டெஸ்ட் க்ரிக்கெட்:  முதலாட்டம் – மயங்க் அகர்வால்

நான்கு டெஸ்ட் தொடரில் ஆளுக்கொன்று ஜெயித்துவிட்டு ஒன்றைப்பார்த்து ஒன்று முறைத்துக்கொண்டு, மெல்பர்னில் (Melbourne) தற்போது 3-ஆவது டெஸ்ட் (Boxing Day Test -Dec 26-30)  விளையாடுகின்றன இந்தியாவும் ஆஸ்திரேலியாவும்.

முரளி விஜய், கே.எல். ராஹுல் மீது காட்டிய பொறுமை போய்விட்டது இந்திய அணிக்கு. போட்டிபோட்டுக்கொண்டு தடுமாறிக்கொண்டிருந்த இருவரும்  வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.  கர்னாடகாவின்(also in IPL 2019- King’s XI Punjab) மயங்க் அகர்வால் இந்தியாவுக்காக முதன்முதலாக ஆட,  தொடரின் 3-ஆவது டெஸ்ட்டில் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறார்.  (இதற்கு முன்பு நடந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர் சேர்க்கப்பட்டும், ஆட வாய்ப்பு கிட்டவில்லை).  இதுவரை  பேட்டிங் வரிசையில், ஆறாம் நம்பரில் ஆடிய  ஹனுமா விஹாரி, மயங்க் அகர்வாலுடன் துவக்க ஆட்டக்காரராக முதன்முதலாக இறங்கியிருக்கிறார் இந்த மேட்ச்சில். பொறுமையாக 66 பந்துகள் நின்று  ஆடிய விஹாரி, 8 ரன்னில் வெளியேறினார். அவரைக் குறைசொல்வதற்கில்லை. ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சு செம டைட், ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே அதிதுல்லியம். குறிப்பாக விஹாரியைத் தூக்கிய பாட் கம்மின்ஸ் (Pat Cummins). ஃபீல்டிங் வழக்கம்போல ஷார்ப்.

ஆனால் மறுமுனையில், டெஸ்ட் வெளியில் தனது முதலாவது ஆட்டத்தை ஆடிய மயங்க் அகர்வால் மசிந்துகொடுக்கவில்லை. இயற்கையாகவரும் அதிரடி ஆட்டத்தைக் குறைத்து, வலிமையான தடுப்பாட்டம் காட்டினாலும், அவ்வப்போது பௌண்டரிகளைத் தெறிக்கவிட்டார். குறிப்பாக 44 ரன்னில் இருந்தபோது, நேதன் லயனின் (Nathan Lyon) ஆஃப் ஸ்பின்னை மிட்-ஆஃபில் தூக்கி அடித்தது, அடுத்த பந்தை straight drive-ஆக தரையில் கோடுபோட்டு பௌண்டரிக்கு அனுப்பியது அசத்தல் பேட்டிங்.  ஆஸ்திரேலியாவின் வெற்றிகரமான பௌலரான நேதன் லயனை,  அவர் கேஷுவலாகக் கவனித்தது எல்லோரையும் கவர்ந்திருக்கிறது.  161 பந்துகளில் 8 பௌண்டரி, ஒரு சிக்ஸர் என 76 ரன் எடுத்து  மயங்க்  வெளியேறியபோது, மெல்பர்னின் எண்ணற்ற இந்திய ரசிகர்களுக்கு நிம்மதி ஏற்பட்டது மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட் போர்டிடமிருந்தும் அப்பாடா என்கிற பெருமூச்சையும் அது வரவழைத்திருக்கும். இந்த கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் துவக்க ஆட்டக்காரர் ஒருவரிடமிருந்து வந்திருக்கும் முதல் அரைசதம் இது.

