தி. ஜானகிராமன்


தமிழின் அதிஅற்புதப் படைப்பாளிகளில் ஒருவரான தி.ஜானகிராமனின் சிறுகதை ஒன்றைப் பார்க்குமுன், அவர்பற்றிய சிறுகுறிப்பு ஒன்றைக் கீழே காண்போம்.

தமிழ் எழுத்துலகின் பிதாமகர்களில் ஒருவர் தி.ஜா. என்று அழைக்கப்படும் தி.ஜானகிராமன். தி.ஜா.வின் எழுத்தைப் பார்க்காமல், அலசாமல் தமிழின் நவீன இலக்கியம்பற்றிப் பேசுவதில், வெறுமனே சிலாகிப்பதில் அர்த்தமேதுமில்லை. நாவல், குறுநாவல், சிறுகதை என இயங்கியவர். பயணக்கட்டுரைகளும் இவரிடமிருந்து வந்திருக்கின்றன. கர்னாடக இசையில் ஆழ்ந்த ஞானமுடையவராதலால், சங்கீதமே எழுத்தாக மாறிய தருணங்களும் உண்டு. எவ்வளவோ சிறப்பிருந்தும், தன் காலகட்டத்திலேயே ஒரு சிறந்த இலக்கியவாதியாக மதிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டுமிருந்தும், தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளத் தெரியாதவராக இருந்தார் அவர். மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள் போன்ற, தமிழ் இலக்கிய விமரிசகர்களால், இலக்கிய ஆர்வலர்களால் அடிக்கடி விவாதிக்கப்படும் புதினங்களை இயற்றியவர். இவரது சிறுகதைத் தொகுப்புகளில் அக்பர் சாஸ்திரி, சிவப்பு ரிக்ஷா, சக்தி வைத்தியம், பாயசம், மனிதாபிமானம், ஒரு துளி துக்கம், எருமைப் பொங்கல் ஆகியவை சில. ‘சக்தி வைத்தியம்’ சிறுகதைத் தொகுப்பு சாகித்ய அகாடமி விருதை வென்றது. அவலும் உமியும், வீடு, ’நாலாவது சார்’ போன்ற குறுநாவல்களையும் இயற்றியவர். காவேரி நதிக்கரையோரம் சென்றுவந்த தன் பயண அனுபவங்களை ‘நடந்தாய் வாழி காவேரி’ என்னும் கட்டுரை நூலாகத் தந்துள்ளார். ஜப்பான், செக்கோஸ்லோவகியா, இத்தாலி, மலேஷியப் பயணங்கள் பற்றியும் நூல்கள் அவரிடமிருந்து வெளிவந்திருக்கின்றன.

தஞ்சாவூர் மாவட்டத்தின் தேவக்குடி என்கிற கிராமம் சொந்த ஊர். பள்ளி ஆசிரியராக ஐயம்பேட்டை, கும்பகோணம், குற்றாலம், சென்னை ஆகிய இடங்களில் தன் பணியைத் துவக்கியவர். பின்னர் ’ஆல் இந்தியா ரேடியோ’வில் சேர்ந்து, தலைமைக் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராக உயர்ந்து, செவ்வனே பணியாற்றி ஓய்வுபெற்றார். இலக்கிய விமரிசகரும் எழுத்தாளருமான வெங்கட் சாமிநாதனுடன் ஆல் இந்தியா ரேடியோவின் தமிழ் ஒலிபரப்பு நிகழ்ச்சியில் ’சிறுகதை எழுதுவது எப்படி’ என விவாதம் செய்திருந்தார் தி.ஜா. சங்கீதம், நாட்டியம், பயணம் போன்றவை இலக்கியம் தாண்டி இவரை ஈர்த்த மற்ற சங்கதிகள். சமகால எழுத்தாளர்களான தஞ்சை ப்ரகாஷ், கரிச்சான் குஞ்சு, சுவாமிநாத ஆத்ரேயன், சிட்டி, எம்.வி.வெங்கட்ராம், வெங்கட் சாமிநாதன் ஆகியோரிடம் நெருங்கிய நட்புகொண்டிருந்தார் ஜானகிராமன்.

