ஹ்ம் . .

செயற்கரிய செய்துவிட்டதைப்போல்
என்ன இப்படிப் பார்க்கிறீர்கள் என்னை
தடுமாறி விழவிருந்த உங்களை
தற்செயலாக அந்தப்பக்கம் வர நேர்ந்ததால்
என் கை பிடித்துத் தூக்கிவிட்டது
இல்லாவிட்டாலும் நீங்கள்
எழுந்துதானிருப்பீர்கள்
கீழே விழுந்ததில்
மேலே ஒட்டிக்கொண்ட
அவமானத் துகள்களை
உதறிக்கொண்டே
இதற்குப்போயா நன்றி
சரி
நன்றிக்கு நன்றி

**

14 thoughts on “ஹ்ம் . .

  1. செயற்கரிய செய்துவிட்டதைப்போல்
    என்ன இப்படிப் பார்க்கிறீர்கள் என்னை
    தடுமாறி விழவிருந்த உங்களை
    தற்செயலாக அந்தப்பக்கம் வர நேர்ந்ததால்
    என் கை பிடித்துத் தூக்கிவிட்டது
    இல்லாவிட்டாலும் நீங்கள்
    எழுந்துதானிருப்பீர்கள்//

    இது வ்ரை புரிந்தது அண்ணா……அப்புறம்

    கீழே விழுந்ததில்
    மேலே ஒட்டிக்கொண்ட
    அவமானத் துகள்களை
    உதறிக்கொண்டே. //

    இங்கு ஒரு முற்றுப் புள்ளி….ஓகே..அடுத்து

    //இதற்குப்போயா நன்றி// தூக்கிய நபர் சொல்லுகிறார் இல்லியா? விழுந்தவர் சொன்னால் வேறு அர்த்தம் ஆகிவிடும் இல்லையா?

    சரி….நன்றிக்கு நன்றி…நீங்கள் சொல்ல நினைத்துச் சொல்லியது புரிகிறது…நன்றாக இருக்கிறது…..இடையில் ஏதோ ஒன்று மிஸ்ஸிங்க் போலத் தெரியுதே அண்ணா…இல்லை சிற்றறிவு எனக்குத்தான் அப்படித் தோனுதோ…

    கீதா

    Liked by 1 person

    1. @ கீதா: மிஸ்ஸிங் ஏதுமில்லை. முற்றுப்புள்ளிக் குழப்பிவிட்டதோ உங்களை! விழுந்தவர் ‘அப்படி’ப் பார்த்து சொன்ன நன்றிதான் வித்தானது இந்தக் கவிதைக்கு.

      ஏதோ சிந்தனையில் சில வார்த்தைகளை எழுத, மிச்சத்தை கவிதை எழுதிக்கொண்டுபோய்விடுகிறது (இதைச் சொன்னவர் சுஜாதா (’’சமயங்களில் கவிதை தன்னைத்தானே எழுதிக்கொண்டுபோய்விடும்’’. அடியேன் உடன்படுகிறேன்)

      கவிதை எழுதுவது எளிது. அதுமாட்டுக்கு பேப்பரில், ஸ்க்ரீனில் வந்துவிழுகிறது. அதை ’விள்ளக்குவது’ சித்திரவதை!

      Like

  2. சட்டென ஹம் என்று படித்து விட்டேன். மனதில் உடனே “ஏக் தூஸ்ரே ஸே கர்த்தே ஹை பியார் ஹம்..” என்று வரிகள் ஓட ஆரம்பித்துவிட..

    அப்புறம்தான் சற்றே முன்னரே விழுந்திருக்கும் மேற்புள்ளியை கவனித்து விட்டுப் படித்தேன்…

    தெரியாமல் ஓடவில்லை மனதில் பாடல் வரிகள்!

    Like

    1. @ ஸ்ரீராம்: ஏன், இந்தப்பாடல் – ’ஹம்.. தும்.. இக் கம்ரே மே பந்த் ஹோ .. அவ்ர் க்யா ஹோகா..! – ஞாபகம் வரவில்லையா !