உண்மையில் ஆஸ்திரேலியாவில் துவக்க ஆட்டக்காரராக தூள்கிளப்பப்போகிறவர் ப்ரிதிவி ஷாதான் என எதிர்பார்ப்பு இருந்தது ஆரம்பத்தில். ஆனால், துரதிருஷ்ட வசமாக பயிற்சி ஆட்டத்தில் ஃபீல்டிங் செய்கையில், அவர் கால்மடங்கி காயம்பட்டு குணமாக காலம்பிடிப்பதால், இந்தியாவுக்குத் திருப்பப்பட்டுள்ளார். ’நமக்கும் வாய்ப்பு வருமா அல்லது ரஞ்சி, இந்தியா ‘ஏ’ அணிகளோடு நம் சகாப்தம் முடிந்துவிடுமா’ என மயங்கிக்கிடந்த மயங்க் அகர்வாலைக் கவனித்த காலம், பிடித்துத் தூக்கி மெல்பர்னில் இறக்கிவிட்டது.  இந்திய ரஞ்சித் தொடர்களிலும் லிஸ்ட் ‘ஏ’ மேட்ச்சுகளிலும் கடந்த இரண்டு வருடங்களாக சாத்து சாத்து என்று சாத்திவரும் வலதுகை பேட்ஸ்மன். ஸ்ட்ராங் டெக்னிக் மற்றும் நேரத்துக்கேற்றபடி ஸ்விட்ச் செய்து அதிரடி காட்டும் திறமையுடையவர். ஆஸ்திரேலியாவில் முக்கியமானதொரு போட்டியில் அவரது பேட்டிங் அரங்கேற்றம் நிகழ்ந்திருப்பதும், சிறப்பாகத் தன் முதல் இன்னிங்ஸை விளையாடியிருப்பதும் மங்களகரம். மயங்க் மேலும் நன்றாக ஆடி, நாட்டிற்காக சாதிப்பார் என நம்புவோம்.

Picture courtesy: Internet

**

Advertisements

4 thoughts on “டெஸ்ட் க்ரிக்கெட்:  முதலாட்டம் – மயங்க் அகர்வால்

    1. @Balasubramaniam GM :
      அது நாளாவது நாள் இறுதிப்பகுதி மற்றும் ஐந்தாவது நாளில் ஆஸ்திரேலியா ஜடேஜாவை எப்படிக் கையாளும் என்பதைப் பொறுத்தது. இந்தியா டாஸில் அபூர்வமாக ஜெயித்து முதல் பேட்டிங் செய்துகொண்டிருப்பதால் இப்படித் தோன்றுகிறது.

      Like

  1. முரளி விஜயும் கே எல் ராகுலும் முகத்தை எங்கு வைத்திருப்பார்களோ…. ஹனுமன் ஆறு ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும் உடனே விக்கெட்டை விடவில்லை. மயங் லியான்னை நடனராக எதிர்கொண்டதாக என் மகன் சொன்னான். 500 ஐ ஒட்டி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் வந்தால்தான் பிழைக்க முடியும் என்றும் சொன்னான்.

    Liked by 1 person

    1. @ Sriram : 500-ஐ நெருங்கி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் வந்தால் நல்லது. ஆனால் அதற்காக 2 1/2 நாட்கள் எடுத்துக்கொண்டால் மேட்ச் டிரா ஆகிவிடும். நாளைக்கு வேகம்பிடித்து ஸ்கோர் செய்து 3-ஆவது நாள் காலையில் அவர்களை இறக்கவேண்டும். இந்த ஸ்லோ பிட்ச்சில் ஆஸிகளும் முதல் இன்னிங்ஸில் சாத்தத்தான் பார்ப்பார்கள்.நம் தரப்பில் ஜடேஜாவும், விஹாரியும் தயாராயிருப்பார்கள். ஜடேஜா தான் யாரென்று ரவிசாஸ்திரி போன்ற தத்திகளுக்கு நிரூபிக்க முயற்சிப்பார். பார்ப்போம்.. Interesting duel is ahead …

      Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s