உணர்ச்சிவசப்பட்டு, ’அன்னையைப்போலொரு தெய்வமில்லை. .’ என்றானோ அந்தக் கவிஞன்?

   Like

 6. அம்மா என்பவர் எல்லா உணர்வுகளும் கலந்த ஒரு கலானுபவம் தான் .அம்மாவின் கடைசி நாட்களில் நான் அருகில் இல்லை .அது முள்ளாய் தைக்கும் .ஆனா எல்லாத்துக்கும் ஒரு ரீஸன் உண்டுன்னு மனசை சமாதானப்படுத்திப்பேன் . சின்னவயதில் புரிஞ்சிக்கலை அம்மாவின் அன்பை அம்மாவுக்கு என்ன தேவையாயிருந்திருக்கும்னு இப்போ தோணுது .காலம் பாடங்களை கற்றுக்கொடுக்குது .
  அம்மா இவ்வுலகில் இல்லை ஆனாலும் நம்மோடுதான் இருப்பார் .இறைவன் எல்லா மன ஆறுதலையும் உங்களுக்கு தரணும்னு பிரார்த்திக்கிறேன் .

  Liked by 1 person

  1. @ Angelin:

   நன்றி ஏஞ்சலின். அம்மா இத்தனை நாட்கள் வாழ்ந்திருந்தும் அவரோடு நான் இருந்த நாட்கள் மிகக்குறைவு. காரணங்கள் வழக்கம்போல் அசட்டுத்தனமானவை. நன்றாகக் கவனித்துக்கொள்ளவில்லையே என்கிற சிந்தனையே எஞ்சுகிறது..

   Like

 7. அம்மா. திரும்பப் பார்க்கமுடியுமா? நம்முடைய எண்ணங்களிலேயே நினைக்கும்போதெல்லாம் பல விதங்களில் அவர் காட்சி கொடுப்பார். அவரின் ஆத்ம சாந்திதான் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும் எப்போதும்.. என் அனுதாபங்கள். அன்புடன்

  Liked by 1 person

  1. @ Chollukiren:

   வருகை, கருத்துக்கு நன்றி.
   நினைத்துப் பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர வேறு செய்வதற்கில்லை.

   Like

 8. மனம் கனக்கிறது… எப்பவும் நமக்கு இருக்கும்வரை எல்லாம் தூசுபோலத்தான் தெரியுது.. இனிமேல் இல்லவே இல்லை என்றானபின் நெஞ்சடைக்கிறது.. ஏதோதோ சிந்தனை எல்லாம் வந்து விடுகிறது….

  உண்மையை வடித்திருக்கிறீங்க குறுங் கவிதையாக.

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s