      தெரியாமலோ, தெரிந்தோ பாடல் ஓடிக்கொண்டுதானிருக்கிறது மனதில். சில சமயங்களில் மேற்பரப்புக்கு வந்து துள்ளுகிறது.. வேறொன்றுமில்லை!

      Like

      1. மனதில் ஹம் மட்டுமே பதிந்ததால் இந்தப் பாடல். ஆனாலும் பாருங்கள் இன்று உலக முத்த தினமாம். “ச்சும்மா ச்சும்மா தே தே ச்சும்மா…” பாடல் மனதில் நினைவுக்கு வரவில்லை பாருங்கள்.

        தும் மும் கண்ணில் பட்டிருந்தால் நீங்கள் சொல்லும் பாடல் நினைவுக்கு வந்திருக்கும்.

        :))

        Like

  3. கிஷோர் பாடல்கள் கேட்டுக்கொண்டேதான் நேற்றைய இன்றைய பதிவுகளுக்கு பதில் எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்த கணம் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல் “ஹர்கோயி சாஹத்தா ஹை.. ஏக் முத்தி ஆஸ்மான்..”

    Liked by 1 person

  4. நன்றி சொல்லவேண்டும் இறைவனுக்கு , தடுமாறி விழவிருந்தவரை தூக்கி விட சந்தர்ப்பம் கொடுத்த இறைவனுக்கு..

    Liked by 1 person

  5. @ Sriram: கிஷோரை ஆனந்தியுங்கள். பாடலில் ஆழ்வது மனதிற்கு நல்லது.

    நீங்கள் மேற்சொன்ன பாடலின் வரிகள்:
    ஹர் கோயி ச்சாஹத்தா ஹை .. இக் முட்டி ஆஸ்மான்..
    ஹர் கோயி டூண்டுத்தா (doonduthaa) ஹை இக் முட்டி ஆஸ்மான்..

    (mutthi.. இங்கு முட்டி என உச்சரிக்கப்படல் வேண்டும். (கடைசி எழுத்துக்கள் thi : ஹிந்தியில் ட்+ஹி. )
    முட்டி (ஹிந்தி): கையளவு

    எல்லோரும் வேண்டுகின்றனர் ஒரு கையளவு ஆகாயம்..
    எல்லோரும் தேடுகின்றனர் ஒரு கையளவு ஆகாயம்..

    இந்தீவர் எனும் கவிஞர் எழுதி, மதன்மோஹன் இசையமைத்த ‘ஏக் முட்டி ஆஸ்மான்’ என்ற பெயரிலான 1973 படம் (விஜய் அரோரா, அருணா இராணி, யோகீதா பாலி, மெஹ்மூத், ப்ரான் நடித்தது)

    Like

  6. நன்றி. அதெல்லாம் கூகுள் செய்து அர்த்தம் தெரிந்து கொண்டு விடுவேன். கிஷோர் பாடும் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. அந்த வானத்தில் நட்சத்திரங்களும், சந்திரனும் திருவிழா கொண்டாடிக்கொண்டிருக்க இந்த இதயம் தனிமையில் வாடுவது மனதை வருடும்.

    அப்புறம்கேட்டது ஓ ஷாம் குச் அஜீப் தி..

    :)))

    Like

    1. @Sriram:
      கிஷோர் ரசிகர்! ‘ஓ ஷாம் குச்..’ – கிஷோரின் வாயில் melancholy! குல்ஸாரின் பாடல் பிரமாதம். வஹீதா ரஹ்மான் இங்கே ராஜேஷ் கன்னாவுடன்.
      நீங்கள் குரு தத், வஹீதா ரஹ்மான் படப் பாடல்களையும் கேட்டுப்பாருங்கள். ச்சௌதவி கா சாந்த் ஹோ..யா அஃப்தாபு ஹோ..போன்ற பாடல்கள்.

      Like

      1. கேட்காதிருப்பேனா? கஜல் வகையைச் சேர்ந்த பாடல். மொஹம்மத் ரஃபி பாடல். அவரின் பாடல்களில் பிடிடித்த லிஸ்ட்டில் இருக்கும் ஒன்று.

        Liked by 1 person

Leave a comment