தி.ஜா.-வின் படைப்புலகம்பற்றி கவிஞர் சுகுமாரன் இப்படிச் சொல்கிறார்: ’தி. ஜானகிராமனின் கதைகளின் மைய அக்கறை ‘மனித சேஷ்டைகள்’தாம். மனிதர்களைக் கொண்டாடி அலுப்பதில்லை அவருக்கு. அன்பு, பாசம், காதல், பரிவு என்று வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லப்படும் உணர்வுநிலைகளின் மையமான மானுடக் கருணையே அவரது படைப்பின் மையம் என்று சொல்லத் தோன்றுகிறது.’

– அடுத்தாற்போல் கதை ..
*

12 thoughts on “தி. ஜானகிராமன்

    1. @ஸ்ரீராம்:

      குறிப்பையும் கதையையும் ஒரே ஷாட்டில் முடிக்கவே எண்ணினேன். குறிப்பை வெகுவாகச் சுருக்க முடியவில்லை. அதனால் முதல்பகுதியில் குறிப்பு மட்டுமே என விட்டுவிட்டேன். இப்போதுதான் சேர்த்தேன் – கதை தொடரும் என!

      Like

    1. @Geetha Sambasivam :

      அவரைப்பற்றி விரிவாக நிறையச் சொல்லலாம்தான். இருந்தும் சுருக்கிக்கொடுத்து கதைபற்றி அடுத்த பகுதியில் தருகிறேன்

      Like

  1. அப்பாடா, பிரச்னை இல்லாமல் வேர்ட் ப்ரஸ் என்னோட கமென்டை ஏற்றுக் கொண்டு விட்டது. காமாட்சி அம்மாவின் வேர்ட் ப்ரஸ் பதிவில் போடவே முடிவதில்லை. 😦

    Liked by 1 person

    1. கீதாவும் வர்ட்ப்ரெஸ் வலைகளுக்குள் தலை நுழைப்பதில் சிரமம் இருப்பதாக அடிக்கடி சொல்லியிருக்கிறார்.
      இப்போது அவரது தலையையே காணவில்லையே! எங்கேயாவது க்ஷேத்ராடனம் போயிருக்கிறாரா !

      Like

  2. கும்பகோணத்துக்காரனனான எனக்கு ஜானகிராமனின் எழுத்துகள் அதிகம் பிடிக்கும்

    Liked by 1 person

    1. @Dr B Jambulingam : திஜா-வை நானும் தாமதமாகத் தான் படிக்கத் துவங்கினேன். அம்ருதா பதிப்பகத்தின் முத்துக்கள் பத்து தொடரில் ஜெயகாந்தன், ஆதவன் ஆகியோரோடு திஜாவின் பத்து முத்திரைக்கதைகள் ஒரு சிறுதொகுப்பாக வந்திருந்தது. ஆதவனையும் திஜா-வையும் வாங்கி வைத்திருந்தேன். நான் க்யூபாவில் இருந்தபோது. பயணத்தின்போது எங்கேனும் தவறவிட்டுவிட்டேனோ-தெரியவில்லை.

      Like

  3. தி.ஜானகிராமன், சிட்டி, எம். வி.வெங்கட்ராம், கரிச்சான்குஞ்சு… ஆஹா எப்படிப்பட்ட எழுத்தாளர்கள்!! தி.ஜ.ராவின் கதையை படிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.
    அவரைப்பற்றிய குறிப்பு சிறப்பு!

    Liked by 1 person

    1. @ Banumathy V. :

      வாருங்கள்.

      ஏதோ எழுதிக்கொண்டிருந்தேன். தொடர மூடில்லை. எழுத முடியவில்லை என்றால், கொஞ்சம் படிக்கவாவது செய்யலாமே எனத் தேடினேன். தி.ஜா! கதையும் மனதை என்னவோ செய்தது. சரி, கொஞ்சம் இதுபற்றி எழுதுவோம் என முனைந்தேன்.

      வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      Like

  4. சம்பவங்கள்நினைவில் நிற்பதில்லதிஜரா வின் மோகமுள் படித்த நினவு ஆனால் ஏனோ எழுதி இருந்த கதைகள் சம்பவங்கள் நினைவு கூற முடியவில்லை ப்

    Liked by 1 person

    1. @Balasubramaniam G.M :

      மற்ற நாவல்களுமுண்டு. மோகமுள் அடிக்கடிப் பேசப்படுவதால் குறித்தேன். நான் படித்ததில்லை இதை.

      Like

Leave a comment